Followers

Monday, December 01, 2014

'இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்கிறா?'



National Council of Applied Economic Research (NCAER) - என்ற தொண்டு நிறுவனம் 1956 ல் தொடங்கப்பட்டது. இந்தியர்களின் பொருளாதாரம் மற்றும் தீண்டாமை குறித்து அறிக்கைகளை தயாரிக்கும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகும் இது. சமீபத்தில் இந்த நிறுவனம் மற்ற சில தொண்டு நிறுவனங்களோடு சேர்ந்து 42000 வீடுகளில் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. 'நீங்கள் உங்கள் வாழ்வில் தீண்டாமையை கடைபிடிக்கிறீர்களா?' என்று கேட்டால் உடன் 'இல்லை' மறுத்து விடுகின்றனர். அடுத்த கேள்வியாக 'உங்கள் சமையல் அறையில் தலித்களை அனுமதிப்பீர்களா? உங்களின் சமையல் பாத்திரங்களை தொட அனுமதிப்பீர்களா?' என்ற கேள்விக்கு விடை தான் நாம் பார்க்கும் இந்த அட்டவணை. வழக்கமாக பார்பனர்கள் தீண்டாமையை கடை பிடிப்பதில் முண்ணனியில் இருக்கிறார்கள். மற்ற உயர் சாதி இந்துக்களும் பார்பனர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்ற ரீதியில் அவர்களும் தீண்டாமையை கடைபிடிப்பதில் போட்டியிடுகின்றனர்.

இதில் ஒரு பார்பனர் தனது பின்னூட்டத்தில் 'ஆம் .... நாங்கள் சாதி பார்க்கிறோம். தலித்களை சமையல் அறை பக்கம் வர விட மாட்டோம். அது எங்களின் வழக்கம்' என்று திமிராக பதிலும் அளிக்கிறார்.

இவர்களை விடுங்கள். ஏனெனில் இந்த மக்களின் வேத நூல்கள் தீண்டாமையை வலியுறுத்துகின்றன. கால காலமாக பழக்கப்படுத்தி வந்துள்ளதால் இவர்களிடம் தீண்டாமை இருப்பதை ஆச்சரியமாக பார்க்க முடியாது. ஆனால் முஸ்லிம்களிடமும் தீண்டாமை இருப்பதை இந்த ஆய்வு உறுதிபடுத்துகிறது. 18 சதமான முஸ்லிம்கள் தீண்டாமையை கடைபிடிப்பதாக சொல்வது முஸ்லிம்களாகிய நமக்கு அவமானம் இல்லையா? குர்ஆனும், நபி மொழிகளும் தீண்டாமையை முற்றாக ஒழிக்க சொல்லி நமக்கு கட்டளையிட இந்துக்களை பார்த்து முஸ்லிம்களாகிய நாமும் தீண்டாமையை கடைபிடிக்கலாமா?

'குலப் பெருமையை எனது காலடியில் போட்டு மிதிக்கிறேன். மொழியாலும் நிறத்தாலும் உயர்ந்தவன் எவனும் இல்லை' என்று பகிரங்கமாகப் பிரகடனப்படுத்திய ஒருவரை தலைவராக கொண்ட முஸ்லிம்கள் தீண்டாமை அனுசரிக்கலாமா? எங்கள் வீட்டில் ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த இந்து பெண் சமையல் பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, வீடு பெருக்குவது போன்ற பணிகளை பல ஆண்டுகளாக செய்து வருகிறார். எங்கள் கிராமத்தில் அநேக வீடுகளில் வீட்டு வேலை செய்வது தலித் மற்றும் பிறபடுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பெண்கள் தான். நாங்கள் யாரும் தீண்டாமையை கடைபிடிப்பதில்லை. ஆனால் இஸ்லாத்தை சரியாக விளங்காத வட மாநிலங்களில் இன்னும் தீண்டாமை தலைவிரித்தாடுவதை எண்ணி இஸ்லாமியர்கள் வெட்கப்பட வேண்டும். அந்த மக்களுக்கு உண்மை இஸ்லாத்தை எடுத்துச் செல்ல வேண்டும்.

தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
29-11-2014

http://indianexpress.com/article/india/india-others/one-in-four-indians-admit-to-practising-untouchability-biggest-caste-survey/

No comments: