Followers

Wednesday, August 08, 2018

இவர்கள் குடும்பத்தில் பலருக்கும் படிப்பினை உள்ளது.


இவர்கள் குடும்பத்தில் பலருக்கும் படிப்பினை உள்ளது.

மு.க.முத்து, மு.க.ஸ்டாலின், கனி மொழி

மூவருக்கும் தந்தை ஒருவர்தான். ஆனால் தாயார் வேறு வேறு.

ஆனால் இந்த குடும்பம் சக்களத்தி சண்டையில் ஒருவரையொருவர் சாடிக் கொள்ளவில்லை. மு.க.ஸ்டாலின் கனி மொழியை தங்கை பாசத்தோடவே அழைத்துச் செல்கிறார். மு.க.முத்து குடும்பத்திலிருந்து பிரிந்து விட்டாலும் அவரது மகனை கலைஞர் பராமரித்து வருகிறார். இது போல் மற்ற குடும்பங்களும் இவர்களிடமிருந்து பாடங்களை பெற்றுக் கொண்டு தங்கள் குடும்பங்களிலும் அமைதி தவழச் செய்வார்களாக!

அடுத்து ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழ்க் கலாசாரம் என்ற பொய்யான தகவல் பரவலாக பரப்பப்படுகிறது. பலதார மணம் தடை என்றால் முருகனுக்கு வள்ளி, தெய்வானை என்ற இரண்டு மனைவிகள் எப்படி இருக்க முடியும்? கண்ணனுக்கும் பல மனைவிகள் இருந்ததாக சொல்லப்படுகிறது. ராமனின் தந்தை தசரதனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்ததாக குறிப்புகள் சொல்கின்றன.  இஸ்லாத்திலும் தேவை ஏற்பட்டால் பலதார மணத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆணின் உடல் தேவை: பெண்ணின் இயலாமை இது போன்ற காரணங்களால் மனிதன் தவறான வழிக்கு சென்று விடக் கூடாது என்பதற்காககத்தான் பலதார மணம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இங்கு சவுதியில் தனது தந்தையின் இரண்டாம் மற்றும் மூன்றாம் திருமணத்துக்கு மகனே பந்தி பரிமாறும் காட்சிகளை சர்வ சாதாரணமாக பார்க்கலாம். இவ்வாறு அரிதாக நடக்கும் பலதார மணத்தை தவறான கண்ணோட்டத்தோடு விமரிசிக்கும் தன்மை நம்மிடம் மாற வேண்டும். சின்ன வீடு என்ற பெயரில் தொடர்பை வைத்துக் கொண்டு அந்த பெண்ணுக்கும் வாரிசுகளுக்கும் சட்ட பூர்வ அந்தஸ்து கிடைக்காமல் செய்வதை விட பலதாரமணம் சிறந்தது என்ற எண்ணம் பலருக்கும் வர வேண்டும்.

4 comments:

Dr.Anburaj said...

