Followers

Tuesday, September 29, 2020

பகதூர் ஷா ஜஃபர்.

 பகதூர் ஷா ஜஃபர்.


நம் நாட்டின் கடைசி முகலாயப் பேரரசர். ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டவர். ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கேயே இறந்தார்.

இறுதி நாள்களில் அவர் எழுதிய கவிதையின் கடைசி வரிகளில் சொல்வார்:

கித்னா பத் நஸீப் ஹே ஜஃபர் தஃபன் கே லியே
தோ கஜ் ஜமீன் பி நஹீ மிலி கோஹ் ஏ யார் மே.

பகதூர் ஷா ஜஃபர் எத்துணை துரதிருஷ்டசாலி
அடக்கம் செய்யப்படுவதற்கு இரண்டு அடி நிலம் கூட
அன்புக்குரிய நிலத்தில் கிடைக்காமல் போயிற்றே...!

முஹம்மத் அலீ ஜவ்ஹர்.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு எதிராக மகத்தான மக்கள் எழுச்சிப் போராட்டத்தை நடத்தியவர். கிலாஃபத் இயக்க நாயகர். வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற இந்தியப் போராளி.

பிரிட்டிஷாரால் மீண்டும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டவர். சிறைவாசம்தான் அவருடைய உடல்நலத்தைக் குலைத்தது.

வட்ட மேஜை மாநாட்டுக்காக லண்டன் சென்றவர், ‘I would prefer to die in a foreign country so long as it is a free country, and if you do not give us freedom in India, you will have to give me a grave here’ ‘அடிமையல்லாத சுதந்திர நாட்டில் மரணிக்கவே நான் விரும்புவேன். இந்தியாவுக்கு முழு விடுதலையைக் கொடு. அல்லது எனக்கு இரண்டு கஜம் கல்லறையைக் கொடு’ என்று பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கூறினார்.

இறுதியில் லண்டனிலேயே அவர் இறந்துவிட்டார். அவருடைய விருப்பத்தின் படி அன்று சுதந்திரமாக இருந்த பாலஸ்தீனில் ஜெருசலேம் நகரில் அடக்கம் செய்யப்பட்டார்.

அவருடைய கல்லறையில் எழுதப்பட்ட வாசகம், ‘Here lies al-Sayyid Muhammad Ali al-Hindi - அல்-ஸய்யித் (தலைவர்) முஹம்மத் அலீஅல்ஹிந்தி இங்கு அடங்கியிருக்கின்றார்’.

மக்பூல் ஃபிதா ஹுஸைன்

நம் நாட்டின் மீது தீராக் காதல் கொண்ட கலைஞன். அடர்த்தியான, அழகான, வண்ணமயமான சித்திரங்களுக்குப் பேர் பெற்றவர்.

பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் போன்ற நம் நாட்டின் உயர்ந்த விருதுகளை வாங்கிக் குவித்தவர். கேரளத்தின் ராஜா ரவிவர்மா விருதையும் பெற்றவர். நாடே கொண்டாடிய தன்னிகரற்ற ஓவியர்.

இந்துத்துவ வெறியர்களின் அராஜகத்தால் கத்தார் நாட்டில் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானவர். கடைசியில் கத்தார் நாட்டு குடிமகனாக ஆகிவிட்டவர். லண்டனில் இறந்து போனார். அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்.

இப்போது இந்த வரிசையில் சேர்ந்திருக்கின்றார் சைய்யிதா அன்வாரா தைமூர். நம் நாட்டில் ஒரு மாநிலத்துக்கு முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி, ஒரே முஸ்லிம் பெண்மணி என்கிற சிறப்புக்குச் சொந்தக்காரர். அரசியலில் விழுமங்களைப் பேணி நடந்த, ஊழல் கறை படாத அரசியல் தலைவர்.

என்.ஆர்.சி என்கிற தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இவருடைய குடும்பமே இல்லாமல் போனதுதான் துயரம்.

தாய்மண்ணுக்குத் திரும்புவேன். உரிமையை மீட்டெடுக்க சட்டரீதியாகப் போராடுவேன் என்று 2018 -இல் அறிவித்திருந்தார்.

ஆனால் நம் நாட்டில் நிலவியுள்ள முஸ்லிம் விரோத அரசியல் சூழலும் சிஏஏ சட்டமும் அவருடைய எண்ணத்துக்கு முட்டுக்கட்டையாக அமைந்துவிட்டன.
இந்த நிலையில் தாய் மண்ணை விட்டு வெகுதொலைவில் ஏழு கடல் தாண்டி ஏழாயிரம் கிமீ தொலைவில் ஆஸ்திரேலியாவில் மகனுடைய வீட்டில் நேற்று இறந்து விட்டார் இந்த நாட்டின் முதல் பெண் முதலமைச்சர்.

அவ்வளவுதான்.

கடைசியில் பாசிசிவாதியான மோடியையும் தனது கல்லறைக்கு வரவழைத்து விட்டார் பகதூர் ஷா.






2 comments:

Dr.Anburaj said...

மக்பூல் ஃபிதா ஹுஸைன்
இந்துத்துவ வெறியர்களின் அராஜகத்தால் கத்தார் நாட்டில் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானவர். கடைசியில் கத்தார் நாட்டு குடிமகனாக ஆகிவிட்டவர். லண்டனில் இறந்து போனார். அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்.
பதில் - அரேபிய நாட்டில் உள்ளபடி சரியத் சட்டப்படி நடுத்தெருவில் தூக்கில் போட்டு 24 மணி நேரம் தொங்க போட்டிருக்க வேண்டும்.பிறா் மதிப்பிற்குரியவர்களாக கருதும் பெண் உருவங்களை சேலை இன்றி ஓவியம் எழுத இவனுக்கு எவ்வளவு திமிா் கொளுப்பு வஞ்சகம்.
இவன் அம்மாவை மனைவியை சகோதரியை சேலையின்றி ஓவியமாக இவன் வரையட்டுமே.இவன் செய்யவில்லை. இந்துக்களுக்கு போதி விழிப்புணா்ச்சி இல்லை. இருந்திருந்தால் கத்தாரில் இவன் வாழ வேண்டியஅ அவசியம் ஏற்பட்டிருக்காது. இந்தியாவில் கம்போஸ்ட டெ்போவில் அடக்கம் செய்யப்பட்டிருப்பான்.

Dr.Anburaj said...

சைய்யிதா அன்வாஎன்.
ஆர்.சி என்கிற தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இவருடைய குடும்பமே இல்லாமல் போனதுதான் துயரம்.

அரசு சரியாகத்தான் நடவடிக்கை எடுத்துள்ளது. வங்கதேசத்தில் இருந்தோ பிற பகுதியில் இருந்து குடியேறியவர்களை ஒழுங்கு படுத்ததான் இச்சட்டம்.

செல்வாக்கு பணம் மிக்க பெண்மணி எனவே ஆஸ்திரேலியாவில் இடம் பெற்று விட்டாா்.

வாழ்க.