காஷ்மீரில் மற்றுமொரு என்கவுண்டர் கொலை!
இப்ரார் அஹமத்(வயது 18), முஹம்மது இப்ரார் (வயது 20), முஹம்மது இம்தியாஸ் (வயது 26) ஆகிய மூவரும் ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதில் முஹம்மது இப்ரார் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறான். அடுத்த வருடம் படிப்பு முடிந்தவுடன் கல்லூரியில் சேர வேண்டும் என்பதற்காக தனது இரு நண்பர்களோடு ஸோஃபியா என்ற இடத்துக்கு பார்ட் டைம் கூலி வேலைக்காக சென்றுள்ளான். கல்லூரியில் சேர்ந்து படித்து பெரிய ஆளாக வேண்டும் என்ற கனவில் வாழ்ந்து வந்தவன்.
இந்திய ராணுவமோ இந்த மூன்று இளைஞர்களையும் சந்தேகததின் பேரில் பிடித்து வைத்துள்ளது. பிறகு மெடல்கள் வாங்கி குவிக்க வேண்டும் என்ற வெறியில் மூன்று இளைஞர்களையும் பயங்கரவாதிகள் என்று காரணம் கூறி சுட்டுக் கொன்றுள்ளது. ராணுவ நீதி மன்ற விசாரணை முடிவில் 'மூன்று இளைஞர்களும் அப்பாவிகள். அவர்களுக்கும் தீவிரவாதத்துக்கும் எந்த தொடர்பு மில்லை' என்ற தீர்ப்பு தற்போது வந்துள்ளது. தண்டனையாக சில காலம் பணியிலிருந்து குற்றவாளிகள் ஒதுக்கி வைக்கப்படலாம். ஆனால் இழந்த உயிர்களை யார் மீட்டுத் தருவது?
இறந்த இம்தியாஸின் தந்தை சவுதியில் பணியில் உள்ளார். அவருக்கு யார் ஆறுதல் சொல்வது? கல்லூரியில் படித்து பெரிய ஆளாக வேண்டும் என்ற கனவில் கூலி வேலைக்கு சென்ற அப்ராரின் கனவை சிதைத்த கொடியவர்களை என்ன செய்வது? அந்த இளைஞர்களின் சாபம் கொன்ற அரக்கர்களின் குடும்பத்தையும் சிதைக்காதா? கொடியவர்களே! இறைவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் உள்ளான். 'தெய்வம் நின்று கொள்ளும்' என்பதனை கூடிய விரைவிலேயே நீங்களும் உங்களை ஆட்டுவிக்கும் மேலதிகாரிகளும் அனுபவிப்பீர்கள்.
1 comment:
ராணுவ வீரா்களுக்கு சற்று பலஹீனமாக ஆதாரங்கள் கிடைத்திருக்கும். அதனடிப்படையில் கைகலப்பு எற்பட்டு தாக்குதலில் முடிந்திருக்கும். அவர்கள் அளித்த ஆதாரங்களை போதியது என்று நீதி மன்றம் ஏற்க மறுத்திருக்கும்.
காஷ்மீரில் பயங்கரவாதிகளால் தினம் தினம் இந்திய ராணுவ வீரா்கள் செத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
4.5 லட்சம் இந்துக்கள் காஷ்மீரில் இருந்து இனப்படுகொலை செய்யப்பட்டு துரத்தியடிக்கப்பட்டாா்களே .அதுவும் 1998 ஆண்டுகளில் அது குறித்து என்றாவது ஒரு பதிவு போட்டதுண்டா ?
முஸலீம்களே ஏன் மனச்சாட்சியற்று வாழ்கின்றீர்கள்.காபீர்களை அழிப்பதுதான் உங்களுடைய வாழ்வின் இலட்சியமா ? இந்துக்கள் எல்லாம் கொன்று விடத் துடிப்பது ஏன் ? முஹம்மதுவின் விஷ போதனைதானே காரணம்.
Post a Comment