தங்களின் கருத்து ஒரு பொது நிலையில் விதிவிலக்காகவே சரியாக வரும். ஆணின் உடல் தேவை பெண்ணின் இயலாமை என்ற வார்த்தைகளில் பல சங்கடங்கள் ஒளிந்து உள்ளன். இயலாமை -செக்ஸ் இயலாமையா ? பெண்ணுக்கு மட்டும் வந்தால் ஆண்கள் மறுமணம் செய்யலாம் என்ற வாதம் பச்சை சுயநலம். ஆணுக்கு வயதான நிலையிலும் நோய்கள் போன்ற காரணங்களாலும் செக்ஸ் இயலாமை உழைப்பு இயலாமை பண இயலாமை நிா்வாக இயலாமை என்று எத்தனையோ இயலாமை ஏற்படலாம். ஆனால் அப்போது மட்டும் ஒருஆண்மகன் தன்மனைவி தன்னை நல்ல முறையில் கவனித்துக்கொள்ள வேண்டும் என்றுதான் நினைக்கின்றான்.மற்றவர்களும் அப்படித்தான் நினைக்கின்றார்கள்.
கணவனுக்கு ஏதோ ஒரு இயலாமை இருக்கின்றது என்று குலா கேடகும் பெண்கள் வயது பொருளாதார நிலை போன்ற நிா்பந்தங்கள் உள்ளன்.வயது கூடிய நிலையில் ஆண் பெண் இருவருக்கும் இயலாமை எற்படக் கூடும். குழந்தைகள் பெரியவர்களானநிலையில் தந்தையும் தாயும் ஏதோ இயலாமை என்றுன சொல்லி மறுமணம் செய்யவது பிரச்சனையாகத்தான் இருக்கும் .தீா்வாக இருக்காது.
அரேபியாவில் உள்ளது .... என்று சதா அரேபிய அடிமையாக வாழ்வது இழிவானது.
பணம் பெருத்த நாடு. உபரி வருமானம் கொண்ட நாடு. ஜனத்தொகை மிகக் குறைவு. இவர்களின் நிா்வாகத்தோடு இந்திய நாட்டின் சுழ்நிலை முற்றிலும் மாறுபட்டது.
பத்ரு போருக்கு பின் முஹம்மதுவின் மருமகன் உதுமான் முஸ்லீம் ஆக மாறவில்லை.எனவே முகம்மது தனது மகளை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டாா். 8 ஆண்டுகள் மகளை மருமகனுடன் வாழ விடவில்லை முகம்மது. மதவெறி அவர் கண்ணை மறைத்து விட்டது. மகளை திருமணம் செய்ய பலா் முன்வந்தனா்.ஆனால் மகள் மறுமணம் செய்ய மறுத்து விட்டாா். 8 ஆண்டுகள் கழித்து உதுமான முஸ்லீம் ஆக மாறினாா். மகளை மருமகனுடன் வாழ விட்டாா் மாமா முகம்மது.
ஒரு இந்துவாக அது மிகவும் கொடுமையான செயலாக எனக்கு படுகின்றது.
8 ஆண்டுகள் ” பல இயலாமை” ஏற்பட்டாலும் அந்த பெண் இந்து பெண் போல மறுமணம் செய்ய மறுத்து விட்டாா்.பல இயலாமை-இல்“லாமை இருந்தாலும் 8 ஆண்டுகள் கழிந்தாலும் தன் மனைவியை மறக்கவில்லை உதுமானால்..
முஹம்மது தனது வளா்ப்பு மகனினால் விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டாா். நிச்சயமாக அவரது தேவைக்கு மனைவிமார்கள் குமுஸ் பெண்கள் என்றும் நிறைய இருந்தார்கள். இந்நிலையில் 55 வயதிற்கு மேல் வயது ஆன முகம்மதுவிற்கு இன்னும் ஒரு பெண் -மனைவி தேவைப்பட்டது என்பதை ஒரு இந்துவாக என்னால் எற்க இயலவில்லை.வேறு ஆண் மகன் யாரும் ஊரில் இல்லையா ?
இந்து சமூகத்திலும் சில நியாயங்களின் அடிப்படையில் இருதாரம் நடைமுறையில் உள்ளதுதான். அதையும் திறம்பட சமாளித்து வருகின்றோம்.மதுரையில் பிரபல பாத்திரக்கடையின் முதலாளியின் மனைவிக்கு கர்ப்பப்பையில் கட்டி -குழந்தை பேறு வாய்க்க முடியவே முடியாது என்று ஆனது.உடனே வேறு ஒரு பெண்ணை தன் கணவனக்கு மணம் முடித்து வைத்தாா் அவரது மனைவி.மண மேடையில் கணவன் -புதுப்பெண் - முதல் மனைவி ஆக மூவரும் அமா்ந்து இருந்தார்கள்.தாலி கணவன் கட்ட கால் பங்கு வேலையை முதல் மனைவி செய்தாா். இன்றும் தனி தனி வீட்டில் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனா்.
முஹம்மதுவின் மனைவிமாா்கள் தங்களுக்குள் போட்ட சண்டைகள் பல வரலாற்றில் உள்ளது என்பதை மறைக்க வேண்டாம்.
கதிரவன் பத்திாிகையில் தமிழ்நாட்டில் ஸ்டாலினுக்கு சாதகமாக கருணாநிதியின் மகன் அழகிரிக்கு பெரிய செல்வாக்கு கிடையாது என்ற எழுதிய காரணத்திற்காக கதிரவன் பத்திாிகை மதுரையில் எரிக்கப்பட்டது. 3 பேர்கள் கொல்லப்பட்டாா்கள். குடும்பத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. தயாநிதி மாறன் பதவி விலகினாா். காயங்கள் நிறையஏற்பட்டது.
மறந்து விட்டீர்களே!ஸ“டாலினும் அழகிரியும் ஒருதாய் மக்கள்தாம். அப்படியும் பணம் என்று வந்து விட்டால் ?

Dr.Anburaj said...

பலதார மணம் முஸ்லீம் சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது. சத்ரபதி சிவாஜி ஸ்தாபித்த சாம்ராஜ்யமும் வீழ்ந்ததற்கு பலதார மணம் ஒரு காரணம். சிவாஜிக்கு நான்கு மனைவிகள் என்று நினைக்கின்றேன்.ஆனால் பொது வாழ்வில் சிவாஜி ஒழுக்கமிக்கவா்.

