Followers

Monday, December 08, 2014

மோடி முன்பு போட்டியிட்ட தொகுதியின் இன்றைய நிலை!

அகமதாபாத், நவ.30_ இந்தியாவிலேயே முதல் மாநிலமாக பொய்ப்பிரச்சாரம் செய்யப்பட்ட மாநிலத்தில்தான், ஆங்கிலேய இணையரின் கருவை சுமந்து குழந்தைப் பெற்றுத்தரும் வாடகைத்தாய் அதிகம் உள்ளனர் என்ற செய்தி அனைவரும் அறிந்ததே. இது ஓர் அறிவியல் வளர்ச்சியின் ஒருபடி என்றாலும் இந்துத்துவாக்களின் பார்வையில் இது எப்படித் தெரிகிறது என்றும் அவர்களிடம்தான் கேட்கவேண்டும். இது தான் குஜராத்தின் வளர்ச்சியோ என்னவோ! ஆனால், இதை விட ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதரா நகரில் உள்ள ஒரு 18 வயது பெண் முகநூலில் தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் என் பெற்றோர் உடல்நிலை சரியில்லை, தொடர்ந்து எனக்கு செலவுக்குப் பணம் தேவைப்படுவதால் எனது உடலை நான் விற்பனைக்கு விட்டிருக்கிறேன். ஓர் இரவுக்கு இவ்வளவு இதில் யார் அதிகம் தருகிறார்களோ அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு முன் பணம் கொடுத்துவிட்டு வரலாம், என்று தனது எண்ணுடன் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவரிடம் உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் தொடர்பு கொண்டு கேட்ட போது, கடந்த சில ஆண்டுகளாக என் தந்தைக்கு வேலையில்லை, ஆங்காங்கே கிடைக்கும் கூலித் தொழில்தான் செய்துவந்தார். இந்த நிலையில் அவர் உடல்நிலை மிகவும் மோசமாகி வேலைக்கு செல்ல இயலாத நிலை ஆகிவிட்டது. என் அம்மாவின் நிலையும் அதே தான் தற்போது இருவருமே நடமாட இயலாத நோயாளியாகி விட்டார்கள். அவர்களுக்கு மருத்துவச் செலவே ஒருநாளைக்கு 500 ரூபாய்க்கு மேல் ஆகிவிடுகிறது. இருவருமே நோயாளிகளாகி விட்டதால் வறு மையின் காரணமாக நான் எனது கல்வியைப் பாதியில் நிறுத்திவிட்டேன். சிலர் என்னை மாடலிங் வேலை தருகிறேன் என்று சொல்லி அழைத்துச்சென்றனர். ஆனால், அவர்கள் அனைவரும் என்னிடம் தவறாக நடக்கப் பார்த்தார்கள். வீடுகளில் வேலைக்குச் சென்றாலும் பாலியல் தொல்லை

சில வீடுகளில் வேலைக்குச் சென்றேன் அங்கும் பாலியல் தொல்லை கொடுத்தார்கள், அந்த வீட்டுப்பெண்களிடம் புகார் செய்தால் என்மீதே குற்றம் சுமத்தி விரட்டி விட்டார்கள். இந்த நிலையில் நான் இந்த முடிவை எடுத்தேன். இங்கு வறுமையில் சிக்கி இருக்கும் பலர் வெளியில் தெரியாமல் தவறான காரியங்களில் ஈடுபட்டு பணம் பார்க்கின்றனர். எனக்கு யாரும் தெரியாது, மேலும் நான் வேலைக்குச் சென்றாலும் யாரிடம் உதவிகேட்டாலும் உடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளச் சொல்கிறார்கள். எனக்குப் பணம் தேவை ஆகவே தற்போது நானே சமூக வலைதளங்கள் மூலம் எனது உடலை விற்கும் முடிவிற்கு வந்து விட்டேன் என்று கூறினார். இதுகுறித்து வதோதரா சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, குஜராத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் வறுமை போன்றவை தலைவிரித்தாடுகின்றன. குஜராத் அரசின் தொழிலாளர் கொள்கையின் காரணமாக தனியார் நிறுவனங்கள் தங்கள் விருப்பத்திற்குத் தொழிலாளர்களை உடனடியாகப் பணி நீக்கம் செய்வது அதிகமாகிக்கொண்டு வருகிறது, ஆகையால் பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்கள் தாங்கள் எப்போது பணியில் இருந்து நீக்கப்படுவோம் என்ற அச்சத்தில் வாழ்கின்றனர். அப்படி நீக்கப்பட்டவர்களுக்கு எந்த ஒரு எதிர்காலமும் இல்லாத நிலையில் வயதானவர்களாக இருந்தால் அவர்களது குடும்பம் முழுவதுமே வறுமையிருள் சூழ்ந்துவிடுகிறது. இந்த நிலையில், பல் வேறு குடும்பப்பெண்கள் தங்கள் உடலைவிற்க முன்வந்துவிடுகின்றனர். தானாக முன்வந்து விலை மாதர்களாக...

காரணம் அவர்கள் தனியாக பணிக்குச் செல்லும் நேரத்தில் அவர்களை ஆண்கள் தவறாக பயன்படுத்த முனைகின்றனர். இதனால் சில பெண்கள் தாங்களாகவே விலைமாதர்களாக மாறிவிடும் அவலம் நிகழ்கிறது. இந்தப்பெண் சமூக வலை தளத்தில் வெளியிட்டதாக பத்திரிகையில் வந்துள்ளது. அப்படி வெளியிடாத ஆயிரக் கணக்கான குஜராத்திப் பெண்களின் நிலை பரிதாபத்திற்குரியது என்று கூறினார். தேர்தல் காலத்தில் குஜராத் மாடல், டிஜிடல் குஜராத் என்று நாடெங்கும் கூறி வாக்குக் கேட்டனர்; ஆனால், ஒரு மாடல் அழகி வறுமையின் காரணமாக டிஜிடல் விலைமாதராக மாறும் சூழலில் தான் குஜராத் உள்ளது. இந்த வதோதரா தொகுதி மோடி போட்டி யிட்டு வென்ற பிறகு கழற்றி விடப்பட்ட தொகுதியாகும்.

நன்றி:
விடுதலை
30-12-2014

பெண்கள் ஆண்களோடு கலந்து வேலைக்கு செல்வதால் ஏற்படும் விபரீதங்களை இந்த கட்டுரை மிக அழகாக எடுத்துக் காட்டுகிறது. மோடி வந்தால் எல்லாம் தலைகீழாக மாறி விடும் என்று இந்துத்வாவாதிகள் புளுகி வந்தனர். உண்மை முகம் இப்போது வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது. இன்னும் எப்படி எல்லாம் செய்தி வரப் போகிறதோ பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments: