Followers

Sunday, August 10, 2014

கிருத்துவன் இந்துவாக மாறினால் எந்த சாதியில் சேர்த்துக் கொள்வீர்கள்?

ஜேஸ்வா அய்சக்: அய்யா, நான் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்தவன். ஹிந்து மதத்திலிருந்து மூன்று தலை முறைகளுக்கு முன்னால் மாறிய குடும்பம் எங்களுடையது. எங்களைத் தாய் மதத் திற்கு திரும்பச் சொல்லி ஹிந்து அமைப் புகள் சொல்கின்றன. அப்படி நாங்கள் மாற முன் வந்தால் எங்களை இப்போதிருக்கிற ஜாதிய அடுக்கில் எங்கே வைப்பீர்கள்?

ராம.கோபாலன்: உங்களுக்கு எந்த ஜாதியில் இணைய விருப்பம்? அதைச் சொல்லுங்கள்; எந்த ஜாதியிலும் நீங்கள் இணைய முடியும். அதை வேறு யார் ஏற்றுக் கொள்கிறார்களோ, இல்லையோ; நான் ஏற்றுக்கொள்கிறேன். பிறப்பினால் ஜாதியா? செயலினால் ஜாதியா? நீங்கள் எந்த ஜாதியில் பிறக்க வேண்டும் என்பதை நீங்களா தீர்மானித்தீர்கள்? நீங்கள் உங்கள் பெற்றோர்களைத் தீர்மானிக்க முடியுமா? நீங்கள் முதலில் சோ எழுதிய எங்கே பிராமணன்? நூலைப் படித்துப் பாருங்கள். அப்போது இதைப்பற்றி நீங்கள் புரிந்து கொள்ள முடியும். புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது

---------------------------------(துக்ளக் 6.8.2014 பக்.81).

இவர்கள் எவ்வளவுப் பெரிய கோணிப் புளுகர்கள் - திரிபு வேலைக் கில்லாடிகள் என்பதற்கு இந்தப் பதில் ஒன்று கூடப் போதுமானதுதான். எடுத்த எடுப்பிலேயே நீங்கள் எந்த ஜாதியிலும் இணைய முடியும் என்று சொல்கிறார். அதை இவர் ஏற்றுக் கொள்கிறாராம். இந்து மதத்தில் இப்படிச் சொல்லுவதற்கு இவருக்கு என்ன அருகதை?

இதனை சங்கராச்சாரியார் ஏற்றுக் கொள்வாரா? இல்லை ஜீயர்தான் ஏற்றுக் கொள்வாரா?

இப்பொழுது பிற மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாற்றியுள்ளார்களே - அவர்களை எல்லாம் விரும்பிய ஜாதியில்தான் சேர்த்துக் கொண்டு இருக்கிறார்களா?

தீண்டாமைப் பெரு நோய்ப் பீடித்த இந்து மதத்திலிருந்து பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்கள் கிறிஸ்துவ மதத்திற்கோ, முஸ்லீம் மதத்துக்கோ சென்றுள்ளனர்; அவர்கள் மீண்டும் இந்து மதத்திற்குள் வந்து நாங்கள் பிராமண ஜாதியில் இணைய விரும்புகிறோம் என்று சொன்னால் இவர்களின் அர்த்தமுள்ள இந்து மதம் ஏற்றுக் கொள்ளுமா? அப்படி வரும் போது அந்த மக்களை பிராமண ஜாதியில் தான் சேர்க்க வேண்டும் என்று சங்கர மடத்தின் முன்னோ, ஜீயர் முன்னோ முற்றுகைப் போராட்டத்தை நடத்த முன் வருவாரா இந்த ராமகோபாலர்?

முதலில் அப்படி சொல்லிவிட்டு, அடுத்த வரியில் அனுமார் தாண்டவத்தைக் கவனிக்க வேண்டும். நீங்கள் எந்தஜாதியில் பிறக்க வேண்டும் என்பதை நீங்களா தீர்மானித்தீர்கள்? என்று விதாண்டாவாதம் பேசுவது ஏன்? இதன் பொருள் என்ன? ஜாதி என்பது நாம் தீர்மானிக்காமலேயே வந்தது; அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதானே!

