Followers

Wednesday, August 20, 2014

புரோட்டீன்களைப் பற்றி பரிணாமவியல் சொல்வதென்ன?பரிணாமவியலை ஆதரிக்கும் ஒரு ஆராய்ச்சியாளரின் புலம்பல்:

"ஹையோ..ஹையோ.... நானா இது!....பரிணாமவியலை ஆழ்ந்து படிக்க ஆரம்பிச்சதிலிருந்து என் நிழல் கூட குரங்கு மாதிரியே தெரியுதே! கடவுளே என்னை காப்பாத்து.."

--------------------------------------------------------------------------

நம உடலில் உள்ள அல்புமீன் என்பது நீரில் கரையும் தன்மை உடைய எந்தவொரு புரதப் பொருளையும் குறிக்கும். இவை அடர்ந்த உப்புக்கரைசலிலும் ஓரளவிற்குக் கரையும் தன்மை கொண்டவை.. நமது உடலில் உள்ள கொழுப்பு, கொலஸ்ட்ரால், ஹார்மோன்கள், சர்க்கரை போன்ற அனைத்தையும் ஒரு கட்டுக்குள் வைத்திருப்பதற்கு இந்த புரோட்டீன்கள் மிகவும் உதவுகிறது. நமது உடலின் ரத்தக் குழாய்கள் மூலமாக பயணித்து லிவரிலிருந்து சத்துக்களை பிரித்து கொடுத்து எந்த பொருளுக்கு எத்தனை சதவீதம் தேவை என்பதை தீர்மானித்து தனது வேலையை கச்சிதமாக செய்கிறது. இதில் எந்த தவறும் ஏற்படாமல் எந்த குழப்பமும் இல்லாமல் தனது வேலையை செய்வதை பார்த்து உயிரியல் வல்லுனர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.


(கோழி முட்டையின் வெள்ளைக் கருவில் உள்ள புரதம்)

நமது உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் இந்த புரோட்டீன்கள் சிறந்த சேவையாற்றுகிறது. ஒரு கட்டிடத்திற்கு செங்கல் எவ்வளவு அவசியமோ அதுபோல் நமது உடலுக்கு அல்புமீன் புரோட்டீன்களின் பங்கு மிக அவசியமாகிறது. சிறு நீரகத்தை எடுத்துக் கொண்டால் அங்கு இந்த புரோட்டீன் எந்த நேரமும் தங்குவதில்லை. எப்பொழுதெல்லாம் சிறு நீரகத்தில் பிரச்னை ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் உடன் ஓடி வந்து பிரச்னையை தீர்த்து வைத்து சீராக செய்ல்பட வைப்பதில் இதன் பங்கு முக்கியமானது. இந்த புரோட்டீன்கள் செடிகொடிகளின் விதைகளிலேயும் உள்ளன. ஒரு கோழி முட்டையின் வெள்ளைக் கருவிலும் உள்ளது அல்புமின் என்ற புரதம் . இதன் பலனை உணர்ந்த பலர் முட்டையின் மஞ்சள் கருவை நீக்கி விட்டு வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடுவதைப் பார்ததிருக்கிறோம். இந்த புரதத்தின் முக்கியத்துவத்தை அறிந்த உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் இதன் செயலைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர். நாம் கேட்பது இந்த புரோட்டீனுக்கு இத்தகைய அறிவை கொடுத்து அதனை வேலை வாங்குவது யார்?

ஒரு உயிரி மற்றொரு உயிராக பரிணாமம் அடைந்தால் முக்கியமாக இந்த புரோட்டீனின் அளவும் கூடவோ அல்லது குறைவாகவோ பரிணாமம் அடைந்திருக்க வேண்டும். இது பற்றி பரிணாமவியலார் எந்த தகவலும் அளிக்கவில்லை. இது பற்றி டார்வின் அறிந்திருக்கவுமில்லை.

மற்றொரு அதிசயத்தையும் பார்ப்போம். நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் இரைப் பைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்குள்ள சுரப்பிகளால் நாம் சாப்பிடும் பிரியாணி, மாட்டு கறி, என்று எதையெல்லாம் உள்ளே தள்ளுகிறோமோ அத்தனையையும் கரைத்து உடலுக்கு சக்தியாகவும் தேவையற்றவைகளை மலமாகவும் கொல்லைப் புறம் அனுப்பி விடுகிறது. இவை அனைத்து வேலைகளும் நாம் சாப்பிடும் உணவை விட மிருதுவான இரைப் பையில் நடக்கிறது. கடினமான உணவுகளையே கரைத்து விடும் இரைப் பை பழுதாகாமல் இருப்பதற்கான சூட்சுமம் என்ன? ஆட்டுக் கறியும், மாட்டுக் கறியையும் கரைத்து விடும் இந்த இடம் இரைப் பையையும் கரைத்து விட வேண்டும் அல்லவா? ஆனால் அவ்வாறு நிகழ்வதில்லை. ஏன் நிகழ்வதில்லை?ஏனென்றால் அந்த இரைப்பையின் சுவர்களில் ம்யூகோஸா என்ற பெயருடைய வழவழப்பான பூச்சு பூசப்பட்டுள்ளது. சாராயம் இதன் எதிரி. நம் குடிமகன்கள் அளவுக்கு மீறி சாராயத்தை உள்ளே தள்ளுவதால் இந்த ம்யூகோஸா என்ற பொருள் கரைந்து வெளியேறி ம்யூகோஸாவின் அளவு குறைந்து விடுகிறது. இதன் பிறகுதான் குடிகாரர்களுக்கு வயிற்றெரிச்சல் ஆரம்பமாகிறது. பல உயிரினத்திற்கும் இந்த பொருளின் அளவு மாறுபட வேண்டும். ஏனெனில் யானையின் செரிமானத்துக்கும் சிங்கத்தின் செரிமானத்துக்கும் குரங்கின் செரிமானத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ம்யூகோஸா என்ற பொருளின் அளவு உயிரினத்தின் செரிமாணத்துக்கு ஏற்ப மாறுபட்டால்தான் அந்த உயிரால் உயிர்வாழ முடியும். பரிணாமம் இஙகிருந்து தொடங்க வேண்டும். இதற்கு எந்த ஆய்வாவது செய்து சமர்ப்பித்துள்ளார்களா என்றால் எதுவும் இல்லை. இந்த இரைப்பையின் உள்ளே ம்யூகோஷா என்ற பொருளை அளந்து அமைத்தவன் யார்? அறிவியல் அறிஞர்களால் இன்று வரை இதற்கான காரணத்தை பெற முடியவில்லை.

அல்புமீனைப் பற்றியும், ம்யூகோஸாவைப் பற்றியும் டார்வின் தனது பரிணாம கொள்கையில் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. பரிணாமம் நடை பெற முதலில் டிஎன்ஏ, குரோமசோம்கள், புரோட்டீன்கள் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அதன் பிறகுதான் புறத் தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். இந்த புரோட்டீன்களின் அவசியத்துக்கு காரணத்தை கண்டு பிடிக்காமல் வெளித்தோற்றத்தை வைத்து குரங்கிலிருந்து மனிதன் வந்ததையும் மானிலிருந்து ஒட்டகம் வந்ததையும் தனது கற்பனைத் திறனால் பலரை நம்ப வைத்து விட்டார் டார்வின்.

http://en.wikipedia.org/wiki/Gastric_mucosa
http://www.buzzle.com/articles/albumin-in-urine.html
http://www.albumin.org/
http://en.wikipedia.org/wiki/Albumin

24 comments:

வேந்தர்க்கெல்லாம் வேந்தன் said...

டார்வினின் பரிணாமவியல் கொள்கை மிகவும் சரி.
//அல்புமீனைப் பற்றியும், ம்யூகோஸாவைப் பற்றியும் டார்வின் தனது பரிணாம கொள்கையில் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை//

இதற்கு தேவையே இல்லை.சரி,குர் ஆன் என்ன சொல்கிறது?
மனிதர்கள் ஒரு வகை குரங்கினம் என்கிறார் டார்வின்,அதற்கு ஆதாரங்களும் உள்ளன.
ஆனால் குர்-ஆன் மனிதர்கள் களிமண்ணில்லிருந்து வந்ததாய் அல்லவா சொல்கிறது.
டார்வினை கிண்டல் செய்யும் நீங்கள் முதலில் குர்-ஆனை கிண்டல் செய்யுங்கள்.

Anonymous said...

அடடா என்ன ஒரு ஆராய்ச்சி , என்ன ஒரு அறிவு, உங்களுடைய மூளையை மியூசியத்தில்தான் வைக்க வேண்டும். மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்பதிலேயே உங்கள் பரிணாம வளர்ச்சி பற்றிய அறிவு எந்த அளவுக்கு என்று விளங்குகிறது.

//இந்த புரதத்தின் முக்கியத்துவத்தை அறிந்த உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் இதன் செயலைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர்.//

முஸ்லிம்களின் மூளையில் சிந்திக்க வைக்கக் கூடிய பல நியூரான்கள் செத்த பிறகும் எப்படி பேசும்வரை வெளியில் தெரிவதில்லை என்பதிலும் பலர் ஆச்சரியப்படுகின்றனர்.

"நானும் பரிணாம வளர்ச்சியை எதிர்த்து கட்டுரை எழுதுவேன்" என்பதை காட்ட எழுதினீர்களா ? ஓரளவுக்காவது தெரிந்து கொண்டு எழுத வேண்டாமா ? முகமது முதல் கிருஸ்தவர்களிடம் இருந்துதானே நிறைய காப்பி அடித்தீர்கள் ? இப்பொழுதும் சில பரிணாம எதிர்ப்பு கட்டுரைகளை அவர்களிடம் இருந்து காப்பி அடித்து போட வேண்டியதுதானே ? முஸ்லிம்களால் சுயமாக சிந்திக்க முடியாது என்பதைத்தான் ஏற்கன்வே ஏற்றுக் கொண்டு விட்டோமே. பிறகு என்ன காப்பி அடிப்பதில் தயக்கம் ?

அப்படியே படைப்பு கொள்கைக்கு என்ன ஆதாரம் என்று கிருஸ்தவர்களிடம் கேட்டு சொல்லுங்கள். உங்களை வருத்திக் கொள்ள வேண்டாம். நாத்திகவாதிகள் படைப்புவாதம் என்பதை கர்பனை என்கிறார்கள். ஆதாரத்தை அவர்கள் முகத்தில் விட்டெரியுங்கள்.

சுவனப் பிரியன் said...


//மனிதர்கள் ஒரு வகை குரங்கினம் என்கிறார் டார்வின்,அதற்கு ஆதாரங்களும் உள்ளன.
ஆனால் குர்-ஆன் மனிதர்கள் களிமண்ணில்லிருந்து வந்ததாய் அல்லவா சொல்கிறது.
டார்வினை கிண்டல் செய்யும் நீங்கள் முதலில் குர்-ஆனை கிண்டல் செய்யுங்கள். //

மனிதன் மண்ணும் தண்ணீரும் கலந்த களிமண்ணால் படைக்கப் பட்டான் என்று குர்ஆன் கூறுகிறது. முதல் மனிதரை மண்ணாலும் தண்ணீராலும் படைத்து அதன் பின்னர் கருவுற்ற சினை முட்டையிலுந்து பல்கிக் பெருகச் செய்ததாக பல வசனங்கள் கூறுகிறது. தண்ணீரோடு மற்ற தனிமங்களை சேர்த்து விஞ்ஞானம் சொன்னாலும் அந்த தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்தே உண்டாகின்றன. மனிதன் உடம்பு மண்ணும் தண்ணீரும் கலந்து உண்டாக்கப் பட்டவை என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க கீழ்க் கண்ட விபரங்களை பார்த்து தெளிவு பெறுங்கள்.

