11 பாகிஸ்தானிய இந்துக்கள் தற்கொலை!
சென்ற மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 11 பாகிஸ்தானிய இந்துக்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்கள் 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சிந்த் மாகாணத்தில் இருந்து புலம் பெயர்ந்து ராஜஸ்தானில் குடியேறியவர்கள். விவசாயிகளான இவர்கள் வறுமையின் காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறை கூறுகிறது.
2012 ஆம் ஆண்டு வந்தவர்களுக்கே சரியான வாழ்வாதாரத்தை தராமல் அவர்களை தற்கொலை வரை கொண்டு சென்றுள்ளது மோடி அரசு. இந்துக்களின் காவலன் என்று கூறி வரும் மோடி இவர்களை காத்திருக்க வேண்டாமா? இவர்களையே காக்காத மோடி இனி புதிதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானத்திருந்து வருபவர்களை எப்படி காக்கப் போகிறார்? அதற்கான திட்டம் என்ன அவரிடம் இருக்கிறது? ஏற்கெனவே வேலையிழந்து கோடிக்கணக்கான மக்கள் இந்தியாவில் அல்லலுறும் போது வெளி நாட்டவருக்கு மோடி எங்கிருந்து வேலை கொடுப்பார்?
தற்போது பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்னால் பாகிஸ்தான் இந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வருகிறது. நமது நாட்டை நம்பி வந்த அவர்களுக்கு உரிய வேலை வாய்ப்புகளை வழங்கியிருக்க வேண்டாமா மோடி அரசு?
தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
1 comment:
தற்கொலைக்கான காரணம் சரியாக தெரியாது. ஆனால்வறுமை ஒரு காரணமாக இருக்கலாம்.
பாக்கிஸ்தானில் ஏற்பட்ட ஏதேனும் சங்கடமான அனுபவம் அவர்களை தற்கொலைக்கு தூண்டியிருக்கலாம். ராஜஸ்தானில் இருப்பது
பாக்கிஷ்தானை நேசிக்கும் காங்கிரஸ் அரசுதான். பழியும் பாவமும் அவர்களைச் சேரும்.
Post a Comment