Followers

Friday, November 30, 2012

காய்கறி விற்கும் ஆத்தாக்களை யாரும் நினைக்கவில்லையே!


காய்கறி விற்கும் ஆத்தாக்களை யாரும் நினைக்கவில்லையே!



எங்கள் கிராமத்தில் தினமும் அன்று பறித்த காய்கறிகள் காலையிலேயே வந்து விடும். நான்கு கிலோ மீட்டர் தூரத்திலிருந்து கால் நடையாக ஒரு கூடையில் காய்கறிகளை போட்டு எங்கள் கிராமத்தில் பெண்கள் வியாபாரம் செய்ய வந்து விடுவர். வீடு வீடாக வந்து விற்கும் பெண்களும் உண்டு. சில பெண்கள் பள்ளிவாசலுக்கு பக்கத்தில் உள்ள இடத்தில் சாக்கை விரித்து போட்டு அதில் காய்கறிகளை பரப்பி விடுவர். சில பெண்கள் மார்கெட்டில் காய்கறி கடை வைத்திருக்கும் பாய்களிடம் பேரம் பேசி மொத்தமாக விற்று விட்டு அங்கேயே கறியையோ மீனையோ வாங்கிக் கொண்டு தங்கள் கிராமத்துக்கு செல்வதை தினமும் நாங்கள் பார்த்துக் கொண்டிருப்போம்.



இந்த பெண்கள் அதிக லாபமும் வைத்துக் கொள்வதில்லை. அந்த பெண்களிடம் போய் எனது தாயாரும் எனது மனைவியும் பேரம் பேசி காய்கறிகள் வாங்குவதை வேடிக்கையாக பார்த்துக் கொண்டிருப்பேன். ஜவுளி கடைகளில் போய் அவன் சொல்லும் யானை விலை குதிரை விலை துணிமணிகளை ஒன்றும் பேசாது கேட்கும் பணத்தை கொடுத்து விட்டு வருபவர்கள் இந்த பெண்களிடம் ஒரு ரூபாய்க்கும் இரண்டு ரூபாய்க்கும் மல்லுக்கு நிற்பதைப் பார்த்து சில நேரம் கடிந்து கொள்வதும் உண்டு. 'ஆத்தா...இன்னும் ரெண்டு தக்காளியை போடு' என்று அவர்கள் கெஞ்சுவதை பார்த்து எனக்குள் சிரித்து கொள்வேன்.

தற்போது இந்த பேரம் பேசுவதெல்லாம் இன்னும் சில நாட்களில் மறைந்து போய் விடுமோ என்று அச்சம் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. வெளி நாட்டு கம்பெனிகளின் படையெடுப்பு நம் நாட்டு சில்லறை வியாபாரிகளை வெகுவாக பாதிக்கும் என்பதை பலரும் மறந்து விடுகிறோம். தற்போது இந்த பெண்களிடமிருந்து குறைந்த விலையில் அதிக சத்துள்ள காய்கறிகளை வாங்கி சாப்பிடுகிறோம். இயற்கை உரங்களாலேயே இந்த பெண்கள் அதிக லாபம் பார்க்காமல் சிறந்த காய்கறிகளை நமக்கு தருகிறார்கள். அவர்களும் குறிப்பிட்ட அளவு லாபத்தை பெற்றுக் கொள்கிறார்கள். மண் வளம் கெடக் கூடாது என்பதற்காக பூச்சி மருந்துகளை அளவுக்கதிமாக பயன்படுத்துவதில்லை. கிராமங்களில் கிடைக்கும் இயற்கை உரங்களை வைத்தே தங்களின் பயிர்களை செழிப்பாக்குகிறாரகள்.

இதே வெளி நாட்டு கம்பெனிகள் இதிலும் புக ஆரம்பித்தால் அவன் சொல்லும் பயிரைத்தான் பயிரிட முடியும். அதிக லாபம் பார்ப்பதற்காக கண்ட உரங்களையும் போட்டு மண்ணின் வளத்தையும் நாசமாக்கும் அபாயம் உண்டு. அவன் சொல்லும் விலையைத்தான் விவசாயியும் பின் பற்ற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவர். இதனால் விலைவாசி இன்னும் அதிக உயரத்தை அடையும் அபாயம் உள்ளது. மேலும் பன்னாட்டு கம்பெனிகள் அடி மாட்டு விலைக்கு விவசாய நிலங்களையே கபளீகரம் செய்து விடும் அபாயமும் உண்டு.

ஆனால் நம் மன்மோகன் சிங்குக்கோ, சிதம்பரத்துக்கோ இந்த ஏழை உழைப்பாளிகளை மனதில் கொள்ளாது கார்ப்பரேட் கம்பெனிகள் அரசுக்கு மொத்தமாக செலுத்தும் கப்பத் தொகையிலேயே இவர்களின் கவனம் இருக்கிறது.. அமெரிக்காவின் அழுத்தம் வேறு இவர்களை நம் நாட்டு மக்களை விட அமெரிக்க முதலாளிகளின் நலனையே அதிகம் பார்க்க சொல்கிறது.

கிராமங்கள் செழிப்பாக இருந்தால்தான் நகரங்கள் வளமாக இருக்க முடியும். தற்போது வயல் வெளிகளெல்லாம் வீட்டு மனைகளாக மாறிக் கொண்டிருக்கிறது. அந்த ஊருக்கு சம்பந்தமே இல்லாத பெரும் பண முதலைகள் குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கி பல மடங்கு லாபத்தில் மனைகளாக போட்டு கொள்ளை அடிப்பதும் ஒரு பக்கம் நடந்து வருகிறது. மேலதிகமாக சில்லரை வியாபாரத்திலும் அந்நிய கம்பெனிகள் மூக்கை நுழைத்தால் சொல்லவே வேண்டாம்.

தற்போது பாராளுமன்றத்தில் இது சம்பந்தமாக பலத்த சர்ச்சை நடந்து வருகிறது. என்னைக் கேட்டால் வெளிநாட்டு கம்பெனிகள் இங்கு வருவது நமக்கு பெரும் இடையூறாகவே இருக்கும் என்பது என் கணிப்பு. கஞ்சியோ கூழோ சொந்த நிலத்தில் சொந்த மக்கள் பயிரிட்டு தனது சொந்த தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் நாடே தொலை நோக்கில் சிறந்து விளங்கும். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று!




Thursday, November 29, 2012

நிறுத்தல் அளவைகளில் மறைந்திருக்கும் சூட்சுமம்!



இன்று நாம் உலகம் முழுக்க நிறுத்தல் அளவைகளை அளவிடுகிறோம். முன்பெல்லாம் பொருள்களை அளவிடுவதற்கு ராத்தல்(பவுண்டு) எனும் அளவை பரவலாக பயன்படுத்தினோம். 7680 கோதுமை மணிகளின் எடை ஒரு பவுண்டு என்று முன்பு கணக்கிடப்பட்டது. தற்போது நாம் கிலோ கிராம் என்ற அளவையை பரவலாக பயன்படுத்துகிறோம். இதை வைத்து ஒரு சோதனையை தற்போது செய்து பார்ப்போம்.

ஒரே அளவுடைய இரண்டு கண்ணாடி ஜாடிகளை எடுத்துக் கொள்வோம். ஒரு ஜாடியில் உப்பை நிரப்பிக் கொள்வோம். மற்றொரு ஜாடியில் சிறு சிறு இரும்பு துண்டுகளை போட்டு நிரப்புவோம். தற்போது சாதாரணமாக நாம் பயன்படுத்தும் ஒரு தராசை எடுத்து இரண்டு ஜாடிகளையும் ஒரு சேர எடை போடுவோம். என்ன நடக்கும்? இரும்பு உள்ள ஜாடி கீழேயும் உப்பு உள்ள ஜாடி மேலேயும் காட்டும். ஏனெனில் உப்பை விட இரும்பின் பொருண்மை அல்லது அடர்த்தி அதிகமானதால் இரும்பு வைத்த ஜாடி கீழே இறங்கியுள்ளது என்று சொல்வோம். ஒரு வகையில் இந்த பதில் சரியானாலும் மற்றொரு வகையில் தவறாகும். ஏனெனில் பொருண்மையும் எடையும் ஒன்று எனும் தவறான பொருள் இந்த பதிலில் அடங்கியுள்ளது. ஆனால் எடையும் பொருண்மையும் வேறு வேறு ஆகும்.

இதனை நாம் நன்கு விளங்கிக் கொள்ள மற்றொரு சோதனையை செய்து பார்ப்போம். நாம் முன்பு எடை போட்ட உப்பையும், இரும்பையும் அதே தராசோடு விண்வெளிக்கு எடுத்துச் செல்வதாகக் கொள்வோம்.. பூமியில் நாம் பார்த்தது போன்று இரண்டு ஜாடிகளையும் தராசில் வைத்து முன்பு பார்த்தது போல் எடை பார்க்க முயற்சிப்போம். தற்போது தராசில் எந்த சலனமும் இல்லாமல் இருப்பதை பார்க்கலாம். உப்பு உள்ள பகுதியின் தட்டில் நாம் கை வைத்து கீழே அழுத்துகிறோம். இப்போது கையை எடுத்தாலும் உப்பு உள்ள பகுதி மேலே வராது. என்ன ஆனது நமது தராசுக்கு? உப்பின் பொருண்மை இங்கு இரும்பை விட கூடி விட்டதா? அதுவும் இல்லை.

இங்கு எடை பார்க்கும் கருவியில் எந்த பிரச்னையும் இல்லை. பொருண்மையும் எடையும் ஒன்று என்று முன்பு நாம் நினைத்தது தவறு என்று இந்த சோதனை நிரூபிக்கிறது. எடை என்பது இடத்திற்கு இடம் மாறுவதைப் போன்று பொருண்மை மாறுவது இல்லை. பொருண்மைதான் ஒரு பொருளின் எடைக்கு முக்கிய காரணம் என்று சொன்னால் பூமியில் காட்டிய அதே எடையை விண்வெளியிலும் காட்ட வேண்டும். ஆனால் காட்டவில்லை. இதிலிருந்து ஒரு பொருளின் எடைக்கு அதன் பொருண்மை காரணமல்ல என்பதை விளங்கிக் கொண்டோம்.

அப்படி என்றால் எடை என்பதற்கான வரை விலக்கணம் என்ன என்று இனி பார்ப்போம். அறிவியல் எடைக்கு கூறும் இலக்கணமாவது 'ஈர்ப்பாற்றலின் இழு விசை' (weight is the pull of Gravitation) என்கிறது. அதாவது பூமியின் ஈர்ப்பு விசையின் அடிப்படையிலேயே எடை தீர்மானிக்கப்படுவதாக அறிவியல் கூறுகிறது.

மேற்கண்ட விளக்கத்திலிருந்து பூமியில் ஒரு பொருளை நாம் எடை போடும் போது அப்பொருளின் மீது செயல்படும் பூமியின் ஈர்ப்பு விசையையே நாம் எடை போடுகிறோம் என்பது தெளிவாகும். இந்த புவியீர்ப்பு விசை இல்லை என்றால் நாம் சாதாரணமாக ஒரு தராசில் ஒரு பொருளை எடை போட முடியாது என்று விளங்குகிறோம்.

இது பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது என்பதை இனி பார்ப்போம்.

'அவன் வானத்தை உயர்த்தினான்: நீங்கள் நீதி தவறி விடக் கூடாது என்பதற்காக தராசை நிலை நாட்டினான். நிச்சயமாக எடையை நிலை நாட்டுங்கள். எடையைக் குறைத்து விடாதீர்கள்.'
-குர்ஆன் 55:7-9


இந்த வசனம் நமக்கு மிகத் தெளிவாக ஒரு செய்தியை சொல்லுகிறது. அதாவது மனித குலம் தங்களின் எடைகளை சரியாக நிறுப்பதற்காக இறைவனால் பூமியில் இந்த ஈர்ப்பு விசை ஏற்படுத்தப் பட்டுள்ளது. பூமியின் சுழற்சியில் இருந்து இந்த பூமி பாதுகாப்பாக இருப்பது வரை இந்த ஈர்ப்பு விசையானது மனித குலத்துக்கு மிகப் பெரும் பங்காற்றி வருகிறது.புவி ஈர்ப்பு விசையின் பயன்களில் இதுவும் ஒன்று. நம்மை படைத்த இறைவனின் பெருங் கருணைகளில் நமக்காக இந்த ஈர்ப்பு சக்தியை இந்த பூமிக்கு வழங்கியதும் ஒன்று. இறைவனை மறுக்கும் நாத்திகர்களுக்கு இந்த வசனமும் பூமியில் தராசு நிலை நிறுத்தப் பட்டிருப்பதும் சிறந்த பதிலைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

இனி இந்த புவியீர்ப்பு விசை எவ்வாறு உருவாகிறது என்று பார்ப்போம்.

புவியின் காந்த சக்தி அளவிடமுடியாதது. வடக்கிலும் தெற்கிலும் ஒரு துருவங்கள் கொண்டு பூமியின் எல்லா இடங்களையும் இந்த சக்தி ஆக்ரமித்துள்ளது. இந்த காந்த சக்தியின் காரணம் என்ன? பூமியில் தேங்கிக்கிடக்கும் தீக்குழம்பில் இரும்பு, நிக்கல் போன்ற உலோகங்கள் திரவ நிலையில் உள்ளன.

இவை ஒரு வித மின் அதிர்வுகளை, பூமியின் சுழலும் தன்மையால் ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றன. பூமியின் படிமங்களில் இருகிய நிலையில் உள்ள இரும்பு, நிக்கல் போன்ற உலோகங்கள் இந்த மின் அதிர்வுகளை காந்த சக்தியாக மாற்றி பூமியை ஒரு காந்த கல்லாக நிலை நிறுத்துகின்றன.

இந்த காந்த சக்தி மிக முக்கிய நன்மைகளை நம் பூமிக்கு அளிக்கிறது. உதாரணமாக சூரியனிடம் இருந்து வெளிப்பட்டு, நம் பூமியை தாக்கும் எத்தனையோ மின் அதிர்வுகளையும் ஒளி காற்றை போன்ற பல சக்திகளையும், பூமியின் காந்த அலைகள் எதிர் கொண்டு நம்மை வந்து அடையாமல் திருப்பிவிடுகின்றன (reflecting).

இந்த எதிர்ப்பையும் மீறி சில அதிர்வுகள் பூமியின் வட, தென் துருவங்களை வந்து அடைந்து, சில மாற்றங்களை செய்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் பூமிக்கு காந்த சக்தி இல்லையென்றால் சூரியனின் பல கதிர்களால் கடும் விளைவுகள் ஏற்பட்டு, பூமியில் உயிர் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.

மழை காலத்தில் கூட சில பகுதிகள் மழை பெய்வதும், சில இடங்களில் தூறல் கூட போடாமல் போவதும், இந்த காந்த சக்தி ஒரு சில இடங்களில் அதிகமாகவும், ஒரு சில இடங்களில் அடர்த்தி குறைவாக இருப்பதும் ஒரு முக்கிய காரணமாகும்.

நம்மை படைத்த இறைவன் நம் மீது உள்ள கருணையினால் நாம் கேட்காத பல வசதிகளை தினமும் தந்து கொண்டிருக்கிறான். கடவுளை மறுப்பவருக்கும் அளவில்லாது அள்ளிக் கொடுக்கிறான். பூமியில் வாழும் காலம் முழுவதும் மற்றவர்களை துன்புறுத்தியே அதில் இன்பம் காணும் பலரையும் சந்தோஷத்துடனேயே வைத்துள்ளான். அவனது கருணைக்கு ஈடு இணை ஏது?

டிஸகி: புது வருடம் பிறக்க நாள் நெருங்குவதால் எனக்கு வேலைகளும் அதிகமாகி விட்டது. அந்த ஷோ ரூமில் கணக்கெடுப்பு, இந்த ஷோரூமில் கணக்கெடுப்பு என்று படுத்துகிறார்கள். (வேறெதுக்கு சம்பளம் குடுக்கிறான்?) என்று நீங்கள் கேட்பதும் விளங்குகிறது.:-) வவ்வால், சார்வாகன், இக்பால் செல்வன், ராவணன், தங்கமணி, போன்றவர்களோடு கருத்து மோதல் செய்யாமல் இருந்தது கொஞ்சம் போராகவும் இருந்தது. இனி வேலையை அனுசரித்து அவ்வப்போது தலையை காட்டுகிறேன். :-)


Wednesday, November 28, 2012

முஸ்லீம்ஸ் ஏமாத்திடுவாங்க

வீட்டின் முன்புறமாக கற்கள் ஒட்ட வேண்டிய வேலை ஒன்றிருந்தது. சில வீடுகளின் முன்பாக கருங்கற்களை வரிசையாக ஒட்டியிருப்பதை கவனித்திருப்பீர்கள். அந்த வேலைதான். கற்களை வெட்டுவதிலிருந்து நேர்த்தியாக ஒட்டுவது வரைக்கும் முஸ்லீம்கள்தான் இந்த வேலையை கச்சிதமாகச் செய்வார்கள் என்று சொன்னார்கள்.

பெங்களூரில் ஷில்கரிபாளையா என்ற இடம் இருக்கிறது. அங்கு இந்த வேலை செய்யும் முஸ்லீம்கள் நிறைய இருப்பதாகச் சொல்லி நியாமத் என்பவரின் எண்ணைக் கொடுத்தார் ஆர்கிடெக்ட் ஒருவர். நெம்பர் தந்ததோடு நிறுத்தாமல் ஒரு எச்சரிக்கையையும் சேர்த்துக் கொடுத்தார். “பண விஷயத்தில் உஷாரா இருங்க சார். முஸ்லீம்ஸ் காசு வாங்கிட்டு காணாம போயிடுவாங்க”.

