'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, September 30, 2020
உபி பல்ராம்பூரில் மற்றொரு தலித் பெண் கற்பழித்து கொலை!
உபி பல்ராம்பூரில் மற்றொரு தலித் பெண் கற்பழித்து கொலை!
'சார்... சார்... இங்கு என்ன எரிக்கப்படுகிறது?'
'சார்... சார்... இங்கு என்ன எரிக்கப்படுகிறது?'
Tuesday, September 29, 2020
பகதூர் ஷா ஜஃபர்.
பகதூர் ஷா ஜஃபர்.
தலித்களுக்கு முடி வெட்டக் கூடாதாம்!
தலித்களுக்கு முடி வெட்டக் கூடாதாம்!
வடக்கன்கள் செம கடுப்பில் இருப்பது போல் தெரிகிறது.
வட மாநில இளைஞர்களை எண்ணி நாடே பெருமை கொள்வதாக முன்பு மோடி கூறியிருந்தார். அவர் சொன்னதன் அர்த்தம் இப்போதுதான் விளங்குகிறது....
Monday, September 28, 2020
உனக்கு இந்த நிலை என்று சந்தோஷப்படமுடிவில்லை.
"குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை கண்டவுடன் சுட வேண்டும்" எனக் கூறிய மத்திய அமைச்சர் சுரேஷ் அங்கடி யின் இறுதி நிகழ்வு.
தலித் வக்கீல் தேவ்ஜி மஹேஸ்வர் பார்பனியத்தால் கொல்லப்பட்டார்!
தலித் வக்கீல் தேவ்ஜி மஹேஸ்வர் பார்பனியத்தால் கொல்லப்பட்டார்!
Sunday, September 27, 2020
11 பாகிஸ்தானிய இந்துக்கள் தற்கொலை!
11 பாகிஸ்தானிய இந்துக்கள் தற்கொலை!
Saturday, September 26, 2020
நான் உயிரோடு தான் இருக்கிறேன்
நான் உயிரோடு தான் இருக்கிறேன் வதந்திகளை நம்ப வேண்டாம் என எஸ்.ஆர் பாலசுப்பிரமணி அறிக்கை.
வீடுகளை இடிக்க புல்டோஷர்கள் தயாராக நிற்கின்றன.
UP அலஹாபாத்தில் (prayagraaj) இஸ்லாமியர்களின் வீடுகளை இடிக்க புல்டோஷர்கள் தயாராக நிற்கின்றன. ஏழை மக்கள் தங்களின் ஆவணங்களை கைகளில் பிடித்தவாறு போராடுகின்றனர். யோகி ஆதித்யநாத்தின் அரசு கண்டிப்பாக இவர்களுக்கு நியாயம் வழங்கப் போவதில்லை.
Friday, September 25, 2020
மோடி பிஜேபியினரை கேட்டுக் கொண்டதற்கிணங்க....
மோடி பிஜேபியினரை கேட்டுக் கொண்டதற்கிணங்க....
சவுதி அரேபியா பள்ளிகளில் தமிழுக்கு முக்கியத்துவம்!
சவுதி அரேபியா பள்ளிகளில் தமிழுக்கு முக்கியத்துவம்!
Thursday, September 24, 2020
நல்லா இருக்குய்யா உங்களின் சமூக நீதி!
தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆயுதங்களோடு வளர வேண்டும். உங்கள் குழந்தைகள் மட்டும் பட்ட படிப்பு படித்து அந்தஸ்தோடு வாழ வேண்டும்.
நல்லா இருக்குய்யா உங்களின் சமூக நீதி!
மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!
''உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!” என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்.
Wednesday, September 23, 2020
100 சக்தி மிக்க மனிதர்களில் ஒருவராக பல்கீஸ்பானு தேர்வு!
100 சக்தி மிக்க மனிதர்களில் ஒருவராக பல்கீஸ்பானு தேர்வு!
ஒரு கையில் தஸ்பீஹ் மணி மறு கையில் இந்திய தேசியக் கொடி. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லி ஷாஹின்பாக்கில் கம்பீரமாக அமர்ந்திருந்தார் பல்கீஸ் பானு. இந்த வயதிலும் என்ன ஒரு துணிச்சல். பாசிச அரசின் கொடும் அடக்குமுறையை கண்டும் எந்த சலனமும் இல்லாமல் ஒரே உறுதியோடு அமர்ந்திருந்தார் பல்கீஸ் பானு. அவரைச் சுற்றி மற்ற போராட்டக்கள பெண்களும் அமர்ந்திருந்தனர்.
