Followers

Saturday, August 18, 2018

ஜஹாங்கிர் பாபா

நம்மில் எத்தனை பேருக்கு இந்தியாவின் விஞ்ஞானிகளின் முன்னோடியான ஜஹாங்கிர் பாபாவைப் பற்றித் தெரியும்?
இந்திய அணுவிஞ்ஞானத் துறைக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ஹோமி ஜஹாங்கீர் பாபா பிற முஸ்லிம் அறிவியலாளர்கள் மற்றும் தலைவர்களைப் போன்றே மறைக்கப் படுகிறாரென்பதும் மறக்கடிக்கப் படுகிறாரென்பதும் வேதனைக்குரியது.
========================
அணு விஞ்ஞானி ஹோமி ஜஹாங்கீர் பாபா
========================
அணுசக்தித் துறையில் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் உருவாக கடுமையாக உழைத்த ஆதாரப் புருஷராக விளங்கியவர், இந்திய அணுசக்தி விஞ்ஞானத் துறையின் ஆதாரக்கல் அறிஞர் ஹோமி ஜஹாங்கீர் பாபா.
இந்திய அணுசக்தி விஞ்ஞானத் துறையின் ஆதாரக்கல் அறிஞர் ஹோமி ஜஹாங்கீர் பாபா. அணுசக்தித் துறையை இந்தியாவில் நிர்மாணித்த அந்தப் பெரும் சிற்பி 30.10.1909-ல் பிறந்தவர்.
குழந்தைப் பருவத்தில் ஒரு குழந்தை தூங்கவேண்டிய நேரத்திற்கும் மிகமிகக் குறைவாக ஹோமி தூங்கியதால் தந்தை ஜஹாங்கீர் தாய் மெஹ்ரூன் கவலை கொண்டு மருத்துவரிடம் காட்டியபோது குழந்தையிடம் அபார மூளைச் சக்தி இருப்பது தெரியவந்தது.
----------------------------
எந்த அளவுக்கு இருந்த தென்றால் 15 வயதில் ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பு குறித்த 'தியரி'யைப் புரிந்து கொள்ளுமளவுக்கு இருந்தது.
----------------------------
1930ல் கேம்ப்ரிட்ஜில் மெக்கானிக்கல் இன் ஜினீயரிங் முடித்தவருக்கு 1934ல் ஐசக் நியூட்டன் ஃபெல்லோஷிப் விருது கிடைத்தது. 1937ல் அவர் எழுதியCascade Theory of Electron Showersஎன்ற ஆய்வுக் கட்டுரை அவருக்கு உலகப்புகழைச் சேர்த்தது.
----------------------------
Cosmic Radiation உள்ளிட்ட அவரது ஆய்வுகள் இயற்பியல் துறையில் புதிய சாதனைகளைப் படைத்தன.
------------------------------
பல நாடுகளிலுள்ள நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் அழைத்தும் அவற்றை மறுத்து 1939ல் இந்தியா திரும்பிய ஹோமி பாபா 'விஞ்ஞான முன்னேற்றமே இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும்' என்று பிரகடனப்படுத்தி அதற்காகக் கடுமையாக உழைத்தார்.
------------------------------
31 வயதில் 'மெம்பர் ஆஃப் ராயல் சொஸைட்டி' விருதும் (1941) அதற்கடுத்த ஆண்டு ஆடம்ஸ் விருதும் (1942) பெற்றார். 1945ல் Tata Institute of Fundamental Research நிறுவனம் தொடங்க இவரே காரணமாகும்.
------------------------------
Atomic Explosion, Production of Isotopes, Purification of Uraniumமுதலியன குறித்து முதன் முதலாக இந்தியாவில் ஆய்வு செய்து இந்தியாவில் அறிவார்ந்த சூழலை ஏற்படுத்திய இந்திய அணுசக்தி விஞ்ஞானத் துறைத் தந்தைஇவர்.
------------------------------
நாடு சுதந்திரமடைந்ததும்Atomic Research Centreஒன்றை அரசு தொடங்குவதற்கு வகை செய்த ஹோமி பிரதமர் நேருவுக்கு நெருங்கிய தோழராக விளங்கினார்.
------------------------------
மத்திய அரசில் அணுசக்தித் துறை என்று தனியாகவே ஒரு துறை பிரதமர் நேருவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் தொடங்கப்பட வைத்தார்.
இவரது முயற்சியால் 20.01.1957ல் ஆக்கப்பணிகளுக்காக அணுசக்தி உற்பத்திக்கு வித்திடப்பட்டது.
1955ல் அணுசக்தி சம்பந்தமாக ஜெனீவாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துகொள்ளப் பாபாவே முன் நின்று அனைத்தையும் செய்து முடித்தார்.
------------------------------
ஹோமி ஜஹாங்கீர் பாபாவின் கடுமையான முயற்சியின் விளைவாகவே தாராப்பூர் (மகாராஷ்டிரம்), ராணா பிரதாப் சாகர் (ராஜஸ்தான்), கல்பாக்கம் (தமிழ்நாடு) ஆகிய மூன்றிடங்களிலும் அணுசக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் மையங்கள் உருவாயின.
------------------------------
இந்தியாவிலேயே தோரியம், புளூட்டோனியம் முதலியவற்றைச் சரியான முறையில் உற்பத்தி செய்யவும், விவசாயம், தொழில், மருத்துவம், உயிரியல் துறைகளுக்குப் பயன்படும் ரேடியோ ஐசோடோப்பைத் தயாரிக்கவும் ஹோமி பாபா ஆற்றிய பங்கு அளவிடற்கரியது.
------------------------------
பெங்களூரிலிருந்து 80 கி.மீ. தூரத்தில் கெளரி பிட்னூர் எனுமிடத்தில் நிலநடுக்கம் மற்றும் பாதாள அணு வெடிப்பு சம்பந்தமான ஆராய்ச்சி மையம் ஒன்று அமையவும்,கல்கத்தா, அஹமதாபாத், கேரளா, காஷ்மீர் முதலிய இடங்களில் பல்வேறு விஞ்ஞான மையங்கள் அமையவும், அணுசக்தித் துறையில் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் உருவாகவும் கடுமையாக உழைத்த ஆதாரப் புருஷராக விளங்கியவர் ஹோமி ஜஹாங்கீர் பாபா.
------------------------------
18.05.1974ல் பொக்ரான் (ராஜஸ்தான்) முதல் அணுசக்திச் சோதனையின் வெற்றி மூலம் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனாவைத் தொடர்ந்து உலகளவில் ஆறாவது நாடாக இடம்பெற்று இந்தியா உயர்ந்ததென்றால் அதன் அடிப்படை நாதமாக விளங்கியது பாபா ஆரம்பித்து வளர்த்து வந்த கண்டுபிடிப்புகளும் ஆராய்ச்சி முயற்சிகளும்தான்.
------------------------------
அனைத்துலக மாநாட்டிற்காக 24.01.1966 அன்று ஏர் இந்தியா போயிங் 707 விமானத்தில் பயணித்தபோது பனிப்புயல் தாக்க ஏற்பட்ட விபத்தில் வபாத்தானவர் ஹோமி பாபா.
------------------------------
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு அமைப்புகளிடமிருந்தும் பல்கலைக் கழகங்களிடமிருந்தும் எண்ணற்ற விருதுகளைப் பெற்றவர் ஹோமி பாபா.
இவரது அரிய தொண்டு என்றென்றும் நினைவு கூரப்பட வேண்டுமென்ற எண்ணத்தில்தான் மும்பை அணுசக்தி ஆராய்ச்சி மையம் 12.01.1967 முதல் 'பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம்' (Bhabha Atomic Research Centre )எனப் பெயரிடப்பட்டது.
------------------------------
மத்திய அரசு அக்டோபர் 2008 அக்டோபர் 2009 ஹோமி ஜஹாங்கீர் பாபா நூற்றாண்டு என்று அறிவித்தது. என்றாலும் திருமணம் கூட செய்துகொள்ளாமல் இந்திய அணுவிஞ்ஞானத் துறைக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ஹோமி ஜஹாங்கீர் பாபா பிற முஸ்லிம் அறிவியலாளர்கள் மற்றும் தலைவர்களைப் போன்றே மறைக்கப்படுகிறாரென்பதும் மறக்கடிக்கப்படுகிறாரென்பதும் வேதனைக்குரியதே!
நன்றி :இனிய திசைகள் மாத இதழ் ஜனவரி 2009


11 comments:

Dr.Anburaj said...

