காந்தி, நேரு படங்களுக்கு பதிலாக சாவர்க்கர் படமாம்
கோவா மாநில பள்ளிப்பாடப்புத்தகத்தில் நேரு படம் அகற்றப்பட்டு ஆர்எஸ்எஸ் தலைவர் படம் இணைக்கப்பட்டுள்ளது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவா மாநில 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இந்திய சுதந்திரத்தில் தலைவர்களின் பங்கு என்ற பாடத்தில் இடம்பெற்றிருந்த காந்தியுடன் நேரு இருந்த படம் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ்., இணை நிறுவனர், சாவர்க்கார் படம் இடம்பெற்றுள்ளது.
இந்த புத்தகத்தின் 68ஆவது பக்கத்தில் ஒத்துழை யாமை இயக்கம் மற்றும் காங்கிரசு போராட்ட அறி விப்பு போன்றவைகளின் போது மகாத்மா காந்தி, மவு லானா ஆசாத்துடன் நேரு அமர்ந்து ஆலோசனை செய்வது போன்ற புகைப்படம் இடம் பெற்றிருந்தது.
தற்போது அந்த தகவலில் காங்கிரசு என்ற பெயர் நீக்கப்பட்டு சுதந்திரத்திற்கான உருவாகிய அமைப்பு என்று தலைப்பிட்டு எழுதியிருந்தது, மேலும் காந்தி, நேரு, மவுலானா ஆசாத் போன்ற தலைவர்களின் பெயர்கள் இருக்கவேண்டிய இடத்தில், வெறும் ‘தலை வர்கள்’ என்று மட்டுமே வார்த்தைகள் இடம் பெற்றுள்ளது. புதிதாக அச்சாகியுள்ள அந்த புத்தங்கள் தற்போது பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாநில அரசின் கல்வித்துறை புதிய பதிப்பை வெளியிட்டு உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக கோவா காங்கிரசு கண்டனம் தெரிவித்துள்ளது. அதே போல் சமூக ஆர்வலர்களும் மாநில அரசின் இந்தச் செயலை கண்டித்துள்ளனர்.
தகவல் உதவி
விடுதலை நாளிதழ்
11-08-2018
விடுதலை நாளிதழ்
11-08-2018
2 comments:
காங்கிரஸ்காரான் என்னவோ காந்தியும் நேரு ஆகிய இரண்டு பேர்கள் மட்டும் செயல்பட்டு சுதந்திரம் பெற்றுத்தந்ததுபோல் சரித்திரத்தை திருட்டுத்தனமாக எழுதி விட்டனா். சாவர்கர் ஒரு பெரும் தியாகி. அவரைபற்றியும் படிப்பது நல்லதுதான்.
என்னது சாவர்க்கர் தியாகியா? ஆங்கிலேயனிடம் பலமுறை மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்த கோழை நாய் அவன் , சுதந்திர போராட்டத்தின் கரும்புள்ளி , கேவலப்பிறவி , உயிருக்காக நாட்டை காட்டிக்கொடுத்த கோழை , பொட்டை , பிரிட்டிஷாரின் காலை நக்கிப்பிழைத்த நாய்
Post a Comment