ஒரு வரியைச் சொல்லி, அடுத்த வரியிலேயே பித்தலாட்டம் செய்யும் இந்தப் பூணூல்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சோவின் எங்கே பிராமணன்? என்னும் நூலைப் படிக்கச் சொல்லுகிறார். பாவம் சோ.

நான் வேதங்கள் உபநிஷத்துகள், சாத்திரங்கள், புராணங்களை ஒழுங்காக படிக்கவில்லை என்று ஒப்புக் கொண்டு விட்டு எழுதுகிறார் சோ. அவரைத் துணைக்கழைப்பதுதான் வேடிக்கை.

நான்கு வருணங்கள் பிறப்பின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டவை யல்ல. குணம், வாழும் வகை ஆகியவற் றின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட இந்த நான்கு வகைகள் காலப் போக்கில் பல மாற்றங்களைச் சந்தித்து பிறப்பின் அடிப்படையில் ஏற்படுகிற பிளவுகளாக உருவெடுத்து விட்டன என்று எழுது கிறாரே சோ.

அப்படியா சங்கதி? இதனை சங்கராச் சாரியார் ஏற்றுக் கொள்கிறாரா?

இந்த ஜாதி தர்மமேதான் உள்ளூர அவரவர்களின் குணமாக இருக்குமாத லால் - குணத்தால் சதுர்வர்ணம் பிரிவதாக பகவான் சொன்னதும் (கீதையில் கிருஷ்ணன்) பிறப்பால் இப்படி ஜாதியாகப் பிரிவதும் ஒன்றேதான் ஒன்றுக்கொன்று முரணல்ல என்று கூறுகிறாரே சங்கராச் சாரி சந்திரசேகேந்திர சரஸ்வதியார் (தெய்வத்தின் குரல் பார்க்க)
பிறப்பில் வருவது ஜாதி குணம் என்று மட்டைக்கு இரண்டு கீற்றாக கிழித்துச் சொல்லி விட்டாரே - என்ன பதில்?

இன்னொன்று முக்கியம்: ஸ்மார்த்தர் களாக இருக்கின்ற நாம் ஸ்மிருதியிலே என்ன சொல்லியிருக்கிறதோ, அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சங்கராச் சாரியார் எழுதியுள்ளார்.

சரி.. அந்த மனுஸ்ருதி என்ன கூறு கிறது?

அந்தப் பிரம்மாவானவர். இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன்முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தார்க்கு இம்மைக்கும் மறுமைக்கும் உரிய உபயோகமான கருமங்களைப் பகுத்தார் (மனுதர்மம் அத்தியாயம் 1 சுலோகம் 87),.

ஆக பிரம்மா எனும் கடவுள் உண்டாக்கும் பொழுதே பிராமணர், க்ஷத்தியர், வைசியர், சூத்திரன் என்ற படைத்து விட்ட பிறகு, குணம், வாழும் வகை ஆகிய வற்றின் அடிப்படையில் ஏற்படுத்தப் பட்டவை தான் இந்த வருணங்கள் என்ற சோவின் கூற்று அடிப்பட்டுத் தலைக்குப்புற விழுந்து விடுகிறதே!

பாவம் பார்ப்பனர்கள்! சாஸ்திரங்களில் உள்ளதை உள்ளபடியே காப்பாற்ற வழி தெரியாமல், வக்கு இல்லாமல் அதே நேரத்தில் தந்தை பெரியார் எழுப்பிய அடிப்படைப் பகுத்தறிவு சிந்தனை என்னும் சூட்டுக்கோலின் வலி பொறுக்க முடியாமல் - முகம் கொடுக்க முடியாமல், புதிய முறையில் ஏதாவது வெண்டைக் காய், விளக்கெண்ணெய் வியாக்கியானம் செய்தாவது தலை தப்புமா என்று பார்க்கிறார்கள்.

அவர்களுக்காகப் பரிதாப்படுவோம் - எச்சரிக்கையாக!
-------------------- கருஞ்சட்டை 3-8-2014 "விடுதலை” யில் எழுதிய கட்டுரை

8 comments:

ஆனந்த் சாகர் said...

@ சுவனப்பிரியன்,

ஒருவர் இஸ்லாத்திற்கு மாறினால் அவரை எந்த இஸ்லாமிய பிரிவில் சேர்த்து கொள்வீர்கள் என்று சில மாதங்களுக்கு முன்பு நான் கேட்டதற்கு இதுவரை உங்களிடமிருந்து பதில் வரவே இல்லை. இதற்கு பதில் சொல்ல உங்களுக்கு துப்பு இல்லை, ஆனால் ஒருவர் ஹிந்துவாக மாறினால் அவரை எந்த சாதியில் சேர்த்து கொள்வீர்கள் என்று மட்டும் மற்றவர்களை கேட்க முடிகிற உங்களது இரட்டைவேடம் எங்களுக்கு தெரியும்.

ஆனந்த் சாகர் said...

@ சுவனப்பிரியன்,

//நான்கு வருணங்கள் பிறப்பின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டவை யல்ல. குணம், வாழும் வகை ஆகியவற் றின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட இந்த நான்கு வகைகள் காலப் போக்கில் பல மாற்றங்களைச் சந்தித்து பிறப்பின் அடிப்படையில் ஏற்படுகிற பிளவுகளாக உருவெடுத்து விட்டன என்று எழுது கிறாரே சோ.//

இது முற்றிலும் உண்மை. இதன்படி ஒரே குடும்பத்தில் அவரவர் தேர்ந்தெடுத்த வாழ்க்கைமுறை, தொழிலுக்கு ஏற்ப ஒருவர் பிராமணராகவும், ஒருவர் ஷத்திரியராகவும் ஒருவர் வைசியராகவும் ஒருவர் சூத்திரராகவும் இருக்க முடியும். வர்ண முறை பிறப்பின் அடிப்படையில் இருக்கவில்லை. வேத காலத்தில் அப்படித்தான் இருந்தது.

ஆனந்த் சாகர் said...

//பாவம் பார்ப்பனர்கள்! சாஸ்திரங்களில் உள்ளதை உள்ளபடியே காப்பாற்ற வழி தெரியாமல், வக்கு இல்லாமல் அதே நேரத்தில் தந்தை பெரியார் எழுப்பிய அடிப்படைப் பகுத்தறிவு சிந்தனை என்னும் சூட்டுக்கோலின் வலி பொறுக்க முடியாமல் - முகம் கொடுக்க முடியாமல், புதிய முறையில் ஏதாவது வெண்டைக் காய், விளக்கெண்ணெய் வியாக்கியானம் செய்தாவது தலை தப்புமா என்று பார்க்கிறார்கள்.//

குரான், ஹதீத்களில் உள்ள குப்பைகளுக்கு நீங்கள் கொடுக்கிற வியாக்கியானம் வெண்டைக் காய், விளக்கெண்ணெய்யைவிட மிக மிக வழவ்ழப்பாகத்தானே இருக்கிறது! நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு உங்களால் எப்போதாவது அறிவுப்பூர்வமான பதில் கூற முடிந்ததா?

ஆனந்த் சாகர் said...

// இந்த ஜாதி தர்மமேதான் உள்ளூர அவரவர்களின் குணமாக இருக்குமாத லால் - குணத்தால் சதுர்வர்ணம் பிரிவதாக பகவான் சொன்னதும் (கீதையில் கிருஷ்ணன்) பிறப்பால் இப்படி ஜாதியாகப் பிரிவதும் ஒன்றேதான் ஒன்றுக்கொன்று முரணல்ல என்று கூறுகிறாரே சங்கராச் சாரி சந்திரசேகேந்திர சரஸ்வதியார் (தெய்வத்தின் குரல் பார்க்க)
பிறப்பில் வருவது ஜாதி குணம் என்று மட்டைக்கு இரண்டு கீற்றாக கிழித்துச் சொல்லி விட்டாரே - என்ன பதில்?//

பிறப்பால் ஜாதியாக பிரிவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. என்னை போன்ற பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மையான ஆன்மீகவாதிகள் இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எந்த தனி மனிதரும் ஹிந்து மதத்தின் அத்தாரிட்டி கிடையாது. சங்கராச்சாரி சொல்வது அவரது தனிப்பட்ட கருத்து. அது ஹிந்து மதம் ஆகாது.

ஆனந்த் சாகர் said...

//எடுத்த எடுப்பிலேயே நீங்கள் எந்த ஜாதியிலும் இணைய முடியும் என்று சொல்கிறார். அதை இவர் ஏற்றுக் கொள்கிறாராம். இந்து மதத்தில் இப்படிச் சொல்லுவதற்கு இவருக்கு என்ன அருகதை?//

ஜாதியே இருக்க கூடாது என்பது என் போன்றோரின் கருத்து. ஜாதி அமைப்பு ஒரு மனிதகுல விரோதமான தீமை. அதை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். ஜாதி அடையாளத்தை ஒரு குற்றசெயலாக அறிவித்து அதற்கு தண்டனை வழங்கவேண்டும், இதை நிறைவேற்ற இந்திய அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து. ஜாதியை முற்றிலுமாக ஒழிப்பதற்கு எவரும் இதுவரை உண்மையான முயற்சி எடுக்கவில்லை என்பது என் ஆதங்கம்.

Anonymous said...

"ஒருவர் இஸ்லாத்திற்கு மாறினால் அவரை எந்த இஸ்லாமிய பிரிவில் சேர்த்து கொள்வீர்கள்"

ஒருவன் இஸ்லாத்திற்கு மாறினால் அவன் முஸ்லிம், எங்களிடம் பல கருத்து வேறுபாடு இருப்பது உண்மையே. நாங்கள் அனைவரும் ஏக இறைவன் ஒருவனையே வணங்குகின்றோம் உங்களை போன்று பல கடவுள்களை வணங்குவதில்லை (ஆளுக்கு ஒரு கடவுள் ஊருக்கு ஒரு கடவுள் ஜாதிக்கு ஒரு கடவுள் ) ஆனால் நாங்கள் இந்துக்களை போன்று மற்றவர்களை தீண்ட தகாதவர்கள் என்று யாரையும் ஒதுக்கவில்லை (மாற்று மத சகோதரர்கள்,கீழ் ஜாதி மக்கள் உட்பட) , வணக்க ஸ்தலங்களில் யாரையும் வரவிடாமல் தடுப்பதில்லை உங்களை போன்று, நீங்கள் இதை மக்காலயே காணலாம் அங்கே ஷியாக்கள் கூட வந்து செல்கின்றார்கள் யாரும் யாரையும் தடுப்பதில்லை, இதை போன்று உங்களில் ஒரு சூத்திரன் எல்லா கோவிலிலும் நுழைய முடியுமா???
சொல்லுங்கள் Mr.
@வருத்த சாஹர்

ஆனந்த் சாகர் said...

//ஒருவன் இஸ்லாத்திற்கு மாறினால் அவன் முஸ்லிம், எங்களிடம் பல கருத்து வேறுபாடு இருப்பது உண்மையே.//

அதேபோல் ஒருவர் ஹிந்து மதத்திற்கு மாறினால் அவர் ஹிந்து. ஹிந்துக்களிடம் உள்ள ஜாதி பிரச்சினை போன்ற எல்லா பிரச்சினைகளையும் ஹிந்துக்களே தீர்த்துக்கொள்வர். வந்தேறி காட்டுமிராண்டி மதத்தை பின்பற்றும் மூடர்களுக்கு அதில் தலையிட எந்த அருகதையும் இல்லை.

// நாங்கள் அனைவரும் ஏக இறைவன் ஒருவனையே வணங்குகின்றோம் உங்களை போன்று பல கடவுள்களை வணங்குவதில்லை//

ஏக இறைவனையே ஹிந்துக்கள் பல உருவங்களாக வழிபடுகின்றனர். ஒரே கடவுள்தான் பல கடவுள்களாக இருக்கிறது என்பது ஹிந்து கொள்கை. இது முற்றிலும் உண்மை, உண்மையை தவிர வேறெதுவுமில்லை. முஸ்லிம்களின் சிறிய மூளைக்கு இது எட்டுவதில்லை. அது அவர்களின் பிரச்சினை.

// (ஆளுக்கு ஒரு கடவுள் ஊருக்கு ஒரு கடவுள் ஜாதிக்கு ஒரு கடவுள் )//

இருந்துவிட்டு போகட்டும். அதனாலென்ன பிரச்சினை?

// ஆனால் நாங்கள் இந்துக்களை போன்று மற்றவர்களை தீண்ட தகாதவர்கள் என்று யாரையும் ஒதுக்கவில்லை (மாற்று மத சகோதரர்கள்,கீழ் ஜாதி மக்கள் உட்பட) , வணக்க ஸ்தலங்களில் யாரையும் வரவிடாமல் தடுப்பதில்லை உங்களை போன்று,//

அப்படியா? தவ்ஹீத் மசூதியில் சுன்னத ஜமாத்தை சேர்ந்த முஸ்லிம்கள், ஷியா முஸ்லிம்கள், அஹ்மதியா முஸ்லிம்கள், போஹ்ரா முஸ்லிம்கள், பஹ்லவி முஸ்லிம்கள் தொழுகிறார்களா? அல்லது அவர்களின் மசூதிகளில்தான் தவ்ஹீத் ஜமாத்தினர் தொழுகிறார்களா? அப்படி நடந்தால் ஆதாரத்தை கொடுக்கவும்.

//நீங்கள் இதை மக்காலயே காணலாம் அங்கே ஷியாக்கள் கூட வந்து செல்கின்றார்கள் யாரும் யாரையும் தடுப்பதில்லை,//

ஹஜ் யாத்திரை என்பதால் மக்காவில் அனுமதிக்கிறார்கள். காபா எல்லா பிரிவு முஸ்லிம்களுக்கும் ஹஜ் செய்ய பொதுவானது என்ற கொள்கையை சவூதி அரசு வைத்திருக்கிறது. மற்ற பிரிவு முஸ்லிம்களை தடுத்தால் பெரிய அவர்கள் பெரிய களேபரம் செய்வார்கள் என்று வஹாபிகளுக்கு தெரியும். அதற்கு பயந்தே அவர்கள் மற்றவர்களை அனுமதிக்கிறார்கள். மற்றபடி ஒரு பிரிவு முஸ்லிம் மற்ற பிரிவு முஸ்லிமின் மசூதியில் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுகிறானா? இருந்தால் ஆதாரம் காட்டவும்.

// இதை போன்று உங்களில் ஒரு சூத்திரன் எல்லா கோவிலிலும் நுழைய முடியுமா???//

இப்பொழுது எந்த சூத்திரன் எந்த ஹிந்து கோவிலில் நுழைவதை யார் தடுக்கிறார்கள் என்று ஆதாரத்தோடு காட்டவும். அப்படி யாராவது தடுத்தால் காவல் நிலையத்தில் எந்த ஹிந்துவும் புகார் கொடுக்கலாம்.

எந்த ஜாதியை சேர்ந்த எந்த ஹிந்துவும் எந்த ஹிந்து கோயிலுக்கும் செல்வான். அவனுக்கு மன தடை இல்லை. ஆனால் எந்த முஸ்லிமாவது பிற பிரிவு மசூதிக்கு தொழுகை புரிய செல்வானா? அப்படி செல்லத்தான் அவனுக்கு மனம் வருமா?

Anonymous said...

சுவனரே,
மற்ற மதங்களை விமர்ச்சிக்கும்போது மட்டும் மொழிபெயர்ர்பு தவறாக இருக்கலாம் என்று உங்களுக்கு தோன்றவில்லையா ?