சூடு தாங்காமல் தவிக்கும் ஹாஜிக்கு தனது காலணியை அளிக்கும் காவலர்!
போலீஸ்காரர்கள் என்றாலே முரட்டு சுபாவமும் முரட்டு மீசையும்தான் அதிகார தோரணையும்தான் நமக்கு ஞாபகம் வரும். ஆனால் மெக்காவில் உள்ள காவலர்கள் மிகுந்த பொறுமையோடும் அன்புள்ளத்தோடும் பழகுவதை பார்க்க முடியும். மொழி தெரியாமல் தவிக்கும் அனைத்து உலக மக்களையும் பொறுமையோடு கையாளும் இவர்களின் அன்புள்ளத்தை நேரிலேயே கண்டு வியந்துள்ளேன்.
இங்கு ஒரு பெண்மணி காலணி அறுந்ததால் வெயிலின் சூடு தாங்காமல் தவிக்கிறார். இதைப் பார்த்த காவலர் தனது காலணியை கழட்டிக் கொடுக்கிறார். இது போன்ற நெகிழ்ச்சியான பல சம்பவங்களை ஹஜ்ஜில் நாம் காண முடியும்.
10 comments:
யேமனில் சவுதி அரேபியா நடத்திய விமானத் தாக்குதலில் -ஒரு பள்ளி பேருந்து தாக்கப்பட்டு 30 மாணவர்கள் இறந்னா்.காயம் பட்டவா்கள் எத்தனை என்று தெரியவில்லை.
-------------------
ஆப்கானிஸ்தானில் ஒரு பள்ளிக் கூடத்தின் மீது தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 53 போ்கள் கொல்லப்பட்டுள்ளாா்கள். இன்னும் பலா் ஆபத்தான நிலையில் உள்ளனா்.கை ,கால் , கண் போனவன் எத்தனை பேரோ தெரியவில்லை.பாதிக்கப்பட்ட அனைவரும் 18 வயதிற்குட்பட்டவர்கள்.அரேபிய கலாச்சாரத்தை பின்பற்றி வாழும் முஸ்லீமை்கள். கொடுமை.
-----------------------------
இந்துக்களாக இருந்த போது ஆப்கானிஸ்தானில் இப்படி ஒரு கொடுமை நடக்கவில்லை.
முகம்மது 1400 ஆண்டுகளுக்கு முன்பு போதித்த கருத்துக்களை அப்படியே பின்பற்றி வாழ்வதாக தங்களை விளம்பரம் செய்து கொள்பவா்கள்தாம் ஏதேதோ செய்கின்றாா்கள்.
------------------------
கடந்த மாதம் தோதலில் போட்டியிட்ட சீக்கியா் ஒருவா் கொல்லப்பட்டாா்.அவரோடு 20 இந்துக்களும் கொல்லப்பட்டாா்கள். இந்தியாவில் இருந்து சென்றவா்கள் அல்ல. காந்தரத்தின் மண்ணின் மைந்தா்கள். பாவம். இசுலாமிய பயங்கர வாதத்தால் காந்தரம் ஆப்கானிஸ்தானமகி விட்டது. படுகொலைகளுக்கு ஒய்வில்லை. குரானால் அமைதியை உருவாக்க இயலவில்லை.
----------------------------------
ஆப்கானிஸ்தானை சீனாவிடம் ஒப்படைத்து வெிடுங்கள். அமைதி முன்னேற்றம் எல்லாம் வந்து விடும்.வாலை ஆட்டுபவன் வால் குண்டியோடு வெட்டிவிடுவான்.
முஸ்லீம்கள் மட்டும் நற்பண்புகளுக்குச் சொந்தக்காரா்கள் அல்ல.
சாதாரணமாக தெருவில் காணலாம். இது ஒரு பெரிய விசயம் அல்ல.
ஒரு முறை திருநெல்வேலி போத்திஸ் கடையில் துணி எடுத்து விட்டு இரண்டு குடைகளையும் வாங்கியிருந்தேன். சிறிது நேரத்தில் மழை கடுமையாக பெய்தது.கைகுழந்தையோடு வந்த ஒரு பெண் தடுமாறினாள். எனக்கும் என்மனைவிக்கும் ஆளுக்கொரு குடை தேவைதான். இருப்பினும் அந்த பெண்ணுக்கு நான் வாங்கிய புதுக்குடையை ஒன்றை அப்படியே கொடுத்து விட்டேன்.
13 வயது சிறுமி இருக்க வேண்டிய இடம் பள்ளிக் கூடம்தான் - திருமணம பள்ளியறை அல்ல
துருக்கி அரேபிய அடிமை நாடு. இந்த நாடடின் அவலங்கள் சிறுவயது திருமணம். 18 வயதிற்குள் 56சதம் பெண்கள் திருமணம் செய்து தொட்டில் ஆட்டச் சென்று விடுகின்றாா்கள்.இந்நிலையில் பெண்கள் கல்வி என்பது கேள்ளிக்குறியாகும்.மருத்துவம் கல்வி போன்ற பணிகளில் சேவைக்கு பெண்கள் போதிய எண்ணிக்கையில் கிடைக்கவில்லை.
Turkey's Child Brides
by Burak BekdilWhere would you like your daughter to be when she is 13? In school, or in bed with a grown man? The answer to this question is largely beyond argument in much of the world. In Islamic societies, however -- including non-Arab and theoretically secular Turkey -- the answer is anyone's guess. Usually in such states, the police power of the government does not fight the patriarchal tradition; instead, as in Turkey, it supports it:
40% of girls under 18 in Turkey are forced into marriage (according to Turkish Philanthropy Funds).
In January 2018, a government body under President Recep Tayyip Erdoğan's jurisdiction suggested that, according to Islamic law, girls as young as 9 and boys as young as 12 could marry.
"Low education" means almost all of Turkey: The average schooling in the country is a mere 6.5 years.
In Turkey you may abuse a 13-year-old and walk free, but you may not tease the president.Turkey's former president, Abdullah Gül, the former ally of incumbent Islamist strongman Recep Tayyip Erdoğan and co-founder of the party that has ruled Turkey since 2002, was a 30-year-old man when he married his then fifteen-year-old bride, Hayrünnisa. Gül, nominated for the presidency by Erdoğan, was Turkey's first Islamist president.
....2
According to Turkish Philanthropy Funds (TPF), 40% of girls under the age of 18 in Turkey are forced into marriage. TPF found that the Turkish national average of female high school dropouts was 56%. It further found that early marriage is seen in families with a low education level. "Low education" means almost all of Turkey: The average schooling in the country is a mere 6.5 years. In 45 Turkish provinces, the schooling rate is below the national average.
The arrival of around three million Syrian refugees to Turkey since civil war broke out in the neighboring country has made things worse. For instance, a social worker at the Kanuni Sultan Süleyman Training and Research Hospital in Istanbul's Küçükçekmece district revealed that the hospital treated 115 pregnant underage girls, including 39 Syrian nationals, between Jan. 1 and May 9, 2017.
The social worker complained to prosecutors that the hospital tried to cover up the pregnancies and did not notify the authorities, as is a legal requirement for the treatment of all pregnant girls younger than 18 in Turkey. Such examples are only the "tip of the iceberg," according to Canan Güllü, head of the Turkish Women Associations Federation.
A recent case of Syrian refugee-related child abuse is an embarrassment not only for the Turkish political culture that has nurtured the malady but also for the Turkish judiciary: Fatma C., a Syrian child refugee arrived in Ankara, the Turkish capital, with her family four years ago. In 2017, according to an indictment, she was forced to marry her relative at the age of 13, Abdulkerim J. The marriage was not civil but religious (made legal under Islam by an imam). Fatma C. got pregnant and was taken to a local health center where, because she was younger than 18, authorities informed law enforcement authorities.
சுவனப்பிரியன் 13 வயது சிறுமிக்கு உடனடி அவசர தேவை பாலியில் இன்பமும் குழந்தைப்பேறா ? கல்வியா ? 9-13 வயதுள்ள பெண்ணுக்கு குழந்தை பேறைதாங்க முடியுமா ?
சங்க கால தமிழ் பண்பாடு-சமய சிந்தனைகள்.
சங்ககால பெருமைகள் குறித்து என்றும் முஸ்லீம்கள் கருத மாட்டாா்கள்.எனெனில் அவர்களுக்கு அரேபியாதான் குறி. இருப்பினும் ஏதோ ஒரு சிலா் இருப்பார்கள் என் நம்பி இதைப்பதிவு செய்கிறேன்.சங்ககாலத் தமிழகத்தில் சிவபெருமான், முருகப்பெருமான், திருமால், பலராமன், கொற்றவை ஆகிய தெய்வங்கள் சிறப்பாக வழிபடப்பட்டனர். இத்தெய்வங்களுள் மிகப் பழங்காலங்தொட்டே சிறப்பாக அதிகமாக வழிபடப்பட்ட பெருந்தெய்வம் சிவபெருமான் என்பது சங்க இலக்கியப் பாடல்களாலும்,வரலாற்று ஆதாரங்களாலும் அறியப்படுகிறது.
