Followers

Saturday, May 31, 2014

'பாசிசம்' என்கிற சொல்லைப் பயன்படுத்துவது முட்டாள்தனமா?



'பாசிசம்' என்கிற சொல்லைப் பயன்படுத்துவது முட்டாள்தனமா? - அகில் பில்கிராமி
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""'
வேர் முதல் நுனி வரை மிகப் பெரிய மாற்றத்தை விளைவிக்கப் போகிறவராக மோடி முன்நிறுத்தப்படுகிறார். அவரை விமர்சிப்பதே அபத்தம் என்கிற அளவிற்கு இங்கே பேசப்படுகிறது.

தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்வது என்பதும், அந்த முடிவுக்காக மக்களைக் குறை கூறாதிருப்பதும் அடிப்படையான இரு ஜனநாயக நெறிகள் என்பது உண்மையே. ஆனால் அதற்காக கடும் கறைகளைச் சுமந்துள்ள ஒரு நபர் தேர்தல் வெற்றியை அடைந்து விட்டார் என்கிற ஒரு காரணத்தினாலேயே அவர் தன் இயற் பண்புகளிலிருந்து மாறி விட்டார் என நம்புவதோ, அவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராகி விட்டார் என்பதோ அல்ல. அப்படி ஏற்றுக் கொள்வது, அவர் பிரதிநிதித்துவப் படுத்தும் கொடுங் கொள்கைகளை எதிர்க்கும் அவசியத்தையும் வேகத்தையும் தணிக்கும் ஆபத்திற்கு இட்டுச் செல்லும்.

பாசிசத்தை எதிர்க்கும் நம் வேகம் தணிய வேண்டும் என்கிற நோக்குடன்தான், 'பாசிசம்' என்கிற 'ஐரோப்பியக் கருத்தாக்கத்தை' இங்கு பயன்படுத்துவதெல்லாம் முட்டாள்தனம் என மோடியை விமர்சிப்பவர்களை நோக்கி இங்கு சில பண்டிதர்கள் தேர்தலுக்கு முன்பிருந்தே அறிவுரைக்கத் தொடங்கி விட்டனர்.

1930கள் மற்றும் 40 களில் ஐரோப்பாவில் விகசித்திருந்த பாசிசத்திற்கு இரு பண்புகள் உண்டு. 1. உள்நாட்டிலேயே சில "அந்நியர்களை" அடையாளம் காட்டி அவர்களை வெறுப்பது, அவர்களுக்கு உரிமைகளை மறுப்பது, வன்முறையை ஏவுவது முதலியன. ஹிட்லர் அவ்வாறு அடையாளங் காட்டிய அந்நியர்கள் யூதர்கள், ஜிப்சிகள் முதலானோர். 2. கார்ப்பொரேட் நலன்களும் அரசு நலன்களும் பிரிக்கவொண்ணாதவை என்கிற நிலையை ஏற்படுத்துவது. முசோலினி பாசிசத்தை இப்படி வரையறுத்ததை நாம் அறிவோம்.

மோடி முஸ்லிம்களுக்குச் செய்ததையும் அவரது பொருளாதாரத் திட்டங்களையும் (அவரது பதவி ஏற்பு விழாவில் குடும்ப சகிதம் கலந்து கொண்ட அம்பானிகள், அதானிகள், இந்துஜாக்களை ஒரு கணம் நினைவிற் கொள்க) மனதில் கூட்டிப் பார்த்து பாசிசாம் என்கிற சொல்லை இங்கு பயன்படுத்துவது முட்டாள்தனமா இல்லை புத்த்சாலித்தனமா என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

மோடி முன்னிறுத்தும் பொருளாதார வளர்ச்சி என்பது புதிதல்ல. ஏற்கனவே சந்திரபாபு நாயுடு போன்றவர்கள் அவர்களின் மாநிலங்களில் செய்து தோற்றதுதான். குடிமக்களின் வளர்ச்சியைப் புறந்தள்ளி, பெருநகர் சார்ந்த கார்பொரேட் வளர்ச்சியை முன் நிறுத்தியவர்கள்தான் இவர்கள். பொருளாதாரத் திட்டங்களைப் பொருத்த மட்டில் மன்மோகன்-சிதம்பரம் மாடலிலிருந்து மோடி-பா.ஜ.க மாடல் இம்மியும் வேறுபடப் போவதில்லை என்கிறார் இக்கட்டுரையில் அகில் பில்கிராமி.

