Followers

Sunday, August 12, 2018

ஆட்டோ டிரைவர் மகன் ஐஏஎஸ் ஆன வரலாறு!


4-வதோடு படிப்புக்கு மூட்டைக் கட்டும் நிலை ஏற்பட்டும் தொடர் முயற்சியால் ஐஏஎஸ் ஆன ஆட்டோ ஓட்டுனர் மகன்!

ஏழைக் குடும்பத்தில் பிறந்த அன்சார் கடந்துவந்த பாதை முழுவதுமே தங்கு தடைகள் நிறைந்தவை. ஆனால், அனைத்தையும் கடந்து இன்று யுபிஎஸ்சி தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றிக் கண்டு இந்தியாவின் இளம் ஐஏஎஸ் அதிகாரிஆகியுள்ளார்.

ஃபேஸ்புக்கை அடிக்கடி லாகின் செய்து டைம்லைனை நோட்டமிடுபவர்கள் போல், டிஎன்பிஎஸ்சி வெப்சைட் அடிக்கடி எட்டி பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் எகிறிக் கொண்டிருக்கிறது. ஆம், முன் காலங்களைவிட அரசு தேர்வுகளை எதிர்நோக்கி காத்திருப்பவர்கள் அதிகரித்துவிட்டர் என்றாலும், பலரும் பத்தோடு பதினொன்றாகவே படிக்கின்றனர் மற்றும் படிக்க வற்புறுத்தப்படுகின்றனர். அப்படி எக்சாம் போபியாவால் திணறுபவர்களுக்கு அன்சார் ஷாயிக் சொல்லிக் கொள்வது இதை தான்,
போட்டித் தேர்வில் உங்களுடன் லட்சம்பேர் போட்டியிடுவார்கள் என்று பயந்தீர்களாயின் அது தவறு. உங்களுடைய ஒரே போட்டியாளர் நீங்கள் தான். எனவே, உங்கள் நம்பிக்கையற்ற எண்ணங்கள் அனைத்தையும் தூரவீசிவிட்டு பயணியுங்கள், வெற்றி உங்கள் பாதையைத் தேடி வரும்,” என்கிறார். 

அது சரி, ஆனால் யாரிந்த அன்சார் ஷாயிக்...?

நம்பிக்கையின் நாயகன், விடாமுயற்சியின் காதலன். ஆம், அதுவே அவருக்கான சரியான அடையாளமாய் இருக்கும். இலக்கை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கும் ஒருவர் அவரது பாதையில் எத்தனை கற்களையும், மேடுகளையும் தாண்டிவிட முடியும்? அன்சார் கடந்துவந்த பாதை முழுவதுமே தங்கு தடைகள் தான். ஆனால், அனைத்தையும் கடந்து இன்று ஐஏஎஸ் அதிகாரி என்ற அடையாளத்துடன்இந்தியாவின் இளம் ஐஏஎஸ் அதிகாரிஎன்ற அடைமொழியுடன் நிமிர்ந்து நிற்கிறார்.

2016ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வை எதிர்கொண்ட முதல் முயற்சிலேயே வெற்றிக்கண்டு 21 வயதிலே கலெக்டராகி மேற்கு வங்க மாநிலத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார் அன்சார்.

அன்சார் கடந்துவந்த கரடுமுரடான பாதை

மகாராஷ்டிராவின் பர்பானி சிட்டியின் ஷெல்கான் கிராமத்தில் பிறந்தவர் அன்சார் ஷாயிக். அப்பா ஆட்டோ ஓட்டுநர். அவருக்கு மூன்று மனைவி. இரண்டாவது மனைவியான அன்சாரின் அம்மா, விவசாய வேலைக்கு செல்லும் கூலித் தொழிலாளி. ஏற்கனவே, குடும்ப பொருளாதார நிலை மோசம். இதில், அன்சாரின் அப்பாவுக்கு குடிப்பழக்கமும் தொற்றிக்கொள்ள குடிக்கு அடிமையாகி, தினம்தினம் சண்டை, சச்சரவு என நிம்மதியற்ற வாழ்வு. 

நாட்கள் இப்படியாக கழிந்தாலும், அன்சார் படிப்பில் படுச்சுட்டி. ஆனால், குடும்பத்தின் நிலையின் காரணமாக அக்கம்பக்கத்தாரும், சுற்றதாரும் அன்சாரின் அப்பாவிடம், அன்சாரின் படிப்பை நிறுத்துமாறு கூறியுள்ளனர். அவரும், அதற்கு சம்மதம் தெரிவித்து அன்சாரின் ஆசிரியரிடம் பள்ளியை பாதியில் நிறுத்த கேட்டிருக்கிறார்.