புறநானூறு சிவபெருமானை “முதுமுதல்வன்” என்றும் வேதங்களை உருவாக்கியவர் என்றும் கூறுகிறது.
“நன்றாய்ந்த நீணிமிர்சடை
முதுமுதல்வன் வாய்போகா
தொன்றுபுரிந்த வீரிரண்டின்
ஆறுணர்ந்த வொருமுதுநூல்
இகல்கண்டோர் மிகல்சாய்மார்
மெய்யன்ன பொய்யுணர்ந்து
பொய்யோராது மெய்கொளீஇ
மூவேழ் துறையு முட்டின்று போகிய
உரைசால் சிறப்பி னுரவோர் மருக.
(புறம் 166, 1-9)
மேலும் புறநானூற்றில் காணப்படும் ஒரு பாடலால் மிகப்பழங்காலந்தொட்டே சிவபெருமானுக்குத் தமிழகத்தில் பெருங்கோவில்கள் இருந்து வந்தது தெரிகிறது.
“பணியிய ரத்தைநின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலம் செயற்கே
(புறம் 6. 17-18)
மேலும் கரிகாற்பெருவளத்தார் காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு கோவிலைப் புதுப்பித்தார் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன.அது சிவன் கோவில் என்பது திருஞானசம்பந்த பெருமானின் தேவாரம் மூலம் தெரியவருகிறது. மேலும் கோச்செங்கணாச்சோழர் காவிரி உற்பத்தி ஆகும் குடகிலிருந்து காவிரி கடலில் கலக்கும் இடம்வரை சிவபெருமானுக்கு 70 மாடக்கோவில்கள் கட்டினார் என்பது வரலாற்று ஆதாரங்களாலும்,நாயன்மார்கள் தம் திருப்பதிகங்களாலும்,திருமங்கையாழ்வார் பாசுரத்தாலும் தெரிகிறது. மேலும் மூவேந்தர்களும்,குறுநில மன்னர்களும் பெரும்பாலும் சைவசமயத்தவராகவே இருந்தனர் என்பதும் சங்க இலக்கியப் பாடல்களால் தெரிகிறது.
சிலப்பதிகாரம்:
மாமன்னர் சேரன் செங்குட்டுவர் சிவனருளால் பிறந்தவர் என்று இளங்கோவடிகள் தம் சிலப்பதிகாரத்தில் கூறுகிறார். மேலும் சிறந்த சிவபக்தரான செங்குட்டுவர் கனக விஜயரை வெல்ல வடநாடு மீது படையெடுத்துச் செல்வதற்கு முன் பரமேஷ்வரரை வணங்கி அவர்தம் திருவடியைத் தன் சிரசில் வைத்தார் என்று இளங்கோவடிகள் கூறுகிறார்.
“நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி
உலகுபொதி உருவத்து உயர்ந்தோன் சேவடி
மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து
இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி வலங்கொண்டு
மறையோர் ஏந்திய ஆவுதி நறும்புகை
நறைகெழு மாலையின் நல்லகம் வருத்தக்
கடக்களி யானைப் பிடர்த்தலை ஏறினன்
(சிலம்பு 26 54 – 60)
குடக்கோக் குட்டுவன் கொற்றம் கொள்கென
ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடங் கொண்டு சிலர் நின்று ஏத்தத்
தெண்ணீர்க் கரந்த செஞ்சடைக் கடவுள்
வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்
ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத்
தாங்கினன் ஆகித் தகைமையில் செல்வுழி
(சிலம்பு 26”)
து.
“அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க்
கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியில்
வெள்ளியம்பலத்து.. ” (சிலம்பு – பதிகம், 39-41)
குழவித் திங்கள் இமையோர் ஏத்த
அழகொடு முடித்த அருமைத்தாயினும் (சிலம்பு 2.38 -39)
பெரியோன் தருக திருநுதல் ஆக என (சிலம்பு 2.41)
பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் (சிலம்பு 5.69)
திரிபுரமெரியத் தேவர் வேண்ட
எரிமுகப் பேரம்பு ஏவல் கேட்ப
உமையவ ளொருதிற னாக வோங்கிய
இமையவ னாடிய கொடுகொட்டி யாடலும் (சிலம்பு 6.40 – 43)
தேர்முன் நின்ற திசைமுகன் காணப்
பாரதி யாடிய வியன் பாண் டரங்கமும் (சிலம்பு 6.44 – 45)
பிறைமுடிக்கண்ணிப் பெரியோன் ஏந்திய… (சிலம்பு 11.72)
அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும்
வருமுறை எழுத்தின் மந்திரமிரண்டும் (சிலம்பு 11.128 – 129)
கண்ணுதல் பாகம் (சிலம்பு 12.2)
ஆனைத்தோல் போர்த்து (சிலம்பு 12.8)
புலியின் உரி உடுத்து (சிலம்பு 12.8)
கண்ணுதலோன் (சிலம்பு 12.10)
நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்து (சிலம்பு 12.55)
நஞ்சுண்டு கறுத்த கண்டி (சிலம்பு 12.57)
சென்னியன் இளம்பிறை சூடிய இறையவன் சிலம்பு (22.86 – 87)
ஆலமர் செல்வன் பெயர் கொண்டு வளர்ந்தோய் (சிலம்பு 23.91)
ஆலமர் செல்வன் மகன் (சிலம்பு 24.15)
மேலும் ஔவைப்பிராட்டியார் அதியமான் நெடுமானஞ்சியை சிவபெருமானைப் போல் என்றும் நிலைத்து வாழ்வாயாக என்று வாழ்த்துகிறார்.
“பால் புரை பிறை நுதற் பொலிந்த சென்னி
நீலமணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே (புறம் 91, 5-7)
இதுகாறும் காட்டிய சில ஆதாரங்களால் மிகப்பழங்காலந்தொட்டே தமிழகத்தில் சிவவழிபாடு பெரிதும் பரவியிருந்ததும், சிவபெருமானையே முழுமுதல்வனாக தமிழர்கள் வழிபட்டனர் என்பதும்,அரச சமயமாக சைவமே இருந்தது என்பதும்,சைவம் தமிழர்களால் பெரிதும் பின்பற்றப்பட்டது என்பதும் தெரிகிறது.
பதிற்றுப்பத்து – கடவுள் வாழ்த்து:
எரி எள்ளு அன்ன நிறத்தன், விரி இணர்க்
கொன்றைஅம் பைந் தார் அகலத்தன், பொன்றார்
எயில் எரியூட்டிய வில்லன், பயில் இருள்
காடு அமர்ந்து ஆடிய ஆடலன், நீடிப்
புறம் புதை தாழ்ந்த சடையன், குறங்கு அறைந்து
வெண் மணி ஆர்க்கும் விழவினன், நுண்ணூல்
சிரந்தை இரட்டும் விரலன், இரண்டு உருவா
ஈர் அணி பெற்ற எழிற் தகையன், ஏரும்
இளம் பிறை சேர்ந்த நுதலன், களங்கனி
மாறு ஏற்கும் பண்பின் மறு மிடற்றன், தேறிய
சூலம் பிடித்த சுடர்ப் படைக்
காலக் கடவுட்கு உயர்க மாவலனே.....3
விளக்கவுரை:
சிவபிரானின் செம்மேனி வண்ணமும், அளவில்லா ஆற்றலும், அவன் கூத்தியற்றும் அற்புதப் பாங்கும், அவன் சக்தியோடு கலந்திருக்கும் அந்தத் தனித்தன்மையும்,அவன் அருளின் செவ்வியும்,பிறவும் கூறி வியந்து போற்றுகிறார் புலவர்.
“எரியையும் எள்ளுவது போன்ற நிறம்”, என்றது எரி நெருப்பினைக் காட்டிலும் செம்மையும்,வெம்மையும்,ஆற்றலும், ஒளியும் கொண்டதான செம்மேனி வண்ணம் என்பதாம்.
அத்திருமேனி உடையானின் திருமார்பிடத்தே கொன்றைப் பைந்தார் அழகுசெய்தபடி விளங்கும் என்றது, அவனது தண்மையையும், அழகுணர்வையும் நினைந்து மகிழ்ந்ததாம்.