நியாமத் ஒரு ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்திருந்தார். வயதானவர். ஜிப்பா, முஸ்லீம் குல்லா, இசுலாமியர்களின் ட்ரேட் மார்க் தாடி என்றிருந்தார். இந்தக் கற்களைப் பற்றி கொஞ்சம் விவரித்தார். சாதரஹள்ளி அல்லது சிரா என்ற வகைக் கற்களைத்தான் பெரும்பாலும் ஒட்டுவார்களாம். சிரா கொஞ்சம் ரேட் அதிகம். கல்லின் விலை மட்டும் சதுர அடிக்கு எழுபத்தைந்து ரூபாய். ஒட்டும் கூலி சதுர அடிக்கு நூற்றியிருப்பத்தைந்து ரூபாய் என்றார். நூறு ரூபாய் என்றால் ஒட்டுங்கள் இல்லையென்றால் வேறொருவருக்கு வேலையைக் கொடுத்துவிடுகிறேன் என்ற போது பரிதாபமாகப் பார்த்தார். ஆனால் வேலை செய்வதாக ஒத்துக் கொண்டார்.

“அட்வான்ஸ் வேண்டும்” என்றார்.

“எவ்வளவு தரணும்?”

“பத்தாயிரம் குடுங்கோ சார்” என்றவுடன் ஆர்கிடெக்ட்டுக்கு போன் செய்தேன். மறுபடியும் அதே டயலாக்கை இம்மிபிசகாமல் சொன்னார் “முஸ்லீம்ஸ் காசு வாங்கிட்டு காணாம போயிடுவாங்க”

“இப்போ காசு இல்லைங்க பாய். வேலையை ஆரம்பிங்க வாங்கிக்கலாம்” யோசித்தவர் அதற்கும் சரியென்று சொன்னார்.

“எப்போ வேலை ஆரம்பிப்பீங்க?”

“நாளைக்கே ஆரம்பிச்சுடுறோம். ஆனால் நாளைக்கு சாயந்திரம் காசு வேணும் சார்”

“என்னங்க காசு காசுங்குறீங்க. வேலையைச் செய்யுங்க. காசு வரும்”

எதுவும் பேசாமல் சென்றுவிட்டார். அடுத்த நாள் வேலையைத் தொடங்கினார். இரண்டு மூன்று ஜூனியர்களோடு வந்திருந்தார். எல்லோரும் குடும்ப உறுப்பினர்களாம். ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. வேலை படு வேகமாக நடந்தது. அவர்கள் எத்தனை வேகமாக வேலையைச் செய்தாலும் ஒரு நாளைக்கு ஐந்தாயிரத்துக்கு மேல் கொடுத்துவிட வேண்டாம் என்று ஆர்கிடெக்ட் எச்சரித்தார்.

அன்று மாலை ஐந்தாயிரம் கொடுத்தேன். அப்பொழுதும் நியாமத் அதட்டாமல் கேட்டார்.

“ப்ளீஸ் சார், பத்தாயிரம் வேணும்”

“பணம் இல்லைங்க. நாளைக்கு வாங்கிக்கலாம்” என்றேன் .

அவருடன் வந்தவர் என்னிடம் கொஞ்சம் அதட்டலாக பேசினார். அப்பொழுது நியாமத் அவரை சமாதானப்படுத்திவிட்டு என்னிடம் “நாளைக்கு கொடுத்துடுங்க சார்” என்ற போது அவரின் கண்களில் கண்ணீர் கசிந்தது.

சங்கடமாகிவிட்டது. “ஏ.டி.எம் வர்றீங்களா? எடுத்து தந்துடுறேன்” என்றபோது தலையாட்டினார். இன்னொரு ஐந்தாயிரம் கொடுத்துவிட்டு ஆர்கிடெக்டிற்கு போன் செய்தேன்.

“ஏன் சார் பத்தாயிரம் கொடுத்தீங்க? நாளைக்கு வர மாட்டாங்க பாருங்க” என்றார். அதோடு நிறுத்தாமல் “எத்தனை கட்டடம் நாங்க கட்டறோம்? எங்களுக்கு தெரியாதா சார்?” என்றார்.

நியாமத் ஏமாற்றிவிடுவாரோ என்று பயந்து கொண்டே தூங்கினேன். ஆனால் அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு வேலையை ஆரம்பித்திருந்தார்கள். அன்றும் அவர்களுக்குள் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. அதே வேகம். மதிய உணவு கூட இல்லாமல் எதற்காக இத்தனை வேகமாகச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அடுத்த ஐந்து நாட்களுக்கும் தினமும் பத்தாயிரம் வாங்கிக் கொண்டார்கள். நான் ஆர்கிடெக்டிடம் பணம் சம்பந்தமாக ஆலோசனை கேட்பதைக் குறைத்திருந்தேன். பத்து நாட்களில் முடிப்பதாகச் சொன்ன வேலையை ஐந்து நாட்களில் முடித்துவிட்டார்கள்.

கடைசி தினத்தில் இன்னொரு பத்தாயிரம் கொடுத்த போது கணக்கு முடிந்திருந்தது. நியாமத் நன்றி சொன்னார். பிறகு முகம், கை கால்களைக் கழுவினார். அவருக்குப் பின்னால் ஒவ்வொருவராக கை கால் கழுவினார்கள். கிளம்புவதற்கு தயாரான போது கேட்காமல் இருக்க முடியவில்லை.

“ஏன் ஒருத்தருக்கொருத்தர் பேசிக் கொள்ளாமல் வேலை செய்யறீங்க?” என்றபோது அவரது ஜூனியர்கள் தங்களுக்குள் முகத்தை பார்த்துக் கொண்டார்கள்.

நியாமத்தான் சொன்னார். அவரது ஜூனியர்கள் ஒவ்வொருவரும் அவரது தம்பிகள். இந்தக் கல் ஒட்டுவதுதான் குடும்பத்திற்கான ஒரே வருமானம். தம்பிகள் யாருக்கும் திருமணம் ஆகவில்லை. நியாமத்துக்கு மட்டும் திருமணம் ஆகிவிட்டது. அவருக்கு மூன்று பெண் குழந்தைகள். கடைசியாக பிறந்த குழந்தைக்கு ஒன்றரை வயது. அவரது மனைவிக்கு கிட்னி ஃபெயிலியராம். ரொம்ப நாட்களாக டயாலிசிஸ் கிட்டத்தட்ட வாழ்வின் இறுதிகட்டத்திற்கு வந்துவிட்டாராம்.

“டயாலிசிஸ், ஆஸ்பத்திரி செலவுன்னு பணம் கரையுது சார். எப்படியும் போயிடுவான்னு தெரியுது. ஆனா விட மனசு வரலை. அவளோட நிலைமை, குழந்தைக, பணத்துக்கான தேவையெல்லாம் எங்களை பேச விடறதில்லே சார். அதான் உங்ககிட்ட கூட பணம் வேணும்ன்னு திரும்பத் திரும்ப கேட்டேன்” என்ற போது தனது ஜிப்பா நுனியால் கண்களை துடைத்துக் கொண்டார்.

“இதை முன்னாடியே சொல்லியிருக்கலாமே” என்றேன்.

“இல்ல சார். எங்களை யாரும் இங்கே நம்பறதில்ல. என்ன சொன்னாலும் பொய் சொல்லுறதாத்தான் சொல்லுவாங்க” என்றார். என்னிடம் ஒரு பத்தாயிரம் அதிகமாக இருந்தது. “முடிந்த போது கொடுங்க” என்று கொடுத்தேன். “ரொம்ப நன்றி சார். தேவைப்படும் போது வாங்கிக்கிறேன். இப்போ வேண்டாம்” என்று கிளம்பினார். அந்த நடையில் நேர்மையிருந்தது. அவர் நகர்ந்த பிறகு மனம் பாரமாகியிருந்தது. உடனடியாக வீட்டுக்குள் செல்லாமல் அந்த வீதியில் நடந்து கொண்டிருந்தேன்.

சிறிது நேரத்திற்குப் பிறகு ஆர்கிடெக்ட் போன் செய்தார். “வேலை முடிஞ்சுடுச்சு சார். மொத்தமா ஐம்பதாயிரம் கொடுத்துட்டேன்” என்றேன்.

“ஐயாயிரம் புடிச்சுட்டு கொடுத்திருக்கலாம்ல சார்” என்று துவங்கினார். கட் செய்துவிட்டு போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டேன். கார்த்திகைக் குளிர் சில்லிடத் துவங்கியிருந்தது.
***

-- நன்றி வா. மணிகண்டன்
http://www.nisaptham.com/2012/11/blog-post_26.html

Saturday, November 24, 2012

பாஜக அரவிந்த ரெட்டி கொலையின் குற்றவாளிகள் யார்?

பாஜக அரவிந்த ரெட்டி கொலையின் குற்றவாளிகள் யார்?

இந்த கொலை பற்றி தமிழ் ஹிந்து வலை தளம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்:

வேலூர், கொசப்பேட்டை பகுதியில் கடந்த அக்டோபர்-23ம் தேதி அன்று தமிழக பா.ஜ.க. மருத்துவ அணித் தலைவர் திரு. அர்விந்த் ரெட்டி அவர்கள் தமது மருத்துவ மனைக்கு முன்பாக ஒரு மூன்று நபர் கும்பலால் குரூரமான முறையில் படுகொலை செய்யப் பட்டிருக்கிறார்.



துடிப்பான இளைஞரும் செயல்வீரருமான அர்விந்த் ரெட்டி அவர்களின் மரணம் அந்த பகுதி மக்களையும் பாஜக தொண்டர்களையும் கடும் அதிர்ச்சிக்கும் சோகத்திற்கும் உள்ளாக்கியிருக்கிறது.

திரு அர்விந்த் ரெட்டி அவர்களுக்கு நமது கண்ணீர் அஞ்சலி. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். நாயகனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

இந்தப் படுகொலை தனிப்பட்ட காரணங்களுக்காக அல்லாமல், அரசியல் காரணங்களுக்காகவே நிகழ்ந்திருக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும், பா.ஜ.க தொண்டர்களும் கருதுகின்றனர். குறிப்பாக, இந்தப் பகுதிகளில் பா.ஜ.கவின் வளர்ச்சியைக் கண்டு இஸ்லாமிய மதவெறி இயக்கங்கள் அசூயையும் கடுப்பும் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் படுகொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை காவல்துறை தீவிர நடவடிக்கை மூலம் கைது செய்ய வேண்டும் என்று கோரி சென்னை, வேலூர் மற்றும் மாநிலத்தின் பல இடங்களில் பா.ஜ.கவினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்திய மருத்துவக் கழகத்தின் தமிழகக் கிளைத் தலைவர் ஜெயலால், முதல்வர் ஜெயலலிதா நேரடியாக தலையிட்டு இந்தக் கொலைவழக்கில் நீதி வழங்கப் பட்டு, குற்றவாளீகள் தண்டிக்கப் பட ஆவன செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

வேலூர் கலெக்டர் அலுவகலம் முன்பு நடந்த போராட்டத்தில் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் பங்கேற்றார். ஐநூறுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதில், சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியில் நடந்த பாஜக போராட்டத்தில் வன்முறை வெறியாட்டம் நிகழ்ந்துள்ளது. இளையாங்குடியில் பாஜக சார்பில் வேலூர் பாஜக மருத்துவர் அணிச் செயலாளர் அரவிந்த் ரெட்டிபடுகொலைக்கு கண்டனமும், இரங்கலும் தெரிவிக்கும் கூட்டம் நடந்தது. இதில் மாநில பொதுச் செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டார். அவர் பேசுகையில் அரவிந்த் ரெட்டிபடுகொலைக்கு காரணமானவர்களை கடுமையாக சாடிப் பேசினார். இதையடுத்து மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) ஆகிய கட்சியைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் திரண்டு வந்தனர். பாஜக கூட்டத்திற்குள் புகுந்து தாக்குதலில் இறங்கினர். இதில் பாஜக நிர்வாகிகள் இருவர் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தால் இளையாங்குடியில் பரபரப்பு நிலவுகிறது. போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மோதல் கலவரமாகி விடாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகளை போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர்.

-தமிழ் ஹிந்து

அதில் வந்த பின்னூட்டம்

ஸ்ரீ அரவிந்த் ரெட்டியின் படுகொலை அநியாயம். கண்டணத்திற்குறியது. இஸ்லாமிய தீவிரவாதத்தின் கோரமுகத்தினை மக்கள் உணர்வார்கள். உணரவேண்டும். அனைத்திற்கும் தீர்வு ஹிந்து ஒற்றுமைதான் அதுமட்டுமே

-------------------------------------------------

அங்கு ஒரு வாரம் முன்பு நான் இட்ட பின்னூட்டம்

. suvanappiriyan on November 7, 2012 at 7:37 pm

காவல் துறை இடத்தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக சந்தேகிக்கிறது. இன்னும் குற்றவாளிகள் யாரென்றே தெரியாத போது ஆளாளுக்கு இஸ்லாமிய தீவரவாதம் என்று பின்னூட்டமிடுவது நகைப்பிற்குரியது. இனியும் ராமரை வைத்து காலம் தள்ள முடியாது. மக்கள் விழிப்புடனே இருக்கிறார்கள். எனவே சமூகத்தில் தீண்டாமையை ஒழித்து இந்து மதத்தில் சமதர்ம சமூகம் அமைக்க பாடுபடுங்கள்.

-------------------------------------------------

அதே போல் ஆர்எஸ்எஸ் அமைப்பாளர் ஆனந்த் சில ரௌடிகளால் தாக்கப்படுகிறார். இதற்கும மத சாயம் பூசி அந்த ஏரியாவையே அலற வைத்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். செயலாளர் தாக்கப்பட்டவுடன் மேட்டுப்பாளையம் பகுதியில் வன்முறை வெடித்தது. உடனடியாக கடைகள் அடைக்கப்பட்டன. மக்களின் கோபம் அரசு பஸ்கள் மீது திரும்பியது. பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்துக்கு ஒரு கும்பல் தீ வைத்ததில் அது முற்றிலும் எரிந்து சாம்பலானது . தவிர, மேட்டுப்பாளையம் சாலையில், துடியலூர், பெரிய நாயக்கன் பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் சாலை மறியல் நடத்தப்பட்டது .

இந்த செய்திக்காக தமிழ்இந்து வில் வந்த பின்னூட்டம்:

சிவகுமார் on November 9, 2012 at 9:24 am

//கட்டுரையாளர் மக்களின் கோபம் அரசு பஸ் மீது திரும்பியது என்று எழுதியுள்ளார். இதனை இவர் ஆதரிக்கிறாரா. வன்முறை என்பது எவ்விடம் இருந்து தோன்றினாலும் அது எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றுதானே? மேலும் அரசு பஸ் என்று அதனை பார்க்கும் நோக்கினின்றும் மாறி மக்களின் சொத்தாக எண்ண வேண்டாமா?//

நாராயணன் சார், இப்படியே கேட்டுக்கிட்டு இருங்க… வௌங்கிடும். இந்தியாவெங்கும் / உலகெங்கும் பொது சொத்து தான் வன்முறையாளர்களின் முதல் இலக்கு. கும்பல் மனப்பாண்மையில் ஆத்திரங்கள் இவ்வாறாகத்தான் வெளிப்படும். வியாக்கியானங்கள் வேலைக்காகாது.

(எந்த அளவு வன்முறையை இந்துத்வாக்கள் வளர்ப்பதை பாருங்கள். இவர்களின் இடத் தகராறு கொலைக்காக அரசு பேருந்தை கொளுத்த வேண்டுமாம். இவர்கள் தான் நாட்டுப் பற்றாளர்களாம்)

---------------------------------------------------

பாஜக இந்துத்வாவினர் இவ்வாறு பொய்களை பரப்பிக் கொண்டிருக்க தற்போது அந்த கொலைக்கான உண்மை குற்றவாளிகளை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அந்த செய்தியை பார்போம்.

பாஜக பிரமுகர் கொலை : 6 பேர் கைது

பதிவு செய்த நேரம்: 22-11-2012 14:46

வேலூர்: வேலூரில் பாஜக மருத்துவர் அணிச்செயலர் டாக்டர் அரவிந்த் கொலையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 கூலிப்படைகளை சேர்ந்த 6 பேரை கைது செய்து வேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டோரில் 3 பேர் நேரடியாக கொலையில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உதயகுமார், தங்கராஜ், சந்திரன் ஆகியோர் அரவிந்தை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். 2-வது குழுவில் இருந்த ராஜா, பெருமாள், தரணிகுமாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலூர் சிறையில் உள்ள வசூர் ராஜா திட்டப் படியே கொலையில் ஈடுப்பட்டதாக ஒப்புதல் அளித்துள்ளனர்.

http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=31744

இவ்வாறு முன் விரோதம் காரணமாக நடந்த ஒரு கொலையை மத சாயம் பூசி அதை காரணமாக்கி இங்கு ரத்த ஆறு ஓட வைக்க பாஜக முயல்கிறது. இதில் முஸ்லிம்கள் எந்த வகையிலும் சம்பந்தப்படாதபோது இதை முஸ்லிம்கள்தான் செய்திருப்பார்கள் என்ற ரீதியில் செய்தியை கசிய விடும் யூத தன்மையை என்னவென்பது? காவ்லதுறையினர் நேர்மையாக நடந்ததால் உண்மை குற்றவாளிகள் பிடிபட்டனர். இல்லை என்றால் பிளாட்பாரத்தில் தூங்கும் ஒரு ஏழை முஸ்லிமை பிடித்து அதற்கு கண் காது மூக்கு வைத்து ஒரு பெரிய ஆர்ப்பாட்டத்தையே நடத்தி முடித்திருப்பார்கள். இந்த கொலையை வைத்தாவது தனது அரசியல் செல்வாக்கை தமிழகத்தில் நிலை நிறுத்திக் கொள்ள துடிக்கிறது பாஜக. கட்சியை வளருங்கள். அதற்காக நாட்டு மக்களின் உதிரத்தில் உங்கள் கட்சியையும் இந்துத்வாவையும் நிலை நிறுத்த முயற்சிக்காதீர்க்ள். மக்கள் மிக விழிப்புடனேயே இருக்கின்றனர். இனியும் பொய்களை சொல்லி உங்களை வளர்த்துக் கொள்ள முடியாது என்று மட்டும் சொல்லி வைக்கிறோம்.

இந்த உண்மையான கொலையாளிகளைப் பற்றி தின மலர் எந்த செய்தியையும் வெளியிடவில்லை என்பதையும் பாரக்க வேண்டும்.

துப்பாக்கி பட டைரக்டர் முருகதாஸோ அல்லது உலக நாயகன் என்று தன்னை அழைத்து கொள்ளும் பார்ப்பன கமலோ இந்து தீவிரவாதத்தைப் பற்றி இது போன்ற காட்சிகளை தங்களின் படங்களில் வைக்க துணிவரா? அடுத்த படங்களில் பாஜக வின் வன்முறைகளை படமாக எதிர் பார்க்கலாமா?

Friday, November 23, 2012

எனது முதல் காவல் நிலைய அனுபவம்!


எனது முதல் காவல் நிலைய அனுபவம்!

போன வருடம் எங்கள் ஊர் காவல் நிலையத்துக்கு போகும் ஒரு அவசிய தேவை ஏற்பட்டது. எஸஐ யிடமிருந்து பையன் படிப்பின் ஆவணங்கள் சம்பந்தமாக ஒரு கையெழுத்து வாங்க வேண்டும். எனவே இது வரை காவல் நிலையத்துக்கு செல்லாத நான் முதன் முதலாக காவல் நிலையத்துக்குள் பிரவேசித்தேன். முன்னால் அமர்ந்திருந்த எழுத்தரிடம் 'எஸ்ஐ எப்பொழுது வருவார்?' என்று கேட்டேன். 'இன்னும் அரை மணி நேரத்தில் வந்து விடுவார்' என்று சொன்னார். அதுவரை நேரம் போக வேண்டுமே? எனவே காவல் நிலையத்துக்கு வெளியே மர நிழலில் உள்ள பெஞ்சில் சற்று அமர்ந்தேன். பக்கத்தில் இந்த பக்கம் ஒரு 15 பேர். அந்த பக்கம் ஒரு 10 பேர் கும்பலாக நின்று காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். அரசியல் கட்சிகள் சம்பந்தமாக ஏதும் தகராறோ என்று நினைத்தேன். என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று நானும் எனது காதை கூர்மையாக்கி கேட்கத் தொடங்கினேன்.

'மாப்ள...நீ ஒன்னும் கவலைப்படாதே! இன்னைக்கி ரெண்ட்ல ஒன்னு பார்த்திடுவம்'

'என்ன தைரியம்யா அவனுக்கு...கடை பூந்து அடிக்கிறான்யா..'

'இப்படியே உட்டோம்னா நாம சேலை கட்டிக்க வேண்டியதுதான்'

அதற்குள் இரு சக்கர வாகனமான புல்லட்டில் முரட்டு மீசை தடியான உடம்போடு ஒரு 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் அந்த கும்பலில் வந்து இறங்கினார். இவர்கள் கிராமத்தின் நாட்டாமை என்பது பேச்சிலேயே தெரிந்தது.

'ராமையா! என்னய்யா ஆச்சு. என் வேலை எல்லாம் போட்டுட்டு இப்போ வந்திருக்கேன்.'

'ஐயா.. வாங்க...நம்ம வெத்தல பொட்டி மகன் சுப்ரமணியன தெரியுங்களா?'

'ஆமாம்..குடிச்சு புட்டு உருண்டு கெடப்பானே அவனா'

'அவனேதாங்க ஐயா! நேத்து சாயங்காலம் நம்ம மருதமுத்து சாராய கடையில போய் சாராயம் கேட்டுருக்கான். ஏற்கெனவே 200 ரூபா அவன் பாக்கி தரணுமாம். பழைய பாக்கியை கொடுத்தா சாராயம் தர்றேன்டு சொல்லியிருக்கான். இதுல தகராறு முத்திபோயி மருதமுத்துவை நல்லா அடிச்சுட்டான். அடிச்ச அடியில நிறைய ரத்தமும் வந்துடுச்சு. அதான் அவன்மேல் மருத முத்து கேஸ் குடுத்துருக்கான். இன்ஸ்பெக்டர் வர்றதுக்காக காத்துகிட்டு இருக்கோம்.'

'இந்த அடிதடி சமாசாரத்தை எல்லாம் ஏன்யா ஸ்டேஷன் வரைக்கும் கொண்டு வர்றீங்க. நம்ம கிராமத்துலேயே பேசி முடிச்சிருக்குலாம்ல...சரி சரி...எஸ்ஐ வந்தவுடன் கேஸை வாபஸ் வாங்கிட்டு ஊர் வந்து சேருங்க எங்கே சுப்ரமணியன்?'

'சுப்ரமணி! ஐயா கூப்புட்றாருல.....'

'ஐயா...சொல்லுங்க!'

'ஏலேய்! எண்டா இப்படி ஊர் பேரை கெடுத்துகிட்டு அலையிறீங்க...அடிச்ச அடியிலே செத்து கித்து தொலைஞ்சிறுந்தான்னா வாழ்க்கை பூரா கம்பி எண்ணனும் தெரியுமல...'

'ஏதோ தெரியாம நடந்து போச்சுங்கண்ணா! இனிமே கவனமா இருக்குறேன்'

ஊர் நாடடாமை கொஞ்சம் விரைப்போடு மருத முத்துவிடமும் பேசி விட்டு இரு சக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்து கிளம்பினார். இது போன்ற வசனங்களை எல்லாம் சினிமாவில் பார்த்த எனக்கு இப்படி ஒரு அருமையான நேரிடையான காட்சியை காணும் வாய்ப்பும் கிட்டியது. இரு தரப்பும் நாட்டாமை போன வுடன் திரும்பவும் இரு பிரிவாக பிரிந்து பல ரகசியங்களை பேசிக் கொண்டிருந்தனர். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு சற்று களைப்பு ஏற்பட அருகில் இருக்கும் தேனீர் கடையில் ஒரு டீயை வாங்கி குடித்து விட்டு எஸ்ஐயின் வரவுக்காக நானும் காத்திருந்தேன்.

தட தட என்ற சத்தத்தோடு புல்லட் காவல் நிலையத்தின் உள்ளே புகுந்தது. எஸஐ வந்து விட்டார். வந்தவர் நேரே தனது அறைக்கு சென்று விட்டார். தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டே நானும் உள்ளே நுழைந்தேன். எழுத்தர் என்னை முதலில் உள்ளே போகச் சொன்னார். எஸஐ அறையில் நுழைந்தேன். நுழைந்தவுடன் அதிர்ச்சி அடைந்தேன். நான் எதிர்பார்த்தது வீரப்பனை யொத்த மீசையோடு வயிறு சரிந்து முரட்டு சுபாவத்தோடு கூடிய ஒரு எஸ்ஐயை. ஆனால் அங்கு அமர்ந்திருந்ததோ 30 வயது மதிக்கத்தக்க ஒரு அழகிய பெண். அந்த பெண்ணின் முகத்துக்கும் அந்த உடைக்கும் கொஞ்சமும் ஒட்ட வில்லை. 'உனக்கு ஏம்மா இந்த வேண்டாத வேலை' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு 'குட்மார்னிங் மேடம்' என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தேன்.

'வாங்க! உட்காருங்க! என்ன விஷயம்' என்று கேட்கவும் நான் கொண்டு வந்த பேப்பர்களை கொடுத்தேன். படித்துக் கொண்டு இருந்தவர் வெளியில் ஏகமாக சத்தம் வரவே 'அங்கே என்னய்யா சத்தம்?' என்று எஸ்ஐ கேட்டார்.

'அடி தடி கேசும்மா! கிராமமே திரண்டு வந்துருக்கானுங்க'

'இவனுங்களுக்கு வேற வேலையே இல்லை. வரச் சொல்லு எல்லாரையும்'

எழுத்தர் போய் 'அம்மா கூப்பிடுராங்க! எல்லாரும் வாங்கய்யா?' என்றார். சொன்னவுடன் திபு திபு வென்று 10 பேர் உள்ளே நுழைந்தனர். ஏற்கெனவே அது சின்ன அறை. முழு அறையும் ஓரளவு நிரம்பி விட்டது.

'என்னய்யா தகராறு?' அதிகார தொனியில் எஸ்ஐயின் குரலிலும் ஒரு மாற்றம் தென்பட்டது. அதில் உள்ள ஒரு வயதானவர் 'அம்மா! சுப்ரமணிங்கற பய குடி போதையில மருதமுத்துங்கறவன அடிச்சுட்டாங்க. மருத முத்து கேஸ் குடுத்துருக்கான. அதான் ஐயா இன்னைக்கி வந்து உங்களை பார்க்க சொன்னாரு'

'அடி தடி கேசு. உங்க ஊர்ல ஏன்யா இப்படி தினமும் ஏதாவது ஒரு கேஸை கொண்டு வர்றீங்க...உருப்புட்ற ஐடியா ஏதும் இல்லையா' என்று சொல்லிக் கொண்டேமூக்கைப் பொத்திக் கொண்டார்.

'ம்...ஹூம்....சாராய நெடி. யார்யா சாராயம் குடிச்சிறுக்கிறது. தண்ணி அடிச்சுட்டு ஸ்டேஷனுக்கே வர்றீங்களோ! தண்ணி அடிச்சவனை முதல்ல வெளியில அனுப்பு' என்றார் சற்று கோபத்தோடு. அந்த கும்பலில் இருந்து இரண்டு பேர் தாங்களாகவே வெளியேறினர்.

பையனின் பேப்பர்களை பார்த்தவர் 'இப்போ இந்த சாராய கேசால கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன். நீங்க நாளைக்கு காலையில வாங்க பாய்! ரெடி பண்ணி தர்றேன்' என்றார். பேப்பர்களை பார்த்து நான் முஸ்லிம் என்பதை உணர்ந்து கொண்டார்.

'ஓகே மேடம்! அப்போ நான் வர்றேன்'!

'வாங்க'

அடி தடி கும்பலிடம் விசாரணை ஆரம்பமானது. அவர்களில் எவரையுமே அந்த மேடம் உட்கார சொல்லவில்லை. அவரை விட வயதில் மூத்தவர்களையும் அந்தம்மா ஒருமையிலேயே பேசியது எனக்கு என்னவோ போல் இருந்தது. இந்த உழைக்கும் மக்களை அரசு அதிகாரிகள் ஏன் இவ்வாறு நடத்துகிறார்கள். என்னிடம் மிகவும் பணிவோடும் மரியாதையோடும் பேசிய அந்த எஸ்ஐ இவர்களிடம் ஏன் தனது பேசும் தொனியையே மாற்றிக் கொள்கிறார்.

அந்த மக்களும் அழுக்கு படிந்த உடை. செருப்பில்லாத கால். வெத்தலை சுண்ணாம்பால் காவி ஏறிய உதடுகள் சாராய நெடி என்று தங்களை மாற்றிக் கொள்ளாமலேயே இன்னும் இருக்கிறார்கள். இது எதிர் தரப்பார்களை மிக அலட்சியமாகவும் அருவருப்பாகவும் பார்க்க வைக்கத் தூண்டுகிறது. இந்த இருபதாம் நூற்றாண்டிலும் இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள் தங்களின் பெருமை மற்றும் உரிமைகளை அறியாது குடியிலும் கூத்திலும் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார்களே என்று வருத்தமோடு எனது ஊரை நோக்கி பயணப்பட்டேன்.

Thursday, November 22, 2012

இந்து முஸ்லிம் கலவரம் ஏன்? -மார்க்கண்டேய கட்ஜூ

மார்கண்டேய கட்ஜு எழுதி தி ஹிந்துவில் அக்டோபர் 11 அன்று வெளியான Rid our body politic of communal poison என்னும் கட்டுரையை அவருடைய அனுமதி பெற்று தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் மருதன். இனி அவருடைய கட்டுரை தமிழில்...

இன்று இந்தியாவில் பல இந்துக்களும் முஸ்லிம்களும் வகுப்புவாதம் என்னும் விஷக்கிருமியால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். 1857ம் ஆண்டுக்கு முன்பு, அநேகமாக இந்தியர்களிடம் வகுப்புவாதக் கண்ணோட்டம் இருந்திருக்கவில்லை என்றே சொல்லலாம். முஸ்லிம்களின் ஈத் பெருநாள் கொண்டாட்டங்களில் இந்துக்கள் பங்கேற்றிருக்கிறார்கள். தீபாவளி, ஹோலி விழாக்களில் முஸ்லிம்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இருவரும் சகோதரர், சகோதரிகளாக ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள்.

150 ஆண்டுகளில் நிலைமை ஏன் மாறிப்போனது? இந்தியாவின் இரு முக்கிய மதத்தினருக்கு இடையில் நம்பிக்கையின்மை பரவியிருப்பதற்கு என்ன காரணம்? இன்று, முஸ்லிம்கள் இந்துக்களின் இல்லங்களில் வாடகைக்கு வீடு கிடைக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். இந்தியாவில் எங்காவது குண்டு வெடித்தால், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்யத் திறனற்ற காவல்துறையினர் (அறிவியல்பூர்வமாக விசாரணை மேற்கொள்வதற்கான பயிற்சிகள் அவர்களுக்கு இல்லை), அரை டஜன் முஸ்லிம்களைக் கைது செய்து பிரச்னைக்குத் ‘தீர்வு’ கண்டுவிடுகிறார்கள். இவ்வாறு கைதானவர்களில் பலர் சிறையில் பல ஆண்டுகளைக் கழித்தபிறகு கடைசியில் அப்பாவிகள் என்று தீர்ப்பளிக்கப்படுகிறார்கள்.

இதன் விளைவாக, முஸ்லிம்கள் இந்தியாவில் அந்நியப்பட்டு கிடக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தானில், நிலைமை இதைவிட மோசம். அங்கே சிறுபான்மையினர் தீவிரவாதிகளிடமும் மதவாதிகளிடமும் சிக்கிக்கொண்டிருக்கின்றனர்.

எப்போது தோன்றியது?

1857 இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான ஆண்டு. 1857க்கு முன்பு இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் வகுப்புவாத மோதல்கள் ஏற்பட்டதில்லை. ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து ஒன்றாகவே வாழ்ந்தனர். சில கருத்துவேறுபாடுகள் இருந்தன. ஆனால், இரு சகோதரர்களுக்கும் இரு சகோதரிகளுக்கும் இடையில்கூட இப்படிப்பட்ட வேறுபாடுகள் எழுவது உண்டு அல்லவா?

இந்தியாவை ஆக்கிரமிக்க வந்த முஸ்லிம்கள் பல கோயில்களை உடைத்தது உண்மை. ஆனால் அவர்களுடைய வழி வந்த முஸ்லிம் தலைவர்கள் கிட்டத்தட்ட அனைவரும் வகுப்பு ஒற்றுமையைக் கடைப்பிடித்தனர். ஒருவகையில், தங்கள் நலனுக்காகத்தான் அவர்கள் இதைச் செய்தனர். காரணம், அவர்கள் ஆட்சி செய்யவேண்டியவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள். இந்து கோயில்களை உடைத்தால் உடனே கலவரம் வெடிக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். ஒருவரும் கலவரத்தை விரும்பவில்லை. முகலாயர்கள், ஆவாத் நவாபுகள், ஆர்காட் முர்ஷிதாபாத், திப்பு சுல்தான், ஹைதரபாத் நிஜாம் என்று ஒருவர் பாக்கியில்லாமல் அனைவரும் மத ஒற்றுமையை வளர்ப்பவர்களாகத்தான் இருந்தார்கள்.

1857ல் முதல் சுதந்தரப் போர் வெடித்தபோது, இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாகவே பிரிட்டனை எதிர்த்தனர். கலகத்தை அடக்கியபிறகு, பிரிட்டிஷார் ஒரு முடிவுக்கு வந்தனர். இந்தியாவைக் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டுமானால் அதற்கு ஒரே வழி, பிரித்து ஆள்வதுதான். சர் சார்லஸ் வுட், (இந்திய செகரட்டரி ஆஃப் ஸ்டேட்) வைஸ்ராய் லார்ட் எல்ஜின் என்பவருக்கு 1862ல் எழுதிய குறிப்பு இது. ‘இந்தியாவில் நாம் அதிகாரத்தைத் தக்க வைத்திருப்பதற்குக் காரணம் ஒருவருக்கு எதிரான இன்னொருவரை நிறுத்தி மோதவிட்டதுதான். இதை நாம் தொடர்ந்து செய்தாகவேண்டும். ஒரே மாதிரியான உணர்வை அவர்கள் பெற்றுவிடாமல் இருப்பதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ அனைத்தையும் செய்யுங்கள்.’

பிரித்து ஆளவேண்டும்!

ஜனவரி 14, 1887 அன்று விஸ்கவுண்ட் க்ராஸ் (செகரட்டரி ஆஃப் ஸ்டேட்) கவர்னர் ஜெனரல் டுஃப்பரின் என்பவருக்கு இவ்வாறு எழுதுகிறார். ‘மத ரீதியிலான இப்படிப்பட்ட பிளவு நமக்குச் சாதகமாக இருக்கும். இந்தியக் கல்விமுறை குறித்தும் பாடப் புத்தகங்கள் குறித்துமான உங்கள் விசாரணை கமிட்டியின் மூலம் சில நன்மைகளை அடையலாம் என்று எதிர்பார்க்கிறேன்.’