ஆக்ஸ்போர்ட் நிறுவனத்தில் கிளாரெண்டன் பதிப்பகத்தால் ஜான் நம்ஸ்லே வெளியிட்ட 'தி எலமெண்ட்ஸ்' என்ற ஆராய்ச்சிக் கட்டுரை 1998 ல் மூன்றாம் பதிப்பாக வெளியிடப் பட்டது.

எழுபது கிலோ கிராம் எடையுள்ள மனித உடலில் உள்ள மூலக் கூறுகளை கீழே காணலாம்:

1. ஆக்சிஜன் - 43 கிலோ கிராம்
2. கார்பன் - 16 கிலோ கிராம்
3. ஹைட்ரஜன்- 7 கிலோ கிராம்
4. நைட்ரஜன் - 1.8 கிலோ கிராம்
5. கால்சியம் - 1 கிலோ கிராம்
6. பாஸ்பரஸ் - 780 கிராம்
7. பொட்டாஷியம் - 140 கிராம்
8. சோடியம் - 100 கிராம்
9. குளோர்ன் - 95 கிராம்
10. மக்னீசியம் - 19 கிராம்
11. இரும்பு - 4.2 கிராம்
12. ஃப்ளூரின் - 2.6 கிராம்
13. துத்தநாகம் - 2.3 கிராம்
14. சிலிக்கன் - 1 கிராம்
15. ருபீடியம் -0.68 கிராம்
16. ஸ்ட்ரோன்ட்டியம் - 0.32 கிராம்
17. ப்ரோமின் - 0.26 கிராம்
18. ஈயம் - 0.12 கிராம்
19. தாமிரம் - 72 மில்லி கிராம்
20. அலுமினியம் - 60 மில்லி கிராம்
21. காட்மியம் - 50 மில்லி கிராம்
22. செரியம் - 40 மில்லி கிராம்
23. பேரியம் - 22 மில்லி கிராம்
24. அயோடின் -20 மில்லி கிராம்
25. தகரம் - 20 மில்லி கிராம்
26. டைட்டானியம் -20 மில்லி கிராம்
27. போரான் - 18 மில்லி கிராம்
28. நிக்கல் - 15 மில்லி கிராம்
29. செனியம் - 15 மில்லி கிராம்
30. குரோமியம் - 14 மில்லி கிராம்
31. மக்னீஷியம் - 12 மில்லி கிராம்
32. ஆர்சனிக் - 7 மில்லி கிராம்
33. லித்தியம் - 7 மில்லி கிராம்
34. செஸியம் - 6 மில்லி கிராம்
35. பாதரசம் - 6 மில்லி கிராம்
36. ஜெர்மானியம் - 5 மில்லி கிராம்
37. மாலிப்டினம் - 5 மில்லி கிராம்
38. கோபால்ட் - 3 மில்லி கிராம்
39. ஆண்டிமணி - 2 மில்லி கிராம்
40. வெள்ளி - 2 மில்லி கிராம்
41. நியோபியம் - 1.5 மில்லி கிராம்
42. ஸிர்க்கோனியம் - 1 மில்லி கிராம்
43. லத்தானியம் - 0.8 மில்லி கிராம்
44. கால்ஷியம் - 0.7 மில்லி கிராம்
45. டெல்லூரியம் - 0.7 மில்லி கிராம்
46. இட்ரீயம் - 0.6 மில்லி கிராம்
47. பிஸ்மத் - 0.5 மில்லி கிராம்
48. தால்வியம் - 0.5 மில்லி கிராம்
49. இண்டியம் - 0.4 மில்லி கிராம்
50. தங்கம் - 0.4 மில்லி கிராம்
51. ஸ்காண்டியம் - 0.2 மில்லி கிராம்
52. தண் தாளம் -0.2 மில்லி கிராம்
53. வாளடியம் - 0.11 மில்லி கிராம்
54. தோரியம் - 0.1 மில்லி கிராம்
55. யுரேனியம் - 0.1 மில்லி கிராம்
56. சமாரியம் - 50 மில்லி கிராம்
57. பெல்யம் - 36 மில்லி கிராம்
58. டங்ஸ்டன் - 20 மில்லி கிராம்

மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற் கண்ட 58 தனிமங்களின் கலவையே மனிதன் என்கிறது அறிவியல் . ஆக்சிஜனும், ஹைட்ரஜனும் கலந்த கலவையே தண்ணீர் என்பதும் நமக்குத் தெரியும். எனவே பூமியில் கிடைக்கும் அனைத்து தனிமங்களின் கூட்டுக் கலவையே மனிதன் என்பது அறிவியலும் நிரூபித்துள்ளது. குர்ஆனும் மெய்ப்பிக்கிறது.

http://web2.airmail.net/uthman/elements_of_body.html

சுவனப் பிரியன் said...

வேந்தர்க்கெல்லாம் வேந்தரே!

மனிதன் களி மண்ணிலிருந்துதான் படைக்கப்பட்டான் என்பதற்கு அறிவியல் ஆதாரத்தை சமர்ப்பித்து விட்டேன். குரங்கிலிருந்து மனிதன் பரிணாமம் அடைந்தான் என்பதற்கு நிரூபிக்கப்பட்ட அறிவியல் ஆதாரங்களை சமர்ப்பீர்களா? ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

Anonymous said...

