
எங்கள் மகனுக்கு ஐஎஸ் தொடர்பில்லை மெஹ்தியின் பெற்றோர்!
எங்கள் மகனுக்கு ஐஎஸ் தொடர்பில்லை: கைதான மேக்தியின் பெற்றோர் பேட்டி; ட்விட்டர் கணக்கு திருடப்பட்டதாகப் புகார்
ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக கைதாகியுள்ள எங்கள் மகன் மேக்தி அப்பாவி. அந்த அமைப்புக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை. மேக்தியின் இமெயில்,ட்விட்டர், பேஸ்புக் கணக்குகள் திருடப்பட்டுள்ளன என்று அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
ட்விட்டர் சமூகவலைதளத்தில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், ஆள் சேர்த்ததாகவும் பெங்களூருவை சேர்ந்த பொறியாளர் மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் (24) கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். நாட்டுக்கு எதிராக போர் தொடுத்தல் உள்ளிட்ட 4 கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேக்தியை பார்ப்பதற்காக அவரது பெற்றோர் மேற்கு வங்கத்தில் இருந்து பெங்களூரு வந்துள்ளனர். அவர்களிடம் தேசிய புலனாய்வு பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, உளவுத்துறை மற்றும் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே மேக்தி மெஸ்ரூர் பிஸ்வாஸின் உண்மைநிலைக் குறித்து அறிவதற்காக அவரது தந்தை மேகெயில் பிஸ்வாஸ், தாய் மும்தாஜ் பேகம் ஆகி யோரை 'தி இந்து' சார்பாக சந்தித்தோம்.
அவர்கள் கூறியதாவது:
எங்கள் மகன் மேக்தி அப்பாவி. அவனுக்கும் ஐஎஸ் அமைப்புக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் அவனை தீவிரவாதி போல சித்தரித்து போலீஸார் எங்களை மிரட்டி விசாரிக்கின்றனர். அவனுடைய ட்விட்டர், மின்னஞ்சல், பேஸ்புக் கணக்குகள் திருடப்பட்டுள்ளன. இது தொடர்பாக விசாரிக்குமாறு தேசிய புலனாய்வு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
தற்போது எனது மகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்கவில்லை. ட்விட்டரில் ஆதரவாக மட்டுமே செயல்பட்டதாக தனிப்படை போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மேக்தியை தீவிரவாதி போல் நாட்டுக்கு எதிராக போர்த்தொடுத்தல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிந்தது ஏன்?
தடை செய்யப்பட்ட அமைப்பை ஆதரிப்பது சட்டப்படி குற்றமல்ல என நீதிமன்றங்கள் பல தீர்ப்பு களில் கூறியுள்ளன. மேக்தி மீது இத்தனை வழக்குகள் நியாயமா? இவ்வாறு, அவர்கள் தெரி வித்தனர்.
நன்றி:
தமிழ் இந்து நாளிதழ்
17-12-2014
“மேக்தியை தீவிரவாதி போல் நாட்டுக்கு எதிராக போர்த்தொடுத்தல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிந்தது ஏன்?“ என்று அப்பாவியாக அந்த இளைஞனின் பெற்றோர் மீடியாக்களை பார்த்து கேட்கின்றனர். உங்கள் மகன் முஸ்லிமாக பிறந்த ஒரு காரணம்தான் அவனை தீவிரவாதியாகவும் நாட்டுக்கு துரோகம் இழைத்ததாகவும் வழக்கு தொடுக்க வைத்துள்ளது. வேறு காரணம் இல்லை. இதற்காக ஒரு பெரும் திட்டமிடலே மறைமுகமாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதிதான் மெஹ்தியின் கைது படலம் என்பதை இனி வரும் காலங்களில் அவரது பெற்றோர் புரிந்து கொள்வார்கள்.
இந்திய இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்த நாடு இஸ்லாமியரை குற்ற பரம்பரையாக சித்தரித்து அதன் மூலம் தங்களின் வர்ணாசிரம தர்மத்தை நிலை நாட்டிக் கொள்ள முயல்கிறது. எனவே அவர்களுக்கு பலிகடாவாக நாம் ஆகி விட வேண்டாம். எந்த செய்தியையும் பிரசுரிப்பதற்கு முன் பலமுறை யோசித்து அதன் நம்பகத் தன்மையை உறுதி செய்து கொண்டு பிரசுரிக்கவும். ஈராக்கிலோ, சிரியாவிலோ உள்ள எந்த தீவிரவாத அமைப்புபையும் நாம் இங்கிருந்து ஆதரிக்க முயல வேண்டாம். ஏனெனில் அந்த நாடுகளில் நாம் ஆதரிக்கும் குழுக்கள் என்ன மாதிரியான வேலைகளை செய்கிறார்கள் என்பது நம் ஒருவருக்கும் தெரியாது. ஒரு சில குழுக்களின் பின்னால் இஸ்ரேலும் அமெரிக்காவும் உள்ளது. அவர்கள் தான் அந்த குழுக்களை இயக்கி வருகின்றனர். எனவே தவறான ஒரு அமைப்புக்கு அதரவளித்த ஒரு குற்றத்தை நம்மையறியாமல் செய்தவர்களாகி விடுவோம். வருங் காலங்களில் மிக கவனமாக நமது செய்திகளை நமது நாட்டு அரசியலமைப்பு சட்டங்களுக்கு உட்பட்டு பிரசுரிப்போம் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்வோம்.
1 comment:
மெஹதி யோக்கியன் என்று நீதிமன்றம் சொல்ல வேண்டும். பெற்றோா்கள் சொல்லக் கூடாது.பாக்கிஸ்தானுக்கும் ஐஎஸ்ஐஎஸ்க்கு ஆதரவு அளிப்பது அரேபிய இசுலாமிய சகோதரத்துவம் என்று யாராவது இந்தியாவில் நம்பி செயல்பட்டால் அது தேசத்துரோகம் என்றுதான் சொல்லப்படும்.
இசுலாமியா்களை பொய்யாக குற்றம்சமத்தி இந்தியாவில் வா்ணாச்சிரம கொள்கையை நிலை நாட்டுவார்கள் என்பதற்கு என்ன அா்த்தம்? தாய்நாட்டின் மீதும் சக மக்களாகிய இந்துக்கள் மீதும் வெறுப்பை வளா்க்க எப்படிப்பட்ட பொய்களை உருவாக்குகின்றீா்கள் ?
Post a Comment