Followers

Sunday, September 20, 2020

அல்ஹஸா மாகாணத்தில் அரிசி விளைவிக்கப்படுகிறது!

 அல்ஹஸா மாகாணத்தில் அரிசி விளைவிக்கப்படுகிறது!


சவுதி அரேபியா அல் ஹஸா மாகாணத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஹஸ்ஸாவி என்று சொல்லப்படும் சிகப்பு நிற அரிசி ரகம் இங்கு பயிரிடப்படுகிறது. உலகின் மிக அதிக சத்துள்ளதும் விலை அதிகம் கிடைக்கக் கூடியதுமான ரகம் ஹஸ்ஸாவி ஆகும். இந்த ரக அரிசி ஒரு கிலோ 6லிருந்து எட்டு டாலர் வரை விலை போகிறது. நெல் விளைவிக்கும் இந்த தொழிலை தனது சந்ததிகளுக்கு சொல்லித் தந்து வருங்காலத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தப் போவதாக விவசாயி அப்துல்லா அல்ஹாதி சல்மான் கூறுகிறார். அரசும் பல மானியங்களை தந்து விவசாயிகளை ஊக்கப்படுத்துகிறது. பெட்ரோலையே நம்பியிருக்கக் கூடாது என்று சவுதி அரசு நினைக்கிறது.

2 மில்லியன் பனை மரங்களும் இங்கு நடப்பட்டு அமோக விளைச்சலை தந்து கொண்டுள்ளன. யுனெஸ்கோ இதனை சாதனையாக பதிவிட்டுள்ளது.

சவுதியின் நிலை இவ்வாறிருக்க நமது நாட்டில் நமது பாரம்பரிய விவசாயத்தை கார்பரேட்டுகளுக்கு தாரை வார்க்க இன்று மசோதாவை வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றியுள்ளோம். ஜனநாயக படுகொலை இன்று நமது பாராளுமன்றத்தில் நடந்துள்ளது. வருங்காலங்களில் பெட்ரோல் வாங்குவது போல் அரிசியையும் சவுதியிலிருந்து இறக்குமதி செய்தாலும் செய்வார்கள். 🙂 அதை நோக்கித்தான் நமது நாடு சென்று கொண்டுள்ளது.

தகவல் உதவி
சவுதி கெஜட்
20-09-2020




1 comment:

Dr.Anburaj said...

கலவரம் இல்லாத முஸ்லீம் பெரும்பான்மை நாட்டை காட்ட வேண்டும்.
அரசி விளைவித்து பட்டினி சாவு உள்ள நாடுகளுக்கு அள்ளிக் கொடுத்தது எத்தனை டன் ?

பட்டினி சாவு உள்நாட்டு போரால் ...உயிருடன் செத்துக் கொண்டிருக்கும் முஸ்லீம்மக்களுக்கு கொடுத்த அரசி எத்தனை டன் ?

நிவாரண உதவிகள் எத்தனை கோடி ?

எத்தனுக்கு எத்த எத்தன் சு....ன். படிப்பவன் இளிச்சவாயன் என்பது சு..ன் எண்ணம்.