//மனிதன் களி மண்ணிலிருந்துதான் படைக்கப்பட்டான் என்பதற்கு அறிவியல் ஆதாரத்தை சமர்ப்பித்து விட்டேன். குரங்கிலிருந்து மனிதன் பரிணாமம் அடைந்தான் என்பதற்கு நிரூபிக்கப்பட்ட அறிவியல் ஆதாரங்களை சமர்ப்பீர்களா? ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.//

வெற்றி வெற்றி இஸ்லாத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி .... அதுவும் சுவனப்பைரியரால்....

ஏம்பா , ஒரு விசயத்த ஆதாரம்னு குடுக்கறத்துக்கு முன்னே வேறு எங்கெல்லாம் ஓட்டை இருக்கு எவ்வளவு ஒழுகுகிறது என்று பாக்க வேணாமா ?

மண்ணிலிருக்கும் தனிமம்தான் எல்லா உயிரினத்திலும் இருக்கும் என்பது எல்லாருக்கும் தெரியுமே ? மரம் , செடி கொடி ஆடு மாடு மனிதன் என்று எல்லாருக்கும் பொதுவாயிற்றே ? ஏன் கல், மலை போன்ற உயிரற்ற பொருட்களும் பூமியின் தனிமங்களின் கூட்டுதானே ?

மனித உடலில் எந்த தனிமமும் பூமியில் இல்லாதது இல்லை. அதாவது மனிதன் பூமியிலேயே உருவானவன். வேறெங்கோ "உருண்டை பிடித்து" பிறகு பூமியில் இறக்கப்படவில்லை என்பது உங்கள் மூலமாகவே நிரூபணமாகிவிட்டது.

பல மூடர்களுக்கு இன்று கூட தெரியாத புரியாத ஒரு விசயத்தை சொல்கிறேன் தெரிந்து கொள்ளுங்கள். பூமியின் மொத்த ஜனத்தொகை 10 கோடியானாலும் 10 பில்லியனானாலும் பூமியின் மொத்த எடை ஒன்றுதான் ஏனென்றால் மனிதர்களின் எடை எல்லாமே பூமியின் தனிமங்களின் கூட்டே. பூமியிலிருந்தே எல்லாம் எடுக்கப்பட்டது.
இந்த அடிப்படையை புரியாமல்தான் ஆதாரம் என்று பெருமிதத்தோடு இதை தருகிறீர்கள்.

சில தனிமங்களின் கூட்டு செல்லாகவும் , பல தனிமங்களின் பலதரப்பட்ட கூட்டு உயிரினமாக பரிணமித்ததையே பரிணாம வளர்ச்சி சொல்கிறது.

நீங்கள் நிரூபிக்க வேண்டியதெல்லாம் டைனோசர் காலத்திலேயே மனிதன் இருந்தான் என்பதைத்தான். அதை நிரூபித்தீர்களானால் பரிணாம வளர்ச்சி பொய் என்று ஏற்றுக் கொள்ளலாம்.

அதுசரி அப்படியே மண்ணில் இருந்துதான் மனிதன் படைக்கப் பட்டான் என்றாலும் குரானுக்கு அதில் என்ன பெருமை இருக்கிறது ? அது பைபிலில் சொல்லப்பட்டதுதானே ?
காப்பி அடித்தவர்களுக்கு எப்படி பெருமை போய் சேரும் ?

சுவனப் பிரியன் said...

//அது பைபிலில் சொல்லப்பட்டதுதானே ?
காப்பி அடித்தவர்களுக்கு எப்படி பெருமை போய் சேரும் ? //

ஹி....ஹி..... குர்ஆனைக் கொடுத்த அதே இறைவன்தானே பைபிளையும் கொடுத்தது. அதே நேரம் பைபிளில் மனிதனின் கருத்துகளும் கலந்து விட்டதனால்தான் இறைவன் குர்ஆனை மனிதர்களுக்காக கொடுத்தான்.

மேலும் பைபிளுக்கும் குர்ஆனுக்கும் பல வரலாறுகளில் மிகுந்த வேறுபாடுகள் உள்ளது. இது பற்றி ஒரு தனி பதிவே எழுதியுள்ளேன். பார்த்துக் கொள்ளவும்.

மற்றபடி டார்வின் கோட்பாட்டுக்கு நிரூபிக்கப்பட்ட ஆதாரத்தை கேட்டேனே. இல்லையா :-)

Anonymous said...

குர்ஆனைக் கொடுத்த அதே இறைவன்தானே அகமதியாக்களின் புத்தகத்தையும் கொடுத்ததாக சொல்கிறார்களே ? காப்பி அடித்து புத்தகம் வெளியிட்டது மட்டும் இல்லாமல் ஒரிஜினல் புத்தகத்தையே சரியில்லை என்பது முஸ்லிம்கள்தான். கிருஸ்தவர்களுக்கு கோபம் வருவது நியாயம்தான்.