அரேபிய அடிமைத்தனத்தாலும் மததுவேசத்தாலும் பைத்தியம் போல் பதிவு செய்யும் சுவனப்பிரியனுக்கு இது போன்ற கருத்தை பதிவு செய்யும் தகுதி கிடையாது.தங்களின் வலைதளத்தில் என்றாவது ஒரு நாளாவது ஹோமி ஜஹாங்கீர் பாபா மற்றும்பிற முஸ்லிம் அறிவியலாளர்கள் இந்து கிறிஸ்தவ அறிவியல் நிபுணா்கள்,நாட்டிற்காக பெரும் தியாகத்தையும் காட்டியவா்கள் குறித்து எந்த பதிவையும் தாங்கள் செய்தது கிடையாது. இந்நிலையில் ”ஹோமி ஜஹாங்கீர் பாபா பிற முஸ்லிம் அறிவியலாளர்களின் பங்களிப்பை” மறைக்கப்படும் குற்றத்திற்கு காரணம் யாா் என்று தாங்கள் கருதுகின்றீா்கள்.அணுசக்தி வரலாற்றில் இவரது முக்கியத்துவம் பதிவு செய்யப்படுகின்றது.பாடப்புத்கங்களில் இவரது பெயரி இடம் பெற்றுள்ளது. பெரும்பான்மையான பட்டதாரி இளைஞா்களுக்கு அணுசக்தியின் தந்தை ஹோமி ஜஹாங்கீர் பாபா என்பது நன்றாக தெரியும்.இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் கருதுகின்றீா்கள் ? தங்களது கருத்துக்களை பதிவு செய்து அரசுக்கு கோரிக்கையாக வையுங்கள். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கும் கடிதம் எழுதுங்கள்.
புதிய புதிய விஞ்ஞானிகள் வந்து கொண்டேயிருக்கின்றாா்கள். சாதனைப் பட்டியல் நீண்டு நீண்டுகொண்டேயிருக்கின்றது. எனவே ஹோமி ஜஹாங்கீர் பாபா மட்டும் குறித்து நினைத்துக்கொண்டேயிருக்க முடியாது.
மதவெறி இந்துக்களை பழி தூற்ற வேண்டும் என்பதுதான் தங்களின் ஒரே குறிக்கோள். இதிலும் தாங்கள் தோற்று விட்டீர்கள். ஹோமி ஜஹாங்கீர் பாபா பிற முஸ்லிம் அறிவியலாளர்களை தாங்கள்தான்அதிகம் புறகக்கணித்துள்ளீா்கள் என்பது எனது குற்றச்சாட்டு.

Dr.Anburaj said...

அணுவிஞ்ஞானி ஹோமி ஜஹாங்கீர் பாபா அவர்கள் முஸ்லீம் அல்ல.
அவர் ஒரு பாா்சி என்று நான் அறிந்துள்ளேன்.
தகவலை உறுதி செய்ய கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு விமான விபத்தில் உயிரிழந்தாா் என்றும் நினைவில் உள்ளது.
இந்துக்களோ ஆா்எஸ்எஸ் காரா்களோ அவரைக் கொல்லவில்லை என்பதை உறுதியாகத் தொிவித்துக்கொள்கிறேன்.சந்தோசம் தானே சுவனப்பிரியன்..

Dr.Anburaj said...

