Followers

Saturday, December 27, 2014

நாவலுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் - தொடரும் வன்முறைகள்.....



'மாதொருபாகன்’ நாவலுக்கு எதிரான போராட்டம் நேற்று திருச்செங்கோட்டில் நடைபெற்றது. அந்நாவல் இந்துப் பெண்களை இழிவுபடுத்துவதாகவும் திருச்செங்கோட்டின் பெருமைக்கு மாசு கற்பிப்பதாகவும் கூறிப் போராட்டம் நடத்தினர். இந்து அமைப்புக்களும் சாதிய அமைப்புக்களும் இணைந்து இப்போராட்டத்தை நடத்தியதாக இன்று பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

"நாவல் பிரதியை எரித்தும் காலால் மிதித்தும் என் புகைப்படத்தைச் செருப்பால் அடித்தும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். என்னைக் கைது செய்ய வலியுறுத்தி முழக்கம் இட்டுள்ளனர். என் மீதும் காலச்சுவடு பதிப்பகத்தின் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனப் புகார் அளித்துள்ளனர்.

நாவலில் உள்ள பகுதிகள் குறித்துக் கருத்துரீதியாக விவாதிக்கத் தயாராக உள்ளேன். ஆனால் எதிர்தரப்பில் அதற்கான நிதானத்துடன் பேசுவோர் இல்லை. மதம், சாதி என்னும் கட்டுக்குள் நின்று மட்டுமே பார்ப்போருடன் எப்படிப் பேசுவது என்றும் தெரியவில்லை.

இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ளும் வழிமுறைகள் பற்றி நண்பர்களுடன் ஆலோசிக்கிறேன். நானும் யோசிக்கிறேன். என்ன செய்யலாம்?"

-பெருமாள் முருகன்

----------------------------------------------------

எழுத்தாளர் பெருமாள் முருகனின் நூலுக்குத் தடை கோரும் இந்துத்துவ அமைப்புகள் கருத்துரிமையைப் பறிக்கும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "மறுமதமாற்றம் என்று நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. உள்ளிட்ட அடிப்படைவாத அமைப்புகள் தமிழ்நாட்டைக் கலவர பூமியாக மாற்றுவதற்குக் குறிவைத்துச் செயல்பட்டு வருகின்றனர்.

அதன் ஒரு வெளிப்பாடாக, நாடறிந்த எழுத்தாளர் பெருமாள் முருகன் நான்கு ஆண்டுகளுக்கு முன் எழுதிய நூலைத் தடை செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

பெருமாள் முருகன் பல நூல்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர். அவரது நாவல்கள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுப் பாராட்டுப் பெற்றவை. அவர் 2010ஆம் ஆண்டில் எழுதிய 'மாதொருபாகன்' என்ற நாவல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அது கொங்கு மண்டலத்தில் மிகவும் அன்போடு இல்லற வாழ்வை நடத்தும் ஒரு குடும்பத்தைப் பற்றியது.

எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. காவல்துறையிடம் பாதுகாப்புக் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

-----------------------------------------------------

On Friday, more than 50 cadres, led by Tiruchengode town RSS president Mahalingam, raised slogans and tried to take out a march from the foothills of the temple to the police station. But they were stopped by Deputy Superintendent of Police Ramasamy, who asked them to prefer a complaint with the local police station. While initially their attempt to burn copies of the book was thwarted by the police, they later succeeded in doing so in front of the local police station.

In their petition, the BJP, RSS and other Hindu outfits said that in many pages the author had denigrated Lord Shiva and the women devotees who visited the temple during the car festival. The cited the narratives in pages, 87, 116, 117, 118, 129 and 172 of the book were in bad taste. They demanded the arrest of both the author and the publisher.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/bjp-rss-seek-ban-on-tamil-novel-arrest-of-author/article6729393.ece


1 comment:

C.Sugumar said...

”இன்று புதிதாய் பிறந்தோம்” என்றொரு நாவல் உள்ளது.இயற்றியவா் வையவன்.குங்குமம் பிரசுரம் சென்னை வெளியிடு ஆகும்.படித்துப்பாருங்கள்.சுவாமி விவேகானந்தாின் மீது கொண்டு அன்பினால் கட்டாந்தரையை வளம் கொழிக்கும் புமியாக்கிக்காட்டுகிறான் ரகு என்ற இளைஞன்.மனிதவளம் பெருக்குகிறான்.அனைவரும் படிக்க வேண்டிய அறபுதமான நாவல்.
அடுத்து ” எங்கே பிறாமணம்” என்ற துக்ளக் ஆசிரியாின் நாவல்.இந்து சமயம் பண்பாடு ஆகியவற்றை விளக்கும் ஒரு அற்பத படைப்பு. படிக்கலாம்.