உலகம் உருண்டை என்பதை எதிர்த்த கதைதான் பரிணாம வளர்ச்சி எதிர்ப்பாளர்களுக்கும் நடக்க இருக்கிறது. இருந்தாலும் எதற்காக இப்படி எதிர்க்க வேண்டும் ? இப்பொழுது உலகம் தட்டை என்ற வசனங்கள் எல்லாவற்றையுமே வளைத்து வட்டமாக்கிவிட்டீர்களே ? ஆதாம் கதையையும் உங்களால் மாற்ற முடியாதா என்ன ? எதற்காக இந்த கண்மூடித்தனமான எதிர்ப்பு ? மதத்துக்கும் அறிவியலுக்கும் நடக்கும் சண்டையில் ஒவ்வொரு தடவையும் அறிவியல்தானே வெல்கிறது. கடுமையாக எதிர்த்து பக்கம் பக்கமாக எழுதி ஐயம் திரிபுற நீரூபித்தப்பின் முகத்தை எங்கே வைத்துக் கொள்வீர்கள். பிறகு, ஹி ஹி குரானும் அதீஸும் அப்படி சொல்லவில்லை இப்படித்தான் சொல்கிறது என்று அசடு வழிய நேரிடும். பழத்தை பூவாக்குவதிலாகட்டும், சுல்கர்ணையின் சுவராகட்டும், யஜூஜ் மஜூஜி கதைகளாகட்டும், சூரியன் தொழுக செல்வதாகட்டும் , இன்னும் எத்தனை வகையில் அல்லாவையும் முகமதுவையும் காப்பாற்ற படாதபாடு படுகிறீர்கள். எத்தனை பிராக்கெட், எத்தனை மொழிபெயர்ப்பு. இது போதாதென்று பரிணாம வளர்ச்சியை கண்மூடித்தனமாக எதிர்க்கிறீர்கள். கிருஸ்துவர்கள் ஏற்கனவே பாடம் கற்றுக் கொண்டதால் பரிணாம வளர்ச்சியை எதிர்த்தாலும் எதர்க்கும் தயாராகவே இருக்கிறார்கள்.

http://io9.com/5829687/10-vestigial-traits-you-didnt-know-you-had

Anonymous said...

http://humanorigins.si.edu/evidence

வேந்தர்க்கெல்லாம் வேந்தன் said...

நீங்கள் சொல்கின்ற தனிமங்கள் எல்லாம் களிமண்ணில் உள்ளனவா?
இதற்கு மேலும் எந்த அடிப்படையில் டார்வின் கோட்பாடு தவறு என்று கூறுகிறீர்கள் எநீங்கள் சொல்கின்ற தனிமங்கள் எல்லாம் களிமண்ணில் உள்ளனவா?

உண்மையை சொல்லுங்கள்,மனிதர்களுக்கும்,சில வகை குரங்குகளுக்கும், 98% dna ஒற்றுமை உள்ளதாக அறிவியல் ஆராய்சிகள் கூறுவது உங்களுக்கு தெரியாது?ஏன் உருவ ஒற்றுமைக் கூட உள்ளதே.உருவ ஒற்றுமை இல்லை என்று உங்களால் மறுக்க முடியுமா?
இதற்கு மேலும் என்ன ஆதாரம் தேவை?

எப்படி
பூனை - சிறுத்தை -புலியோ
நாய்-நரி-ஓநாயோ,
அதுபோலவே,
வாலுள்ள சிறிய குரங்குகள்- வாலில்லா சிம்பன்சிகள்,உரன்குட்டான்கள்-மனிதர்கள்.
இதற்கு மேலும் எந்த அடிப்படையில் டார்வின் கோட்பாடு தவறு என்று கூறுகிறீர்கள் என எனக்கு புரியவில்லை.

வேந்தர்க்கெல்லாம் வேந்தன் said...

நீங்கள் சொல்கின்ற தனிமங்கள் எல்லாம் களிமண்ணில் உள்ளனவா?
உண்மையை சொல்லுங்கள்,மனிதர்களுக்கும்,சில வகை குரங்குகளுக்கும், 98% dna ஒற்றுமை உள்ளதாக அறிவியல் ஆராய்சிகள் கூறுவது உங்களுக்கு தெரியாது?ஏன் உருவ ஒற்றுமைக் கூட உள்ளதே.உருவ ஒற்றுமை இல்லை என்று உங்களால் மறுக்க முடியுமா?
இதற்கு மேலும் என்ன ஆதாரம் தேவை?

எப்படி
பூனை - சிறுத்தை -புலியோ
நாய்-நரி-ஓநாயோ,
அதுபோலவே,
வாலுள்ள சிறிய குரங்குகள்- வாலில்லா சிம்பன்சிகள்,உரன்குட்டான்கள்-மனிதர்கள்.
இதற்கு மேலும் எந்த அடிப்படையில் டார்வின் கோட்பாடு தவறு என்று கூறுகிறீர்கள் என எனக்கு புரியவில்லை.

சுவனப் பிரியன் said...

//எப்படி
பூனை - சிறுத்தை -புலியோ
நாய்-நரி-ஓநாயோ,
அதுபோலவே,
வாலுள்ள சிறிய குரங்குகள்- வாலில்லா சிம்பன்சிகள்,உரன்குட்டான்கள்-மனிதர்கள்.
இதற்கு மேலும் எந்த அடிப்படையில் டார்வின் கோட்பாடு தவறு என்று கூறுகிறீர்கள் என எனக்கு புரியவில்லை. //

பூனை-சிறுத்தை, நாய்-நரி, குரங்கு-மனிதன் இவை எல்லாம் ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாறினால் அந்த இடைப்பட்ட உயிரினங்களின் படிம ஆதாரங்கள் உலகில் எங்காவது ஒரு இடத்தில் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் இது வரையில் இடைப்பட்ட உயிரினங்களின் படிம ஆதாரங்கள் எங்குமே சமர்ப்பிக்கப்படவில்லை. இது டார்வினின் கற்பனை.

இதனை தற்போது உணர்ந்து கொண்டதால்தான் மேலை நாடுகளில் டார்வின் தியரியை பாடப்புத்தகத்திலிருந்தே ஒரு சில இடங்களில் நீக்கியுள்ளனர். கூகுளில் தேடிப் பாருங்கள் விபரம் கிடைக்கும்.

Anonymous said...

சரி சுவனப்பிரியரே,
பரிணாம வளர்ச்சிக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றே வைத்துக்கொள்வோம். ஒருவேளை பரிணாம வளர்ச்சி உண்மை என்று ஐயம் திரிபற நிரூபித்துவிட்டால் குரான் இறை வேதமல்ல என்று ஏற்றுக் கொள்வீர்களா ? ஆதாம் கதைகள் எல்லாம் கட்டுக் கதைகள் என்று ஏற்றுக் கொள்வீர்களா ? உங்களுக்குத்தான் பரிணாம வளர்ச்சி பொய்யென்று தெளிவாக "தெரிந்து" விட்டதே ? சவாலை ஏற்காமல் போக எந்த காரணமும் இருக்க முடியாது இல்லையா ? இதையே மற்ற முஸ்லிம்களிடமும் சொல்ல நீங்கள் தயாரா ? பீ ஜே சூனியக்காரனிடம் சவால் விட்டதுபோல் இதுவும் தௌஹீத் காரர்களுக்கு சாதாரணம் இல்லையா ?

விலாங்குமீன் வேலையைக் காட்டாமல் பதில் சொல்லவும்.

Anonymous said...

transitional fossils

http://en.wikipedia.org/wiki/List_of_transitional_fossils

http://www.livescience.com/3306-fossils-reveal-truth-darwin-theory.html

http://armstrongdelusion.com/2014/02/15/fish-fry-part-4-lungfish/

http://www.roiscience.com/evolution-vs-creationism/transitional-fossils/transitional-fossils-archaeopteryx-dinosaur-bird-evolution-and-creationism

http://www.uchospitals.edu/news/2014/20140113-tiktaalik.html

http://en.wikipedia.org/wiki/Tiktaalik

சுவனப் பிரியன் said...

//பரிணாம வளர்ச்சிக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றே வைத்துக்கொள்வோம். ஒருவேளை பரிணாம வளர்ச்சி உண்மை என்று ஐயம் திரிபற நிரூபித்துவிட்டால் குரான் இறை வேதமல்ல என்று ஏற்றுக் கொள்வீர்களா ? ஆதாம் கதைகள் எல்லாம் கட்டுக் கதைகள் என்று ஏற்றுக் கொள்வீர்களா ? //

கண்டிப்பாக...... குரங்கிலிருந்து மனிதன் பரிணாமம் அடைந்ததையும், மானிலிருந்து ஒட்டகம் பரிணாமம் அடைந்ததையும் ஆய்வு செய்து நிரூபிக்கப்பட்டு விட்டால் தீர்ந்தது பிரச்னை. நான் உங்கள் வழிக்கு வந்து விடுகிறேன். இல்லை என்றால் இஸ்லாமியர்களான எங்கள் வழிக்கு வந்து விட வேண்டும்.

சவாலை ஏற்கத் தயாரா?

Anonymous said...

//கண்டிப்பாக...... குரங்கிலிருந்து மனிதன் பரிணாமம் அடைந்ததையும், மானிலிருந்து ஒட்டகம் பரிணாமம் அடைந்ததையும் ஆய்வு செய்து நிரூபிக்கப்பட்டு விட்டால் தீர்ந்தது பிரச்னை. //

மான் - ஒட்டகம் பற்றி படிக்கவில்லை. குரங்குக்கும் மனிதனுக்கும் ஒறே மூதாதையர் என்றுதான் படித்திருக்கிறேன். நீங்கள் கேட்பது இடைப்பட்ட உயிரினம்தானே ? நிரூபிக்கப்பட்டால் குரான் இறைவேதமல்ல என்று ஒப்புக் கொள்வதாக சொன்னீர்க்ள். நல்லது.

பரிணாம வளர்ச்சி பொய்யென்று நிரூபிக்கப்பட்டாலும் இஸ்லாம் உண்மை என்பதற்கு சான்றாகாதே ?

இருந்தாலும் நான் முஸ்லிமாவதில் நீங்கள் அக்கறை கொண்டுள்ளதால் உங்களுக்கு வாய்ப்பளிப்பதே சரி என்று தோன்றுகிறது. நீங்கள் நிரூபிக்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அதுவும் குரானிலும் அதீஸிலும் தெளிவாக சொல்லப் பட்டவை.

அதாவது சுல்கர்னைன் சுவர் எங்கே இருக்கிறது என்று காட்டி விடுங்கள். அந்த சுவர் குரானிலும் அதீஸிலும் சொல்லப்பட்ட அத்தனை அம்சங்களையும் பெற்றிருக்க வேண்டும். அதை காட்டிவிட்டீர்களானால் உடனடியாக முஸ்லிமாகி விடுகிறேன். நபிகள் காலத்திலேயே ஒருவர் அந்த சுவரை பார்த்து வந்து சொன்னதாக அதீஸ் உள்ளது. அதனால் உங்களுக்கு கண்டு பிடித்து சொல்ல அதிக சிரமம் இருக்காது என்று நம்புகிறேன்.

சுவனப் பிரியன் said...

//அதாவது சுல்கர்னைன் சுவர் எங்கே இருக்கிறது என்று காட்டி விடுங்கள். அந்த சுவர் குரானிலும் அதீஸிலும் சொல்லப்பட்ட அத்தனை அம்சங்களையும் பெற்றிருக்க வேண்டும். அதை காட்டிவிட்டீர்களானால் உடனடியாக முஸ்லிமாகி விடுகிறேன். நபிகள் காலத்திலேயே ஒருவர் அந்த சுவரை பார்த்து வந்து சொன்னதாக அதீஸ் உள்ளது. அதனால் உங்களுக்கு கண்டு பிடித்து சொல்ல அதிக சிரமம் இருக்காது என்று நம்புகிறேன்.//

யார் பார்த்தார்கள்? அது எந்த ஹதீஸ்? நீங்கள் சொல்வது தவறான தகவல்..

