Followers

Sunday, August 19, 2018

உயிர்களிடம் அன்பு வைப்போம்.

உயிர்களிடம் அன்பு வைப்போம்.
சில நாட்களுக்கு முன்பு நான் தங்கியுள்ள அறையில் வெளிக் காற்று வரட்டும் என்று ஜன்னலை திறந்தேன். என்ன அச்சர்யம்? ஒரு புறா தனது முட்டையை இட்டு ஜன்னலின் இடுக்கில் ஒரு குஞ்சை பொறித்துள்ளது. என்னை பார்த்தவுடன் அந்த குஞ்சு முதலில் மிரண்டது. தாய் புறாவானது ஜன்னலை திறந்தவுடன் பறந்து போய் விட்டது. குஞ்சானது இவன் நம்மை ஒன்றும் செய்ய மாட்டான் என்று சர்வ சாதாரணமாக ஒரு அலட்சிய பார்வை என்னை நோக்கி பார்த்தது. ஜன்னலின் சிறிய இடுக்கின் மூலமாக வரும் ஏசி காற்றின் சுகத்தில் மூழ்கிப் போயிருந்தது அந்த குஞ்சு.
உடன் ஒரு சிறிய பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை வெட்டி அது குடிக்க தண்ணீர் வைத்தேன். வேறொரு பிளாஸ்டிக் டப்பாவில் வயர்களை கொண்டு கம்பியில் கட்டி அதனுள் சில நுணுக்கிய கோதுமை துகள்களை போட்டு வைத்தேன். தற்போது வெளியில் உணவு கிடைக்காத போது தாயும் குஞ்சும் நான் வைத்த கோதுமையையும் தண்ணீரையும் குடித்துக் கொள்வார்கள்.
பாலைவன தேசமான சவுதியில் எங்கு பார்த்தாலும் மரங்களை வளர்த்ததால் குருவிகள் தற்போது நிறைய தென்படுகின்றன. சிட்டுக் குருவிகளும் ஆங்காங்கே பார்க்கிறேன். ஆனால் நமது தமிழகத்தில் தற்போது சிட்டுக் குருவிகளின் வாசத்தையே பார்க்க முடிவதில்லை.
இங்கு பாலைவனம் சோலை வனமாகிறது: நாமோ சோலைவனத்தை பாலைவனமாக்கி வருகிறோம்.
-----------------------------------------
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும். (71)
விளக்கம்:
அன்பை தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியுமா? அன்புள்ளம் கொண்டவர்களின் சிறு கண்ணீரே அவர்களது அன்பினைப் பலர் அறிய வெளிப்படுத்தி விடும்.




11 comments:

Dr.Anburaj said...

என் வயது 60. எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் பறவைகளுக்கு தண்ணீா் எங்கள் வீட்டு மாடியில் தினசரி வைக்கப்படும். கேப்பை மற்றும் கம்பு போன்ற தானியங்களும் கொஞசம் வைக்கப்பட்டு வருகின்றது.எ ன் தந்தையாா் காலத்தில் இருந்து இந்த பணி நடந்து வருகின்றது. என் வீட்டுக்கு வரும் காக்கைகள் எங்கள் வீட்டில் உள்ள எவரையும் கண்டால் பயப்படாது. வெகு அருகில் ஒரு அடி தூரத்தில் கூட பயமின்றி நிற்கும்.வீட்டிற்கு காகம் புணில் மைனா சிட்டுக் குருவிகள் என்று வரும் பறவைகள் அதிகம். அவைகள் தண்ணீா் குடித்து தானியங்களை கொத்தி தின்பதை பார்ப்பது தனி ஒரு மகிழ்ச்சியைத்தரும். நான் ஒருசைவ சாப்பாட்டுக்காரன். பறவைகள் விலங்குகள் மேல் கொண்ட அன்பினால் அவைகள் உணவுக்காக கொல்லப்டுவதை விரும்பாமல் சைவமாக மாறிவிட்டேன்.
இந்துக்களோடு தாங்களை ஒப்பிடக் கூடாது. இந்துக்கள் இந்தவிசயத்தில் நுாற்றுக்கு நுாறு.
முஸ்லீம்களுக்கு என்ன மார்க் போடுவது என்று தெரியவில்லை.
ரம்சான் பக்ரீத் என்று வந்து விட்டால் வெட்டப்படும் ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் கோழிகளுக்கும் கணக்குயில்லை.மேற்படிஉயிர்களின் எண்ணிக்கை படுபாதாளத்திற்கு சென்று விடுகின்றது. ஊரெடங்கும் ஒரே இரத்தக்காடுதான்.
இந்துக்கள் பொங்கல் என்றால் சந்தையில் காய்கறி வியாபாரம்அரிசி சர்க்கரை கரும்பு பானை ஒலை என்று பலவகை விவசாயப் பொருட்களும் வித்து காசாகும். எந்த ஒரு பண்டிகையும் அப்படித்தான் இருக்கும். முஸ்லீம்கள் மட்டும் பண்டிகை நாட்களை அளவுக்கதிகமாக இரத்தக்களிறியாக்குவது ஏன் ? கற்கால மதத்தைப் பார்பது போல்உ ள்ளது.