எனக்கு நல்லா நினைவில் இருக்கிறது. அப்போ நான் நாலாவது படிச்சிட்டு இருந்தேன். சொந்தகாரங்க எல்லாம் அப்பாட்ட என்னை ஸ்கூலுக்கு அனுப்ப வேணாம்னு சொல்லிக் கொண்டு இருந்தனர். அப்பாவும் டீச்சருக்கு போன் பண்ணி, நான் இனிமேல் ஸ்கூலுக்கு வரமாட்டன் சொன்னார். ஆனால், டீச்சர் தான் அவன் நல்லா படிக்கிற பையன். அவனை மட்டும் படிக்க வைத்தீங்கனா, உங்க குடும்பத்தின் நிலையே மாறிபோகும்என்று சொல்லியிருக்காங்க...

என்று நினைவுகூறும் அன்சார், அவரது வாழ்க்கையின் திருப்புமுனை சம்பவம் அதுவே என்கிறார். ஆசிரியரால் அன்சாருக்கு மற்றொரு வாய்ப்பை கொடுத்துள்ளனர் அவருடைய பெற்றோர். அந்தவாய்ப்பை சிறப்பாக பயன் படுத்திகொள்ள தீர்மானித்த சிறுவன் வைராக்கியதுடன் படித்து, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91% மதிப்பெண்ணை பெற்றிருக்கிறார்.

அவருடைய வாழ்வின் கஷ்டக்காலமான பள்ளிப் பருவத்தை பற்றி சிரித்து கொண்டே அன்சார் பகிர்ந்து கொண்டாலும், மூன்றுவேளை உணவுக்கு வழியற்ற நிலையில், ஒருநாள் மதியஉணவில் புழு கிடந்தும் பொருட்படுத்தாமல் உண்டு உள்ளார்.

எனக்கு சிக்கன் என்றால் ரொம்ப பிடிக்கும். மூன்று வேளை சாப்பாட்டுக்கே கஷ்டம் என்ற நிலையின் நான்-வெஜ்ஜுக்கு எங்கு போவது. ஒருநாள், லன்ச்சில் புழுகிடந்தது. அதையும் சாப்பிட்டோம். சோ, வெஜ் மீல்ஸ், நான் வெஜ்ஜாகிவிட்டது,”

என்று சிரிக்கிறார். பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சிக்கு பிறகு புனேவில் உள்ள கல்லூரியில் இளங்கலை பொலிடிக்கல் சயன்சில் சேர்ந்திருக்கிறார். மராத்தி மீடியம் பள்ளியில் படித்த அவருக்கு, ஆங்கிலவழி கல்வியை எதிர்கொள்வது சிரமமாக இருந்துள்ளது. ஆனால், எதற்கும் சோர்வு அடையாதவரே அன்சார், ஆங்கிலத்தையும் ஒரு கைப்பார்த்தார்.

அன்சாரின் கல்லூரி செலவுக்காக அவருடைய அப்பாவும், தம்பியின் முழு சம்பளமான 7 ஆயிரத்தையும் செலவிட்டிருக்கின்றனர். ஒரு ஜோடி செருப்பு, இரண்டு ஜோடி ஆடையுடன் கல்லூரிக்கு சென்று வந்திருக்கிறார்

தகவல் உதவி : thebetterindia.com மற்றும் kenfolios.com, Rahmathullah Tlpm





2 comments:

Dr.Anburaj said...

நல்ல பதிவு. படகோட்டியின் மகன் நாட்டின் முன்னணி விஞ்ஞானி ஆகி பின் நாட்டின் குடியரசு தலைவா் ஆன சரித்திரம் அறிவோம்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்தவா். திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்தவா் பெயா் நினைவில் இல்லை. பள்ளிவாசலில் பியுன் போல் பணியாற்றும் ஒருவரின் மகன். ஆங்கில இலக்கியம் படித்த இந்த முஸ்லீம் மாணவா் தனக்கு ஒரு வார்த்தை க்கு அர்த்தம் தெரியவில்லையெனில் அதற்கு பொருள் தெரியாமல் ஒய்மாட்டாா். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலராக பணியாற்றி சென்னை நியு கல்லூரியில் பணியாற்றி பின் ஐஏஎஸ் படித்து தோ்ச்சி பெற்ற பின்னா் முஸ்லீம் பணக்காரர்கள் பெண்கொடுக்க வரிசையில் நின்றார்கள். அனைத்தையும் நிராகரித்து தனது ஏழ்மையில் துணைநின்ற மாமா ஒருவரின் படிக்காத மகளை திருமணம் செய்தாா் .
ஆனால் அல்லாவுக்கு கருணையில்லை.திருச்சி மாவட்ட ஆட்சியாளராக இருக்கும் போது அவர் இதய நோய் காரணமாக இறந்து விட்டாா்.

ASHAK SJ said...

அடேய் லூசு இந்துக்கள் பலர் பல நோய்களால் இறப்பதால் இந்து கடவுளுக்கு கருணை இல்லை என்று சொல்வாயா?