Followers

Sunday, September 20, 2020

விவசாய மசோதா தேன் தடவிய விஷம் !

 விவசாய மசோதா தேன் தடவிய விஷம் !

நம் நிலங்களை ஒப்பந்த அடிப்படையில் பெருநிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்துக் கொள்ளும்!
நாம் அவற்றில் வேலை செய்யலாம்!
கூலி கிடைக்கும்!
சொந்த நிலத்திலேயே கூலிவேலை செய்யவைக்கும் வேளாண் மசோதாக்களை ஆதரிக்கும் அடிமை அரசு!
இடைத்தரகர் இல்லையென பெருமைப்படும் மோடி!
குறைந்தபட்ச ஆதாரவிலை என்னும் அம்சமே இல்லாத மசோதா!
நேரடி கொள்முதல் என்பதும் இல்லை!
விலையை நிர்ணயிக்கப் போவது அரசாங்கம் அல்ல!
ஒப்பந்த நிறுவனம் குறிப்பிடும் விலைக்கு,
அவர்களிடம்தான் விற்கமுடியும்!
அதிக இலாபம் என்பது நமக்கல்ல!
ஒப்பந்த நிறுவனங்ககுக்கு!
படித்துப் பார்க்காமலேயே ஆதரித்து அறிக்கை வெளியிடும் அடிமை முதல்வர்!
மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானவை என்று மாநிலங்களவை கொட்டிமுழக்கிவிட்டு, மேலிட உத்தரவு என்றுகூறி ஆதரித்த மாநிலங்களவை அதிமுக எம்.பி.க்களின் இரட்டைவேடம்!
அவைக்கே செல்லாமல் மசோதாக்களுக்கு மறைமுக ஆதரவளித்த பாமகவின் அன்புமணி!
பாஜக, அதிமுக, பாமக ஆகியோர் விவசாயிகளின் எதிரிகள்!
விமானநிலையங்கள், இரயில்கள், எல்.ஐ.சி, உற்பத்தித் துறை பங்குகள் என பொதுத்துறை நிறுவனங்களை விற்ற பாஜக, இப்போது விவசாய நிலங்களை, விவசாயியிடம் இருந்து பறிக்கிறது!
இதைக்கூட புரிந்துகொள்ளாமல் ஆள்வோரை ஆதரிக்கும் ஆளுங்கட்சிகளின் தொண்டர்களே, நீங்களெல்லாம் ஆறறிவு கொண்ட சிந்திக்கும் திறன் கொண்டோரெனில், நேற்று முறைகேடாக நிறைவேற்றப் பட்டிருக்கும் மூன்று மசோதாக்களையும் படியுங்கள்!
அவை தேன் தடவிய விடம் (விஷம்) என்பதை உணருங்கள்!
விவசாயியை சொந்த நிலத்திலேயே கூலிவேலை செய்யவைக்கும் கேடுகெட்ட திட்டம், கூலித் தொழிலாளியின் பிழைப்பையே நாசமாக்கிவிடும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
இனி ஒப்பந்த நிறுவனம் நம்முடைய நிலத்தை எடுத்துக் கொள்ளும்!
அதன் விதையை விதைக்கும்!
அதற்கு விலையையும் அவையே நிர்ணயிக்கும்!
நம்முடைய வாழ்வாதாரம் கெடும்!
T.A.புனிதன்
வழக்கறிஞர்
Punithan T A



2 comments:

vara vijay said...

Why are you fearing about corporate. You itself became a corporate. For example make a co- op society such as AMUL. in your own village, whatever things you can produce do it and market it by co-OP society. However the problem is between farmers they can't unite that's why corporates are coming.

Dr.Anburaj said...

விவசாயம் சிறு சிறு துண்டுகளாகச் சிதறி அதன் பயன்கள் வீணாகப்போகின்றது.
ஆக பாரதிய ஜனதா அரசு மிக அருமையான திட்டத்தை கொண்டு வந்துள்ளது.விவசாய நிலங்கள் அரசுடைமை ஆக்கப்படவில்லை.விவசாயியின் உரிமை பறிபோகவில்லை. ஆதாரவிலையை அரசு நிா்ணயிக்கும் முறை தொடரும்.நெல் கோதுமை மற்றும் உணவு தானியங்களை காங்கிரஸ் அரசு கொள்முதல் செய்ததை விட பல..பல .. மடங்கு அதிக கோடிகளில் நரேந்திர மோடிஐி அரசுகொள்முதல் செய்துள்ளது.

பொய்....பொய் .....பொய்கள்...சுவனப்பிரியன் என்று உண்மையை பதிவிட்டாா் ?

அண்டப்புளுகன்.