
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பெர்க்ளீ நகரில் மூன்றாம் நாளாக போராட்டம் வெடித்தது. இரண்டு கருப்பின அமெரிக்கர்களை சுட்டுக் கொன்ற வெள்ளையின போலீஸாரை கண்டிக்காத நீதி மன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக இந்த போராட்டம் நடைபெறுகிறது. முக்கிய சாலைகள், முக்கிய ரயில்வே சந்திப்புகளில் போராட்டக்காரர்கள் குழுமி போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளனர்.
'எங்களை யார் காப்பாற்றுவது?' என்ற கோஷத்தோடு மிகப் பெரும் அளவிலான மக்கள் பொராட்டத்தில் கலந்து கொண்டனர். பிரச்னை ஏற்படாமல் இவர்களை சமாளிக்க போலீஸார் மிகவும் சிரமப்பட்டனர். சில இடங்களில் போராட்டக்காரர்களை தடுத்தும் அதனையும் மீறி முக்கிய வீதிகளில் கடந்த மூன்று நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
பெர்களீ நகரில் வியாபாரம் முற்றிலுமாக முடங்கிப் போனது. இரவு நேரங்களில் வியாபாரத் தலங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. சமூக விரோதிகள் இதனை பயன்படுத்திக் கொண்டு பொருட்களை கொள்ளையடிக்கவும் செய்தனர். நகரெங்கும் உடைந்த கண்ணாடி சில்கள் எங்கும் இறைந்து கிடந்தன. கொள்ளையடிப்பவர்களை தடுத்த போராட்டக்காரர் ஒருவர் சுத்தியலால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார்.
தகவல் உதவி
சவுதி கெஜட்
10-12-2014
போராட்டம் இன்றும் தொடர்கிறது. இது அமெரிக்காவின் பல மாகாணங்களுக்கும் பரவினால் நிலைமையை கட்டுப்படுத்துவது கடினம் என்கின்றனர் நோக்கர்கள்.

படித்தவர்கள் அதிகம் உள்ள நாடு. ஆனால் நிறவெறியில் எல்லோரையும் பின்னுக்குத் தள்ளி விடுகின்றனர். நம்நாட்டிலும் படித்த மக்களிடத்திலேதான் நிறவெறி, இனவெறி அதிகம் இருப்பதை பார்க்கிறோம்.
இங்கு சவுதியிலும் 1400 வருடங்களுக்கு முன்பு அடிமைகளாக கொண்டு வரப்பட்ட பல கருப்பினத்தவர்கள் உள்ளனர். ஆனால் இங்கு அனைவரும் அமெரிக்கா அளவுக்கு நிறவெறி பாகுபாடு காட்டுவதில்லை. திருமண உறவுகளும் வைத்துக் கொள்கிறார்கள். வெள்ளையும் கருப்பும் கலந்த மாநிறமுடைய புதிய கலப்பினமே இங்கு உருவாகியுள்ளது. இந்த மாற்றம் ஏற்பட இஸ்லாம் ஆரம்பத்திலிருந்தே நிறவெறி, மொழி வெறியை கண்டித்திருப்பதும் முக்கிய காரணமாக இருக்கிறது. தற்போது அமெரிக்காவில் இஸ்லாம் வெகு வேகமாக பரவி வருகிறது. இங்கு இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக ஆகி விட்டால் நிற வெறியால் நடக்கும் துப்பாக்கிச் சூடுகளும், கொலைகளும் குறையலாம். கண்டிப்பாக அத்தகைய மாற்றத்தை இஸ்லாம் அமெரிக்காவில் கொண்டு வரும்.
1 comment:
இஸ்லாமியர்கள் (அதன்) தீர்வாளர்களா
( மனிதன் பலகீனமானவன் என்று சொல்லிட்டு போய்டலாம்..அமேரிக்கா மனிதன் பலகீனமாக இருந்தால் இஸ்லாத்துக்கு வரசொல்லலாம் )
Post a Comment