ஜார்ஜ் ஹாமில்டன் (செகரட்டரி ஆஃப் ஸ்டேட்) கவர்னர் ஜெனரல் கர்சனுக்கு இவ்வாறு எழுதினார். ‘இந்தியாவை நாம் ஆள்வதற்குத் தடையாக இருப்பது மேற்கத்திய சிந்தனைகளின் தாக்கம்தான்… படித்த இந்தியர்களை இரு பிரிவுகளாக (இந்துக்கள், முஸ்லிம்கள்) பிரிக்கமுடிந்தால் நம் பிடியை உறுதிபடுத்திக்கொள்ளமுடியும். இந்த இரு பிரிவினருக்கும் இடையிலான வேறுபாடுகள் அதிகரிக்கும்படியாக நம் பாடப்புத்தகங்களை நாம் திட்டமிட வேண்டும்.’

இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பகைமை ஏற்படவேண்டுமென்றே இப்படிப்பட்ட திட்டங்கள் 1857க்குப் பிறகு தீட்டப்பட்டன. பல்வேறு வழிகளில் இது அவர்களுக்குச் சாத்தியப்பட்டது.

மதத் தலைவர்களுக்கு லஞ்சம் : பிரிட்டிஷ் கலெக்டர் ரகசியமாக ஒரு பண்டிட்ஜியைச் சந்தித்து, பணம் கொடுத்து முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசச் சொல்வார். அதே போல் ரகசியமாக ஒரு மௌல்வியைச் சந்தித்து பணம் கொடுத்து இந்துக்களுக்கு எதிராக அவரைப் பேச வைப்பார்.

மறைக்கப்பட்ட வரலாறு : தொடக்கத்தில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் பல இந்து கோயில்களை இடித்தது உண்மை. ஆனால், பிற்காலத்தில் வந்த கிட்டத்தட்ட அனைவரும் (அக்பர் போன்றவர்கள்) இந்து கோயில்களுக்கு தொடர்ச்சியாக மானியங்கள் அளித்தும் தீபாவளி போன்ற இந்துப் பண்டிகைகளில் கலந்துகொண்டும் மத ஒற்றுமையை வளர்த்தனர். ஆனால் நம் குழந்தைகளுக்கு இந்த இரண்டாவது பாகம் கற்றுக்கொடுக்கப்படுவதில்லை. கஜினி முகமது சோமநாதர் கோயிலை உடைத்தார் என்றுதான் அவர்கள் வரலாற்றில் கற்கிறார்களே தவிர, திப்பு சுல்தான் போன்றவர்கள் இந்து விழாக்களில் பங்கேற்றார்கள் என்பதைக் கற்பதில்லை.

தூண்டிவிடப்பட்ட மோதல்கள் : வகுப்புவாத மோதல்கள் அனைத்தும் 1857க்குப் பிறகே உருவாகின. பள்ளிவாசலில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும்போது இசை வாத்தியங்களை ஒலிக்கவிடுவது, இந்து விக்கிரகங்களை உடைப்பது என்று மத உணர்வுகளைத் தூண்டிவிடும்படியான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

1909ல் அமல்படுத்தப்பட்ட மிண்டோ மார்லி சீர் திருத்தம், மதவாத அடிப்படையில் தனித் தொகுதி முறையைக் கொண்டுவந்தது. இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்தாள்வதற்காக மேற் கொள்ளப்பட்ட ஓர் அரசியல் நடவடிக்கை இது.

இப்படி வகுப்புவாதம் என்னும் நஞ்சு தொடர்ச்சியாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் நம் சமூகத்தில் புகுத்தப்பட்டது. 1947ல் பிரிவினை ஏற்படும்வரை இந்தச் செயல்பாடு தொடர்ந்தது. இப்போதும்கூட மத வெறுப்பை வளர்த்துவிட்டு குளிர் காய்பவர்கள் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஒவ்வொருமுறை குண்டு வெடிக்கும்போதும் தொலைக்காட்சி சானல்கள் என்ன சொல்கின்றன? இந்திய முஜாஹிதின் அல்லது JeM அல்லது HUJI என்று ஏதாவதொரு அமைப்பு இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்றுக்கொண்டதாக எஸ்எம்எஸ் வந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறார்கள். ஒரு ஈமெயிலையோ எஸ்எம்எஸ்சையோ எந்தவொரு விஷமியும் யாருக்கும் அனுப்பிவைக்கமுடியும் அல்லவா? ஆனால், இதை மறுநாளே டிவியில் சொல்வதன்மூலம் எப்படிப்பட்ட தாக்கத்தை இவர்கள் ஏற்படுத்துகிறார்கள் தெரியுமா? அனைத்து முஸ்லிம்களும் தீவிரவாதிகள், குண்டு வீசுபவர்கள் என்று இந்துக்கள் எடுத்துக்கொள்கிறார்கள். உண்மை என்னவென்றால், 99 சதவிகித மக்கள், அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அமைதியையும் நன்மையையுமே விரும்புகிறார்கள்.

பாபர் மஸ்ஜித், ராம் ஜென்மபூமி கிளர்ச்சியின்போது, மீடியாவில் ஒரு பிரிவினர் (குறிப்பாக இந்தி அச்சு ஊடகம்) கர சேவகர்கள் போலவே செயல்பட்டதை மறக்கமுடியுமா?

பெங்களூரு பதட்டம்

‘அசாமில் நீங்கள் முஸ்லிம்களைக் கொன்றிருக்கிறீர்கள் எனவே இங்கிருந்து உடனடியாக வெளியேறுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் அழிக்கப்படுவீர்கள்.’ பெங்களூரு மற்றும் பிற இடங்களில் வசிக்கும் வடகிழக்கு இந்தியர்களுக்குச் சமீபத்தில் இப்படிப்பட்ட எஸ்எம்எஸ் செய்திகள் அனுப்பப்பட்டன. எதிர்பார்த்ததைப் போலவே, இது பதட்டத்தை ஏற்படுத்தியது. பெங்களூரு முஸ்லிம்களுக்கு இந்த விஷயம், தெரியவந்ததும் அவர்கள் வடகிழக்கு இந்தியர்களுக்கு உடனடியாக விருந்து தயார் செய்தார்கள். யாரோ சிலரின் தவறான வதந்திகளை நம்பாதீர்கள், முஸ்லிம்களாகிய நாங்கள் உங்களுக்கு எதிரிகள் அல்லர் என்றும் தெரியப்படுத்தினார்கள்.

இத்தகைய இழிவான வழிமுறைகளைச் சிலர் கையாள்வதை இந்தியர்கள் உணரவேண்டிய தருணமிது. சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவினரையும் ஒன்றுபோல் மதித்து நடப்பதுதான். மாமன்னர் அக்பர் காட்டிய வழி இது. அவர் அனைத்து மக்களையும் ஒன்றுபோல் மதித்தார். அக்பர், அசோகர் போன்ற உயர்ந்த ஆட்சியாளர்களை உலகம் இதுவரை கண்டதில்லை. (Hinsa Virodhak Sangh Vs. Mirzapur Moti Kuresh Jamat குறித்த என் தீர்ப்பை இணையத்தில் பார்க்கலாம்.)

1947ல் இந்தியா சுதந்தரம் அடைந்தபோது, அதீதமான மத விருப்பங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. பாகிஸ்தான் தன்னைத் தானே ஓர் இஸ்லாமிய நாடாக அறிவித்துக்கொண்டது போல் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்கவேண்டும் என்று நேருவுக்கும் அவருடன் இருந்தவர்களுக்கும் அப்போது அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால், நம் தலைவர்கள் இந்தக் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. இந்தியா இந்து நாடு அல்ல அது மதச்சார்பற்ற நாடு என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். அதனால்தான், ஒவ்வொரு அம்சத்திலும் நம் அண்டை நாடான பாகிஸ்தானைக் காட்டிலும் நாம் மேலான நிலையில் இருக்கிறோம்.

மதச்சார்பின்மை என்பதன் பொருள் ஒருவர் தனது மதத்தைப் பின்பற்றக்கூடாது என்பதல்ல. மதச்சார்பின்மை என்பதன் பொருள், மதம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விவகாரம் என்பதாகும். மதத்துக்கும் அரசுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதாகும். அரசுக்கு மதம் கிடையாது என்பதாகும். என்னைப் பொருத்தவரை, இந்தியா ஒன்றுபட்டு இருப்பதற்கும் வளர்ச்சியை நோக்கி நடைபோடுவதற்கும் ஒரே மார்க்கம், மதச்சார்பின்மையைப் பின்பற்றுவதுதான்.

(கட்டுரையாளர், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகவும் இருந்தவர். தற்சமயம், இந்திய பிரஸ் கவுன்சில் தலைவராக இருக்கிறார்).

http://www.thehindu.com/opinion/lead/rid-our-body-politic-of-communal-poison/article3985402.ece

Wednesday, November 21, 2012

அஜ்மல் கசாப்புக்கு கொடுத்த தண்டனை சரியா?

அஜ்மல் கசாப்புக்கு கொடுத்த தண்டனை சரியா?

இது இன்று பலராலும் பல தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒரு சிலர் கசாபை தூக்கில் போட்டது சரி என்றும் மற்றும் சிலர் தூக்கில் போடுவதால் குற்றம் குறையப் போவதில்லை என்றும் காரசாரமாக விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில் ஒரு கும்பலாக ஒரு அந்நிய தேசத்தவன் புகுந்து 165 பேருக்கு மேல் கொன்றுள்ளான். இதற்கு அவன் தரப்பில் சில காரணங்கள் கூறப்படும். எந்த காரணமாக இருந்தாலும் அப்பாவிகளை இலக்காக்கிய இது போன்ற பயங்கர வாதிகளை தூக்கில் போடுவதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. இதை முன்பே செய்திருக்க வேண்டும்.

(கசாபுக்கு கொடுத்த தூக்கு தண்டனையை மகிழ்ச்சியோடு கொண்டாடுபவர்கள்)

பம்பாய் ஆதர் வீதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை வட்டாரங்கள், கஸ்ஸாப் “டெங்கு” நோயினால் அவதிப்பட்டதாகவும், ஒரு கட்டத்தில் அவனது குருதியின் பிளேட்லெட் வெகுவாக இறங்கி சில தினங்களில் இறந்து விடுவான் என வைத்தியர்கள் கூறியதாகவும், அந்த நிலையில் அவன் அப்புறப்படுத்தப்பட்டு புனே எரவாடா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளன.

மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் உள்ள பல விடயங்கள் தொடர்பாக இந்திய அரசு எதனையும் தெரிவிக்கவில்லை. தூக்கு ஏற்றப்படுவதனை பார்வையிட ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அவன் கொல்லப்பட்டதன் பின்னரான கொண்டாட்டங்கள், மகிழ்ச்சி ஆரவாரங்களை ஊடகங்கள் காட்டின. லாஜிக் புரியவில்லை. டெங்கு நோய் வந்ததற்கு ஆதாரபூர்வமான செய்திகள் இல்லை என்றாலும் இந்த நாட்டில் எதுவும் நடக்கலாம் என்பதால் இந்த செய்தியையும் புறம் தள்ள முடியாது.

இவனை தூக்கில் இடுவதால் பிரச்னைகள் வரலாம் என்ற வாதமும் தவறானது. ஒரு உண்மையான தேசபக்தி கொண்ட எந்த இந்தியனும் கசாபின் தூக்கை வரவேற்கவே செய்வான். இந்திய முஸ்லிம்களும் கசாபின் தூக்கை வரவேற்கவே செய்வர். மேலும் இவனுக்கு மும்பையின் மீதோ அல்லது இந்திய நாட்டின் மீதோ தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது. சில கள்ள முல்லாக்கள் அவனை மூளை சலவை செய்து இந்த வேலைக்கு நன்றாக பயன்படுத்தியுள்ளனர். வாழ வேண்டிய வயதில் தவறான வழிகாட்டுதலால் இன்று எவரும் மதிக்காத ஒரு இழிந்த இறப்பை தனக்கு தானே ஏற்படுத்திக் கொண்டுள்ளான்.




இவனை இயக்கிய முக்கிய குற்றவாளிகள் பாகிஸ்தானில் இன்று சுதந்திரமாக உள்ளனர். அவர்களுக்கும் தக்க தண்டனை கிடைக்க நமது அரசு முயற்சிக்க வேண்டும. அடுத்து வந்தவர்கள் குறிப்பாக ஹேமந்த் கர்கரேயை கொல்வதில் முக்கிய கவனம் செலுத்தியிருக்கிறார்கள். இவர்கள் வர தேர்ந்தெடுத்த வழியும் குஜராத். எனவே இதன் பின்னணியில் நமது நாட்டில் யார் யாரெல்லாம் இந்த கும்பல் இந்தியா வர உடந்தையாக இருந்தனர் என்பதை அரசு மிக உன்னிப்பாக கவனித்து அவர்களையும் கைது செய்து தக்க தண்டனையை பெற்றுத் தர வேண்டும்.

அதேபோல் மாலேகான் குண்டு வெடிப்பில் தற்போது சிறையில் இருக்கும் சாது பிரக்யாசிங்குக்கும், புரோகித்துக்கும் என்ன தண்டனை என்பதை அரசு தெளிவாக்க வேண்டும். தவறு செய்த முஸ்லிமை தூக்கிலிட்டு விட்டு அதே போன்ற தவறை செய்த இந்துக்களை தண்டிக்காமல் விட்டால் அது இந்துத்வாவுக்கு மேலும் தைரியத்தை கொடுக்கும். மேலும் பல குண்டு வெடிப்புகளை நடத்த முயற்சிப்பர். அதேபோல் பாதிப்படைந்த முஸ்லிம்களில் சிலரும் இந்த நாட்டின் பாரபட்ச போக்கை நினைத்து தீவிரவாதத்தின் பக்கம் செல்ல முயற்சிக்கலாம். எல்லா மக்களும் சந்தோஷமாக வாழ எப்படி அஜமல் கசாபை தூக்கில் இட்டார்களோ அதே போல் மாலேகான் குற்றவாளிகளையும் தண்டிக்க வேண்டும். குஜராத் கலவர குற்றவாளிகளையும் தண்டிக்க வேண்டும்.

-----------------------------------------------------



மேலும் மும்பையில் பால்தாக்கரே இறந்ததற்கு கடை அடைப்பு அவசியமில்லை என்று சொன்ன இரு இளம் பெண்களை கைது செய்த காவல் துறையையும் வன்மையாக கண்டிக்கிறேன். மகாராஷ்டிராவையே தனது வன்முறை பேச்சால் இன்று வரை ஆண்டு வந்த ஒருவருக்கு அரசு மரியாதையில் உடல் அடக்கம் நடத்தப்பட்டதும் பலரின் விமரிசனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. அரசின் இந்த செயலும் கண்டிக்கத்தக்கது.

நமது அரசு நேர்மையாக நடக்கிறதா அல்லது பெரும்பான்மையினரின் ஓட்டு வங்கியை கணக்கில் கொண்டு நேர்மையை குழி தோண்டி புதைக்கிறதா என்று நோக்கர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். பார்ப்போம். நம்பிக்கையில்தானே வாழ்க்கை ஓடுகிறது!..

----------------------------------------------------------

ஆஷூரா நோன்பு - முஹர்ரம் மாதம் 9 & 10 ம் நாள்

முஸ்லிம்களும், கிறித்தவர்களும், யூதர்களும் மதிக்கின்ற பெரியார் மூஸா நபியாவார். இவர்கள் ஃபிர்அவ்னிடமிருந்து(பாரோ) இந்த நாளில் தான் காப்பாற்றப்பட்டார்கள். இந்த நாளில் தான் ஃபிர்அவ்ன் கடலில் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டான்.இந்த நோக்கத்திற்காகத் தான் இந்த நாளில் நோன்பு நோற்கப்படுகிறது.

நபிகள் நாயகம் அவர்கள் ஆஷுரா நாளில் நோன்பு நோற்று மற்றவர்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! இந்த நாளை யூதர்களும், கிறித்தவர்களும் மகத்துவப்படுத்துகின்றனரே? என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அடுத்த வருடம் இறைவன் நாடினால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் எனக் கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு வருவதற்குள் மரணித்து விட்டார்கள்.
நூல்: முஸ்லிம் 1916

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளின் கடைசி வருடத்திலும் ஆஷூரா நோன்புக்குக் கட்டளையிட்டுள்ளார்கள். மேலும் யூதர்களும், கிறித்தவர்களும் இந்த நாளை மகத்துவப்படுத்துகின்றனரே என்று கேட்கப்பட்ட போது அவர்களுக்கு மாறு செய்யும் வகையில் 9, 10 ஆகிய இரு நாட்கள் நோன்பு நோற்பதாகக் கூறியுள்ளனர்.
எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆசைப்பட்ட இரண்டு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும்.

முஸ்லிம்களும், கிறித்தவர்களும், யூதர்களும் மதிக்கின்ற பெரியார் மூஸா நபியாவார். இவர்கள் ஃபிர்அவ்னிடமிருந்து இந்த நாளில் தான் காப்பாற்றப்பட்டார்கள். இந்த நாளில் தான் ஃபிர்அவ்ன் கடலில் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டான். இந்த நோக்கத்திற்காகத் தான் இந்த நாளில் நோன்பு நோற்கப்படுகிறது என்பதை ஏராளமான ஹதீஸ்கள் விளக்குகின்றன. மூஸா நபி காப்பாற்றப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கத் தான் இந்த நோன்பு நோற்கிறோம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால் சில முஸ்லிம்கள் கர்பலா எனும் இடத்தில் இமாம் ஹுசைன் கொல்லப்பட்டது இந்த நாளில் தான்; எனவே இந்த நோன்பு நோற்கிறோம் என்று நினைக்கின்றனர்.