பொருளாதாரக் கொள்கையில் மட்டுமல்ல அயலுறவுக் கொள்கையிலும் அதுதான் நடக்கப் போகிறது.

அகில் பில்கிராமி வாழும் இந்தியச் சிந்தனையாளர்களில் ஒருவர். கொலம்பியா பல்களைக் கழகத் தத்துவப் பேராசிரியர்.

தமிழில் அ. மார்க்ஸ்

One pundit in the aftermath of the Indian elections has described the Prime Minister-elect as seeking to “reshape the entire political universe of India” (Ashutosh Varshney in The Guardian). It is in the nature of public life in the modern period that even just the rhetoric and pretence of “change” can bestow upon a politician an ersatz glamour. In the drumbeat of electioneering over several recent months that rhetoric and pretence on the lips of Mr. Narendra Modi was flamboyantly yet carefully cultivated and, above all, purchased at obscene expense. The media, funded and controlled by the same corporate sources that paid for this public relations achievement, acquiesced with conviction in the pretence and repeated the rhetoric each day both in print and on screen.

The strategy has paid off; the man now has the added glamour of the nation’s most exalted office which, suppressing his natural swagger, he has approached with an affectation of humility and express concern for the poor and working people of the country, the very people that the policies and politics he stands for will sink into ever-increasing poverty and insecurity.

http://www.thehindu.com/opinion/lead/change-and-continuity/article6062691.ece

3 comments:

Anonymous said...

டீசல் விலை இன்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு 50 பைசா அதிகரிப்பு

# மன்மோகன் சிங் இன்று இரவு டெல்லியில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு சிரிச்சிக்கிட்டு இருப்பார் :-)

by veera thamizhan

ஆனந்த் சாகர் said...

இந்த பேராசிரியர் இடதுசாரி சிந்தனை உள்ளவர் என்று தெரிகிறது. அதனால்தான் அவரது இந்த கட்டுரையை போலி கம்யூனிஸ்ட் என்று வர்ணிக்கப்படுகிற அ. மார்க்ஸ் மொழிபெயர்த்துள்ளார்.

கம்யூனிஸ்ட்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் பல அடிப்படை ஒற்றுமைகள் உள்ளன. கம்யூனிசமும் இஸ்லாமும் பாசிசம், பழைமைவாதம், அரச ஒடுக்குமுறை சர்வாதிகாரம் ஆகியவற்றின்மீது கட்டமைக்கப்பட்டவை. எனவேதான் இடதுசாரிகள் முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

அமெரிக்க இடதுசாரிகளை உபயோகமான முட்டாள்கள்(useful idiots) என்று லெனின் கூறியதாக சொல்லப்படுகிறது. அப்படி உபயோகமான முட்டாள்களாகத்தான் இடதுசாரிகளை முஸ்லிம்கள் பயன்படுத்துகிறார்கள். இடதுசாரிகளின் கட்டுரைகளை சுவனப்பிரியன் வெளியிடுவதும் அந்த வகையில்தான்.

ஆனந்த் சாகர் said...

//டீசல் விலை இன்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு 50 பைசா அதிகரிப்பு

# மன்மோகன் சிங் இன்று இரவு டெல்லியில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு சிரிச்சிக்கிட்டு இருப்பார் :-)//

பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை முந்தைய மன்மோகன் சிங் அரசுதான் கொடுத்தது. அதை குறித்த கொள்கை முடிவை மோடி தலைமையிலான புதிய அரசு இன்னும் எடுக்கவில்லை.