100 சக்தி மிக்க மனிதர்களில் ஒருவராக பல்கீஸ்பானு தேர்வு!
ஒரு கையில் தஸ்பீஹ் மணி மறு கையில் இந்திய தேசியக் கொடி. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லி ஷாஹின்பாக்கில் கம்பீரமாக அமர்ந்திருந்தார் பல்கீஸ் பானு. இந்த வயதிலும் என்ன ஒரு துணிச்சல். பாசிச அரசின் கொடும் அடக்குமுறையை கண்டும் எந்த சலனமும் இல்லாமல் ஒரே உறுதியோடு அமர்ந்திருந்தார் பல்கீஸ் பானு. அவரைச் சுற்றி மற்ற போராட்டக்கள பெண்களும் அமர்ந்திருந்தனர்.
பத்திரிக்கையாளர் ரானா அய்யூபிடம் அவர் சொல்லும்போது ' எனது நரம்புகளிலிருந்து இரத்தம் செல்வது நின்று போனாலும் எனது மக்களின் உரிமைக்காக இந்த இடத்தை விட்டு அகல மாட்டேன். எந்த ஒரு அடக்கு முறையையும் சந்திக்க தயாராகவே வந்துள்ளேன். நீதியும் சம உரிமையும் கிடைக்கும் வரை ஓய மாட்டேன்.' என்று சூளுரைத்தார்.
தற்போது 2020 ஆம் ஆண்டின் சக்தி மிக்க 100 மனிதர்களில் சகோதரி பல்கீஸ் பானுவையும் தேர்ந்தெடுத்துள்ளது TIME இதழ். உலக நாடுகள் அனைத்தும் பல்கீஸ் பானுவின் போராட்டத்தைப் பற்றி படிக்கும். கோழைகளான மோடி அமித்ஷாவின் பாசிச எண்ணங்களையும் உலகம் தெரிந்து கொள்ளும்.
1 comment:
திரு.மோடிஜியும் திரு.அமித்ஷாஜியும் தோற்க மாட்டார்கள்.
ஜெயித்துக் காட்டியிருக்கின்றார்கள்.
அவர்கள் கொண்டு வந்த அனைத்து சட்டமும் நிறைவேறிக்கொண்டிருக்கின்றது.
பாட்டி பல்கீஸ் சாதித்தது என்ன ? தனது மதவெறியை பகீரங்கப்படுத்தியிருக்கின்றாா்.
இந்தியாவை பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தான் முஸ்லீம் காடையர்கள் கொண்டு நிரப்ப
வேண்டும் என்ற பாட்டியின் சதித்திட்டம் முறிந்து போனதுதான் உண்மை.
Post a Comment