Followers

Thursday, September 24, 2020

மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!

 ''உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!” என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : திர்மிதி எண்: 1082

------------------------------------
மனைவியின் ரசனைக்கு மதிப்பளித்த மாநபி

ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ, ”நீ பார்க்க ஆசைப்படுகின்றாயா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி) ”அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்” என்று கூறினார்கள். நான் பார்த்துச் சலித்த போது, ”உனக்குப் போதுமா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ”அப்படியானால் செல்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி (950)

மனைவியெனில் படுக்கையில் பாலுணர்வைப் பகிர்வதற்குரிய ஒரு சதைப் பிண்டம்! பகல் வேளையில் நம் வீட்டில் அனைத்துப் பணிகளையும் செய்வதற்குரிய மானுட இயந்திரம்! இவளிடம் என்ன பேச்சு வேண்டியிருக்கின்றது? என்று எண்ணவில்லை நபிகள் நாயகம் அவர்கள். மனைவியின் ஆசைகளையும் தீர்த்து வைக்கின்றனர்.

----------------------------------
பெண் வளைந்த விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். ஒரே குண வழியில் உனக்கு அவள் ஒருபோதும் இணங்கமாட்டாள். அவளை நீ அனுபவித்துக்கொண்டே இருந்தால் அவளின் கோணல் இருக்கவே அனுபவிக்க வேண்டியது தான். அவளை நீ ஒரேயடியாக நிமிர்த்தப்போனால் அவளை ஒடித்தே விடுவாய். அவளை ஒடிப்பது என்பது அவளை மணவிலக்கச் செய்வதாகும் என நபிகள் நாயகம் அவர்கள் சொன்னார்கள்.

(அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 2913)



2 comments:

vara vijay said...

What comedy

Dr.Anburaj said...

ஏகபத்தினி விரதனாக வாழ்பவனே உ்ண்மையில் ஒரு மனைவியை கண்ணியப்படுத்துபவன்.
ஒரு ஆண் தன் மனைவியின் உடல் உள்ளம் அன்பு முழுமையும் தனக்குச் சொந்தம்என்பதில் மகிழ்ச்சி அடைவது போல் ஒரு பெண்ணும் கணவனின் அன்பு முழுவதும் தனக்கே என்பதில் பெரிதும் மகிழ்வாா். அதுதான் உன்னத வாழ்க்கை.

1. அரேபிய தளபதி முஹம்மது கதிஜா விடம் ஏகபத்தினி விரதனாக இருந்தாா்.ஏன் என்று புரியவில்லை. அதுதான் தர்மம் என்று வாழ்ந்து இருக்கலாம்.
2.கதிஜா வின் மறைவிற்கு பிறகு ராணுவ தாக்குதலில் வெற்றிக்கு மேல் வெற்றி பெற்றாா். எனவே அழகிய பெண்கள் பலா் அவருக்கு மனைவி ஆனாார்கள். யுத்தத்தில் கைபற்றப்பட்ட இளம் பெண்கள் ரெகானா..... மரியம் .....அஸ்மா .... என்று அடிமைப் பெண்கள் அவரது அநதப்புரத்தை நிறைத்தார்கள். அடிமைச் சந்தையில் பெண்களை விற்று பொருளும் சம்பாதித்துக் கொண்டாா். ஆயுதங்களும் வாங்கிக் கொண்டாா்.
2.புதிய பெண்களை திருமணம் செய்யும் போதும் அடிமைப் பெண்களை அனுபவிக்கும் போதும் அவரது மனைவிமார்கள் மகிழ்ச்சி அடையவில்லை. வேதனைப் பட்டாா்கள். வேதனையை ஆயிசா பகிரங்கமாக தெரிவித்துள்ளாா்.

உண்மையாக வரலாறு தெரியாமல் யாரே ஒரு அரேபிய அடிமை எழுதிக் கொடுத்ததை இந்த சிறுமி வாசிக்கின்றாள். பாவம் அப்பாவி.