ஹுஸைன் கொல்லப்பட்டதற்கும் இந்த நோன்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஹுஸைன் கொல்லப்பட்டதற்காக நபிகள் நாயகம் அவர்கள் எப்படி இந்த நாளில் நோன்பு நோற்றிருப்பார்கள்? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

மார்க்கத்தில் ஒரு காரியம் கடமையாகவோ, வழிமுறையாகவோ ஆக வேண்டுமானால் நபிகள் நாயகம் அவர்கள் வாழும் காலத்தில் தான் ஆகுமே தவிர அவர்களுக்குப் பின்னால் உலகத்தில் என்ன நடந்தாலும் அதற்காக எந்த ஒரு வணக்கமும் மார்க்கத்தில் நுழைய இயலாது.

ஏனெனில் நபிகள் நாயகம் அவர்கள் வாழும் காலத்திலேயே, இம்மார்க்கத்தை இன்று நான் முழுமைப்படுத்தி விட்டேன் (அல்குர்ஆன் 5:3) என்று இறைவன் பிரகடனம் செய்து விட்டான்.

Tuesday, November 20, 2012

திருமணத்துக்கு பிறகு மனைவியை காதலிக்கலாமே!


'இவ என் பேச்சைக் கேட்கறதேயில்லை....அட்லீஸ்ட் ட்விட்டரிலாவது என்னை ஃபாலோ பண்ணச் சொல்லி அறிவுறுத்துங்க...யுவர் ஆனர்.'

-----------------------------------------------------

திருமண ஆசையில் வீட்டை விட்டு ஓடிய 16 வயது பெண்ணை காதலன் உள்பட 12 பேர் கற்பழித்த கொடுமை:

சண்டிகர், நவ. 5-

அரியானா மாநிலம் கர்னால் ரெயில் நிலையம் அருகில் மயங்கிய நிலையில் கிடந்த ஒரு இளம்பெண்ணை ரெயில்வே போலீசார் நேற்று இரவு மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மயக்கம் தெளிந்த அந்த பெண்ணிடம் இன்று போலீசார் விசாரணை நடத்தியதில், கர்னால் மாவட்டத்தை சேர்ந்த அந்த 16 வயது பெண்ணை, நேற்று இரவு 12 பேர் கொண்ட கும்பல் கற்பழித்துவிட்டு ரெயில் பாதை அருகே போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது.

என் காதலன் என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி கடந்த வியாழக்கிழமை அழைத்துச் சென்று கற்பழித்துவிட்டான். அதன்பின்னர் அவருடைய கூட்டாளிகள் 11 பேர் ஒன்று சேர்ந்து கற்பழித்தனர் என்று அந்த பெண் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து அந்த பெண்ணின் காதலன் உள்ளிட்ட சிலரை கர்னால் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

Source: http://www.maalaimalar.com/2012/11/05185645/marriage-desire-run-away-from.html

சினிமாவை உண்மை என்று நம்பி ஏமாறுவதும், காதல் செய்வதே ஒரு பொழுது போக்காக எடுத்துக் கொள்வதும் எந்த அளவு விபரீதங்களை கொண்டு வந்து சேர்க்கிறது என்பதற்கு இவை எல்லாம் சில உதாரணங்கள். திருமணத்துக்கு முன்பே ஆண் பெண் கலப்பதற்கு அரசு ஏதாவது ஒரு கடுமையான சட்டத்தை உண்டாக்கி இது போன்ற பெண்களை காப்பாற்ற வழி வகை செய்ய வேண்டும்.

ஓடி போன பெண்ணின் திருமணதிற்கு பின் கணவன் மனைவி பிரச்சனை வந்தால் அந்த பெண் எங்கு போய் அடைக்கலம் தேடுவாள். அவள் வாழ்கையே நாசமாகி விடும். ஆதலால் பெற்றோர் அனுமதி இல்லாமல் பெண் திருமணம் செய்து கொள்ளகூடாது என்று சட்ட திருத்தம் கொண்டு வந்தால் நல்லது.

----------------------------------------------------

கண்ணூர்: மொபைல்போன் மூலமாக ஒருவரை, ஓராண்டு காலமாக, காதலித்து வந்த, 23 வயது இளம் பெண், முதல் முதலாக, காதலனை கண்டதும் அதிர்ச்சி அடைந்து, மயங்கி விழுந்தார். அவரது அதிர்ச்சிக்கு காரணம், காதலனின் வயது, 70, என்பதே.

கேரளா, திருவனந்தபுரம் போத்தன்காடு பகுதியைச் சேர்ந்த, 23 வயது இளம் பெண்ணுக்கு, ஓரு ஆண்டுக்கு முன், கண்ணூர் பகுதியைச் சேர்ந்த, அம்சா என்பவர், மொபைல் போன் மூலம் அறிமுகமானார். எம்.டெக்., பட்டதாரியான, அந்த இளம் பெண்ணும், அம்சாவும், அடிக்கடி மொபைலில் பேசினர்.இதில், இருவரும் காதல் வயப்பட்டனர். ஓராண்டாக, இருவரும் நேருக்கு நேர் பார்க்காமலேயே, மொபைல் பேச்சிலேயே தங்கள் காதலை வளர்த்தனர்.இந்நிலையில், காதலனை பார்த்து விடவேண்டும் என்ற ஆவல், அந்த இளம் பெண்ணுக்கு ஏற்பட்டது. அதற்காக, இம்மாதம், 9ம் தேதி இரவு, திருவனந்தபுரத்திலிருந்து பஸ்சில் புறப்பட்டு, அதிகாலை, 5:00 மணிக்கு, கண்ணூர் கூத்துப்பரம்பு பஸ் நிலையம் சென்றடைந்தார்.

அங்கிருந்தபடி, பலமுறை காதலனை தொடர்பு கொள்ள முயற்சித்தும், முடியவில்லை. இதனால், நீண்ட நேரம் பஸ் நிலையத்தில் சுற்றித் திரிந்தார். அதைக்கண்ட சிலர், போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார், இளம்பெண்ணை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.விசாரணையில், அவர் தன் காதலன் அம்சாவை தேடி வந்ததாக கூறி, அவரது மொபைல்போன் எண்ணை போலீசாரிடம் கொடுத்தார். போலீசார் அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, இப்ராகிம் என்பவர், போனை எடுத்தார்.

அவர் உடனடியாக, போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். "இளம் காதலன் வருவார்' என, ஆவலோடு காத்திருந்த இளம்பெண்ணுக்கு, இப்ராகிமை கண்டதும் கலக்கம் ஏற்பட்டது. ஏனெனில், அவருக்கு வயது, 70, என்பதுதே காரணம்.அவர் தான், இதுவரை தன்னுடன் மொபைலில் பேசி வந்த காதலன் என, தெரிந்ததும், அதிர்ச்சி அடைந்து, அப்பெண் மயக்கமடைந்தார். அவர் மயக்கம் தெளிய, போலீசார் உதவினர். மயக்கம் தெளிந்து எழுந்த அப்பெண், "இளம் வயதுடையவர், அம்சா தன் பெயர்' என, இப்ராகிம் தன்னிடம் பொய் சொல்லி, ஏமாற்றி விட்டதாக, போலீசில் புகார் செய்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், இதுவரை ஒரு முறை கூட, இப்ராகிம் அப்பெண்ணை அழைத்து பேசியதில்லை என்றும், இளம்பெண்ணுக்கு சொந்தமாக, மொபைல்போன் இல்லை என்றும், அவரது உறவினர்களின் மொபைல் போன் மற்றும் தரைவழி தொலைபேசி மூலம், இப்ராகிமை, அவரே தொடர்பு கொண்டு காதலை வளர்த்து வந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.இதையடுத்து, அந்த இளம் பெண்ணின் உறவினர்களை போலீசார் வரவழைத்து, அவர்களிடம், அப்பெண்ணை ஒப்படைத்தனர்.

-பத்திரிக்கை செய்தி

காதலில் இது ஒரு வகை. இந்த பெண்ணை நினைத்து அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. அறிவியல் வளர்ச்சி நம் பெண்களை எந்த அளவு கொண்டு செல்கிறது என்பதற்கு இவை எல்லாம் சில எடுத்துக் காட்டுகள்.

பிடித்த துணையை தேர்ந்தெடுக்க ஆடவரை தேடும் போது எப்போதும் ஒரு பெண் துணையையோ அல்லது ஒரு ஆண் துணையையோ கூடவே வைத்திருப்பது இளம் பெண்களுக்கு பாதுகாப்பு. அதிலும் காதல் என்று வரம்பு மீறி லாட்ஜ் வரை போகும் இன்றைய காதல்கள் ஆறு மாதத்திலேயே விவாகரத்தை எட்டி விடுகின்றனர். எனவே திருமணத்துக்கு பிறகு மனைவியை காதலியுங்கள். அதுவே நிலைத்து நிற்கும் அன்பாகும். துணையை தேர்ந்தெடுக்க ஒரு சில கட்டுப் பாடுகளோடு ஆணையும் பெண்ணையும் சந்தித்து தங்களின் வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்ளுங்கள். சினிமா நிஜம் என்று நம்பி அந்த காட்சிகளை வாழ்விலும் கொண்டு வராதீர்கள். பிறகு அந்த வாழ்க்கையும் சினிமாவைப் போல 3 மணி நேரத்தில் கசந்து விடும்.


Monday, November 19, 2012

கொசுவைப் பற்றி இன்று விரிவாக பார்ப்போமா?

கொசுவைப் பற்றி இன்று விரிவாக பார்ப்போமா?


பதிவர் திரு நம்பள்கி அவர்கள் போன பதிவில்

//எதை சொன்னாலும், மதத்துடன் சம்பந்தப் படுத்துகிறீர்கள்; சரி! கொசுவைப பற்றி எழுதி மதத்துடன் சமபந்தப் படுத்தி எழுதுங்கள் பார்க்கலாம் ...!//

என்று சலிப்போடு கேட்டிருந்தார். அவருக்காகவே இந்த பதிவை தருகிறேன்.

அன்றைய சிலையை வணங்கிக் கொண்டிருந்த அரபுகளை நோக்கி இறைவன் கூறுகிறான்

'மனிதர்களே! உங்களுக்கு ஒரு உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவி தாழ்த்தி கேளுங்கள். ஏக இறைவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும் தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.'
-குர்ஆன் 22:73


மற்றோர் இடத்தில்....

'ஏக இறைவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோரின் உதாரணம் சிலந்திப் பூச்சியைப் போன்றது. அது ஒரு வீட்டை அமைத்துக் கொண்டது. வீடுகளிலேயே சிலந்தியின் வீடுதான் மிகவும் பலஹீனமானது. அதை அவர்கள் அறியக் கூடாதா?'
-குர்ஆன் 29:41


இவ்வாறு இரண்டு இடங்களில் பல தெய்வ வணக்கம் புரிவோரைப் பார்த்து இறைவன் கேட்கிறான். இதனால் கோபமடைந்த அரபிகள் முகமது நபியிடம் கிண்டலாக 'உதாரணத்துக்கு உங்கள் இறைவனுக்கு வேறு உயிரினங்கள் கிடைக்கவில்லையா? அற்பமான ஈயையும் சிலந்திப் பூச்சியையும் உதாரணமாகக் காட்டுகிறானே?' என்றனர்.

இவர்களின் கிண்டலுக்கு மறுப்பு தெரிவிக்கும் முகமாக இறைவன் கீழ் கண்ட வசனத்தை இறக்குகிறான்.

'கொசுவையோ அதை விட அற்பமானதையோ உதாரணமாக கூற இறைவன் வெட்கப்பட மாட்டான். நம்பிக்கை கொண்டோர் 'இது தமது இறைவனிடம் இருந்து வந்த உண்மை' என்பதை அறிந்து கொள்கின்றனர்.'

-குர்ஆன் 2:26


அதாவது மனிதர்கள் நேர் வழி பெறுவதற்காக எந்த அற்ப உயிரினங்களையும் உதாரணமாகக் கூற இறைவன் தயங்க மாட்டான் என்று இந்த வசனம் நமக்கு அறிவுறுத்துகிறது. மனிதர்கள் அற்பமாக நினைக்கும் இந்த கொசுவை இறைவன் எவ்வளவு நேர்த்தியாக படைத்துள்ளான் என்பதை இனி பார்ப்போம்.






1. அது பெண்கொசு. 2. அதற்கு அதன் தலையில் 100 கண்கள். 3. அதன் வாயில் 48 பற்கள்.
4. அதன் உடலில் மாறுபட்ட மூன்று இதயங்கள். 5. அதன் தும்பிக்கை நுனியில் ஆறு அறைகள்.
6. அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அலுவல்கள் 7. ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று இறக்கைகள்.
8. எக்ஸ்ரே கருவி போன்ற நுண்ணிய தர்மோமீட்டர் பொருத்தப்பட்ட சிவப்பு நிறத்தில் ஒரு நுண்ணிய கருவி அதனுள் படைக்கப்பட்டுள்ளது. அதன் வேலை அது மனித உடலில் இருளில் வந்து அமர்ந்து இரத்தத்தை உறிஞ்சும் போது யாரும் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு மனிதனுடைய நிறத்திற்கேற்றவாறு தன் நிறத்தை மாற்றிக்கொள்கிறது..
9. மனித மூளையே வியக்குமளவுக்கு அதனிடமுள்ள கூரிய ஊசி முள்ளால் குத்தி சிறிஞ்சியைப் போல் உறிஞ்சிக் குடிக்கிறது. அது எப்படி பாய்ந்து உள்ளே செல்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியாது.
10. மனிதனின் இரத்த வாசனையை 60 மீட்டர் தொலைவிற்கு அப்பாலிருந்து நுகர்ந்து தெரிந்து கொள்ளும் அற்புத ஆற்றலை அது பெற்றிருக்கிறது.
11. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அதன் முதுகின் மேல் கண்களால் பார்க்கமுடீயாத அளவுக்கு மிகச்சிறிய ஒரு பூச்சி உள்ளது என இன்றைய அறிவியல் கண்டு பிடித்துள்ளது.

அப்போது தான் அல்லாஹ் இவ்வசனங்களை அருளி இப்படிக் கூறினான். நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான் (அல்பகரா :2:26) அதாவது சத்தியம் என வந்து விட்டால் அது எவ்வளவு அற்பமானதாக இருந்தாலும்,பெரிதாக இருந்தாலும் அதைக் கூறுவதற்கு அல்லாஹ் தயங்கமாட்டான். எனக்கூறிவிட்டு அறிவியலுக்கு ஒரு சவாலாக கண்ணுக்குப் புலப்படாத ஓர் அற்பமான ஒரு உயிரினத்தையும் அதன் மேல் படைத்துள்ளான். அது அதன் குழவிக்குஞ்சாகவோ அதை தூய்மைப் படுத்தும் ஒரு அரிய படைப்பாகவோ இருக்கலாம். அதை இறைவனே நன்கறிந்தவன்.





இதில் நூறு கண்கள் இருக்கமுடியுமா? என்ற ஐயம் நம்மில் எழலாம். அதற்கு விடையாக, படம்-1 கொசுவின் முகத் தோற்றத்தின் ஒரு பகுதியையும், படம்-2 . A. முகத் தோற்றத்தையும், B அதன் நுண்ணிய கண்களையும், C அதைப் பெரிது படுத்திக் காட்டிய கண்களையும் படத்தில் காணலாம். இறைவனே யாவற்றின் மீதும் ஆற்றலுள்ளவன்.வல்லமையுள்ளவன் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.

---------------------------------------------------------

கொசுக்களை விரட்டுவதற்காக ஒருவர் தொடர்ந்து கொசுவர்த்திச் சுருள், மேட்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி வந்தால், அவருக்கு நுரையீரலில் ஒருவகை ஒவ்வாமை ஏற்பட்டு, நுரையீரல் முழுமையாக விரிவடையாமலும், அதன் கொள்ளளவுக்கு உரிய காற்றை செயல்பாட்டுக்கு எடுத்துக்கொள்ள இயலாமலும் போய்விட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

கொசு மேட்டில் இருந்து வெளிவரும் புகையை, அப்போது பிறந்த, அல்லது பிறந்து சில மாதங்கள் ஆன குழந்தை தொடர்ந்து சுவாசித்தால் அதற்கு வலிப்பு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கிறது லக்னோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு. மும்பையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், கொசு விரட்டிகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் சிலருக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

கொசு விரட்டிகளில் உள்ள `டையாக்சின்', புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது, `அலெத்ரின்', மனிதர் களின் எடையை குறையைச் செய்யக்கூடியது என்று எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

வேறு வழியில்லாமல்தான் கொசுவிரட்டிகளை நாடுகிறோம். வேறு என்னதான் வழி என்கிறீர்களா? சுற்றுப்புறத்தைத் தூய்மையாக, தண்ணீர் தேங்காமல் வைத்துக்கொள்ளுங்கள். கொசு வலையையும் பயன்படுத்தலாம்.

http://harunyahya.com/en/works/3043/the-miracle-in-the-mosquito/chapter/161

http://www.answering-christianity.com/mosquitoes_miracle.htm

http://miracleinthemosquito.com/3.htm

http://kaheel7.com/eng/index.php/gods-creations/340--mosquitos-head

http://www.islamicbulletin.org/newsletters/issue_20/science.aspx

http://doesgodexist.multiply.com/journal/item/122?&show_interstitial=1&u=%2Fjournal%2Fitem

Sunday, November 18, 2012

கரீம் அப்துல் ஜப்பாருக்கு சிலை வடித்தது சரியாகுமா?

