
கோடிக் கணக்கில் இந்துத்வாவாதிகளுக்கு பணம் புரள்வதால் பாதையோரம் குடித்தனம் நடத்தும் 200க்கு மேற்பட்ட முஸ்லிம்களை 'ரேஷன் கார்டு தருகிறோம்: குடியிருக்க இடம் தருகிறோம்' என்று கூறி அழைத்துச் சென்றனர். அங்கு பூசாரியை வைத்து மந்திரங்கள் முழங்க '200 முஸ்லிம்கள் தாய் மதம் திரும்பினர்' என்று பத்திரிக்கைக்கு பேட்டி அளித்தனர். இதை சற்றும் எதிர்பாராத முஸ்லிம்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்துத்வாவாதிகளுக்கு கோடிகளில் பணம் வருவதால் அதற்கு கணக்கு காட்ட வேண்டும். எனவே இந்த கபட நாடகத்தை நடத்தியுள்ளனர். ஆனால் இவர்கள் யாரை இந்துவாக மாற்றியதாக பேட்டியளித்தார்களோ அந்த மக்கள் சென்ற வெள்ளிக் கிழமை கூட்டாக ஜூம்ஆ பள்ளிக்கு வந்து தங்களின் இறைக் கடமையை நிறைவேற்றினர்.
இந்துத்வாவாதிகளே! இனிமேலாவது இது போன்ற பொய்களை திட்டமிடாமல் உங்கள் மதத்தில் உள்ள தீண்டாமையை அகற்ற பாடுபடுங்கள். தீண்டாமையை போதிக்கும் வசனங்களை நீக்க முயற்சி செய்யுங்கள். சாதி வேற்றுமையை களைய ஏற்பாடு செய்யுங்கள். அதை விடுத்து அண்ணன் தம்பிகளாக அன்போடு பழகி வரும் இந்து, முஸ்லிம், கிறித்தவ, சீக்கியர்களை பிரிக்க சூழ்ச்சி செய்யாதீர்கள். அது முடிவில் உங்களுக்கே தீங்காக முடியும்.
2 comments:
சரி மதமாற்றம் நடைபெறவில்லை.அமொிக்காவில் நடந்தால் பிற மதத்தவர்கள் அரேபிய மதத்திற்கு வந்தால் வெற்றி. அரேபிய மதத்தவர்கள் தாய்மதம் திரும்பினால் அநிியாயம். சமூக விரோதச் செயல் என்ன வாதம்.வாழ்க அரேபியத்தனம்.
அப்போ, மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரலாமே.. அதுதான் ஹிந்து முஸ்லிம் எல்லாம் அண்ணன்-தம்பியாக பழகுகிறார்களே..
Post a Comment