“பொன்றார் எயில் எரியூட்டிய வில்லன்”, என்றது அடியவர்க்கு அடியவனாகி அவர்க்கு தீங்கிழைப்பாரின் ஆணவத்தை அழித்தொழிக்கும் சினத்தோடு செயல்பட்டு அருளுகின்ற உளப்பாங்கு உடையவன் அவன் என்று கூறியதாகும்.
“பயிலிருள் காடமர்ந்து ஆடிய ஆடலன்”,என்றது ஸர்வ ஸம்ஹார காலத்தில் அனைத்தயும் ஒடுக்கி ஆடுகின்ற ஊளிப்பெருங்கூத்தினைக் குறித்தது.இது அவனே ஆதியும் அந்தமும் ஆன பரம்பொருள் என்பதை உணர்த்துவது.
“சிரந்தை இரட்டும் விரலன்”,என்றது அவன் தன் உடுக்கையினின்று ப்ரணவத்தைத் தோற்றுவித்து, அதனின்று ஸகலத்தையும் தோற்றுவிப்பவன் என்பதை உணர்த்துவதற்காம்.
இளம்பிறை சேர்ந்த நுதலும்,களங்கனி மாறேற்கும் பண்பின் மறுமிடறும் அவனது அளப்பில் பெருங்கருணையையும்,அளவில்லாத ஆற்றலையும் நினைந்ததாம்.
“சூலம் பிடித்தவன்”, என்று கூறியது ஸ்ருஷ்டி,ஸ்திதி,ஸம்ஹாரம் ஆகிய மூன்றையும் அவனே நடத்துபவன்,முச்சக்திக்கும் அவனே முதல்வன் என்பனவற்றை உணர்த்துதற்காம்.
“காலக் கடவுட்கு”,என்றது அவன் காலத்தைக் கடந்து நிற்பவன் எனவும், அவனே காலமாக இருப்பவன் எனவும், அவனே ஆதி முழுமுதல்வன் எனவும் உணர்த்துதற்காம்.
“அனைத்துமாகிய அவன் பெருவெற்றி உலகெங்கும் உயர்ச்சி பெறுக”,என்றது, உலக மாந்தர் அனைவரும் அனைத்தும் அவன் செயலே என்பதை உணர்ந்து, அவன்பாலே தம்மையும் ஒன்றுபடுத்தி உயரவேண்டும் என விரும்பி உரைப்பதாம்.
சிவபெருமானை உமையொருபாகனாக வழிபட்டு வாழ்வு பெறும் மரபு பண்டைக்காலத்துத் தமிழ் மரபே என்பதையும் நாம் இதனால் அறிதல் வேண்டும்.
அகநானூறு – கடவுள் வாழ்த்து:
கார் விரி கொன்றைப் பொன் நேர் புது மலர்த்
தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்;
மார்பினஃதே மை இல் நுண் ஞாண்;
நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டு,
கையது கணிச்சியொடு மழுவே; மூவாய்
வேலும் உண்டு, அத் தோலாதோற்கே;
ஊர்ந்தது ஏறே; சேர்ந்தோள் உமையே
செவ் வான் அன்ன மேனி, அவ் வான்
இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று,
எரி அகைந்தன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை,
முதிராத் திங்களொடு சுடரும் சென்னி,
மூவா அமரரும் முனிவரும் பிறரும்
யாவரும் அறியாத் தொல் முறை மரபின்,
வரி கிளர் வயமான் உரிவை தைஇய,
யாழ் கெழு மணி மிடற்று, அந்தணன்
தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்றால், உலகே.
விளக்கவுரை:
கார்காலத்தில் கட்டவிழ்ந்து மலரும் கொன்றையின் பொன்னைப் போன்ற புதுமலர்களினால் சேர்ந்த தாரினை உடையவன், கட்டிய மாலையினை உடையவன், தொடுத்த கண்ணியினையும் உடையவன் சிவபிரான்.குற்றமில்லாத நுண்மையான பூணூல் அவன் மார்பினிடத்தே விளங்கும். அவன் நெற்றியிடத்தோ இமையாத கண்,அவன் கைகளில் விளங்குவனவோ குந்தாலியும்,மழுவாயுதமும்.அவை பகைவரை வென்ற சிறப்பும் உடையன.தோல்வியே அறியாதவன் அவன். அத்தகைய அவனுக்கு முத்தலை வேலும் உண்டு. அவன் ஏறி ஊர்ந்தது ஆன் ஏறு,அவனில் ஒரு பகுதியாகச் சேர்ந்திருப்பவள் உமையம்மை.