குர்ஆன் தெளிவாக சொல்லி விடுகிறது அந்த சுவர் உலக முடிவு நாள் சமீபமாகத்தான் வெளிப்படுத்தப்படும். அது வரை மனிதர்களின் பார்வையிலிருந்து மறைத்து வைக்கப்படும். எனவே முஸ்லிம்களுக்கு அந்த சுவர் எங்கே இருக்கிறது என்ற ஆராய்ச்சியே தேவையில்லாதது.
மங்கோலியாவுக்குப் பக்கத்தில் இந்த சுவர் இருப்பதாகவும் ஒரு கதை நிலவுகிறது. மெஸடோனியா என்ற நாட்டில் வாழ்ந்த அலெக்சாண்டர்தான் துல்கர்னைன் என்கிறார் பக்ருதீன் என்ற வரலாற்றாசிரியர்.
அரிஸ்டாட்டில்தான் துலகர்னைன் என்று சொல்வோரும் உண்டு. அரிஸ்டாட்டில் ஏசுவுக்கு 300 வருடங்கள் முன்பு வாழ்ந்ததாகவும், அலெக்சாண்டர் அவையில் மந்திரியாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
காகஸஸ் மலைத் தொடரில் உள்ள தார்பண்ட் என்ற இடத்தில்தான் குர்ஆன் சொல்லக் கூடிய மலை இருப்பதாக சிலர் சொல்கின்றனர். அஜர்பைஜான், ஆர்மீனியா, ஜார்ஜியா, ரஷ்யா போன்ற நாடுகள் இதன் எல்லைகளாக வருகிறது. சீனப் பெருஞ்சுவர்தான் குர்ஆன் கூறக் கூடிய சுவர் என்று சிலகாலம் குழம்பியவர்களும் உண்டு.
இத்தனையையும் நான் எடுத்துக் காட்ட காரணம் துல்கர்னைன் என்பரைப் பற்றிய கதைகள் மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றி இருப்பதை எடுத்துக் காட்டவே! அந்த நபரைப் பற்றியே நமக்கு சரியாக தெரியாத போது அந்த சுவரைப் போய் நாம் எங்கு தேடுவது? அப்படி தேடச் சொல்லி குர்ஆனும் கட்டளை இட வில்லை. அப்படி ஒரு சம்பவம் நடந்ததை நம்ப வேண்டும்.
மேலும் குர்ஆனில் இந்த இடத்தில் இந்த நாட்டில் அந்த சுவர் இருக்கிறது என்று கோடிட்டு காட்டியிருந்து அதை தேடி சிலர் சென்று அங்கு அந்த சுவர் தென்பட வில்லை என்றால்தான் குர்ஆனின் நம்பகத் தன்மையை நாம் அலச வேண்டியிருக்கும். அப்படி எந்த வாக்கியமும் குர்ஆனில் இடம் பெறவில்லை. எனவே இந்த சர்ச்சையே தேவையில்லாதது. உலக முடிவு நாளுக்கு சமீபமாக அந்த சுவரை யாஜுத், மாஜுத் என்ற கூட்டத்தினர் உடைத்துக் கொண்டு வெளியேறுவார்கள். அந்த நாளுக்காக நாமும், இன்னபிற பதிவர்களும் பொறுப்போம். அதுவரை நாமெல்லாம் உயிரோடு இருந்தால் அவசியம் இந்த காட்சிகள் நடந்தேறும். அதுவரை பொறுப்போமாக!
இறைவனே மிக அறிந்தவன்.

http://suvanappiriyan.blogspot.com/2011/01/blog-post_4848.html

http://www.readislam.net/ebugogo.htm


Anonymous said...

In Ibn Jarir's exegesis of the Qur'an, a slight different narration was reported by
Qatadah who said: ('I was told that a man said: (0 Allah's Messenger! I have
seen the dam of Gog and Magog. 'The Prophet (Peace be upon him) said:
(describe it to me. The man said: 'It looked like stripped garments, with red and
black stripes.' The Prophet (Peace be upon him) said: 'You have seen it. '"

http://www.islamicbulletin.org/free_downloads/quran/stories_of_the_quran.pdf

page 71


//குரான் தெளிவாக சொல்லி விடுகிறது அந்த சுவர் உலக முடிவு நாள் சமீபமாகத்தான் வெளிப்படுத்தப்படும். அது வரை மனிதர்களின் பார்வையிலிருந்து மறைத்து வைக்கப்படும்.//

அந்த குரான் வசனத்தை தாருங்கள். அது உண்மைதானா என்று சரி பார்த்துக் கொள்கிறேன். அப்படி ஒரு வசனம் இல்லை என்பது தெரிந்துதான் கேள்வியே கேட்டேன்.

நான் கேட்டது என்ன ? குரானில் சொல்லப்பட்ட அந்த சுவர் எங்கே இருக்கிறது என்றுதான். இதை கண்டு பிடிக்க வேண்டும் என்று ஏன் எந்த முஸ்லிமுக்கும் தோன்றவில்லை? இல்லாத அறிவியலை இருப்பதாக கூறி மதத்தை பரப்ப முயற்சிக்கும் நீங்கள் அந்த சுவரைக் கண்டு பிடித்து காட்டிவிட்டால் இன்னும் கோடி கணக்கில் இஸ்லாத்திற்கு மாறுவார்களே ? அதற்கு ஏன் எந்த முஸ்லிமும் எந்த வகையிலும் முயற்சிக்கவில்லை ?

இஸ்லாம் மீது என்னுடைய குற்றச்சாட்டு மற்றும் சவால் கீழே ,

குற்றச்சாட்டு

சரித்திரத்தைவிட புராணங்களில் மக்களுக்கு ஆர்வம் அதிகம். அதனால்தான் அலெக்சாந்தரின் சரித்திரத்தைவிட புராணம் புகழ்பெற்றது. அந்த புராணத்தை பைபில் சேர்த்துக் கொண்டது. அதையே காப்பி அடித்து குரானில் எழுதப்பட்டது. உண்மையில் அப்படி ஒரு சுவரே இல்லை. அது ஒரு புராண கர்பனை மட்டுமே. அந்த உண்மையை ஒப்புக்கொள்ள முடியாமல்தான் நம்ப வேண்டும் என்று மட்டும் சொல்லி நழுவ பார்க்கிறீர்கள்.