கரீம் அப்துல் ஜப்பாருக்கு சிலை வடித்தது சரியாகுமா?


கரீம் அப்துல் ஜப்பார்: லாஸ் ஏஞ்சல்ஸில் இவரது கூடைப் பந்து சாதனைகளை பாராட்டி(16-11-2012) வெண்கலச் சிலையை நிறுவியுள்ளனர். 16 அடி உயரமுள்ள இந்த சிலை மிக கம்பீரமாக காட்சியளிக்கிறது. 38387 பாயிண்டுகள் என்பிஏ கிளப்புக்காக எடுத்த சாதனையை இன்று வரை யாரும் முறியடிக்கவில்லை என்பதற்காக இந்த கௌரவத்தை அளித்திருக்கின்றனர். இவரது உயரம் 7 அடி இரண்டு இன்ஞ். கூடைப் பந்து விளையாட ஏற்ற உயரம்தான். :-).



ப்ரூஸ்லீயோடு சண்டையிடும் கரீம் அப்துல் ஜப்பார்.....

மனித நேய பணிகள் பல செய்து மேலும் சாதனை புரிந்ததனால் பல்வேறு விருதுகளை முன்பே வாங்கியுள்ளார். பல புத்தகங்களும் எழுதியுள்ளார். டாகுமெண்டரி படங்களிலும் நடித்துள்ளார். கவுரவிப்பதற்கு ஏற்ற நபர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. .



ஆனால் இவரை கவுரவப்படுத்த சிலை திறந்ததுதான் நமக்கு வருத்தம். ஏனெனில் சமூகத்தில் மரியாதையாகப் பார்க்கப்படும் ஒரு நபரை இவ்வாறு சிலை வடிக்க ஆரம்பித்தால் சில காலத்துக்கு பிறகு அந்த சிலையையே வணங்க ஆரம்பித்து விடுவர். இது உலகம் முழுவதும் நாம் பார்த்து வருபவை. நமது நாட்டிலும் இத்தனை கடவுள்கள் வரக் காரணமே மன்னர்களையும் மத பிரசாரகர்களையும் ஊர் பெரியவர்களையும் சிலைகளாக வடித்தமையே! தந்தை பெரியாரையே இன்று மாலை மரியாதை செய்ய ஆரம்பித்து விட்டோம். இது எங்கு போய் முடியுமோ தெரியவில்லை. எனவே இது ஒரு தவறான முன்னுதாரணம். ஃபெர்ணாண்டஸ் லூயிஸாக பிறந்த இவர் 1968 ல் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக் கொண்டார். ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு இதை எவ்வாறு அப்துல் கரீம் ஆதரித்தார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இதற்கு செலவு செய்த பணத்தை அமெரிக்காவில் ஏழைகளாக உள்ள எத்தனையோ குடும்பங்களுக்கு செலவு செய்திருக்கலாம். அந்த மக்களும் வாழ்த்தியிருப்பர். அல்லது ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து ஏழை குழந்தைகளின் படிப்புக்கு உதவியிருக்கலாம்..

படித்தவர்கள் அதிகம் உள்ள நாடுகளிலும் இது போன்ற செயல்கள் நடைபெறுவது வருத்தத்திற்குரியது.



---------------------------------------------------------

தான் இஸ்லாத்தை ஏற்றததற்கான காரணத்தை கீழே விவரிக்கிறார் கரீம் அப்துல் ஜப்பார். தனது மன மாற்றத்துக்கு முக்கிய காரணமாக மால்கம் எக்ஸ்ஸைக் குறிப்பிடுகிறார்..இந்த தலைமுறையில் தான் மதம் மாறியுள்ளார். அதற்குள் 'இஸ்லாம் எங்களுக்கு' 'எங்களின் இஸ்லாம்' என்று சொந்தம் கொண்டாடுகிறார். யூத, கிறித்தவ தூதர்களையும் நாங்கள் சம அளவில் மதிக்கிறோம் என்று ஏதோ பல தலைமுறைகளாக இஸ்லாத்திலேயே ஊறித் திளைத்தவர் போல் பதிலளிக்கிறார். இஸ்லாம் ஒரு சாதாரண மனிதனை எப்படி எல்லாம் மாற்றி விடுகிறது!

[Growing up in America,] I eventually found that . . .emotionally, spiritually, I could not afford to be a racist. As I got older, I gradually got past believing that black was either the best or the worst. It just was. The black man who had the most profound influence on me was Malcolm X. I had read "Muhammad Speaks", the Black Muslim newspaper, but even in the early sixties, their brand of racism was unacceptable to me. It held the identical hostility as white racism, and for all my anger and resent meant, I understood that rage can do very little to change anything. It’s just a continual negative spiral that feeds on itself, and who needs that?

. . .Malcolm X was different. He’d made a trip to Mecca, and realized that Islam embraced people of all color. He was assassinated in 1965, and though I didn’t know much about him then, his death hit hard because I knew he was talking about black pride, about self-help and lifting ourselves up. And I liked his attitude of non-subservience.

. . .Malcolm X’s autobiography came out in 1966, when I was a freshman at UCLA, and I read it right before my nineteenth birthday. It made a bigger impression on me than any book I had ever read, turning me around totally. I started to look at things differently, instead of accepting the mainstream viewpoint.

. . .[Malcolm] opened the door for real cooperation between the races, not just the superficial, paternalistic thing. He was talking about real people doing real things, black pride and Islam. I just grabbed on to it. And I have never looked back.

SG: When you embraced Islam, was it difficult for other people to come to terms with that? Did that create a distance between you and others?

KA: For the most part it was. I didn’t try to make it hard on people; I did not have a chip on my shoulder. I just wanted people understand I was Muslim, and that’s what I felt was the best thing for me. If they could accept that I could accept them. I didn’t...it wasn’t like if you’re going to become my friend you have to become Muslim also. No, that was not it. I respect people’s choices just as I hope they respect my choices.

SG: What happens to a person when they take on another name, another persona if you like? How much did you change?

KA: For me it made me more tolerant because I had to learn to understand differences. You know I was different, people didn’t oftentimes understand exactly where I was coming from; certainly after 9/11 I’ve had to like explain myself and...

SG: Was there a backlash against people like yourself? Did you feel that at all?

KA: I didn’t feel like necessarily a backlash, but I certainly felt that a number of people might have questioned my loyalty, or questioned where I was at, but I continue to be a patriotic American...

SG: For a lot of black Americans, converting to Islam was an intensely political decision as well. Was it the same for you?

KA: That was not part of my journey. My choosing Islam was not a political statement; it was a spiritual statement. What I learned about the Bible and the Qur’an made me see that the Qur’an was the next revelation from the Supreme Being - and I chose to interpret that and follow that. I don’t think it had anything to do with trying to pigeon hole anyone, and deny them the ability to practice as they saw fit. The Quran tells us that Jews, Christians, and Muslims: Muslims are supposed to treat all of them the same way because we all believe in the same prophets and heaven and hell would be the same for all of us. And that’s what it’s supposed to be about.

http://www.islamreligion.com/articles/446/

http://kareemabduljabbar.com/






Saturday, November 17, 2012

பெண்கள் கல்வி கற்க சென்றால் அபராதம் விதிப்பது முறையா?


பெண்கள் கல்வி கற்க சென்றால் அபராதம் விதிப்பது முறையா?

இன்று பெண் கல்வி மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. முன்பெல்லாம் பெண்களுக்கு கல்வி எதந்கு என்று ஒதுக்கப்பட்டார்கள். ஆனால் இன்று பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி ஆண்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு கல்வியை ஒதுக்கியதால் நாம் எந்த அளவு சிரமங்களை இன்று வரை சுமந்து வருகிறோம் என்பதை அறியாதவர்கள் அல்ல நாம். அரசு வேலைகளில் இஸ்லாமியர்கள் அமராததால் இந்தியா முழுக்க பல வகைகளிலும் அலைக்கழிக்கப்படுகிறோம். சமூகத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கும் கேடு கெட்ட கூத்தாடிகள் கூட நம்மை தீவிரவாதிகள் என்று சினிமா எடுத்து காசு பண்ணும் அளவுக்கு துணிந்து விட்டார்கள். இதற்கெல்லாம் காரணம் நாம் கல்வியை இழந்ததும் அரசு வேலைகளை உதறியதும்தான்.

அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோரெல்லாம் அறிவுடையோரே (அல்குர்ஆன் 39:9)


(அரபு நாடான அமீரகத்தில் ரெயில்வேயில் ஓட்டுனராக பணிபுரியும் மர்யம் அல் ஸஃபர்.)

கல்வி கற்பது என்பது ஒவ்வொரு ஆண், பெண் இருவர் மீதுள்ள கட்டாயக் கடமையாகும். கல்வியானது ஒரு மனிதனை அறிவுடையவனாகவும், பண்பாடுள்ளவனாகவும், ஒழுக்கமுடையனாகவும் மாற்றுகிறது. மனிதனின் அறிவுக்கண்ணைத் திறப்பதோடு சொத்துக்களிலெல்லாம் மிகச் சிறந்த சொத்தாகவும் கருதப்படுகிறது. நாம் கற்கக்கூடிய கல்வி இவ்வுலகிற்கு மட்டுமின்றி மறுமைக்கும் பயன்தரக்கூடியதாக இருக்க வேண்டும்.

இஸ்லாத்திற்கு முன்பு பண்டைய அரேபியர்களிடத்தில் பெண்கள் இழிப்பொருளாகவும், சொத்துரிமைப் பெற தகுதியற்றவர்களாகவும், பெண்களும் அவர்களின் சொத்துக்களாகவும் இருந்த நிலையில், இஸ்லாம் இக்கொடிய நிலையை தரைமட்டமாக்கி பெண்களுக்கு உரிமைகளையும், சலுகைகளையும் வாரி வழங்கியது. இன்று கல்வி கற்பதில் மிகவும் பின்தங்கியிருப்பவர்கள் யாரென்றுப் பார்த்தால் பெரும்பாலும் முஸ்லிம்களாகத்தான் இருக்கிறார்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் கல்வி கற்பதில் மிக மிக பின் தங்கியிருக்கிறார்கள், இல்லை பின் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் என்பதே உண்மை. காரணம் கல்வியைப் பற்றிய சரியான அடிப்படையறிவு இல்லாததினால்தான்.
இஸ்லாம் ஒரு போதும் பெண்களைக் கல்வி கற்க வேண்டாமென்று தடை போடவில்லை. அந்நிய ஆண்களும், அந்நிய பெண்களும் இரண்டறக் கலந்து விடக்கூடாது என்பதுதான் இஸ்லாமிய சட்டமே தவிர கல்வி கற்கக் கூடாது என்றோ, தொழில் செய்யக்கூடாது என்றோ இஸ்லாம் ஒருபோதும் கூறவில்லை. மாறாக கல்வி கற்க வேண்டும் என்று ஆர்வமூட்டுகிறது


(ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்றவுடன் இறைவனுக்கு நன்றி செலுத்தும் பஹ்ரைனின் அல் கஸ்ரா.)

ஒருமுறை ஒரு பெண் நபி அவர்களிடம் வந்து எப்போதும் உங்களை சுற்றி ஆண்களே இருக்கிறார்கள் அதனால் எங்களால் உங்களை நெருங்கி வந்து மார்க்கத்தில் எங்களுக்கு தோன்ற கூடிய சந்தேகத்தை கேட்க முடிய வில்லை என சொன்னதும் நபி அவர்கள் அவர்களுக்கு என்று வாரத்தில் ஒரு நாளை ஒதுக்கினார்கள் என்று வரலாறுகளில் பார்க்கிறோம்.



ஜனாதிபதி அலீ அவர்களது சந்ததியில் வந்த நஃபீஸா எனும் பெண் ஹதீஸ் கலையில் தேர்ச்சி பெற்றிருந்தார்..அவரின் போதனை வகுப்புகளில் இமாம் ஷாபிஈ அவர்களும் கலந்து கொண்டு அறிவை பெற்றுள்ளார்.

பாக்தாத்தில் வாழ்ந்த ஷெய்கா சுஹதா அவர்கள் இலக்கியம் அணியிலக்கணம் ,கவிதை,போன்றவற்றில் தேர்ச்சி பெற்று திகழ்ந்தார்.

பதினெட்டாம் நூற்றாண்டில் நைஜீரியாவில் ஒரு மிகபெரும் கல்வி புரட்சி ஏற்பட காரணமான முஸ்லிம் பெண்களுக்கு தன் வாழ்க்கையை அசத்தலான முன்னுதாரணமாக்கிய நானா அஸ்மா என்ற முஸ்லிமும் ஒரு பெண்மணிதான்.

இவை எல்லாம் சிறந்த உதாரணங்களாக நாம் சொல்ல முடியும்.

பெண் என்பவள் ஒரு குடும்பத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறாள். குறிப்பாக, தன்னுடைய குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கும் பண்பாட்டிற்கும் அடித்தளம் இடுபவளே பெண்ணாகிய தாய்தான். ஒரு குழந்தை முதலில் அறிமுகம் ஆவது தன் தாயாரிடம்தான் அந்தக் குழந்தைக்கு இரண்டு வருடங்கள் பாலூட்டுவதுடன் இறைபக்தியையும், நல்லொழுக்கத்தையும் சேர்த்தே ஊட்டுகிறாள்.

எனவே ஒவ்வொரு ஆண் பெண்ணுக்கும் முதல் பள்ளிக்கூடமாகவும் பாலகப்பருவ ஆசிரியையாகவும் திகழ்பவள் தாயாகிய பெண்தான். அந்தத் தாய்க்கு நல்ல அறிவும், கேள்வி ஞானமும் இருந்தால்தான் அவளிடம் பாடம் கற்கும் குழந்தைகளுக்கும் கிடைக்கும் என்பதைத்தான் "தாயைப் போல பிள்ளை நூலைப்போல சேலை" என்கிறார்கள். ஆகவே, அவளுக்கு கல்வியறிவும் கேள்வி ஞானமும் வேண்டுமென்றால் கல்வி மிக அவசியமாக இருக்கிறது.

ஆனால் இதை எல்லாம் புரிந்து கொள்ளாமல் சில ஊர்களில் ஊர்க் கட்டுப்பாடு என்று வயதுக்கு வந்த பெண்களை பள்ளிக்கு அனுப்பினால் அபராதம் விதிக்கிறார்களாம். அவர்களின் நோக்கம் பெண் குழந்தைகள் கெட்டு விடக் கூடாது என்று இருந்தாலும் அதற்கு இது தீர்வு அல்ல. ஆணும் பெண்ணும் தனித்தனியே பயிலும் எத்தனையோ கல்விக் கூடங்கள் உள்ளது. அருகில் அவ்வாறு இல்லா விட்டால் செல்வந்தர்கள் சேர்ந்து ஒரு கலாலூரியை ஆரம்பிக்க வேண்டியதுதானே. ஒவ்வொரு கிராமத்திலும் எத்தனையோ செல்வந்தர்கள் இருக்கிறார்களே! அரசும் உதவி செய்ய தயாராக இருக்கும் போது என்ன சிக்கல் உங்களுக்கு. ஆர்வத்தில் படிக்கச் செல்லும் பெண்ணை தடுத்து அவருக்கு அபராதமும் விதிப்பது இஸ்லாமிய நடைமுறை அல்ல. நான் படித்த செய்தி உண்மையாக இருந்தால் டிஎன்டிஜே, தமுமுக போன்ற அமைப்புகள் அந்த கிராமத்துக்கு சென்று அந்த பெண்ணின் படிப்பு இஸ்லாமிய அடிப்படையில் தொடர ஆவண செய்ய வேண்டும்.

கல்வி கற்கச் செல்லும் பெண்களும் தங்களின் பொருப்பை உணர்ந்து கவனமாக நடந்து கொள்ள வேண்டும். சினிமாக்களை பார்த்து கண்டவன் பின்னால் சுற்றி தங்களது மானத்தையும் வாழ்வையும் இழந்து குடும்பத்தாராலும் ஒதுக்கப்பட்ட பல சம்பவங்களை தினமும் பத்திரிக்கையில் படிக்கிறோம். இதனால் எந்த நோக்கத்திற்காக பெற்றோர்கள் கல்லூரிக்கு அனுப்புகிறார்களோ அந்த நோக்கமே சிதைந்து விடுகிறது. இந்த காதல் என்ற மாயையால் தர்மபுரியில் அந்த பெண்ணின் தகப்பன் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டு அதன் காரணமாக 300 குடிசைகள் எரிந்து சாம்பலானதை சில நாட்களுக்கு முன்பு பார்த்தோம். காதல் தோல்வியினால் தினமும் தற்கொலைகளை பத்திரிக்கைகளில் படித்து வருகிறோம். ஒரு பெண் தவறினால் அந்த குடும்பத்தின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டு விடும். எனவே இஸ்லாமிய நடைமுறைகளுக்கு பங்கம் வராமல் உலக கல்வியை இஸ்லாமிய பெண்கள் கற்று தங்களின் அறிவை பெருக்கிக் கொள்வார்களாக!

--------------------------------------------------

புதுக் கோட்டையில் ஒரு கிராமத்தில் நடந்த சம்பவத்தை அப்படியே தருகிறேன்.