பாரதரத்னா திரு.அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் இறந்ததற்கு தாங்கள் ஒரு சிறு இரங்கல் குறிப்பைக் கூட தெரிவிக்கவில்லை. அவரது சீரிய தொண்டுகளை அரேபிய அடிமைகுணம் பார்க்க பாராட்ட மறுக்கின்றது.
--------------------------------
மகம்மது கோரி என்ற ஒரு ஆப்கானிஸ்தானத்து காடையனுக்கு ஆதரவாக பதிவு செய்துள்ளீா்கள் .ஆனால் பிருதிவிராஜ் மன்னனின் நற்குணம் சாதனை குறித்து என்றாவது ஒரு சிறு குறிப்பைக் கூட தாங்கள் செய்தவில்லை.
-----------------------------------------------
இந்தியாவின் முதல் விமானப்படை தளபதி Marshal of the Air Force என்ற பட்டம் Field Marshal பதவிக்கு இணையானது - அா்ஜன் சிங் அமரராகசமயத்தில் தங்களுக்கு ஒரு பதிவை தாங்கள் அனுப்பினேன்.தாங்கள் அது குறித்து பெரிதும் அலட்டிக்கொள்ளவில்லை. ஒரு பிரமாண்டமான சாதனையாளரை ஒரு மகத்தான தொண்டுகள் செய்த ராணுவ தளபதியை தாங்கள் மதம் அடிப்பைடயில் அலட்சியம் செய்தீா்கள்.இருட்டடைப்பு செய்தீா்கள்.
------------------------------------------------------------------------
நற்குணங்களுக்கு ஒரு சிறந்த உதாரணமாக வாழ்ந்து நாடே போற்ற வாழ்ந்த அமரா் அப்துல் கலாமின் தொண்டுகளை பாராட்ட மனம் யின்றி அவரின் இந்து கலாச்சார சார்பை கேவலமாக வர்ணணை செய்து விமா்சனம் செய்தவா் தாங்கள்தாம். இந்துக்கள் அல்ல. இந்துக்களாகிய நாட்டு மக்கள் அனைவரும் திரு.அப்துல் கலாமை ஒரு முஸ்லீம்ஆக பார்க்கவில்லை. தங்களின் குடும்ப உறுப்பினராகவே பார்த்தனா். அன்பு பாராட்டினாா்கள்.ஆனால் கோபுரத்தில் அப்துல் கலாம் சிலையை வைத்துள்ளதை பாராட்ட மனம் யின்றி கேவலமாக விமா்சித்து பதிவு செய்தீா்கள்.இந்துக்கள் தங்களது திருக்கோவில் கோபுரத்தில் திரு.கலாம் அவர்களின் உருவத்தை வைத்தது ஒரு மகத்தான பண்பாடு. ஆனால் அரேபிய அடிமையான தாங்கள் அதை கேவலமாக சித்தரித்து பதிவு செய்தீா்கள்.
----------------------------------------------------
சுவனப்பரியனுக்கு இப்படி விஷக்கொடுக்கு உள்ளது.இப்படியே ஆயிரம் குற்றம் தங்கள் மேல் சுமத்தலாம்.

Dr.Anburaj said...

இந்தியா கண்ட மாபெரும் தலைவர்களின் ஒருவரான அடல்ஜீ மறைந்துவிட்டார் என்று அறிகிறேன். பிறக்கும் எவரும் இறப்பது இயற்கையெனினும் அடல்ஜியின் மரணச்செய்தி என்னை வருந்த வைக்கிறது. அவரைப் போல சீரிய சிந்தனையும், நேர்மைத்திறமும் கொண்ட தலைவர்கள் இந்தியச் சூழலில் மிக, மிக அபூர்வமானவர்கள்.

அடல்ஜீயின் ஐந்தாண்டுகால ஆட்சி இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தது என்பதனை விஷமறிந்த எவரும் மறுக்கமாட்டார்கள். வெளிநாட்டுக் கடனை முற்றிலும் தவிர்த்து முற்றிலும் உள்நாட்டு முதலீட்டிலேயே இந்தியப் பொருளாதாரம் உயர்ந்து வருவதனைக் கண்டு உலகம் வியந்தது. அவரின் தங்க நாற்கரச்சாலைத் திட்டத்தின் பயனாக இந்தியப் பொருளாதாரம் 40 சதவீதம் உயர்ந்ததாக “நேஷனல் ஜியாக்ரஃபி’ ஆராய்ந்து கட்டுரை எழுதியது. அன்னியச் செலாவணி கையிருப்பு பெருகி, விலைவாசி கட்டுக்குள் வந்தது. புதிய தொழில்கள் துவங்குவதற்கு ஆதரவான அரசாங்க பாலிசிகளின் காரணமாக ஏராளனமான வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவிற்குத் திரும்பி தொழில் துவங்கத் தலைப்பட்டார்கள்.

ஆனால் அத்தனையும் சில அயோக்கியர்களின் துரோகத்தால் வீழ்ந்தது. பாராளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் அடல்ஜீ ஒரே ஒரு ஓட்டில் தோற்றார். தேசம் திருடர்களின் கைக்குச் சென்றது. அடல்ஜீயின் கடின உழைப்பின் பயனாக விளைந்த அத்தனை முன்னேற்றமும் பின்னுக்குத் தள்ளப்பட்டு திருடர்கள் திளைத்தார்கள். அந்தத் திருடர்கள் நாட்டைக் கொள்ளையடித்து நாசமாக்கினார்கள். தேசம் துரோகிகளினால் சூறையாடப்பட்டது.

அடல்ஜீ நாடறிந்த ஊழல் நாரீமணிகளின் சொல்லுக்குக் கட்டுப்பட்டிருந்தாரானால் அவர் பாராளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றிருக்கக் கூடும். ஆனால் அவர் அதனைச் செய்யவில்லை. எந்தச் சூழ்நிலையிலும் நேர்மை தவறாதவராகவே வாழ்ந்து மறைந்த மாபெரும் தலைவர் அடல்பிஹாரி வாஜ்பாய் அவர்கள்.

பாகிஸ்தானுடன் சமாதானம் சாத்தியம் என்கிற அப்பாவித்தனத்தனம் அவரை கார்கில் போருக்கு இட்டுச் சென்றது. முஷாரஃப் என்கிற நச்சரவத்தை மடியில் சுமந்த மாபெரும் தவற்றினை அவர் செய்தார் எனினும் அவரின் நோக்கம் நேர்மையானது. அப்பழுக்கற்றது.

அடல்ஜீ ஒரு தாரகையைப் போல வாழ்ந்தார். இன்று விண்ணில் தாரகைகளுடன் கலந்துவிட்டார். ஆனால் அவரது புகழ் என்றும் நிலைத்து நிற்கும்.

Dr.Anburaj said...

இமயமலை சாய்வதில்லை; என்றும்,
இந்தியப் பெருங்கடல் காய்வதில்லை;
இந்தியப் பெருமகனே, உன் புகழும் காயாது. மாயாது!
.
வறண்ட தேசத்தில் தாமரை மலர
நீர் ஊற்றியவன் நீ. மலரும் கமலம் மேலும் வளர
வேர் என்று தன்னை மாற்றிக்கொண்டவன் நீ.
.
பால்மணக்கும் புன்னகை முகத்தில் தவழ்ந்தாலும்
வாமனன் போல் விஸ்வரூபம் எடுத்தவன் – தேசம் நலம்பெற
ராமனின் அனுமன் போல் சஞ்சீவி எடுத்தவன்.
.
அமைதி தேடும் புறாவுக்கும் - கொத்தும்
அலகு வேண்டும் என்று பொக்ரானில்
அழகாய் அணு "சக்தி" கண்டவன்.
.
“ஒளிரும் பாரதம்” கண்ட உத்தமன் - நித்தம்
மிளிரும் இந்தியா என்று தங்கச்சாலை தந்தவன்
துளிரும் நம்பிக்கை பிளிறும் களிரென்றானது உன்னால்,
.
கார்முகில் போல் கருணை மழை பொழிந்தவன்
கார்கில் போர் என்றால் வெற்றிமாலை கொண்டவன்
மார்பில் தாங்கி வளர்த்தாய் பாரதத்தை - தாயென!
.
சாய்வதில்லை ஓய்வதில்லை உன் புகழ்
மாய்வதில்லை தேய்வதில்லை உன்கனவு
தூயதில்லை ஆண்டவன் அளிக்கட்டும் முக்தி உனக்கு!
.
வீரவணக்கம் வாஜ்பாய்!
.
-ச. சண்முகநாதன் நன்றி தமிழ்ஹிந்து

Dr.Anburaj said...

