Followers

Saturday, August 18, 2018

துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம்

'துபாயின் முன்னேற்றத்தில் கேரள மக்களின் பங்களிப்பு அளவிட முடியாதது. ஹஜ் பெருநாள் வேறு நெருங்குகிறது. இந்த நேரத்தில் கேரள மக்கள் அளவிலா துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர். அந்த மக்களுக்கு உதவ வேண்டியது நமது கடமை. துபாய் மக்கள் தங்களால் இயன்ற பொருளாதார உதவிகளை தந்துதவுங்கள். துபாய் அரசும் பொருளாதார உதவிகளை அனுப்பி வைக்கும்.'
இவ்வாறு துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு ட்விட்டரில் கேரள முதல்வர் பினராய் விஜயன் 'காலத்தினால் செய்த இந்த அளவிட முடியாத உதவியை வாழ்நாளில் நாங்கள் என்றுமே மறக்க மாட்டோம். இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று பதிலளித்துள்ளார்.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
19-08-2018
கேரள பத்திரிக்கை மாத்யமமில் வந்த செய்தி
The UAE Prime Minister and ruler of the Emirate of Dubai Mohammed bin Rashid Al Maktoum has made a request to the people through social media. The Indian state of Kerala is witnessing huge flood, the most devastating of a century. Ahead of Eid Al Adha, do not forget to extend a helping hand to our brothers, he tweeted.
To help the flood victims, UAE and Indian national will work unitedly. To provide immediate help, a committee has been formed. He has requested everyone to contribute generously to the initiative.
People of Kerala have been with UAE for its progress always and UAE is liable to help and support the flood-affected people, said the PM in his post.
The request has been made in Arabic, English and Malayalam through Facebook and Twitter. Thousands of people have thanked the leaders' generosity in the social media platform


4 comments:

Dr.Anburaj said...


நன்றி.உங்களின் உதவிக்கு மிக்க நன்றி.
இறைவன் அரபு நாடுகளில் பெரும் மதிப்பு மிகுந்த பெட்ரோல் வளத்தை அள்ளி அள்ளி கொடுத்துள்ளான். அமெரிக்க நாடுகளின் சார்பாக உலகமெங்கும் பல மருத்துவ கல்விப்பணிகள் நடைபெற்று வருகின்றது. கத்தார் துபாய் குவைத் நாடுகள் சார்பாக இந்தியாவில் ஒரு இலவச மருத்துவமனை கட்டி மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்று மேற்படி அரசுகளுக்கு எனது பணிவான வேண்டுகோளை வைக்கின்றேன்.

Dr.Anburaj said...

கத்தாா் குவைத் போன்ற நாடுகள் மிகுந்த அளவில்உபரி வருமானம் உள்ளவா்கள். எனவே அவர்கள் குறைந்தது 200 கோடியாவது வழங்க முடியும். அது ஒரு அல்பமான தொகையாகும்.
தற்போது இவர்கள் வழங்கியிருக்கம் 35 கோடி மிக குறைவானதே.

Dr.Anburaj said...

700 கோடி அளவிற்கு தற்போது ஐக்கிய அரபு நாடுகள் உதவி அளிக்க முன் வந்துள்ளதாக தொலைக் காட்சி பாலிமா் செய்திகள் தெரிவிக்கின்றன. பாராட்ட வேண்டும்.கேரள மக்கள் பெரும் எண்ணிக்கையில் அரபு நாடுகளின் முன்னேற்றத்திற்காக பெரிதும் பாடுபட்டு வருகின்றாா்கள். அந்த நாடுகளும் தக்க முறையில் உதவியிருப்பது பெரிதும் பாராட்டத்தக்கது.

Dr.Anburaj said...

குழப்பம் ஏற்பட்டுள்ளது
01.மேற்படி 700 கோடி என்று எந்த அளவையும் மேற்படி அரசு அறிிவக்கவில்லை என்று மறுப்பு வந்துள்ளது.ஆகவே தவறான தகவல்.
02.சுனாமி வந்தபோதும் வட இந்தியாவில் பெரும் மழை ஏற்பட்டு 5000 பேருக்கு மேல் இறந்த பெரும் அழிவு நடந்தபோதும் வெளிநாடுகளில் இருந்து உதவிகள் பெறவேண்டாம் என்று காங்கிரஸ் அரசு சட்டம் இயற்றியுள்ளது.
அதன் அடிப்படையில் இந்திய அரசும் வெளிநாடுகளில் இருந்து உதவிகள் பெறவிரும்பவில்லை என்பதை அறிவித்துவிட்டது.

உள்நாட்டு பிரச்சனையை உள்நாட்டு உதவி அன்பு இரக்கத்தைக்கொண்டு தீா்ப்போம்.