Followers

Tuesday, August 07, 2018

கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைந்த செய்தி....

கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைந்த செய்தி சற்று முன் கிடைத்தது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார், அவரது கட்சித் தொண்டர்கள், மற்றும் தமிழக மக்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. (அல்-குர்ஆன் 21:35)
பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள்மரணம் மூலம் மீட்கப்படுவீர்கள். 
(அல்-குர்ஆன் 21:35)
‘நீங்கள் எங்கிருந்த போதும் உங்களை மரணம் அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே!
(அல்குர்ஆன் 4: 78)
அல்லாஹ்வின் விருப்பமின்றி எவரும் மரணிக்க முடியாது. இது நேரம் குறிக்கப்பட்ட விதி
(அல் குர்ஆன் : 3:145)


5 comments:

Dr.Anburaj said...

ஆடி அடங்கும் வாழ்க்கையடி ஆறடி நிலமே சொந்தமடா
எரித்தால் அதுவும் இல்லை.ஆறடி நிலம் கூட 50 ஆண்டுகள் கழிந்தால் வேறு பிணம் வந்து இருந்துவிடும்.ஆறடி நிலம் கூட நிரந்தர சொந்தம் அல்ல.

நாம் செய்த பாவ புண்ணியங்களே நமக்குச் சொந்தம் என்பது இந்து கொள்கை.
மனித வாழ்க்கையை குரானைவிட திருமந்திரம் அழகாகச் சொல்லும்

ஊரெல்லாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
போினை நீக்கி பிணம்என்று பேரிட்டு
சுறையாங்காட்டிடை கொண்டு போய் சுட்டிட்டு
நீரினில் முழ்கி நினைப்பொழிந்தார்களே

செத்தவன் பெயா் மறைந்து பிணம் என்று பெயா் பெற்றுவிடும்.
மனம் நிம்மதிக்கு அழுது புறள்வார்கள்
பின் சுடுகாட்டில் கொண்டு எரிப்பார்கள்
பின் குளித்து அனைத்தையும் மறந்து விட்டு தங்கள் அலுவல்களை கவனிக்கச் சென்று விடுவார்கள்.
பட்டினத்து அடிகள் சொல்கிறாா்
செத்த பிணத்தை இனி சாகப்போகும் பிணங்கள் சுமக்கின்றன.
படிக்க வேடிக்கையாக இல்லை.
------------------------------------------------
கலைஞா் கருணாநிதி காலம் முழுவதும் தன்னை ஒரு உறுதியான நாத்திகராகவே காட்டிக்கொண்டாா். கடைசி காலத்தில் யோகா பழகினாா்.அதுவம் உடல் நலத்தை முன்னிட்டுதான்.
மனிதர்களுக்கு இறந்த பின் அரேபிய சமய நூல்கள் சொல்லும்
கப்ரு வாழ்க்கை கலைஞருக்கு உண்டா ? மணமகன் போல் மகிழ்ந்து தூங்குவாரா ?
மலக்குகள் நாத்திகரான அவரிடம் என்ன கேள்விகளைக் கேட்கும் ?
இந்நேரம் கேடடு முடித்திருப்பார்களா ?
ஆனால் உயிரியலர் முறையில் 3 தினங்களுக்குள் புழு கரையான் அரி்க்க ஆரம்பித்து விடும். வயறு பெருத்து வெடித்து விடும். படிப்படியாக அழுகி நாளி மண்ணின்னன வெப்பத்தால் சதைகள் கழிந்து எலும்புகள் கொஞ்சகாலம் இருக்கும். இதுதான் புதைக்கப்பட்ட அனைத்து பிணங்களின்நிலை. கப்ரு வாழ்க்கை என்பத பெரிய மூடநம்பிக்கை.

Dr.Anburaj said...

இது என்ன நாதியற்ற ஒரு வலைதளமா ? பல கேள்விகளை நானும் கேட்டுக்கொண்டேதான் இருக்கின்றேன். ஒரு வாசகரும் பதில் அளிப்பதில்லை.ஆஷிக் கூட எந்த பதிவையும் செய்யாமல் உள்ளாா்.நாத்திகராக
கருணாநிதியின் மையத்திடம் மலக்குகள் என்ன கேள்விகளைக் கேட்டார்கள் ? கேட்பார்கள் ?

ASHAK SJ said...

பல நேரங்களில் நான் நினைப்பது உண்டு , மூடர்களிடம் விவாதிக்க கூடாது என்று , சில நேரங்களில் பதில் கொடுக்கவேண்டிய கட்டாயம் உள்ளதால் பதில் கொடுக்கிறேன் , ஆண்மையற்ற தமிழ்ஹிந்து வலைத்தளம் போல இது இல்லை

இஸ்லாத்தை பொறுத்தவரை மண்ணறையில் கேட்கக்கூடிய கேள்விகள் ஆளுக்கு தகுந்தாற்போல் மாறாது

Dr.Anburaj said...

கருணாநிதியிடம் கேட்ட கேள்விகள் என்ன சொல்லுங்கள் ஆஷிக்

ASHAK SJ said...

கருணா அல்ல, யார் இறந்தாலும் கேள்வி ஒன்றுதான், என்ன என்ன கேள்வி என்பதை தேடிப்பார்த்து தெரிந்துகொள்