உபயோகமற்ற டின்களை இவ்வாறு பயன்படுத்தலாமே!
இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்: முன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி ஒரு பூனைக்குத் துன்பம் தந்த விஷயத்தில் வேதனைப்படுத்தப்பட்டாள். அந்தப் பூனையை அது பசியால் துடித்துச் சாகும் வரை அவள் அடைத்து வைத்திருந்தாள். அதன் காரணத்தால் அவள் நரகத்தில் புகுந்தாள். அப்போது அல்லாஹ்வே மிக அறிந்தவன் – ‘நீ அதைக் கட்டிவைத்து அதற்குத் தீனி போடவுமில்லை; தண்ணீர் தரவுமில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று பிழைத்துக் கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து விடவுமில்லை” என்று அல்லாஹ் கூறினான்.
(புஹாரி:2365, முஸ்லிம்)
இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்: விபசாரியான ஒரு பெண், ஒரு கிணற்றின் விளிம்பில் தன்னுடைய நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள். அந்த நாயைத் தாகம் சாகடிக்கவிருந்தது. அதைக் கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முந்தானையில் கட்டி (கிணற்று) நீரை இறைத்து அதற்குக் கொடுத்தாள். எனவே, அது பிழைத்தது. அவள் ஓர் உயிருக்குக் காட்டிய இந்தக் கருணையினால் அவளுக்கு (பாவ) மன்னிப்பு வழங்கப்பட்டது.
(புஹாரி:3321)
நபித்தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! கால்நடைகள் மற்ற பிராணிகளுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்; உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் அதற்கு உதவும் பட்சத்தில் மறுமையில் அதற்கான பிரதிபலன் கிடைக்கும்” என்று கூறினார்கள்.
(புஹாரி:2363, முஸ்லிம்)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஒரு முஸ்லிம் மரம் ஒன்றை நட்டினாலோ, ஏதாவது ஒன்றை பயிரிட்டாலோ அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது மற்ற உயிரினமோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்காமல் இருப்பதில்லை.
(புஹாரி:6012, முஸ்லிம்)
No comments:
Post a Comment