புதுக்கோட்டை: மணல்மேல்குடி அருகே பூப்பெய்த பிறகு பெண்களின் படிப்பை நிறுத்த வேண்டும் என்று ஜமாஅத் வற்புறுத்தியதன்பேரில் 9வது வகுப்பு மாணவியின் படிப்பு பாதியிலேயே நின்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பி.ஆர். பட்டனத்தைச் சேர்ந்த நல்ல முகமது- ஹாஜிரம்மாள் தம்பதியின் மகள் ஜனுபா பேகம் (16).

ஹாஜிரம்மாள் புதுக்கோட்டை கலெக்டர் மனோகரனிடம் சமீபத்தில் ஒரு மனு அளித்துள்ளார். அதில், ஜனுபா மணல்மேல்குடியில் உள்ள அரசு பெண்கள் உயர் நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தாள். இந்நிலையில் அவர் பள்ளிப் படிப்பை உடனே நிறுத்த வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாத இறுதி முதல் பி.ஆர். பட்டினம் ஜமாஅத்தார் வற்புறுத்தினர் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கூறுகையில்,
பூப்பெய்த பிறகு எந்த பெண்ணும் படிக்கக் கூடாது என்று ஜமாஅத்தார் எங்களை மிரட்டினர். அவர்களின் மிரட்டலையும் மீறி நான் என் மகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தேன். இதனால் அவர்கள் ஆத்திரமடைந்து எங்களை பள்ளிவாசலுக்கு இழுத்துச் சென்றனர். எனது கணவர், மகள் மற்றும் என்னை தாக்கியதுடன் பள்ளிப் பையையும் பறித்துக் கொண்டனர். எனது மகளின் டி.சியை அவர்களிடம் கொடுக்காவிட்டால் எங்கள் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கிவிடுவோம் என்று எனது கணவரை எச்சரித்தனர்.

அதன் பிறகு செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் டி.சியை வாங்கிய பிறகு ஊருக்குள் வந்தால் போதும் என்று ஜமாஅத் உறுப்பினர்கள் எனது கணவரிடம் தெரிவித்துள்ளனர். அதில் இருந்து எனது கணவர் ஊருக்குள் வரவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்றும் தெரியவில்லை. அவர் இல்லாமல் நாங்கள் பணக் கஷ்டத்தால் பல நாட்கள் பட்டினி கிடந்தோம். அதன் பிறகு நான் வீட்டு வேலைக்கு சென்றேன் என்றார்.

இதற்கிடையே பூப்பெய்த பெண்ணை விதிகளை மீறி பள்ளிக்கு அனுப்பியதற்காக ஜமாஅத்தைச் சேர்ந்த எம்.எஸ். நஜிமுத்தீன் என்பவர் ஹாஜிரம்மாள் குடும்பத்திற்கு ரூ.15,000 அபராதம் விதித்தார். ஹாஜிரம்மாள் வீட்டுக்கு அருகில் வசி்ப்பவர் ஒருவர் அபராதத்தைக் கட்ட பணம் கொடுத்து உதவியுள்ளார். பின்னர் தனக்கு உதவிய நபருக்கு அந்த பணத்தை அவர் திருப்பிக் கொடுத்துள்ளார். பி.ஆர்.பட்டினத்தில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்களிலும் ஜமாஅத்தால் இதே பிரச்சனை உள்ளது என்று ஹாஜிரம்மாள் தெரிவித்தார்.

ஹாஜிரம்மாளின் மனுவை கலெக்டர் அலுவலகம் தலைமை கல்வி அதிகாரிக்கு அனுப்ப அவர் அதை எஸ்.பிக்கு அனுப்பி வைத்துள்ளார் என்று கூறப்பட்டது. ஆனால் எஸ்.பி. அலுவலகத்திற்கு அந்த மனு வரவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது சட்ட ஒழுங்கு பிரச்சனை என்பதால் அந்த மனு கலெக்டர் அலுவலகத்திற்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது என்று தலைமை கல்வி அதிகாரி என். அருள் முருகன் தெரிவித்துள்ளார்.

-http://tamil.oneindia.in/news/2012/11/15/tamilnadu-daughter-forced-drop-of-school-education-164700.html

மூட்டைப் பூச்சிக்கு பயந்து கொண்டு வீட்டை கொளுத்துவோமா! மாட்டோம். எனவே வயதுக்கு வந்த பெண்கள் தனியே பெண்கள் மட்டுமே படிக்கக் கூடிய பள்ளி கல்லூரிகளில் சேர்ந்து தங்களின் கல்வி அறிவை பெருக்கிக் கொள்வார்களாக!

Friday, November 16, 2012

குதிரைகளைப் பற்றி சில ருசிகர செய்திகள்!


குதிரைகளைப் பற்றி சில ருசிகர செய்திகள்!

மனிதன் பயன்படுததும் விலங்குகளிலேயே குதிரை ஒரு வித்தியாசமான பிராணி என்று சொல்லலாம். அதன் கம்பீரம்: அதற்குள்ள வேகம்: அது நடக்கும் அழகு: என்று சொல்லிக் கொண்டே போகலாம். நான் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கார்பரேஷன் பள்ளிக்கு குதிரை வண்டியில் போனது உண்டு. தாத்தா தனது வயல் வேலையாகவும் கடை வேலையாகவும் செல்லும் போது என்னையும் ஏற்றிக் கொண்டு செல்வார். குதிரை வண்டியில் போகும் ஆர்வத்தினாலேயே பள்ளிக்கு மட்டம் போடாமல் தொடர்ந்து போய் வந்தேன்.

'டக்..டக்...டக்...' என்ற குளம்போசை தாள லயத்தோடு அந்த குதிரை எங்களை இழுத்துக் கொண்டு ஓடும் அழகே தனி. இது ஐந்து வருடம் தொடர்ந்தது. பிறகு நான் வேறு பள்ளி மாறிய போது எனக்கு சைக்கிள் கிடைத்ததால் குதிரை சவாரி நின்று போனது. எனினும் இன்று கூட குதிரைகளை பார்த்தால் பழைய ஞாபகங்கள் வந்து போகும்.

'காசை குதிரை உட்றான்' என்று சொல்வார்கள். அதுபோல் எங்கள் ஊரில் ஆசைக்கு குதிரைகளை வாங்கி அதிலேயே பெரும் தொகைகளை இழந்தவர்களும் உண்டு. அந்த காலத்திலிருந்து இன்று வரை குதிரை தனது செல்வத்துக்கு ஒரு அளவு கோளாக மனிதன் பாவித்து வந்திருக்கிறான்.

---------------------------------------------------

இந்த குதிரையின் ஓட்டத்தை வைத்து குர்ஆன் சில விஷயங்களை சொல்கிறது. அதனையும் பார்ப்போம்.


'மூச்சிறைத்து வேகமாக ஓடுபவற்றின் மீதும்,

தீப் பொறியை பறக்கச் செய்பவற்றின் மீதும்,

அதிகாலையில் தாக்குதல் நடத்துபவை மீதும்,

அதனால் புழுதியை பரப்பி வருபவை மீதும்,

படைகளுக்கு மத்தியில் ஊடுருவிச் செல்பவை மீதும் சத்தியமாக!

மனிதன் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

அவனே இதற்கு சாட்சியாக இருக்கிறான்.

அவன் செல்வத்தைக் கடுமையாக நேசிக்கிறான்.'

-குர்ஆன் 100: 1, 2, 3, 4, 5, 6, 7, 8


இனி இந்த வசனத்தின் சந்த அழகை பார்ப்பதற்கு மூல மொழியான அரபியில் இந்த வசனங்களை பார்போம்.

'வல்லாதியாத்தி லப்ஹன்:

வல் மூரியாத்தி கத்ஹன்:

ஃபல் முகீராத்தி சுப்ஹன்:

பஃதர் நபிஹி நக்அன்:

பவசத் நபிஹி ஜம்அன்:

இன்னல் இன்சான லிரப்பிஹி லகனூத்:

வஇன்னஹூ அலா தாலிக லஸஹீத்:

வஇன்னஹூ லிஹூப்பில் ஹைரி லஸதீத்'


என்ன அழகிய வார்த்தை சீரமைப்பு. சந்தம் எந்த அளவு நெருங்கி வருவதைப் பாருங்கள். பலர் எழுதும் கவிதைகளில் சந்தங்கள் சரியாக அமைந்தால் பொருள் ஏனோ தானோ வென்று இருக்கும். பொருள் அருமையாக இருந்தால் ஏதோ உரை நடையை படிப்பது போல் இருக்கும். இங்கு இரண்டுமே மிக அழகாக பொருந்தி வருவதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். இந்த ஒரு இடம் மட்டும் தான் என்று இல்லை. குர்ஆன் முழுக்க இந்த வசன நடை தொடர்ந்து வருவதை பார்த்திருக்கலாம். அரபி மொழி தெரிந்தவர்களுக்கு இந்த வார்த்தை கட்டுக்கள் இன்னும் சிறந்த ஈர்ப்பை ஏற்படுத்தும். அதனால் தான் அரபி மொழி நன்கு தெரிந்த அன்றைய அரபு புலவர்கள் குர்ஆன் ஓதப்படுவதைக் கேட்டால் கைகளால் காதை பொத்திக் கொள்வார்களாம். அதன் வசன நடையும் அதற்குள் பொதிந்திருக்கும் சிறந்த கருத்துக்களும் தங்களின் சிந்தையை கலைத்து இஸ்லாத்துக்குள் இழுத்துக் கொண்டு சென்று விடுமோ என்று அஞ்சுவார்களாம். அந்த அளவு குர்ஆனின் கருத்துக்களில் அன்றைய அரபு புலவர்கள் கலக்கம் அடைந்திருந்தனர்

இனி குர்ஆனின் விளக்கத்தைப் பார்ப்போம்.

மூச்சிறைத்து ஓடும் ஒரு குதிரை எந்த அளவு உண்மையானதோ, கால் குளம்பின் தீப் பொறி பறக்க ஓடும் குதிரை எந்த அளவு உண்மையானதோ, போர்க் காலங்களில் அதிகாலையில் உக்கிரமாக தாக்குதல் நடத்தும் குதிரைகள் எந்த அளவு உண்மையானதோ, அந்த சண்டையில் புழுதியைக் கிளப்பும் குதிரைகள் எந்த அளவு உண்மையானதோ, போரில் படைகளுக்கு நடுவே ஊடுருவிச் செல்லும் குதிரைகள் எந்த அளவு உண்மையானதோ அதே அளவு உண்மையோடு மனிதன் தனது இறைவனுக்கு நன்றி மறந்தவனாக இருக்கிறான். அதற்கு அவனே சாட்சியாகவும் இருக்கிறான். அழிந்து போகும் உலக செல்வத்தை மிகக் கடுமையாக நேசிக்கவும் செய்கிறான் என்கிறான் இறைவன்.

அதாவது அனைத்து சுகங்களையும் இறைவன் தந்திருக்க அதற்கு நன்றி மறந்து நாத்திக கருத்துக்களை சிலர் பரப்பி வருவதை பார்க்கிறோம். சிலர் படைத்த இறைவனை மனம் போன போக்கில் நிந்திப்பதை பார்க்கிறோம். இன்னும் சிலர் மனிதர்களை தெய்வங்கள் என்றும் தெய்வத்தின் அவதாரங்கள் என்றும் நம்பி தங்களின் பொருளையும் கற்பையும் ஒரு சாதாரண மனிதனிடம் இழந்து நிற்பதைப் பார்க்கிறோம். இவற்றிலிருந்தெல்லாம் நாம் விடுபட்டு நம்மை படைத்த இறைவனை அவன் வணங்க சொன்ன வழியில் வணங்க வேண்டும் என்று மானிடர்க்கு இங்கு அறிவுறுத்துகிறான் இறைவன்.

குர்ஆனில் குதிரை சம்பந்தமாக வந்திருக்கும் வேறு சில வசனங்கள்.

'பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்கம், மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளை நிலங்கள், ஆகிய மன விருப்பம் ஏற்படுத்தும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். இறைவனிடம் அழகிய புகலிடம் உள்ளது.'

-குர்ஆன் 3:14


உலகம் முழுவதும் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விஷயங்களும் உலக மக்களால் இன்று வரை கவர்ச்சிக்குரியதாகவே எடுத்துக் கொள்ளப்படுவதை பார்க்கிறோம்.

'குதிரைகள், கோவேறுக் கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்லவும் மதிப்புக்காகவும் அவன் படைத்தான். நீங்கள் அறியாதவற்றை இனி படைப்பான்'

குர்ஆன் 16:8


அன்றைய அரபுகள் பார்க்காத எத்தனையோ வாகனங்களை இன்று பார்த்து அனுபவித்து வருகிறோம். அன்றைய காலத்தில் இது போன்ற முன்னேற்றம் ஏற்படும் என்று எவருமே சிந்தித்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.


Thursday, November 15, 2012

குறட்டை பிரச்னையை சமாளிப்பது எப்படி?


'நாசமாப் போச்சு! இன்னைக்கு நான் தூங்கினாப்பலதான்! இறைவா! என் தலையில இப்படியா எழுதனும்!'
(மாலை மலரில் வந்த கார்டூனை மாடலாக வைத்து வரைந்தேன்.)
--------------------------------------------------------

குறட்டை பிரச்னையை சமாளிப்பது எப்படி?

ஒரு முறை எனது அலுவலகத்துக்கு ஒரு பஞ்சாயத்து வந்தது. பாகிஸ்தானி இந்த பிரச்னையை கொண்டு வந்தவன். அவனது ரூமில் உத்தர பிரதேசத்தைச் சார்ந்த ஒருவன் மிக அதிக குறட்டை விடுவானாம். பாகிஸ்தானிக்கு சிறிய சத்தம் வந்தாலும் தூக்கம் வராது. எனவே சில நேரங்களில் தூரத்தில் இருக்கும் அவனது அண்ணன் ரூமில் சென்று தூங்கச் சென்று விடுவானாம். தான் மெஷினில் நின்று வேலை செய்வதால் தனக்கு தூக்கம் அவசியம் என்றும் இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றும் என்னிடம் சொன்னான். 'இதில் நான் தலையிட முடியாது. நமது பாஸிடம் சொல்லி முயற்சிக்கிறேன்' என்று சொல்லி அனுப்பி விட்டேன். இரண்டு நாட்களுக்கு பிறகு எனது பாஸ் அந்த இருவரையும் அலுவலகத்துக்கு அழைத்தார். பிரச்னைகளை காது கொடுதது கேட்டார்.

பாஸ் சிரித்துக் கொண்டே சொன்னதாவது 'தூங்கிய பிறகு ஒரு மனிதன் இறந்த சவத்தைப் போன்றவன். விழித்திருக்கும் போது ஏதேனும் தவறுகள் செய்தால் அதனை நான் தட்டிக் கேட்க முடியும். தூங்கும் போது வரும் பிரச்னைக்கு நானும் எதுவும் செய்ய முடியாது. இது இறைவன் புறத்திலிருந்து வருவது. இதற்கு நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. இதற்கு நிரந்தர மருத்துவமும் இல்லை. இரண்டு வாரம அனுசரிதது தூங்கிக் கொள். அதன் பிறகு தனியாக அறை சரி செய்து கொடுக்கிறேன்' என்று சொன்னவுடன் சமாதானமாகி சென்றான் அந்த பாகிஸ்தானிய நண்பன். சொன்னபடி இரண்டு வாரத்தில் குறட்டை விட்டுக் கொண்டிருக்கும் அந்த உத்தர பிரதேசத்து நபருக்கு தனி அறை கொடுக்கப்பட்டது.

இது உலகம் முழுவதும் உள்ள பிரச்னை. அமெரிக்காவில் இதனால் நிறைய விவாகரத்துகள் நடந்து வருகிறதாம். சோறு அதிகம் சாப்பிடுவதும் மது அதிகம் உட்கொள்வதும் குறட்டை வருவதற்கு முக்கிய காரணங்களாக சொல்கின்றனர்.

----------------------------------------------------------

மாலை மலரில் ஒரு மருத்துவர் குறட்டை சம்பந்தமாக தரும் விளக்கதை இனி பார்ப்போம்.

நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டைவழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை.

ஆக சுருங்கிய தொண்டை வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக்குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன.

இந்த அதிர்வைத் தான் நாம் குறட்டை என்கிறோம் என்கிறார் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர்.காதுமூக்கு தொண்டை மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரவிராமலிங்கம். அவர் கூறியதாவது:-

காரணங்கள்:

நாம் தூங்கும் போது தலைக்கு வைத்து கொள்ளும் தலையணையை மிகவும் பெரிதாக உயரமாக வைத்துக் கொள்வதால் ஏற்படும். சில வகையான ஒவ்வாமை காரணமாக சுவாசக் குழாயில் ஏற்படும் சளி, சிலருக்கு உடல் பருமன் காரணமாகவும் குறட்டை ஏற்படுகிறது.
முழு தூக்கம் இருக்காது:

யாராவது குறட்டை விட்டு தூங்கினால் அவனுக்கென்ன நிம்மதியாக தூங்குகிறான் என பலர் நினைப்பதுண்டு. ஆனால் அது தவறு. குறட்டை விடுபவர் நன்றாக தூங்க முடியாது என்பதுடன் பல பாதிப்பு நிலைக்கும் தள்ளப்படும் நிலையும் வரலாம். குறட்டை விடுபவர் மனம் தெளிவாக இருக்காது.

உடல் மிகவும் களைப்பாக இருக்கும் உடலில் சக்தி குறைவாக இருக்கும். தெளிவற்ற சிந்தனை வரும். அதிகமாக கோபம் வரும். இதுமட்டுமின்றி உடலுக்கு போதிய அளவு பிராணவாயு கிடைக்காது. இதனால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் பக்கவாதம் போன்ற நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

அத்தோடு மிக தீவிரமாக குறட்டை விடுபவர்கள் உறக்கத்திலேயே இறந்து விடும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. அதனால் இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை:

சுவாசப் பாதையில் தேவையின்றி சதை வளர்ந்தால் சீராக காற்று போக வழியின்றி குறட்டை ஏற்படலாம். எனவே சதை வளராமல் இருக்க உடல் எடையில் கவனம் வேண்டும். பக்க வாட்டில் படுக்க வேண்டும். 4 அங்குல உயரத்திற்கு மேல் தலையணை வைத்து தூங்க கூடாது.

சாப்பிட்ட உடன் படுக்க போக கூடாது. புகை பிடிக்க கூடாது. அளவுக்கு அதிகமான மருந்துகள் சாப்பிடக் கூடாது. மருந்து அருந்த கூடாது. அத்தோடு இதனால் பாதிக்கப்படுபவர்கள் தொண்டை மூக்கு, காது நிபுணரை அணுகி ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

3 வகை நோயாளிகள்:

குறட்டையின் தீவிரத்தன்மையைப் பொறுத்து நோயாளிகளை 3 குழுக்களாக வகைப்படுத்தலாம்.

1. மெல்லிய குறட்டை- அடுத்திருக்கும் அறையில் ஒலியைக் கேட்க முடியும். மூச்செடுப்பதில் சிரமம் இல்லை.

2. உயரமான குறட்டை- கதவு மூடி இருந்தாலும் கூட அடுத்துள்ள அறையில் ஒலியைக் கேட்கலாம்.

3. உறங்கும் போது மூச்சுத் திணறுதல், நேரத்துக்கு நேரம், மூச்சு 10 வினாடிகளுக்கு மேலாக நிறுத்தப்படும்.

மாரடைப்பு அபாயம்:

7 மணி நேர நித்திரையின் போது 30 முறை மூச்சு திணறல் ஏற்பட்டால் இது ஆபத்தானதாக இருக்கலாம். பெருமூச்செடுத்த வண்ணம், நேரத்துக்கு நேரம் நோயாளி தூக்கம் கலையலாம்.

ரத்தத்தில் காணப்படும் குறைவான செறிவுடைய ஆக்சிஜன் இதயம், சுவாசப்பை மற்றும் மூளையை பாதிக்கலாம். ரத்த அழுத்தம் உயர்வடைவதால், மாரடைப்பு ஏற்படும்.

கட்டிலில் மரணம் கூட ஏற்படலாம். இந்த நோயாளிகள் பகலில் கூட நித்திரைத் தன்மையை, சோம்பேறித்தனத்தை உணர்வார்கள். டாக்டர் தூக்க வரலாற்றை சோதிக்கும் போது, இந்த பிரச்சினை பற்றி கூடுதலாக அறிந்த நோயாள ரின் துணையும் இருக்க வேண்டும்.

ஆபத்தான நோய்:

டான்சில் வீக்கம், அடினாய்டு பிரச்சினைகள் ஏற்படும் போதோ சளி பிடிக்கும் போதோ குறட்டை சத்தம் ஏற்படலாம். இந்தப் பிரச்சினைகளால் ஏற்படும் அடைப்பு நீங்கியவுடன், குறட்டை சத்தமும் நின்று விடும். அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் மற்றும் இள வயதினருக்கு குறட்டை ஏற்படுகிறது.

கழுத்தைச் சுற்றி அளவுக்கு அதிகமான தசை வளர்வதால், சதை அடைப்பு உருவாகி, குறட்டை ஏற்படுகிறது. ஆபத்தான மருத்துவக் கோளாறாக இது கருதப்படுகிறது. ஆபத்தான, தூக்கத் தடை ஏற்படுத்தும் நோயாக இது கருதப் படுகிறது.

ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்லும் போது கண்கள் வேகமாக அசையும், அந்த நேரத்தில் நம் மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளியேறும். இதற்கு `அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே' என்று பெயர். அந்த நேரத்தில் குறட்டையும் அதிகரிக்கும். ஒரு நேரத்திற்கு 18-க்கும் மேற்பட்ட முறை நம் கண்கள் வேகமாக அசைந்து, மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளிவருகிறது.

குறட்டை விடும் போது திடீரென நின்று திடீரென அதிகரிக்கும் சுவாசத்தால் நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து இதய அடைப்பு திடீர் மரணம் ஆகியவை ஏற்படலாம்.

இந்தியாவில் அதிகம் பேர் பாதிப்பு:

இந்தியர்களில் பெரும்பாலோர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நம் வாழ்க்கை முறை மாறி விட்டதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

குறட்டை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து `ஸ்லீப் அப்னியே' நோய் உருவாகி உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க தமிழகத்தின் பெரிய நகரங்களில் மருத்துவமனைகள் உள்ளன.

உங்கள் தூக்க முறையை வைத்து, உங்களுக்கு நோய் உள்ளதாப என்பதை அவர்கள் கண்டறிந்து விடுவர். காரணத்தைக் கண்டறிந்து விட்டால், 30 சதவீதத்தினர் நோயைக் குணப்படுத் திக்கொள்ளலாம். டான்சில் அடினாய்டு, மூக்கினுள் வீக்கம் போன்ற பிரச்னைகளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.

குறட்டையை குறைக்க:

ஆக்சிஜனை உடலில் தேவையான இடத்திற்கு எடுத்து செல் லும் வகையில் புதிய கருவிகள் தற்போது கிடைக்கின்றன. அறையில் உள்ள ஆக்சிஜனை உள்ளிழுத்து நம் மூக்கின் வழியே உடலுக்குச் செலுத்தும் இவற்றை வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம்.

குறட்டையைக் குறைக்க மேலும் சில கருவிகள் விளம்பரப் படுத்தப்படுகின்றன. விசேஷ தலையணை, கழுத்துப் பட்டைகள், நாக்கை அழுத்திப் பிடிக்கும் கருவிகள் என பல வகைகள் உள்ளன. குறட்டை விடுபவரை, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு திருப்பி படுக்க வைத்தாலே குறட்டை ஒலி குறையும்.

ஸ்பைரோ மீட்டர் கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல், பலூன் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல், ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால் குறட்டை குறைகிறது என்பது ஆய்வில் கண்டறிந்த உண்மை.

யோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது. தினமும் 45 நிமிடம் யோகா, மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடை பயிற்சி போன்ற பழக்கங்களை, சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும். இதனால் இளவயது பருமனைக் குறைக்கலாம். திடீர் மரணத்தையும் தவிர்க்கலாம்.

சிகிச்சை முறை:

குறட்டை பிரச்சினையை அறுவை சிகிச்சை மூலம் குணப் படுத்தலாம். எல்.ஏ.யு.பி. என்னும் லேசர் சிகிச்சை மூலம் குறட்டையைக் குறைக்க முடியும். குறட்டைக்கு முதல் சிகிச்சை உடல் எடையை குறைப்பதுதான்.

அடுத்து காற்றுச் செல்லும் பாதையிலுள்ள அடைப்பு அதிகமாக இருந்தால் மூக்கு, உள்நாக்கு, தொண்டை போன்ற பகுதிகளை பரிசோதித்து அடைப்புள்ள இடத்தைக் கண்டறிந்து லேசர் கிச்சையின் மூலம் அடைப்பை சரி செய்யலாம்.

முற்றிய நிலையிலிருக்கும் நோயாளிக்கு ஆபரேஷன் செய்தாலும் சரியான தீர்வளிக்காது என்பதால் சிறிகிறி என்கிற மாஸ்க்கை ஒவ்வொரு நாளும் தூக்கத்தின்போதும் அணிந்துகொள்ளத் தருகிறோம். அதை அவர்கள் அணிவதால், அந்த மாஸ்க்கிலுள்ள ஆக்சிஜன் அடைப்புள்ள இடத்தில் வேகமாக அழுத்தம் கொடுத்து அடைப்பை விலக்கி, காற்று நன்கு செல்ல உதவுகிறது.

இதனால் அவர்கள் குறட்டை பிரச்சினையில்லாமல் ஆழமான தூக்கத்தை அனுபவிக்க முடிகிறது. காற்றடைப்பை கண்டறிய மருத்துவ மனையில் நவீனமான சிலிப்லேப் என்கிற முழுதும் கம்ப்ïட்டர் மயமாக்கப்பட்ட தூங்கும் அறையுள்ளது. நோயாளியை அந்த அறைக்குள்ளே ஒரு இரவு முழுவதும் தூங்க விடவேண்டும்.

அவரது உடலில் ஒன்பது இடங்களில் கம்ப்யூட்டரோடு இணைக்கப்பட்ட கேபிள்கள் பொருத்தப்படும். அது அன்று இரவு முழுவதும் அவர் தூங்குவது, குறட்டை விடுவது எத்தனை முறை விழிப்பு வந்து புரண்டு படுத்தார், எந்தப் பக்கமாக படுக்கும்போது குறட்டைகளின் தன்மை எப்படியிருந்தது.

ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, மூளைக்கும், மார்புக்கும் காற்று சென்று வந்த நிலை, அடைப்பு எங்கேயிருக்கிறது என்பதை துல்லியமாகக் கண்டறிந்து விடலாம் என்கிறார் டாக்டர் ரவிராமலிங்கம்.

http://www.maalaimalar.com/2011/01/26125828/medical-uses.html


Wednesday, November 14, 2012

காதல் என்ற மாயை சாதி கலவரமாக மாறியது ஏன்?

காதல் என்ற மாயை சாதி கலவரமாக மாறியது ஏன்?

நமது சமூகத்தில் இன்று பரவலாக வளர்ந்து வரும் வியாதி காதல். அரும்பு மீசை முளைக்க தொடங்கும் முன்னே ஒரு துணையை தேட ஆரம்பித்து விடுகின்றான். கேடுகெட்ட கூத்தடிகளான சினிமாத் துறையினரும் தங்கள் பங்குக்கு காதல் சீரழிவை உரம் போட்டு வளர்க்கின்றனர். ஒரு ஹீரோவாக இருந்தால் பெண்களை சீண்ட வேண்டும்: அந்த பெண்ணின் அப்பனிடம் மல்லுக்கு நிற்க வேண்டும். முடியாத பட்சத்தில் பெண்ணை இழுத்துக் கொண்டு ஓட வேண்டும். இப்படியே படங்களை எடுத்து நமது இளைஞர்களை ஒரு வழி பண்ணி விட்டனர் இந்த கூத்தாடிகள்.






இந்த சினிமாக்களை பார்த்து காதல் செய்வதையே முழு நேர வேலையாக கொண்டிருக்கும் கல்லூரி மாணவர்களிலிருந்து கால் காசுக்கு வழி இல்லாதவன் வரை செய்யும் லூட்டிகளை பார்த்து அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.

தான் திருமணம் செய்யப் போகும் பெண்ணை பார்ப்பதையோ திருமணத்துக்கு முன்பு சென்று பேசுவதையோ நாம் தடை சொல்லவில்லை. அதற்கும் ஒரு அளவு உண்டு. படிக்க வந்த பெண்ணை ஆசை வார்த்தை காட்டி காதல் என்ற பெயரில் சினிமா, பீச், ஹோட்டல், என்று சுற்றிவிட்டு சில நேரங்களில் லாட்ஜூக்கும் அழைத்து செல்கிறார்கள். இந்த நேரங்களில் இருவருமே தங்களின் குடும்பத்தை நினைத்துப் பார்ப்பதில்லை. சாதி பாகுபாடு, மத பாகுபாடு, பொருளாதார பாகுபாடு அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு முடிவில் ஓடி விடுகின்றனர். சில காலத்திற்கு பிறகு ஆசை அறுபது நாள் என்பது தெரிந்தவுடன் அந்த பெண்ணை அம்போ என்று விட்டு விட்டு ஓடி விடுவதை பார்க்கிறோம். திக்கு தெரியாத காட்டில் சிக்கிய அந்த அபலைப் பெண் முடிவில் விபசார புரோக்கர்களிடம் மாட்டி சீரழிக்கப்படுகிறாள். இதுதான் அநேக நபர்களுக்கு நடந்து வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு தர்மபுரியில் நடந்த கலவரத்தை பார்த்திருப்போம். இந்த கலவரத்துக்கு மூல காரணமே காதல் விவகாரம். தலித்களுக்கு சமூக அந்தஸ்தை கொடுக்க எந்த ஆதிக்க சாதியினருக்கும் விருப்பமில்லை. நிலைமை இவ்வாறு இருக்க வன்னிய இன பெண்ணை அந்த இளைஞன் காதலித்தது முதல் தவறு. அடுத்து அந்த பெண்ணை அனுப்பி விடுங்கள் என்று கேட்ட போதே தலித் மக்கள் அந்த பெண்ணை அனுப்பியிருக்க வேண்டும். அல்லது காவல் துறையிடம் ஒப்படைத்திருக்க வேண்டும்.

வன்னிய இனத்தவர் பெண்ணின் தகப்பனை கண்டபடி பேசியதில் அவர் தற்கொலை செய்து கொள்கிறார். இதன் பிறகு வெகுண்டெழுந்த மக்கள் தலித் கிராமத்தை தீ வைத்து கொளுத்தியுள்ளனர். தீயிட வந்தது மட்டும் இவர்கள் குறிக்கோளாக இல்லாமல் கொள்ளை சம்பவங்களும் நிறைய நடந்துள்ளது. தலித்கள் முன்னேறுவதை தடுக்க இதனை வாய்ப்பாக பயன்படுத்தியி ருக்கின்றனர். பீரோக்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர். நகைகளை கொள்ளையடித்துள்ளனர். 250 வீடுகளுக்கு மேல் அந்த கும்பல் தீ வைத்துள்ளது.

சுமார் 60 இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. வாடகைக்கு ஓட்டிப் பிழைத்து வந்த டாடா ஏஸ் வாகனங்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதப்படுத்தப்பட்டுள்ளது. அண்ணா நகரில் சுமார் 50 வீடுகள் எரிக்கப்பட்டுள்ளது. இங்கே சுமார் 48 கேஸ் சிலிண்டர்களைத் திருடிச் சென்றுள்ளனர். கொண்டாம்பட்டியில் 90 வீடுகள் எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக கைது எண்ணிக்கை 138 ஆக அதிகரித்துள்ளது. தற்போது பதற்றம் தணிந்து இயல்பு நிலை திரும்பி உள்ளது. இருப்பினும் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். செல்லங்கொட்டாய் கிராம ஆண்கள் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். பாதிக்கப்பட்ட கிராமங்களை அரசியல் கட்சி குழுவினர் மற்றும் மனித உரிமை, ஆதிதிராவிடர் நல ஆணைய குழுவினர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர்.

சாதி வெறி வேரூன்ற மூல காரணம் எதுவோ அதனை தேடி அழிக்காமல் கலப்பு திருமணம் செய்தால் சாதி ஒழிந்து விடும் என்று சொல்பவர்கள் இந்த கலவரத்துக்கு என்ன பதிலை வைத்திருக்கிறார்க்ள. இந்த மக்கள் அனைவருமே உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள். வாங்கும் சம்பளத்தில் பாதி சாராயத்திலும் மீதி சாப்பாட்டிலுமாக அநேகமாக எதுவும் மிஞ்சுவதில்லை. ஏதோ ஒரு சிலர் இவர்களின் வாரிசுகள் அரசு உத்தியோகம் பார்ப்பதால் தற்போது சிறிது சேமிப்பு இவர்களிடம் தென்படுகிறது. இந்த ஏரியாக்கள் முன்பு நக்ஸல்களின் பிடியில் இருந்தது. பல அரசு திட்டங்கள் இந்த மக்களை சென்றடைந்ததால் நக்ஸல் இயக்கத்திலிருந்து விலகி இன்று சமூகத்தில் இரண்டற கலக்க ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு முன்னேறி வரும் சமூதாயத்திற்கு இத்தகைய இழப்புகளைக் கொடுத்தால் அவர்களால் தாங்க முடியுமா? இதனால் வெறுப்புற்று திரும்பவும் நக்ஸல் இயக்கத்தில் இளைஞர்கள் சேர ஆரம்பித்தால் அது ஒட்டு மொத்த மாவட்டத்துக்கும் தீராத பிரச்னையை உண்டு பண்ணாதா?

“வன்னிய இனப் பெண்களை கலப்புத் திருமணம் செய்பவர்களை வெட்டுங்கடா…வன்னியர் சங்கத் தலைவர் நான் சொல்கிறேன்” – கடந்த சித்ரா பவுர்ணமி தினத்தன்று மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் சங்க விழாவில் தங்களது கொள்கையை விளக்கி சிறப்புரை ஆற்றிய காடுவெட்டி குரு இவ்வாறு பேசியிருக்கிறார். இதனை ராமதாஸூம் மகன் அன்பு மணியும் அதே மேடையில் அமர்ந்து பேச்சை ரசித்துக் கொண்டிருந்தனர். இது ஒரு தலைவருக்கு அழகாகுமா? இன்று வரை பாதிக்கப்பட்ட மக்களை சென்று முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் எவரும் பார்க்கவில்லை. ஏனெனில் அவர்களுக்கு அந்த கிராமங்களிலிருந்து கிடைக்கும் ஓட்டுக்களே முக்கியம். மக்களின் நலனைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை.

எனவே நான் வைக்கும் கோரிக்கை சாதிகளுக்குள் உள்ள ஏற்றத் தாழ்வுகளை களைய முதலில் பாடுபடுங்கள். அதன் பிறகு பெற்றோர்களின் சம்மதத்தோடு தாராளமாக கலப்பு திருமணம் செய்து வையுங்கள். கலப்பு திருமணம் செய்கிறேன் என்று ஒவ்வொரு ஊரிலும் கலவரங்களை உண்டு பண்ணாதீர்கள்.