பத்திரிக்கையாளர் ரானா அய்யூபிடம் அவர் சொல்லும்போது ' எனது நரம்புகளிலிருந்து இரத்தம் செல்வது நின்று போனாலும் எனது மக்களின் உரிமைக்காக இந்த இடத்தை விட்டு அகல மாட்டேன். எந்த ஒரு அடக்கு முறையையும் சந்திக்க தயாராகவே வந்துள்ளேன். நீதியும் சம உரிமையும் கிடைக்கும் வரை ஓய மாட்டேன்.' என்று சூளுரைத்தார்.
தற்போது 2020 ஆம் ஆண்டின் சக்தி மிக்க 100 மனிதர்களில் சகோதரி பல்கீஸ் பானுவையும் தேர்ந்தெடுத்துள்ளது TIME இதழ். உலக நாடுகள் அனைத்தும் பல்கீஸ் பானுவின் போராட்டத்தைப் பற்றி படிக்கும். கோழைகளான மோடி அமித்ஷாவின் பாசிச எண்ணங்களையும் உலகம் தெரிந்து கொள்ளும்.
புற்றுநோயிற்கான மருந்து
இரத்தப் புற்றுநோய்
மூளைப் புற்றுநோய்
மார்பகப் புற்றுநோய்
பெருங்குடல் புற்றுநோய்
கல்லீரல் புற்றுநோய்
நுரையீரல் புற்றுநோய்
புரோஸ்டேட் புற்றுநோய்
கருப்பை புற்றுநோய்
அன்பிற்குறிய நண்பர்களே! மேற்கூறிய பல புற்றுநோயிற்கான மருந்து கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
கர் கூமினோயிட்ஸ்" என்னும் மருந்து பலவித புற்றுநோயை குணப்படுத்தும் மருந்தாகும். இது பெங்களூரில் உள்ள புற்றுநோய் மூலிகை மருத்துவமனையில் நியாயமான விலையில் கிடைக்கும். அனைவருக்கும் விழிப்புணர்வு உருவாக்க வேண்டும். இதனால் இச்செய்தி யாருக்காவது உதவலாம்.
கேன்சர் ஹெர்பலிஸ்ட்
பெங்களுர்
முகவரி - 6, டி வி ஜி சாலை காந்தி பஜார்
பசவன குடி
பெங்களுர் - 560004
லேன்ட் மார்க் - வித்யார்தா பவன் ஹோட்டல் அருகில்
தொலைபேசி - 080 - 412 18877
080 - 266011 27
8884588835
Cancer herbalist@mail.com
Tuesday, September 22, 2020
கொரோனா பலரது வாழ்வையும் புரட்டிப் போட்டுள்ளது....
கொரோனா பலரது வாழ்வையும் புரட்டிப் போட்டுள்ளது....
மலேசியாவை நான் ஏன் தேர்ந்தெடுத்தேன் - ஜாகிர் நாயக்
மலேசியாவை நான் ஏன் தேர்ந்தெடுத்தேன் - ஜாகிர் நாயக்
இந்தியாவில்
தம் மீதான வழக்கு, விசாரணைகள்
தீவிரமடைவதற்கான அறிகுறிகள் தென்படத் துவங்கியதும், மலேசியாவுக்குப் பயணமானார் மதபோதகர் ஜாகிர்
நாயக்.
தனக்கு
நிரந்தர குடியுரிமை உள்ளிட்ட சலுகைகளை அளிக்க பல நாடுகள் முன்வந்ததாக பல பேட்டிகளில்
குறிப்பிட்டுள்ள அவர்,
ஏன்
மலேசியாவில் தங்கியிருக்க தீர்மானித்தார் என்பது மில்லியன் டாலர் கேள்வி.
அதற்கு
அவரே விளக்கமாகப் பதிலளித்துள்ளார். கொரோனா ஊரடங்கு வேளையில் இணையம் வழியிலான ஒரு
கலந்துரையாடலில் மலேசியா குறித்து பாராட்டி இருப்பதுடன், தாம் அந்நாட்டில் தங்கியிருப்பதற்கான
காரணங்களையும் பட்டியலிட்டுள்ளார் ஜாகிர் நாயக்.
இவருக்கு
மலேசிய அரசு நிரந்திர வசிப்பிட உரிமை அளித்துள்ளது. மலேசியா வந்த பிறகு தமது
வாழ்க்கை முறை சற்றே மாறி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மும்பையில் இருந்த போது தம்மிடம் 500 ஊழியர்கள் பணியாற்றிய நிலையில், மலேசியாவில் இருவர் மட்டுமே இருப்பதாகப்
புன்னகையுடன் கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.
"இத்தகைய மாற்றங்கள்
அனைத்தையும் நல்லவிதமாகவே கருதுகிறேன். என் நாட்டில் என்னவெல்லாம் செய்ய வேண்டும்
என திட்டமிட்டார்களோ,
அவற்றை
எல்லாம் செய்கிறார்கள். நாட்டை விட்டு என்னை வெளியேற்ற வேண்டும் என்பதும் அவற்றுள்
ஒன்று," என்று ஜாகிர் நாயக் மேலும்
கூறியுள்ளார்.
