Followers

Friday, December 26, 2014

கங்கை அமரனுக்கு சில கேள்விகள்! பதில் சொல்வாரா?



கங்கை அமரன் அவர்களே! சமீபத்தில் உங்களுக்கு ஆன்மீக பக்தி முற்றிப் போய் பிஜேபியில் சேர்ந்து விட்டதாக நான் படித்தேன். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு ஏற்பட்டால் உங்கள் இனத்து குழந்தைகளை படிப்பில் முன்னேற்ற ஒரு குழு அமைத்து உழைத்திருக்கலாம். மதுரையில் இன்றும் சாதி வித்தியாசம் பார்த்து தீண்டாமை கொடுமை நடக்கும் சேரிகளில் பிரசாரம் செய்ய சென்றிருக்கலாம். கிருபானந்த வாரியார் போல இந்து மதத்தின் பெருமைகளை உங்கள் இசையால் உலகம் அறிய செய்திருக்கலாம். குன்றக்குடி அடிகளார் போல சமூக பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டு இறை தொண்டாற்றி இருக்கலாம். அல்லது உங்கள் அண்ணன் பாஸ்கரைப் போல கம்யூனிஸத்தில் இணைந்து சம தர்ம சமுதாயம் உண்டாக உழைத்திருக்கலாம்.

ஆனால் இது அனைத்தையும் ஒதுக்கி விட்டு இன்று பார்பனர்களின் கூடாரமாகிய பிஜேபியில் இணைந்திருப்பது காலத்தின் கோலம் தான் என்பேன். இந்து மதத்தில் பார்பனர்களின் பிடி தளர்ந்து விடக் கூடாது என்பதற்காக அதனை சட்ட பூர்வமாக செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட கட்சியே பிஜேபி. ஐந்து வருடம் காங்கிரஸ் கட்சியின் கையாலாகாத்தனத்தை பார்த்த மக்கள் வேறு வழியின்றி இன்று பிஜேபியை தேர்ந்தெடுத்துள்ளனர். எனவே மக்கள் ஆதரவினால் நான் பிஜேபியில் சேர்ந்தேன் என்றும் உங்களால் சொல்ல முடியாது. அடுத்த ஐந்து வருடத்தில் 100 இடத்தைக் கூட பிஜேபி பிடிக்காது. இதனை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

எனவே இன்று வரை பார்பனர்களின் நலனில் மட்டுமே அக்கறை கொண்ட ஒரு கட்சி பிஜேபி. தலித்களை இந்து மதம் பெரும்பான்மை மதம் என்று காட்டி மற்ற மதங்களை பயமுறுத்த கறிவேப்பிலையாகத்தான் பார்பனீயம் இன்று வரை பயன்படுத்திக் கொண்டுள்ளது. தங்கள் வேலை முடிந்தவுடன் உங்களை கறி வேப்பிலையைப் போல தூர எறிந்து விடுவார்கள். இன்னும் 100 வருடம் ஆனாலும் எந்த மாற்றத்தையும் அந்த கட்சியில் உங்களால் செய்து விட முடியாது. பார்பனியத்தின் பிடி மேலிடம் வரைக்கும் எந்த அளவு இறுகியுள்ளது என்பதற்கு ஒரு நிகழ்வை நாம் பார்போம்.

2009 யில் தனது 75-வது பிறந்த நாள் விழாவில் காஞ்சி ஜெயேந்திரர் நால்வருக்கு விருது வழங்கினார். அதில் முக்கியமானவர், இளையராஜா. அவர் உட்பட எழுத்தாளர் விக்ரமன், வேதவிற்பன்னர் கிருஷ்ண மூர்த்திகனபாடிகள், சமூகசேவகர் ராதா கிருஷ்ணன் போன்ற மூவருக்கும் சேர்த்து இந்த விருதுகள் வழங்கப்பட்டது..

இதில் என்ன இருக்கிறது? விருது தானே! இது எல்லோருக்கும் வழங்குவதுதானே என்றால்! அது தப்பில்லை, அது பொதுவான விசயம். ஆனால் இதில் பேசப்படவேண்டிய விசயம் என்னவென்றால் காஞ்சி ஜெயேந்திரர் தீட்டு பட்டு விடும் என்பதற்காக தான் தொடாமலேயே தனது உதவியாளர் கையால் அந்த விருதை வழங்கி இருக்கிறார் என்பது தான் முக்கியமான விசயம்.

மற்ற மூவரும் மேல் சாதிக்காரர்கள். ஆனால் இளையராஜா தாழ்ந்த சாதியை சேர்ந்தவர். மூன்று பேருக்கு மட்டும் தொட்டு விருது வழங்கி விட்டு இளையராஜாவை ஒதுக்கினால் அது பெரும் பிரச்னையாகி விடும் என்று யோசித்தார் ஜெயேந்திரர். உடனே தனது உதவியாளரை அழைத்து அவர் கையாலேயே நால்வருக்கும் பொதுவாக விருதை வழங்க வைத்து விட்டார். விருதும் வழங்கியாகி விட்டது. ஆச்சாரமும் காப்பாற்றப்பட்டு விட்டது. வெளி உலகின் ஏசுதலுக்கும் முற்றுப் புள்ளியும் வைத்தாகி விட்டது.
இவ்வளவுக்கும் உங்கள் அண்ணன் இளையராஜா இந்து மதத்தில் பெரிய ஆன்மீக வாதியாக அறியப்படுபவர். தமிழகம் மற்றும் உலக அளவில் பிரபலமாக பார்க்கப்படுபவர். இந்த அளவு உயரத்திற்கு சென்றவர் இவ்வளவு தூரம் அசிங்கப்பட்டு இந்த விருதை வாங்கத்தான் வேண்டுமா? 'ஜனனி...ஜனனி' பாடலை கேட்டு உருகாத இந்துக்கள் எவரும் இல்லையே! இளையராஜாவின் சங்கீதம் ஜாதி பார்ப்பது இல்லையே! ஆனால் இந்த காஞ்சி மடாதிபதி இங்கிதமாக ஜாதி பார்க்கிறாரே!

சொல்லப் போனால் காஞ்சி சங்கராச்சாரியாரை விட தனது வாழ்வை மிகப் புனிதமாக மாற்றிக் கொண்டிருப்பவர் இளையராஜா. மது, மாது என்பதை சினிமாவில் இருந்தும் தூரமாக்க முடியும் என்பதை இன்று வரை நிரூபித்து வருபவர். ஆனால் நடமாடும் தெய்வம் என்று பார்பனர்களால் போற்றப்படும் ஜெயேந்திரரிடம் இந்த தூய்மையை நாம் எதிர்பார்க்க முடியாது. பெண் ஆசை, அதைக் கண்டித்த சங்கரராமனை போட்டுத் தள்ளியது, அதிலிருந்து தப்பிக்க நீதிபதியிடம் சமரசம் பேசியது என்று பெரும் பாவங்கள் எல்லாவற்றையும் செய்து விட்டு பார்பனர்களின் தயவால் இன்று வரை மடாதிபதியாக உள்ளார். இவர் எந்த விதத்தில் இளையராஜாவை விட உயர்ந்து விட்டார்? இதற்கு பதில் சொல்வீர்களா?

உங்கள் உடன் பிறந்த அண்ணன் இளையராஜாவுக்கு நிகழ்ந்த இந்த அவமானத்தை நீங்களும் கண்டு பொருமியிருப்பீர்கள். அது மட்டும் தான் உங்களால் முடிந்தது. அதற்கு மேல் உங்களால் ஒரு அடி எடுத்து வைக்க முடியாது. இவ்வளவு தூரம் அவமானப்படுத்திய ஒரு நிகழ்வைக் கண்டும் உங்களால் தீண்டாமையை இன்றும் ஆதரிக்கும் பிஜேபியில் எவ்வாறு அங்கம் வகிக்க முடிகிறது? இது உங்கள் அண்ணனுக்கு செய்த துரோகம் அல்லவா? நன்றாக சிந்தித்து ஒரு முடிவை எடுங்கள்.

1 comment:

Dr.Anburaj said...

பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத்தலைவரும் தேசிய தலைவரும் தலித் சமுகத்தைச் சோ்ந்தவர்களாக இருந்தனா். பாா்பனத்தை கட்டிக் காக்கும் கட்சிி பிஜேபி என்பதெல்லாம் புளித்துச் போன செத்துப்போன வாதங்கள். இன்று அனைத்து சாதி மக்களும் முஸ்லீம்களும் தேசிய சிந்தனையோடு பிஜேபியில் இணைந்து வருகின்றனா். முறையான சமய கல்வியை இந்துக்கள் பெற காந்திஜி முயன்றாா். ஆனால் காங்கிரஸ் அரசு முஸ்லீம்களும் ிறிஸ்தவர்களும் தங்களை மதச்சாா்பற்றவர்களாக நினைக்க வேண்டும் என்று காந்தியை காற்றில் விட்டாா்கள்.இந்து நலனை பிஜேபி கையில் எடுத்துள்ளது.எச்சில் இலையைில்உருளுவது தடுக்கப்பட வேண்டுமா? தலையில் தேங்காய் உடைப்பது தடுக்கப்படவேண்டுமா ? பிஜேபி அரசுதான் - இந்து மதத்தைப்பற்றிப்பேச தைாியம் உள்ள அமைப்பால்தான் முடியும். காங்கிரஸ.முஸ்லீம் லீக்கும் இதற்கு குரல் கொடுத்தால் மக்கள் அவர்கள் பக்கம் சாய்வாா்கள்.