Followers

Tuesday, August 28, 2018

பிரேசில் நாட்டு பெண்களின் ஈடுபாடு!

பிரேசில் நாட்டு பெண்களின் ஈடுபாடு!
சவுதி அரேபியாவுக்கும் பிரேசிலுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? இங்கு இரு இளம் யுவதிகள் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியலாக ஏற்றுக் கொள்கின்றனர். ஏற்றுக் கொண்டவுடன் அவர்களிடம் இனம் புரியாத சந்தோஷம். அந்த சந்தோஷத்தின் மிகுதியால் அவர்களால் ஆனந்த கண்ணீரை கட்டுப் படுத்த முடியாமல் அழுகின்றனர். இஸ்லாம் மார்க்கமானது உலகளாவிய மார்க்கம். இது அரேபியருக்கு மட்டும் சொந்தமான மார்க்கம் அல்ல என்பதை இது போன்ற நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
----------------------------------
இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போதுஉண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர்காண்பீர். "எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்களை சான்று கூறுவோருடன் பதிவு செய்வாயாக!” என அவர்கள் கூறுகின்றனர்.
(அல்குர்ஆன் 5:83)
அவர்கள் அழுது முகம் குப்புற விழுகின்றனர். அது அவர்களுக்கு அடக்கத்தை அதிகமாக்குகிறது.
(அல்குர்ஆன் 17:109)
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "எனக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்” என்றுசொன்னார்கள். நான், "உங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க தங்களுக்கேநான் ஓதிக் காட்டுவதா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஏனெனில் நான்பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்” என்று சொன்னார்கள். ஆகவே நான்அவர்களுக்கு அந்நிஸா அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். "(முஹம்மதே!) ஒவ்வொருசமுதாயத்திற்கும் சாட்சியை நாம் கொண்டு வந்து, இவர்களுக்கு எதிராக உம்மைச்சாட்சியாக நாம் கொண்டு வரும் போது (இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்?” எனும்(4:41வது) வசனத்தை நான் அடைந்த போது நபி (ஸல்) அவர்கள் "நிறுத்துங்கள்” என்று சொன்னார்கள். அப்போது அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்துகொண்டிருந்தன.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னுமஸ்ஊத் (ரலி)
நூல்: புகாரி 4582


4 comments:

Dr.Anburaj said...


இசுலாம் கல்வி.காம் என்ற இணைத்தில உள்ள சில தகவல்கள்.
மாதவிடாய் காலத்தில் நபியவர்கள் தன் மனைவியோடு எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை பின் வரும் ஹதீஸ்களிலிருந்து பாடம் படிக்கலாம்

‘ஒருவர் ‘தம் மனைவி குளிப்புக் கடமையான நிலையில் தம்முடன் நெருங்கலாமா? மாதவிடாய்க்காரி தமக்குப் பணிவிடை செய்யலாமா?’ என்று உர்வாவிடம் கேட்டதற்கு உர்வா ‘அது எல்லாமே என்னிடம் சிறிய விஷயம்தான். (என் மனைவியர்) எல்லோருமே எனக்குப் பணிவிடை செய்வார்கள். அவ்வாறு செய்வதில் யார் மீதும் எந்தக் குற்றமுமில்லை. ஆயிஷா(ரலி)வுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் நபி(ஸல்) அவர்களின் தலை முடியைச் சீவி விடுவார்கள். என ஆயிஷா(ரலி) என்னிடம் கூறினார்’ என்றார்’ என ஹிஷாம் அறிவித்தார். (புகாரி 296)

மேலும் ‘எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய மடியில் சாய்ந்து கொண்டு குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார். (புகாரி 297)

மேலும் ‘நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போர்வையைப் போர்த்திப் படுத்துக் கொண்டிருந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடாய்க் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாதவாறு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன். ‘உனக்கு நிஃபாஸ் (மாதவிடாய்) ஏற்பட்டுவிட்டதா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘ஆம்’ என்றேன். ஆயினும் அவர்கள் என்னை அருகில் வரக் கூறினார்கள். நான் அவர்களோடு போர்வைக்குள் படுத்துக் கொண்டேன்’ என உம்முஸலமா(ரலி) அறிவித்தார்.( புகாரி 298)

மேலும் ‘எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது என் இடுப்பில் ஆடையைக் கட்டிக் கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறுவார்கள். (நான் அவ்வாறே செய்வேன்) அவர்கள் என்னை அணைத்துக் கொள்வார்கள்’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார். (புகாரி 300)

மேலும் ‘நபி(ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது நான் அவர்களுக்கு எதிரில் படுத்திருந்தேன். அப்போது நான் மாதவிடாயுடன் இருந்தேன். நபி(ஸல்) அவர்கள் ஸுஜுது செய்யும்போது, சில வேளை அவர்களின் ஆடை என் மீது படும். அவர்கள் ஒரு விரிப்பின் மீது தொழுதார்கள்’ என மைமூனா(ரலி) அறிவித்தார். (புகாரி 379)

இப்படியான பல ஹதீஸ்ளை காணலாம். இவைகள் அனைத்தும் மாதவிடாய் காலத்தில் கணவன்மார்கள் தத்தம் மனைவிமார்களுடன் இரக்கமாகவும் நெருக்கமாகவும் இருக்க வேண்டும் என்பதை நபியவர்கள் தங்கள் வாழ்க்கையின் மூலம் நடை முறைப்படுத்தி காட்டியுள்ளார்கள், என்பதை விளங்கி நாமும் அவ்வாறு நடந்து கொள்வோமாக !

ASHAK SJ said...

எனது ஊர்களில் ஹிந்துகுடும்பங்களில் பல வீடுகளில் பார்த்திருக்கிறேன், அந்த வீட்டு பெண்கள் மாதவிடாய் காலங்களில் வீட்டு வெளியே திண்ணையில் (வெயில் குளிர் காலம் பார்க்காமல்) தனியாக தட்டு டம்ளர் தனியாக கொடுத்து நாயைப்போல நடத்துவார்கள், இன்னும் சில ஊர்களில் தனியாக மண்டபம் கட்டி அதில் தங்க வைப்பார்கள், அதுதான் பார்ப்பன ஹிந்து மதம், அதனால் மாதவிடாய் பெண்களை நாய் போல வீட்டு வெளியே உட்கார வைக்காமல், இஸ்லாம் சொன்னது போல் மனிதர்களாக நடத்துவோம்.

Dr.Anburaj said...

மனைவிக்கு மாதவிடாய் ஆகியிருக்கும் போது கணவனும் மனைவியும் ஒரே தொடடியினுள் குளித்த செய்தியும் ஹதீஸ் களில் உள்ளது - அசிங்கமாக இருக்கின்றதை ஆஸிக் படித்திருக்க வேண்டுமே.ஏன் பதிவு செய்யவில்லை. மாதவிலக்கு ஆன ஆயிசா ஏன் இடுபபில்துணி கட்ட வேண்டும் ? அதற்கு பிறகு என்ன நடந்தது? மனிதன் உடல உறவு தவிர மற்ற சங்கதிகள் அனைத்தையும் செய்தாா் முகம்மது.
------------------
மாதவிலக்கு சம்பந்தமாக சில பிறாமண குடும்பங்களில்தான் ”தீட்டு” என்று கூறி சில ஆசாரங்கள் என்றும் கூறி சில பொருத்தமற்ற காரியங்களைச் செய்திருப்பது உண்மை.இன்ற அனைத்தும் மாறிவிட்டது.மாதவிலக்கு ” தீட்டு” என்ற கருத்தை யாரும் ஏற்பதில்லை.
மேலமருவத்தூா் ஆதிபாரசக்தி ஆலயத்தில் பெண் அர்ச்சகா்கள் பணியாற்றி வருகின்றார்கள். அவர்களுககு மாதவிலக்கு தீட்டு கிடையாது.அனைத்து நாட்களிலும் கோவிலுக்குள் வருவார்கள். அனைத்து நடவடிக்கையையும் மேற்கொள்வார்கள்.
----------------------
முகம்மதுவிற்கு பெண்துணையின்றி இரவைக்கழிப்பது கடினமான விசயம்.அதற்கு தக்க படி விளக்கம் அளிப்பாா்.

ASHAK SJ said...

இஸ்லாத்தை பொறுத்தவரை அங்குலம் அங்குலமாக இறைதூதரின் (ஸல்) வாழ்க்கை பதியப்பட்டுள்ளது, மாதவிடாய் காலத்தில் உடலுறவு தடைசெய்யப்பட்டுள்ளது, கொடூரமான நோய்கள் வரும் என்றும் இஸ்லாம் சொல்கிறது அப்படி இருக்கும் போது குளிக்க மட்டுமே செய்வார்கள். மேலும் தீயவனின் குணம் மட்டுமே அதற்க்கு மேல் என்ன நடந்தது என்று யோசிக்கும்.

கோவிலுக்கு போகலாம் ஆனால் வீட்டு வெளியேதான் இருக்கணும், கோயிலுக்கு போனாலும் சிலையை தொடமுடியாது, அது மாதவிலக்கு சமயமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும்.

இறைத்தூதர் (ஸல்) பல நாட்கள் மனைவியோடு இல்லாமல் இருந்துள்ளார்கள், போரின் போது, ரமடானின் கடைசி பத்து இப்படி.