
இந்திய அரசியல் வாதிகளை ஆச்சரியத்தோடு திரும்பி பார்க்க வைத்திருக்கும் அஸாஸூத்தீன் உவைசி ரியாத் வருகை புரிந்துள்ளார். அவர் தனது பேச்சில் கூறிய கருத்துக்களின் சுருக்கமாவது...
'இஸ்லாமியர்களின் தனிக் கட்சி இந்திய அரசியலில் பல பதவிகளை பெறுவதை சமய சார்பற்ற தன்மைக்கு குந்தகம் விளைவிப்பதாக பலர் கருத்திடுகின்றனர். அது தவறு. எங்களைப் போன்றவர்கள் அரசியல் அதிகாரத்துக்கு வந்தால் மத சார்பின்மை மேலும் சிறப்புறும்.
முஸ்லிம்கள் அரசியலில் முற்றிலுமாக நுழைய வேண்டும். மகாராஷ்ட்ராவில் நாங்கள் இரண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பலர் எங்களை விமரிசிக்கின்றனர். பல தலைவர்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் பயம் அரத்தம் இல்லாதது. குஜராத் கலவரத்தை நாங்கள் மறந்து விடவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை நாங்கள் ஓய மாட்டோம். குஜராத் அரசியலில் சரியான பங்களிப்பு முஸ்லிம்கள் தராததாலேயே அத்தகைய இழப்பை நம்மால் சந்திக்க நேர்ந்தது.
முஸ்லிம்கள் படிப்பிலே அதிக கவனம் செலுத்த வேண்டும். மேற் படிப்புகளை எந்த தியாகம் செய்தும் படித்து முடிக்க வேண்டும். வாய்ப்புகள் நிறைய காத்திருக்கிறது. மாலேகான் என்ற ஊரில் முஸ்லிம்கள் பெருவாரியாக வாழ்கின்றனர். ஆனால் அங்கு ஒரு வங்கி கூட திறக்கப்படவில்லை. அந்த நகரம் முன்னேற்றம் அடையாமல் இருக்கிறது. அந்த மக்களும் படிப்பிலே ஆர்வமற்று உள்ளனர். இந்தியா முழுக்க முஸ்லிம் கிராமங்களின் பெரும்பாலான நிலை இதுதான். இந்த நிலை மாற வேண்டும்.
2016ல் உத்தர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பல இடங்களில் மஜ்லிஸ் பார்ட்டி போட்டியிட்டு ஆளும் வர்க்கத்துக்கு தக்க பாடம் புகட்டும். இது போன்ற மேலும் பல சிறந்த மாற்றங்களை பெற முஸ்லிம் இளைஞர்கள் கடுமையாக உழைத்து கல்வியில் உயர வேண்டும்.' என்றும் பேசினார். பெருந்திரளான மக்கள் இவரது பேச்சை கேட்க வந்திருந்தனர்.
ரியாத்தின் ஹாரா என்ற இடத்தில் 'நயாகரா ஹைதராபாதி உணவகத்தை' யும் திறந்து வைத்தார் உவைசி. வபாக் அல் சஹ்கா மற்றும் மும்தாஜ் குரூப் இந்நிகழ்வுக்கான ஸ்பான்ஸர்களாக செயல்பட்டனர்.
தகவல் உதவி
சவுதி கெஜட்
03-12-2014
1 comment:
15 நிமிடங்கள் போலிசையும் ராணுவத்தையும் விலக்கிக் கொள்ளுங்கள். இநதியாவில் இந்துக்களை அனைவரையும் மாற்றிக்காட்டுகின்றேன்.ஒழித்து கட்டுகிறேன் என்று பொதுக்கூட்டத்தில் மூளையற்ற முட்டாள் போல கத்திய அரேபிய மத காட்டான் இவன் எனப்படும். இந்த சொறி நாய்க்கு இவ்வளவு மாியாதையா ? சீ சீ சீ
Post a Comment