
அசாம் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போடோ தீவிரவாதிகள் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதல், அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த வன்முறையில் இறந்தவர் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது.
இந்த சம்பவத்தால் நேற்று ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
அம்மாநிலத்தில் நேற்று பரவலான போராட்டங்களுக்கு மத்தியில் மத்தியப் படையினர் 5 ஆயிரம் பேர் அங்கு விரைந்துள்ளனர்.
அசாமில் போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி (என்.டி.எப்.பி) என்ற தீவிரவாத அமைப்பு செயல்படுகிறது. இதில் அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை விரும்பாத ஒரு பிரிவினர் சாங்பிஜித் என்பவர் தலைமையில் என்.டி.எப்.பி(எஸ்) என்ற பெயரில் தனியாக செயல்படுகின்றனர்.
இம்மாநிலத்தில் அண்மைக் காலமாக தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை பாது காப்பு படையினர் தீவிரப்படுத்தி யுள்ளது என்.டி.எப்.பி(எஸ்) அமைப்பினரை ஆத்திரமடையச் செய்துள்ளது.
இந்நிலையில் அசாமின் சோனித் பூர், கோக்ரஜார், சிராங் ஆகிய மாவட்டங்களில் 5 கிராமங்களில் இந்த அமைப்பினர் ஆதிவாசி யினர் மீது கண்மூடித்தனமாக சுட்டு தாக்குதல் நடத்தினர்.
இதில் சோனித்பூர் மாவட்டம் மைட்டாலு பஸ்தி, ஜங்கி பஸ்தி ஆகிய கிராமத்தில் 39 பேரும், கோக்ரஜார் மாவட்டம் சாந்திபூர், பக்ரிகுரி ஆகிய கிராமத்தில் 25 பேரும் உயிரிழந்தனர். மேலும் சிராங் மாவட்டம் கல்மாந்திர் பகுதியில் 3 பேர் இறந்தனர். இது தவிர சம்பவ இடங்களில் மேலும் பலரும் காயமடைந்துள்ளனர்.
தாக்குதலில் இறந்தவர்களில் 21 பேர் பெண்கள், 18 பேர் குழந்தைகள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
25-12-2014
அண்டை நாடான பாகிஸ்தானில் 150 குழந்தைகளை சில காட்டுமிராண்டிகள் சுட்டுக் கொன்றதற்கு பாராளுமன்ற இரங்கலிலிருந்து இணையம் வரை ஒருவர் விடாமல் கண்டித்தனர். ஆனால் நமது நாட்டின் ஒரு மாநிலத்தில் 75 அப்பாவிகள் குழந்தைகளும் பெண்களுமாக கொன்றழித்துள்ளனர் போடோ தீவிரவாதிகள். ஆனால் இதைப் பற்றி எவரும் எந்த கண்டன அறிக்கையையும் விடவில்லை. அவரவர் வேலையை பார்த்துக் கொண்டுள்ளனர்.
ஒருக்கால் போடோ தீவிரவாதிகள் இந்து இல்லாமல் அவர்கள் இஸ்லாமிய பெயர் தாங்கிகளாக இருந்திருந்தால் பொங்கியிருப்பார்களோ என்னவோ...
அப்பாவி பெண்களையும் குழந்தைகளையும் கொன்ற போடோ தீவிரவாதிகளை வன்மையாக கண்டிப்போம். மனித குல விரோதிகள் இவர்கள். சமூகத்திலிருந்து இவர்களை ஓரங்கட்டுவோம்.
இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத ஆர்எஸ்எஸ் கோட்சேவுக்கு சிலை வைக்க மும்முரமாக வேலை செய்து வருகிறதாம்.
இவர்கள் ஆட்சியில் நாடு இன்னும் எதை எல்லாம் காணப் போகிறதோ!
No comments:
Post a Comment