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் அவரதுதந்தை கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாய் இருவரும் ஒன்றாக கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்ற சுவாரசியவரலாறு குறித்து காணலாம்.

இந்திய மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், மறைந்த முன்னாள் பிரதமரும் ஆன வாஜ்பாய், 1946-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் உள்ள டி.ஏ.வி. கல்லூரியில் சேர்ந்து எம்.ஏ., அரசியல் அறிவியல் துறையில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றார்.

பின்னர் 1948-ம் ஆண்டு அதே கல்லூரியில் வாஜ்பாயும், அவரது தந்தையும், ஓய்வுபெற்ற ஆசிரியருமான கிருஷ்ண பிகாரி வாஜ்பாயும் சேர்ந்து ஒன்றாக சட்டம்பயின்றனர். டி.ஏ.வி. கல்லூரி விடுதியின் 104வது அறையில் இருவரும் சேர்ந்து தங்கியவாறு கல்லூரிக்கு சென்றனர். தந்தை, மகன் இருவரும் ஒன்றாக வகுப்புக்குசெல்வது இருவருக்கு உள்ளேயும் சங்கடத்தை ஏற்படுத்த, இனி ஒன்றாக வகுப்புக்கு செல்ல வேண்டாம் என இருவரும் முடிவெடுத்தனர். அதன்படி வாஜ்பாய் திங்கள் கிழமை வகுப்புக்கு சென்றால், அவரது தந்தை செவ்வாய்க்கிழமை வகுப்புக்குசெல்வார்.

தந்தை, மகன் இருவரும் ஒன்றாக சேர்ந்து ஒரே கல்லூரியில் படிப்பது அப்போதைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரிய பேச்சுப் பொருளாக இருந்தது என்று டி.ஏ.வி. கல்லூரியின் முதல்வர் மனவேந்திரா ஸ்வர்ப் கூறியுள்ளார்.

மேலும் இணை-பேராசிரியர் விஜய் பிரதாப்சிங் கூறுகையில், அரசியல் அறிவியல்துறையின் தலைவர் மதன் மோகன் பாண்டேவுடன், வாஜ்பாய் மிகவும் நெருக்கமாக இருந்தார். வாய்பாய் எப்போதும் அவரை குருஜி என்றே அழைப்பார். வகுப்புகள் முடிந்தபிறகு, அவரது வீட்டிற்கு சென்று ஏராளமான சமூகபிரச்சனைகள் குறித்து அவருடன் ஆலோசனை செய்வார் என்று கூறினார்.

Related Posts:

Dr.Anburaj said...

சொரணை வந்து விட்டது.பதிவுகளை வெளியிட்டதற்கு நன்றி.

ASHAK SJ said...

அடல் சீ அப்படி ஒன்னும் பெரிய அப்பா டக்கர் இல்லை , சவப்பெட்டி ஊழலுக்கு சொந்தக்காரர் , பாபரி மஸ்ஜித் இடிப்பை பற்றி எதிர்க்காத மதவெறியன் , குஜராத்தை கலவரத்தை பற்றி தன எதிர்ப்பை தெரிவிக்காத மதவெறியன் , அவரின் துதியை இன்னும் பாடிக்கொண்டிருப்பதில் ஒரு பயனும் இல்லை

ASHAK SJ said...

அடல் சீ சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபடமாட்டேன் ன்னு மன்னிப்பு கடிதம் எழுதி மடிப்பிச்சை கேட்ட மகான்

Dr.Anburaj said...

ஆசக் தம்பி
திரு.அடல்ஜி அவர்களை

மகான் என்று பாராட்டியதற்கு மிக்க நன்றி.

எனனதான் போலியாக வாதிட்டாலும் மனம் உண்மையை அறிவித்து விடும்.

ASHAK SJ said...

வஞ்சப்புகழ்ச்சி அணியை அறியா அறிவிலி