Followers

Friday, December 19, 2014

இந்த பதிவு பிரவீன் தெகோடியாவுக்கு சமர்ப்பணம்!



"இரண்டு நாளாக விடாமல் அழுதுக்கொண்டிருந்த என் குழந்தையை மசூதிக்கு தூக்கின்னு போயி ஊதின்னு வான்னு எங்க அம்மா சொன்னாங்க.

இதுக்கு முன்னாடி மசூதிக்குள்ள பலமுறை நான் போயிருந்தாலும் குழந்தைய தூக்கின்னு போறது இதுதான் முதல் முறை.

அங்கு எனக்கு முன்னாடியே சில பெற்றோர்ங்க அவங்களோட குழந்தைய வச்சினு வரிசையா நின்னுன்னு இருந்தாங்க.

அது வரைக்கு என் மனசுல எந்த வித்தியாசமும் தெரியில. கொஞ்சம் நேரம் கழிச்சி தொழுகைய முடிச்சிக்கின்னு வந்த இஸ்லாமிய சகோதரருங்க வரிசையில இருந்த ஒவ்வோரு குழந்தையின் நெத்தியிலையும் எதோ சொல்லிவிட்டு ஊதினாங்க.

இத பாக்கும்போது எனக்கு ஒரே ஆச்சரியம். காரணம் அவங்க யாரிடமும் நீங்கள் எந்த மதம், ஜாதி, குளம் , கோத்திரம்ன்னு எந்த விவரத்தையும் கேக்கல.

ஆனால் நம்மல நம்பி வந்தவங்களுக்கு நம்ம கடவுள் மூல்யமா நல்லது நடக்கனும்ன்ற மனசு மட்டுமே அவங்ககிட்ட இருந்தத நான் பாத்தேன்

இந்த நல்ல மனசு நம்ம வழிபடுற கோவிலுங்கள்ல இல்லனு நினைக்கும் போது எனக்கு அவமானமா இருந்துச்சி.

அவங்க நம்ம மேல அன்பு செலுத்த தயாராத்தான் இருக்காங்க. நமக்கு தான் அதை ஏத்துக்க மனசு வரல.

இந்த குருகிய வட்டத்த விட்டுட்டு நாம வெளிய வந்தோம்ன்னா நம்மள கட்டிதழுவ இந்த அன்பு நிறைஞ்ச உலகம் காத்துன்னு இருக்கு..."

https://www.facebook.com/photo.php?fbid=903876806289690&set=a.846702762007095.1073741826.100000021381369&type=1&fref=nf

மிக அழகிய வார்த்தைகளை பதிவாக்கியிருக்கிறீர்கள் தோழரே! உங்களின் நல்ல மனதுக்கு இறைவன் கிருபையால் எந்த சிரமமும் வரக் கூடாது என்று நானும் பிரார்த்திக்கிறேன்.

நானும் பலமுறை திருத்தணி பள்ளி வாசலில் வரிசையாக குழந்தைகளோடு நிற்கும் இந்து தாய்மார்களுக்கு 25 வருடங்களுக்கு முன்னால் ஓதி விட்டுள்ளேன். உங்களைப் போன்ற நல்லுள்ளம் கொண்ட இந்துக்கள் இருக்கும் வரை ராம கோபாலனின் எண்ணமோ பிரவீன் தெகோடியாவின் எண்ணமோ இந்த மண்ணில் நிறைவேறப் போவதில்லை. வாழ்த்துக்கள் சகோதரரே!

குழந்தைக்கு உடலுக்கு ஏதும் பிரச்னை என்றால் அந்த குழந்தையை மருத்துவரிடம் கொண்டு செல்லுங்கள். இறைவனிடமும் பிரார்த்தனை புரியுங்கள். நீங்கள் இஸ்லாத்தை அறிய வேண்டுமானால் குர்ஆனின் தமிழ் மொழி பெயர்ப்பை வாங்கி படித்துப் பாருங்கள். நபிகள் நாயகத்தின் வாழ்க்கை முறைகளை படியுங்கள். அந்த முயற்சிகள் உங்களை இன்னும் நெருக்கமாக கடவுளிடம் கொண்டு சேர்க்கும்.

1 comment:

Dr.Anburaj said...

காயல் பட்டணம் அருகே ரத்தினபுாி என்றொரு ஊா் உள்ளது.அங்குள்ள அம்மன் கோவிலுக்குச் சென்று பாருங்களேன். இது போன்று முஸ்லீம் ஆண்களும் பெண்களும் குழந்தைகளைத் எடுத்துக் கொண்டு அம்மன் கோவில் அா்ச்சகாிடம் மந்திாிக்க வருவதைக் காணலாம்.
இதில் மதம் ஏதும் இல்லை. சிலருக்கு பிராண சக்தியை பிறா் மேல் செலுத்தும் ஈஆற்றல் வாய்த்துவிடும். அத்தகைய ஆற்றல் பெற்றவர்கள் சிறு நோய்களைச்சுகமாக்க முடியும்.குறி சொல்ல முடியும். சரியாக இருக்கும் என்று நம்ப இயலாது. காயல் பட்டணத்தில் நான் கண்ட காட்சியை முகம்மதுக்கு அா்பணிக்கின்றேன்