நீதியரசர்கள் வாழ்க..!
தப்லீக் சகோதரர்கள் மீது வீண் பழி சுமத்தப்பட்டு அவர்கள் பலியாடுகளாய் ஆக்கப்பட்டார்கள். அரசாங்கத்தின் தோல்வியை மறைப்பதற்காகத்தான் எல்லாமே நடந்துள்ளது என காரசாரமாக கண்டித்து தப்லீக் சகோதரர்களை விடுதலை செய்த பம்பாய் நீதிமன்ற நீதியரசர்கள் எம் ஜி செவ்லிகர், டி பி நளாவடே ஆகியோருக்கும்,
டாக்டர் கஃபில்கான் மீது அநியாயமாக போடப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்து, அவரை விடுதலை செய்த அலஹாபாத் நீதிமன்ற நீதியரசர்கள் கோவிந்த் மாத்தூர், சௌமித்ரா தயாள் சிங் ஆகியோருக்கும்,
பிஞ்ச்ரா தோட் - கூண்டை உடை என்கிற அமைப்பைச் சேர்ந்தவரும் ஜேஎன்யூ பல்கலைக் கழக மாணவியுமான சகோதரி தேவங்காணா கலிதாவை வடக் கிழக்கு தில்லி கலவர வழக்கிலிருந்து விடுவித்த தில்லி உயர்நீதிமன்ற நீதியரசர் சுரேஷ் குமார் கெயிட்டுக்கும்
மனமார்ந்த நன்றிகள். வாழ்த்துகள்.
என்னதான் குமாரசாமிகளும் கொக்கோய்களும் ஒரு பக்கம் இருந்தாலும் இன்றும் நீதியை, உண்மையை, மனித மாண்பை, நாட்டின் இறையாண்மையை, சட்டத்தின் ஆட்சியை விரும்புகின்ற, பெரிதும் மதிக்கின்ற நீதியரசர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள் என்பதற்கு இந்த உத்தமபுருஷர்களே சான்று.
தில்லி, மும்பை, அலஹாபாத் என ஆளும் கட்சியின் செல்வாக்கு கோலோச்சுகின்ற நகரங்களிலிருந்து இந்த இனிமையான தீர்ப்புகள் வெளி வந்திருப்பது இரட்டிப்பு இனிமையை, மகிழ்ச்சியைத் தருகின்றது.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.
இன்குலாப் ஜிந்தாபாத்.
No comments:
Post a Comment