மலேசியாவில்
தங்கியிருப்பதற்காக அவர் தெரிவித்துள்ள காரணங்களைப் பார்ப்போம்:
"இந்தப் பிரச்சனை சுமார்
மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. அதாவது, 2016 ஜூலையில்
தொடங்கியது.
எனினும்
அடுத்த இரு மாதங்களில் 13 முதல்
15 நாடுகள் எனக்கு அழைப்பு
விடுத்தன. நான் அந்நாடுகளில் தங்கிக் கொள்ளலாம் என்றும், எனக்கு தங்கள் நாட்டில் தகுந்த பாதுகாப்பு
வழங்குவதாகவும், நல்லபடி கவனித்துக்
கொள்வதாகவும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
நல்ல, சாதகமான மற்றும் சாதகமற்ற அம்சங்களைப்
பரிசீலித்து எனக்கு அழைப்பு விடுத்த நாடுகளில் இருந்து மூன்று நாடுகளை
தேர்ந்தெடுத்தேன்.
"அவற்றுள் மலேசியாதான்
சிறப்பானது எனத் தோன்றியது. நான் எடுத்த முடிவு குறித்து இப்போது யோசித்துப்
பார்க்கிறேன்.
"உலகில் உள்ள பெரும்பாலான
இஸ்லாமிய நாடுகளில் பிரச்சனைகள் உள்ளன. எனவே மோசமான நிலையில் உள்ளவற்றில் சிறந்த
நாடு (BEST OF THE
WORST) மலேசியா
என்ற அடிப்படையிலும்,
ஒரு
நபர் வாழ்வதற்கு சிறந்த நாடு என்ற வகையிலும் எனது தேர்வு அமைந்தது.
"இந்த தேர்வுக்கான முதல்
காரணம், மலேசியா போர் பகுதியில்
இருந்து வெகுதூரத்தில் அமைந்துள்ளது. பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் தற்போது போர்
பகுதியில் உள்ளன. ஏமன்,
ஈராக், வளைகுடா நாடுகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
மலேசியா அப்படி அல்ல.
"இரண்டாவதாக, தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ளதால்
மேற்கத்திய நாடுகளின் நேரடி ஆதிக்கம் மற்றும் கொடுமைகளில் இருந்தும் மலேசியா
விலகியுள்ளது.
"தற்போது உலகளவில் உள்ள
இஸ்லாமிய நாடுகளில் மலேசிய கடப்பிதழுக்குதான் அதிக மதிப்புள்ளது. மலேசிய கடப்பிதழ்
இருப்பின் ஒருவர் 185
நாடுகளுக்கு
'விசா' இன்றி சென்று வர முடியும் என்பது மூன்றாவது
காரணம்.
"நான்காவதாக, அரபு பிராந்தியத்தில் இல்லாத இஸ்லாமிய
நாடுகளிலேயே மலேசியாவில்தான் இஸ்லாம் அதிகம் பின்பற்றப்படுவதாகக் கருதுகிறேன்.
சராசரி அளவில் பார்க்கும்போது இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தானில் உள்ளவர்களைக் காட்டிலும் மலேசிய
இஸ்லாமியர்கள் இஸ்லாத்தை பின்பற்றுவது அதிகமாக உள்ளது. இதுவும் மலேசியாவை நான்
தேர்வு செய்ய காரணம்.
மலேசியாவில்
வாழ்க்கைச் செலவினங்கள் குறைவு. கிட்டத்தட்ட இந்தியாவுக்கு இணையான வாழ்க்கைச்
செலவுகள்தான் இங்கும் ஏற்படுகின்றன. இது ஐந்தாவது காரணம்.
இறுதியாக, மலேசியா மிக அழகான நாடு. இங்கு ஏராளமான
சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பிட்டுச் சொல்வதானால் இங்குள்ள 'புத்ரா ஜெயா' (மலேசியாவின்
நிர்வாகத் தலைநகர்) தான் உலகத்திலேயே மிகச் சிறந்த இஸ்லாமிய நகரம், இஸ்லாமியர்கள் வாழக்கூடிய நகரம் என்பேன்.
இங்கு
இரவு வாழ்க்கை, நடன விடுதிகள் (கூடங்கள்)
கிடையாது. மதுக்கூடங்களும் இல்லை.
இவற்றையெல்லாம்
பார்க்கும்போது எனது சரியானது என்றே நினைக்கிறேன்," என்று
ஜாகிர் நாயக் விளக்கம் அளித்துள்ளார்.
தகவல் உதவி
பிபிசி தமிழ்
22-09-2020