Followers

Wednesday, December 17, 2014

காந்தியாரைக் கொன்ற கோட்சேவுக்கு நாடெங்கும் சிலைகளா?காந்தியாரைக் கொலை செய்த நாதுராம் கோட்சே விற்கு நாடெங்கும் சிலைவைக்க இந்துமகாசபை முடிவு செய்துள்ளது. இது குறித்து எக்னாமிக் டைம்ஸ் என்ற இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் இந்தியாவின் மகா புருஷர்களுக்கு இந்தியாவில் சிலைவைக்காமல் பாகிஸ்தானிலா சிலைவைக்க முடியும்? என்று எதிர்கேள்வி வைக்கின்றன.

காந்தியைக் கொலை செய்தது ஆர்.எஸ்.எஸ் அமைப் பைச் சேர்ந்த நாதுராம்கோட்சே என்பது நாடறிந்த செய்தியாகும். இந்த நாட்டின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக மதிக்கப்படும் காந்தியாரை அகண்ட பாரதத்தின் எதிரி மற்றும் இந்துக்களின் துரோகி என்று கூறி கோட்சே தலைமையிலான குழு திட்டமிட்டுக் கொலை செய்தது. இந்தக்கொலை நிரூபிக்கப்பட்டு கோட்சேவிற்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதன் மூலகர்த் தாவாக இருந்த வி.டி.சவர்க்கார் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பிவிட்டார்.

இந்த நிலையில், மத்தியில் புதிதாக ஆட்சி அமைத்த பாஜக அரசு இந்துத்துவச் சக்திகளின் அரசாக அமைந்ததால், நாளுக்கு நாள் இந்துத்துவக் கொள்கையை தூக்கிப்பிடித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சாக்சி மகராஜ் என்ற சாமியார் நாதுராம் கோட்சேவை தேசபக்தன் என்று கூறி பிறகு மன்னிப்புக் கேட்டார். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் மிகவும் விவாதத்திற்கு உள்ளாகிக்கொண்டு இருக்கும் நிலையில், தற்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சகோதர அமைப்பான இந்து மகாசபை இந்தியா முழுவதும் நாதுராம் கோட்சேவின் சிலையை திறக்க முடிவு செய்துள்ளதாம்.


இது குறித்து இந்துமகா சபைத் தலைவர் சந்திர பிரகாஷ் கவுசிக் எக்னாமிக் டைம்ஸ் என்ற இதழுக்கு அளித்த பேட்டியில்

நாங்கள் ஜனவரி 30 ஆம் தேதி (காந்தி கொலை செய்யப்பட்ட நாள்) இந்தியா முழுவதும் கோட்சேவின் சிலையைத் திறக்க விருக்கிறோம். இதற்காக ராஜஸ்தானின் கிஷான் கட் என்ற ஊரில் நூற்றுக்கணக்கான பளிங்கு சிலைகள் தயாராகிக் கொண்டு இருக்கின்றன. புதுடில்லியில் கோட்சே தங்கி இருந்த மத்திய டில்லியில் உள்ள கிருஷ்ணகஞ்சில் கோட்சே சிலையுடன் அவருக் கான காட்சியகமும் அமைக்கப்பட உள்ளது. நாங்கள் மத்திய அரசிடம் உடனடியாக அய்ந்து நகரங்களில் வைக்க அனுமதி கேட்டு இருக்கிறோம். மத்திய அரசு எங்களுக்கு அனுமதியளிக்காவிட்டாலும் கவலை யில்லை, நாங்கள் இந்த நாட்டின் மகாபுருஷர்களுக்கு சிலை வைக்க யாரும் தடைசெய்ய முடியாது. விரைவில் நாடெங்கும் கோட் சேவின் சிலைகள் வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

கோட்சே இந்து மகாசபையின் தலைமையகத்தில் தான் வந்து தங்கினார். புதுடில்லியில் உள்ள தலைமையகத்தில் தான் அவர் துப்பாக்கிச்சுடும் பயிற்சி பெற்றார். அவருக்குப் புகலிடமும் திட்டமிட்டுக் கொடுத்ததும் இந்துமகாசபையின் உறுப்பினர்கள்தான். இந்த ஆண்டு ஜூலை மாதம் கோட்சேவின் சிலைகள் செய்ய உத்தரவிட்டதாகவும், இந்தச் சிலைகளில் 17 சிலைகள் டில்லியில் உள்ள இந்து மகாசபை தலைமையகத்திற்கு வந்துவிட்டனவாம். காந்தியைக் கொலைசெய்யும் முந்தைய நாள் முழுவதும் கோட்சே இந்துமகாசபை உறுப்பினர்களுடன் நீண்ட நேரம் விவாதம் நடத்தினான். அவனுக்குத் துப்பாக்கிச் சுட பயிற்சியளித்த இடத்தில் தற்போது அவனுக்கான சிலை அமைக்கும் மேடைகள் தயாராக உள்ளன.

இந்தத் தகவல்களை எக்னாமிக் டைம்ஸ் (15.12.2014) வெளியிட்டுள்ளது. மற்ற ஏடுகள் திட்டமிட்டு மூடி மறைத்துவிட்டன.

காந்தியாரின் பிறந்த நாள் மக்கள் மத்தியில் விழாவாக ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே பிரதமர் நரேந்திர தாமோதர தாஸ் மோடி, அந்த நாளை தூய்மை நாள் என்று அறிவித்து, நாட்டைத் தூய்மைப்படுத்தும் காட்சிகளை அரங்கேற்றினார். மோடியே குப்பைக் கூட்டுவதுபோல, ஊடகங்களிலும் இடம்பெறச் செய்து, அந்த நாளில் காந்தியாரைப்பற்றி எந்தவிதத் தகவலும் வெளி வந்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாகவே பார்த்துக் கொண்டார்.


குஜராத் மாநிலத்தில்தான் காந்தியார் பிறந்தார் - ஆனால், அவருக்கு முக்கியத்துவம் வந்துவிடக் கூடாது; மாறாக அம்மாநிலத்தில் பிறந்த வல்லபாய் படேலுக்கு 597 அடி உயரத்தில் (பீடத்திற்கு மட்டும் ரூ.200 கோடி பூங்கா மற்றும் காட்சியகத்துக்கு ரூ.500 கோடி) சிலை எழுப்ப முயலுவதில், காந்தியாரை மட்டம் தட்டும் சூழ்ச்சியே!


காந்தியாரைக் கொலை செய்வதற்குத் தூண்டுகோலாக இருந்த காரணத்தால்தான் கீதையை இந்தியாவின் தேசிய புனித நூலாக அறிவிக்கப் பார்க்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

”விடுதலை” தலையங்கம் 17-12-2014

அம்பேத்காரை யாரும் ஞாபகம் வைத்துக் கொள்ளக் கூடாது என்ற நோக்கில்தான் இவர்கள் பாபர் பள்ளியை இடிக்க டிசம்பர் 6 ந்தேதியை தேர்ந்தெடுத்தனர். இது போல் தங்கள் செயல் திட்டங்களை நீண்ட கால திட்டமிடலால் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றனர். அதன் அடுத்த நகர்வுதான் கோட்சேயை தற்போது முன்னிறுத்துவது. இன்னும் சில நாட்களில் தேசத் தந்தையை சுட்டுக் கொன்ற கோட்சே என்ற பார்பனர் மஹாத்மா ஆக்கப்படலாம். மோடியின் ஆட்சியில் வேறு எதனை எதிர்பார்க்க முடியும்?

இந்த நாட்டுக்காக தனது உயிரையே இழந்த காந்தியின் கண்ணீர் இந்த அக்கிரமக்காரர்களை இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒரு நாள் பழி தீர்க்கும்.

“What’s wrong if someone called Godse a patriot. Before killing Gandhi, Godse worked as a freedom fighter and towards Akhand Bharat.

- See more at: http://indianexpress.com/article/cities/mumbai/now-godse-says-he-was-a-patriot/#sthash.99AI6VY7.dpuf

On the occasion of Nathuram Godse’s 61st death anniversary on November 15,the Hutatma Nathuram Godse Icchapatra Nyas — run by his family and ideological supporters — will release an audio book based on his statement in court in the Mahatma Gandhi assassination trial.

The audio book will be released by radical outfit Shriram Sene chief Pramod Mutalik,Godse’s niece Himani Savarkar told The Sunday Express. Savarkar,who is also the president of Abhinav Bharat,said Godse’s statement in court is published in books written by her father Gopal Godse,a co-accused in the Mahatma Gandhi assassination case.

- See more at: http://indianexpress.com/article/news-archive/web/godse-court-statement-now-in-audio-book/#sthash.fAza0IvY.dpuf


2 comments:

சுவனப் பிரியன் said...

பிரவீன் தெகாடியாவுக்கு ஒரு இந்து நண்பரின் பதில்!

அடாவடித்தனம் புரிந்தது மொகலாய மன்னர்கள் அல்ல. அவர்கள் வேண்டுமானால் நாடு பிடிக்க ஆங்கிலேயர்களைப் போல சேட்டைகள் செய்திருக்கலாம். ஆனால், சமுதாயத்தில் மக்களிடைய கடவுளின் பெயரால் அடாவடித்தனம் மட்டுமல்ல, அயோக்கியத் தனமும் செய்தது இந்துக்களே. பேரறிவாளர்களின் திருபோல ஊருணிகளில் நிறைந்திருந்த நீரை கீழ்ச் சாதியார் எடுக்கக் கூடாது என்று எந்த மொகலாய மன்னனும் தடை போட்டதில்லை. ஆனால், தடை போட்டவன் சாதி இந்து. நாலாம் சாதியாரைத் தீண்டத் தகாதவன் என்றது இஸ்லாம் அல்ல, கிறிஸ்துவம் அல்ல. அது இந்துத்துவமே! அதனால், அதிக ம் தாளிக்க வேண்டாம், தொகாடியாரே! அர்த்தமற்ற இந்துமதம் இற்றுவருகிறது. இதை அஞ்சாமல் எழுதும் எம்மனோர் அரங்கமா நகருறங்கும் "ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்த" ஓரிறைவனைத் தொழும் ஒருவனே. இந்து மதம் ஒன்றே மக்களைப் பிரித்த மதம். அதில் மட்டுமே நால்வருணம். அதில் மட்டுமே ஆண்டான் அடிமை. அதில் மட்டுமே பற்பல இறைவணக்கம். "என்குற்றமல்ல, இந்துவாய்ப் பிறந்தது, ஆனால் இந்துவாய் நான் இறக்கமாட்டேன்" என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னது கோடியில் ஒரு சொல். அதுவே நடக்கிறது. அது தொடரும்.

தமிழ் இந்து தினசரியில் ஒரு இந்துவின் பின்னூட்டம்
18-12-2014

Dr.Anburaj said...

இது போன்ற செய்திகளை வெளியிட்டு வெறுப்பை வளா்க்காமல் ஸ்ரீ ராமகிருஷண்ணா மிஷன் மாதா அமா்தானந்தமயி போன்ற இந்து இயக்கங்கள் செய்யும் நற்பணிகளைக் கறித்து எழுதுங்கள். நல்லவை விதையங்கள். வெளிச்சம் ஏற்றுங்கள்.இருளைப் பழித்து அவதென்ன! தகுதியற்ற இயக்கங்கள் தானாகவே அழிந்து விடும்.