செவ்வானத்தைப் போன்ற ஒளியுடைய செந்நிறம் வாய்ந்தது அவன் திருமேனி.அவ்வானத்திலே விளங்கும் பிறைநிலவினைப் போன்ற வளைந்த வெண்மையான கூரிய பற்கள் அவனுடையவை. நெருப்பு கப்புவிட்டு எரிந்தாற் போன்று விரிந்து, இடையீடுபட்டு விளங்குவது அவனுடைய முறுக்குண்ட செஞ்சடை.வளர்ந்து முதிராத இளந்திங்களுடன் கூடியதாக அவன் சென்னி ஒளிவீசும். மூப்பே இல்லாத அமரர்களும்,முனிவர்களும், மற்றையோரும்,பிறர் யாவரும் அறியமுடியாத,அத்துணைப் பழமையான தன்மையினை உடையவன் அவன்.
கோடுகளுடன் விளங்கும் வலிய புலியின் தோலினை உடுத்தவன்.யாழ் இசை முழங்குகின்ற நீலமணிக் கழுத்தினன்.உயிர்கள் பால் அளப்பருங்கருணையை உடைய அந்தணன் அச் சிவபெருமான். அவனுடைய அழிதல் இல்லாத திருவடி நீழலையே உலகம் தனக்குக் காப்பாகக் கொண்டு என்றும் தங்கியிருக்கிறது.
பரிபாடல் 8ஆம் பாடல்:
திருப்பரங்குன்றமும் இமயமும்:
மண்மிசை அவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப்
புள்மிசைக் கொடியோனும் புங்கவம் ஊர்வோனும்
மலர்மிசை முதல்வனும் மற்றவனிடைத் தோன்றி
உலகிருள் அகற்றிய பதின்மரும் இருவரும்
மருந்துரை இருவரும் திருந்துநூல் எண்மரும்
ஆதிரை முதல்வனிற் கிளந்த
நாதர்பன் னொருவரும் நன்திசை காப்போரும்
யாவரும் பிறரும் அமரரும் அவுணரும்
மேவரு முதுமொழி விழுத்தவ முதல்வரும்
பற்றாகின்று நின் காரண மாகப்
பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும்.
விளக்கவுரை:
நிலத்திடத்தே தோன்றி மலர்கின்றதான திருத்துழாய் மலரினையும்,செந்தாமரை மலரானது தந்த செல்வத்துக்கு உரியவளான திருமகளையும்,புட்களிற் சிறந்ததான கருடன் உருவம் எழுதப்பெற்ற கொடியையும் உடையவன் திருமால். அவனும், இடப ஊர்தியை உடையவனாகிய சிவபிரானும்,தாமரை மலர்மீது இருப்போனாகிய நான்முகனும், அவனிடமிருந்து தோன்றி உலகத்தின் இருளைப் போக்கியவரான ஆதித்யர் பன்னிருவரும்,தேவ மருத்துவர்கள் இருவரும், சிறந்த நூற்புலமை கொண்டோராகிய வசுக்கள் எண்மரும்,ஆதிரை முதல்வனாகிய சிவபிரானது பெயராலேயே சொல்லப்படுகின்றவரான பதினொரு ருத்ரர்களும்,நல்ல திசைகளைக் காக்கும் திக்பாலகர்களான எண்மரும்,மற்றுமுள்ள தேவர்கள் யாவரும், இவரொழிந்த அமரரும், அவுணரும் ஆகிய பிறருமாகிய எல்லாரும், விரும்பத்தக்க வேதங்களைக் கற்ற சிறந்த தவமுதல்வர்களான எழுவரும்,நின்னைக் கண்டு போற்றும் பொருட்டாக இத் திருப்பரங்குன்றத்திற்கு வருபவர் ஆகின்றனர். ஆதலினாலே இப்பரங்குன்றமானது எம்பெருமானாகிய சிவபிரான் குடிகொண்டிருக்கும் இமயக்குன்றமாகிய திருக்கயிலாயத்தையே ஒப்புடையதாக விளங்கும்.
பரிபாடல் – 9ஆம் பாடல்:
தனிநிலைச் சலதாரி:
இரு நிலம் துளங்காமை வடவயின் நிவந்து ஓங்கி
அரு நிலை உயர் தெய்வத்து அணங்குசால் தலை காக்கும்
உருமுச் சூழ் சேண் சிமை உயர்ந்தவர் உடம்பட
எரிமலர்த் தாமரை இறை வீழ்த்த பெருவாரி
விரிசடை பொறை ஊழ்த்து விழு நிகர் மலர் ஏய்ப்ப
தணிவுறத் தாங்கிய தனி நிலைச் சலதாரி
மணி மிடற்று அண்ணற்கு மதியாரற் பிறந்தோய்!
விளக்கவுரை:
பெரிதான இந்நிலவுலகமானது நிலைகெட்டு அழிந்துபோகாமற்படிக்கு இதன் வடதிசைப் புறத்தே,உயர்ந்து ஓங்கிய அரிய நிலையினை உடையதும்,உயரிய தெய்வத்தன்மை வாய்ந்த அணங்குகள் சிறப்புறப் பேணிக் காப்பதும், இடியேறுகள் சூழ்ந்திருக்கும் மிகவுயரிய முடிகளை உடையதுமாகத் திகழும் இமயத்திடத்தே உயர்ந்தோர் பலரும் வீற்றிருப்பார்கள்.அவர்கள் ஏற்றுக் கொண்டாட,எரியொத்த செந்தாமரை மலரைப்போலும் திருமேனியினைக் கொண்ட இறைவனான சிவபெருமான், தன் சடையிடத்தே தாங்கித் தரைக்கண் வீழச்செய்த பெருவெள்ளமான கங்கை நீரானது, அப்பெருமானது விரித்த செஞ்சடைப் பொற்றையிடத்தே தோன்றித் தரைக்கண் விழுகின்ற ஒப்பற்ற மலரைப்போலத் தோன்றும். இவ்வாறாகக் கங்கையின் சீற்றம் தணியுமாறு தாங்கிக் காத்தவன்,தானே தனிமுதல் என்னும் சிறப்புடைய சலதாரி எனப் பெயர் பெற்றனன். நீலமணிபோலும் கறைவிளங்கும் கழுத்தையுடையோனாகிய அத்தலைவனுக்கு,மதிப்புவாய்ந்த கார்த்திகைப் பெண்களிடத்தே தோன்றிய முருகப்பெருமானே!
புறநானூறு – கடவுள் வாழ்த்து:
கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்
வண்ன மார்பின் தாருங் கொன்றை;
ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப;
கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீரறவு அறியாக் கரகத்துத்
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே.
விளக்கவுரை:
தவமுதிர்ச்சியின் சான்றாக விளங்குவது அவனது தாழ்சடை.அனைத்து உயிர்களுக்கும் காவலாக விளங்கும் அருளுடைமையைக் காட்ட,நீர் வற்றுதல் இல்லாத கமண்டலமும் அவன் கையிலே உள்ளது. மேலும் அவன் தலையிலும், மார்பிலும் கொன்றை மலரினை அணிபவன்.வாகனமாகவும், கொடியாகவும், தூய வெண்ணிற ஆனேற்றினைக் கொண்டிருப்பவன்.அவன் திருக்கழுத்தை காலகூடவிஷத்தின் நச்சுக்கறை அழகு செய்கிறது. மறைகளை ஓதுபவர்களான அந்தணர்களால் அது புகழவும் படுகிறது. பெண் உருவை ஒரு பாகத்தில் அறியக்காட்டியும்,தன்னுள் அதனை அடக்கி ஒளித்துத் தானாகத் தனித்தும் அவன் விளங்குகிறான்.அவன் தனது திருநுதலில் பிறையைச் சூடியிருக்கிறான்.அவனது திருநுதலுக்கு வனப்புத் தரும் அப்பிறை பதினென் தேவராலும் போற்றவும் படுகிறது.
இத்தகைய பெருந்தெய்வமான சிவபிரானைப் பணிபவர் தாமும் தம் துயர் தீர்வர் என்பது இப்பாடலின் கருத்து.
புறநானூறு – 55ஆம் பாடல்:
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனின் சிறப்புகளைக் கூறவந்த புலவர் மதுரை மருதன் இளநாகனார்,நன்மாறன் அனைத்து வேந்தர்களைவிட சிறப்பு மிக்கவன் என்கிறார். அவன் எத்தகைய சிறப்பு மிக்கவன் என்பதற்கு புலவர் இவ்வாறு கூறுகிறார்,
“ஓங்குமலைப் பெருவில் பாம்பு ஞாண் கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற்றண்ணல் காமர் சென்னிப்
பிறை நுதல் விளங்கும் ஒருகண் போல
வேந்து மேம்பட்ட பூந்தார் மாற!”