Dr.Anburaj said...

இசுலாமிய திருமணங்கள் வெறும் ஒப்பந்தங்கள் என்ற அளவுகோலின்படியே தாங்கள் கதைக்கின்றீா்கள். திருமணங்கள் வெறும் வியாபர ஒப்பந்தங்கள் என்பது கொடுமையானது.

திருமண் சடங்குகள் கிறிஸ்தவ தேவாலயத்தில் நடக்கும் போது தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்த உடன் குருவானவா்

” தேவனின் சந்னதியில் சோ்த்து வைக்கப்பட்ட இவர்களை மனிதன் யாரும் பிரிக்காதிருக்க கடவன்” என்று உரைப்பாா்.
மணமக்களும் ” சுகத்திலும் வேதனையிலும் இன்பத்திலும் துக்கத்திலும் ஒருவரை ஒருவா் நேசித்து அன்புடன் வாழ்வோம்” என்று உறுதி மொழியை சொல்வார்கள். கிறிஸ்தவ மார்க்கம் -இசுலத்திற்கு பக்கத்து வீட்டு மதம் என்றாலும் அது விவாகரத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

இசுலாமிய கண்ணோட்டம் பெண்களுக்கு அநீதியாகும். அதனால்தான் ஆணின் தேவைக்கு -பெண்ணின் இயலாமைக்கு- மறுமணம் என்று நயவஞ்சகமாக கதை கட்டியிருக்கின்றீா்கள். இது நியாயமல்ல. இசுலாமிய சரித்திரத்தில் ஈமானுடன் வாழ்வது எப்படிப்பட்ட சோதனை வந்தாலும் உயிரே போனாலும் என்று வீரத்துடன் போர் புரிந்தவா்கள் உயிா்துறந்தவா்கள் வைராக்கியத்தோடு கடும் வேதனைகளையும் சோதனைகளையும் தாங்கியவர்களையும் பெரும் தியாகம் செய்தவர்களையும் கொண்டாடும் தாங்கள் திருமணம் செய்து நம்மோடு இணைந்து வாழ்ந்து அன்பைதந்து உடலைத்தந்து பிள்ளை பெற்று நோய்நோடபார்த்து தொண்டு செய்ய நமது மனைவியை ஏதோ இயலாமை என்று காரணம் காட்டி மறுமணம் விவாகரத்து செய்வது பச்சை கொடுமை.அநீதி .மனைவிக்கு என்ன முடிகின்றதுா கணவனக்கு என்ன முடிகின்றதோ அதைக்கொண்டு வாழ்வதுதான் நல்ல இல்லறம்.

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும். ...............
ஒன்றோடு ஒன்றாகி உயிா் சோ்ந்த பின்னே
உலகங்கள் நம்மையன்றி வேறேதும் இல்லை

எனற பாடல் வரிகள் பாலும் பழமும் .
இன்பம் துன்பம் எதுவந்தாலும் இருவா் நிலையும் ஒன்றே
எளிமை பெருமை எது வந்தாலும் இருவா் வழியும் ஒன்றே
என்பது சிரத்து சிரித்து என்னை சிறையில் இட்டாய் என்ற திரைப்படப்பாடல் வரிகள்.

ஆனால் சுவனப்பிரியன் இன்றும் முஸ்லீம்கள் இந்து குடும்பங்களாகத்தான் வாழ்நது வருகின்றாா்கள்.அரேபிய குடும்பங்களாக வாழவில்லை. அதற்கு எதிா்ப்பு வலுத்து வருகின்றது.

ASHAK SJ said...

இஸ்லாமிய திருமணம் ஒப்பந்தம் தான் , சில மூடர்களுக்கு அது வியாபார ஒப்பந்தம் போல் தெரியலாம் , இஸ்லாத்தை பொறுத்தவரை கடன் வாங்கினாலும் கல்யாணம் ஆனாலும் ஒப்பந்தம் அவசியம் , இரண்டுக்கும் சாட்சி மிக மிக அவசியம் , கருத்து வேறுபாடு வரும் பட்சத்தில் நல்ல அறிவுரை கூறி சேர்க்க பார்ப்பார்கள் , தலைக்கு மீறி வெள்ளம் போகும் போது ஒப்பந்தம் முறிக்கப்படும் , மாறாக நீதிமன்றத்தில் விவாகரத்து வேணும் என்பதற்க்காக பெண்ணை தவறாக விமரிசிக்கும் நடைமுறை இங்கே இல்லை