Followers

Saturday, December 20, 2014

பூனைக் குட்டி வெளியே வந்து விட்டது - மோகன் பகவத்செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த மோகன் பகவத், " மதமாற்றத்தை நீங்கள் விரும்பவில்லை எனில் நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வாருங்கள். மற்ற மதங்களிலிருந்து இந்து மதத்திற்கு மாறுவதை எதிர்ப்பவர்கள், இந்து மதத்திலுள்ளவர்களை மற்ற மதங்களுக்கு மாற்றுவதையும் நிறுத்த வேண்டும். ஒருவர் இந்துவாக மாறுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், இந்துக்களையும் மாற்றக்கூடாது.

அதே சமயம் கட்டாயப்படுத்தப்பட்டோ அல்லது ஆசை காட்டியோ மதமாற்றம் செய்யப்பட்டவர்களை நாங்கள் மீண்டும் இந்து மதத்திற்கு கொண்டு வருவோம். இந்து சமாஜ் விழித்துக்கொண்டுவிட்டது. யாருக்காகவும் பயப்படாது. நாங்கள் ( இந்துக்கள் ) இந்தியாவுக்குள் எங்கிருந்தோ வரவில்லை. இது எங்களது இந்து தேசம்" எனக் கூறியுள்ளார்.

விகடன்
20-12-2014

ஆக்ரா கட்டாய மத மாற்றத்தை இவர்கள் நாடகமாக நடத்தியதே இது போன்ற கோரிக்கையை வைக்கத்தான். காலம் காலமாக தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கி வைத்திருந்தோம். ஆனால் இன்று விடியலைத் தேடி இஸ்லாத்தை நோக்கி கூட்டம் கூட்டமாக ஓடுகின்றனர். இவ்வாறு ஓடினால் சூத்திரர்கள் என்று சொல்லி எவரை நாம் இழிவுபடுத்துவது? எனவே இதனை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர். இன்னும் காட்டமான அறிக்கைகளையும் வருங்காலத்தில் இந்துத்வாவினரிடமிருந்து எதிர்பார்க்கலாம். ஆனால் இவர்களின் உளுத்துப் போன வாதங்களை கேட்கும் நிலையில் தலித், மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இன்று இல்லை என்பதை யாராவது மோகன் பகவத்துக்கு சொல்லுங்களேன்.

இந்தியாவில் இந்துவாக இருந்து முஸ்லிமாக மாறிய எந்த இந்துவையாவது அழைத்து 'நீங்கள் எவ்வாறு, யாரால் மதம் மாறினீர்கள்? என்று கேளுங்கள். 'எங்களை வேறு மதத்துக்கு விரட்டியது ஆதிக்க சாதி இந்துக்கள்தான். நாங்களாகவே விரும்பித்தான் இஸ்லாத்தை ஏற்றோம்' என்ற பதிலைத்தான் தருவார்கள். எனவே மோகன் பகவத் போன்றவர்கள் தங்கள் மதத்தின் சட்ட நூல்களை திருத்தட்டும். ஆதிக்க சாதியினரிடம் உள்ள தீண்டாமையை களைய முனையட்டும். மத மாற்றம் தானாகவே நிற்கும். ஆனால் அதனை செய்ய மாட்டார்கள்.

'தும்பை விட்டு விட்டு வாலை பிடிப்பதே' இவர்களின் வேலையாக போய் விட்டது.

3 comments:

Dr.Anburaj said...

இந்து்க்களின் நன்மை பாதுகாப்பையும் வழிகாட்டும் பொறுப்பை எற்று திறம்பட செயல்பட்டு அற்புத தலைவா்கள் தொண்டா்கள் கொண்ட ஒரு திருதொண்டா்கள் சங்கமே ராஷ்டிாிய ஸவயம் சேவக சங்கம். இதன் மதிப்பு மிகு தலைவாின் அற்புதமான கருத்தை வெளியிட்டமைக்கு நன்றி. காந்தாரம் ஆப்பானிஸ்தானாகிவிட்டது.மேற்கு பாக்கிஸ்தானில் இந்துக்கள் இல்லை.பங்களா தேஜ என்ற கிழக்கு பாக்கிஸ்தானில் இந்துக்களின் இன அழிப்பு அரேபிய மத காடையா்களால் நறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்துக்கள் மதம் மாறினால் செய்தி இல்லை. ஆனால் முஸலீம்கள் மதம் மாறினால் பாராளுமன்றத்தில் ரகளை. மானம் கெட்ட இந்துக்கள்.மதமாற்றத்தை தேசப்பிதா கடுமையாக எதிா்த்தாா். இந்துக்கள் மதம் மாறிப்போவதை கடுமையாக எதிா்த்தாா்.

Anonymous said...

எனக்கு ஒரு சந்தேகம். இந்துவாக மதம் மாறினால் எந்த சாதியின் கீழ் வருவார்கள். இந்துவாக மதம் மாறும் அனைவரும் பிராமணர்கள் என உறுதி கொடுக்கட்டும் பார்ப்போம்.

Dr.Anburaj said...

இந்துவாக மதம் மாறும் அனைவரும் தாங்கள் விரும்பும் சாதியில் சேர முடியும்.நான் சாதிச்சான்று பெற்றுத்தருகின்றேன். சும்மா பயங்காட்ட வேண்டாம்.நாடாா் சாதியில் நான் சோ்த்துக் கொள்ள தயாா்.