Dr.Anburaj said...


என்வயிற்றை விலங்குளின் கல்லறையாக மாற அனுமதிக்கஇயலாது என்றாா் பெர்னாட்சா.
.பிர்லா மந்திா் சென்ற அனுபவம் தங்களுக்கு இருக்காது.போய் பாருங்கள்.அணிலும் சிட்டுக்குருவியும் தங்கள் கைகளில் வந்து இருக்கும்.அந்த அன்பை இந்துக்கள் மத்தியில்தான் காண முடியும்.

Dr.Anburaj said...

கலைஞா் செய்திகள் 21.8.18 நேரம் 02.55
கன்னியாகுமரியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகளின் விற்பனை இருமடங்கு பெருகியுள்ளது.
பக்ரீத் ஸ்பெசல் இதுதான். பக்ரீத் என்றால் ஆடுகள் கோழிகள் மாடுகள் கன்றுகள்
நடுநடுங்கிக்கொண்டிருக்கின்றது.

Dr.Anburaj said...

கலைஞா் செய்திகள் 21.8.18 நேரம் 02.55
கன்னியாகுமரியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகளின் விற்பனை இருமடங்கு பெருகியுள்ளது.
பக்ரீத் ஸ்பெசல் இதுதான். பக்ரீத் என்றால் ஆடுகள் கோழிகள் மாடுகள் கன்றுகள்
நடுநடுங்கிக்கொண்டிருக்கின்றது.

Dr.Anburaj said...

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும்.

----------------------------
அன்பைப் பற்றி பேச வேண்டும் என்றால் திருக்குறள் என்ற இந்து சமய இலக்கியங்களுக“குதான் வர வேண்யதுள்ளது. அரேபிய புத்தகங்களில் இது போன்ற சமாச்சாரங்கள் இருக்காது.பஞ்சம்தான்.

ASHAK SJ said...

என்னது திருக்குறள் ஹிந்து நூலா? திருக்குறளில் எங்க மதத்தை பற்றி உள்ளது?

Dr.Anburaj said...

மடியிலான் தாளுள்ளாள் தாமரையினாள்
சோம்பல் இல்லாதவன் வீட்டில் தாமரையினாள் என்ற லட்சுமி வாசம் செய்வாா் என்று திருக்குறள் கூறுகின்றது.
இப்போது சொல் ஆஷிக்.

ஏற்கனவே சொல்லி விட்டேன்.குச்சி மிட்டாய் சாப்பிட்டுவிட்டு அம்மா தரும் பாலை சாப்பிட்டு விட்டு தொட்டிலில் படுத்து தூங்கு பிள்ளாள்.படித்த அறிவுள்ள பெரியவா்கள் சம்பந்தப்பட்ட விசயங்களில் சிறுவா்கள் கலந்து கொள்ளக் கூடாது.

ASHAK SJ said...

குறள் 617:
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்
மு.வ உரை:
ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.
சாலமன் பாப்பையா உரை:
சோம்பி இருப்பவனிடம் மூதேவி தங்குவான். சோம்பாதவனின் முயற்சியில் திருமகள் தங்குவாள் என்பர்.
கலைஞர் உரை:
திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும்

அடே பார்ப்பன அடிமையே மூதேவி சீதேவி என்பது தமிழ் வார்த்தையே, இதில் எங்கே ஹிந்து மதம் வந்தது, நான் குழந்தை என்றால் நீ இன்னும் கரு, பிறக்கவே இல்லை , அல்லது உடம்பு மட்டும் வளர்ந்த மூளை வளராத முட்டாள்

Dr.Anburaj said...

முதேவி சீதேவி செந்(தாமரையினாள் என்பதெல்லாம் ஹிந்து புராண இதிகாசங்களில் உள்ள கதைகளில் வரும் கதாபாத்திரங்கள். தமிழாக இருப்பது ஹிந்து பண்பாடே.உன் மூலம் அரேபிய அடிமைத்தனம். அரேபியாக்காரன் உன்னை அடிமையாக நினைக்கின்றான். திருக்குறள் ஒரு இந்து சமய நூல்.

ASHAK SJ said...

பலமுறை கேட்டுவிட்டேன் தமிழ் வருடங்களின் பெயர் எப்படி சமஸ்கிருதத்தில்? தமிழ் நீச பாஷை சமஸ்கிருத்தம் தேவ பாஷை என்கிறது பார்ப்பன கொழுப்பு அதை நீ வேணும் என்றால் சூத்திரனாக ஏற்றுக்கொள்ளலாம் , தமிழனாக நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்

ASHAK SJ said...

nazeer bhai, publish my comments