விளக்கவுரை:
ஓங்கி உயர்ந்த மலைத்தொடரான மேருமலைத்தொடரையே வில் ஆக்கி,பாம்பரசனான வாசுகியை வில்லின் நாண் ஆக்கி,அக்னி, வாயு,விஷ்ணு ஆகியோரை ஒரு அம்பு ஆக்கி,அந்த ஒரே அம்பால் அசுரர்களின் முப்புரங்களை எரித்து, ஆற்றல் மிகுந்த அமரர்களுக்கு வெற்றியைத் தந்தவர் சிவபெருமான். காலகூடவிஷத்தின் நச்சுக்கறை அழகுசெய்ய விளங்கும் திருக்கழுத்தை உடைய பெருமானான அவரின் திருநுதலில் விளங்கும் சிறப்புமிக்க நெற்றிக்கண் போலத் தனிச்சிறப்பு பெற்று விளங்கும் மாறனே.
இங்கு புலவர்,அரசர்களுள் சிறப்பு மிக்கவன் நன்மாறன் என்று கூறும்போது, பெருந்தெய்வமான சிவபிரானின் சிறப்புமிக்க நெற்றிக்கண் போன்ற சிறப்பு மிக்கவன் என்று கூறுகிறார்.
கலித்தொகை -2ஆம் பாடல்:
மதங்கொண்ட யானை ஒன்று ஒரு வேங்கை மரத்தைப் பார்க்கிறது. பூக்கள் பூத்துக்குலுங்கும் அவ்வேங்கைமரம் அதன் கண்களுக்கு வேங்கைப்புலியைப் போலத் தெரிகிறது. கோபத்தோடு தனது தந்தங்களால் வேங்கை மரத்தின் அடிப்பாகத்தில் குத்துகிறது.தந்தங்கள் மரத்தில் ஆழமாக நுழைந்துவிட்டபடியால் யானையால் தந்தங்களை விடுவித்துக்கொள்ள இயலவில்லை. துன்பத்தோடு வருந்தி அது கத்துகிறது.இக்காட்சியை வர்ணிக்கும் புலவர், அந்த யானையை அரக்கர்கோமானான இராவணனோடு ஒப்பிடுகிறார்.
இராவணன் கர்வத்துடன் திருக்கைலாய மலையையே பெயர்க்க முயன்றான்.அவன் மலையின் அடியில் கைகளைக் கொடுத்துத் தூக்க முயன்றான். பரமேஷ்வரர் தன் ஒரு கால்விரலால் மலையை அழுத்த,அரக்கன் மலையின் அடியில் அகப்பட்டு வருந்தி அழுதான். அச்சரிதத்தைப் புலவர் இங்கு கூறுகிறார்.
“இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக்கையின் கீழ்ப்புகுத்து அம்மலை
எடுக்கை செல்லாது உழப்பவன் போல”
விளக்கவுரை:
கங்கையைத் தன் திருச்சடையிலே தாங்கினார் பரமேஷ்வரர்.ஆதலின் அவரது திருச்சடை ஈரமாக விளங்கும். அவ்விறைவன் மேருமலையையே வில்லாக வளைத்தவர்.அவர் திருக்கைலாயத்தில் உமையம்மையுடன் அமர்ந்திருந்தார். அப்போது பத்துத் தலைகளை உடைய அரக்கர்கோமானான இராவணன் வந்தான்.அவன் கர்வம் மிகுந்தவனாக திருக்கைலாயத்தையே பெயர்க்க முற்பட்டான்.மலையின் அடியில் தன் கைகளைக் கொடுத்துத் தூக்கினான். இறைவனால் தண்டிக்கப்பட்டு வருந்தினான், துன்பமடைந்தான்.
இப்பாடல்கள் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இதிஹாஸ,புராணக்கதைகளை மக்கள் அறிந்திருந்தனர் என்பதும், மக்கள் சிவபக்தி கொண்டோராக விளங்கினர் என்பதும் விளங்கும்.
தமிழ் இலக்கிய குறிப்புகளை வெளியிட்டமைக்கு நன்றி.
Post a Comment