//மேலும் குரானில் இந்த இடத்தில் இந்த நாட்டில் அந்த சுவர் இருக்கிறது என்று கோடிட்டு காட்டியிருந்து அதை தேடி சிலர் சென்று அங்கு அந்த சுவர் தென்பட வில்லை என்றால்தான் குரானின் நம்பகத் தன்மையை நாம் அலச வேண்டியிருக்கும். //

இந்த உலகில் மலையுயர சுவர் கட்டப்பட்டது, அதற்கு பின்னால் கோடிக்கணக்கில் யஜூஜ் மஜூஜ் இனத்தவர்கள் இருக்கிறார்கள் என்பது குரான் ஒரு போலி என்பதற்கு போதுமான சான்று.
இல்லாத ஒன்றை இருக்கிறது என்று சொல்லி அதை நம்பவேண்டும் ஆராயக்கூடாது என்பது மிகப்பெரிய பித்தலாட்டம். குரான், சரித்திரம்கூட சரியாக தெரியாத ஒரு வெகு சாதாரண மனிதனால் எழுதப்பட்டது என்பதற்கு இது ஒரு மிகப் பெரிய சான்று. உங்களுக்கே அந்த சுவர் இருப்பதில் நம்பிக்கை இல்லை. அதனால்தான் ஆராயக்கூடாது என்று சொல்கிறீர்கள். ஏனென்றால் ஆராய ஆரம்பித்தால் சந்தி சிரித்துவிடுமே ? சுவர் கண்டு பிடிக்கப்பட்டால் ஈமான் இன்னும் அதிகரிக்கும், இன்னும் நிறைய பேர் முஸ்லிமாவார்களே ? இஸ்லாமிய அறிவியல் எழுதுவதற்கு பதில் முஸ்லிம்கள் அதை கண்டு பிடிக்க நேரத்தை செலவிடலாமே ? இந்த தட்டையாக இல்லாத, அதாவது உருண்டையாக உள்ள உலகத்தில் அது சாத்தியமில்லை என்று உங்களுக்கே தெரியும் அதனால்தான் ஆராயக்கூடாது என்று சொல்கிறீர்கள்.

சவால்

அந்த சுவர் உண்மையேன்றால், அது இருந்தே தீர வேண்டும். அதை நீங்கள் காட்டி விட்டீர்களானால் வேறு எந்த கேள்வியும் கேட்க மாட்டேன் உடனே இஸ்லாத்துக்கு மாறி விடுகிறேன். நான் மட்டுமல்ல என்னைப்போல கோடிக்கணக்கில் ஆட்கள் இருக்கிறார்கள். உங்களுக்கு எவ்வளவு காலம் அவகாசம் வேண்டும் ? 10 வருடங்கள் ? அந்த கால அவகாசத்துக்குள் உங்களால் அந்த சுவரை காட்ட முடியாவிட்டால் குரான் மனிதன் எழுதியது என்று ஏற்றுக் கொள்கிறீர்களா ?

இது பகிரங்க சவால் . இதை சந்திக்க உங்களுக்கு தைரியமும் உங்கள் மார்க்கத்தின் மீது உண்மையிலேயே நம்பிக்கையும் இருக்கிறதா ?

சுவனப் பிரியன் said...

//அந்த குரான் வசனத்தை தாருங்கள். அது உண்மைதானா என்று சரி பார்த்துக் கொள்கிறேன். அப்படி ஒரு வசனம் இல்லை என்பது தெரிந்துதான் கேள்வியே கேட்டேன்.//

அடடா.... இந்த இடத்தில் உள்ளது என்று குர்ஆன் சொல்வதாக நீங்கள் அல்லவா வசன எண் தர வேண்டும்.

//இதை கண்டு பிடிக்க வேண்டும் என்று ஏன் எந்த முஸ்லிமுக்கும் தோன்றவில்லை? இல்லாத அறிவியலை இருப்பதாக கூறி மதத்தை பரப்ப முயற்சிக்கும் நீங்கள் அந்த சுவரைக் கண்டு பிடித்து காட்டிவிட்டால் இன்னும் கோடி கணக்கில் இஸ்லாத்திற்கு மாறுவார்களே ? அதற்கு ஏன் எந்த முஸ்லிமும் எந்த வகையிலும் முயற்சிக்கவில்லை ?//

ஐந்து கடமைகளில் அது ஒரு கடமையாக குர்ஆனில் சொல்லப்பட்டிருந்தால் முஸ்லிம்களும் அந்த மலையை தேட முயற்சித்திருப்பர். குர்ஆன் அப்படி ஒரு கட்டளையிடாததால் அதை தேட எந்த அவசியமும் இல்லை.

இன்னும் உலகில் மனிதன் காலடி தடம் பதிக்காமல் உள்ள இடங்கள் பாதிக்கு மேல் உள்ளது. சில காடுகளில் மனிதர்கள் நுழையவே முடியாது. உலக முடிவுநாள் வரை அது மறைக்கப்பட்டே இருக்கும். அது வரை பொறுப்போம். அது நம் காலத்திலும் நடக்கலாம் இன்னும் 1000 வருடங்களுக்குப்பிறகு கூட நடக்கலாம். இறைவனே அறிந்தவன்.

//உண்மையில் அப்படி ஒரு சுவரே இல்லை. அது ஒரு புராண கர்பனை மட்டுமே.//

அது உங்கள் எண்ணம். அது பற்றிய கவலை எங்களுக்கு இல்லை.
//அதை நீங்கள் காட்டி விட்டீர்களானால் வேறு எந்த கேள்வியும் கேட்க மாட்டேன் உடனே இஸ்லாத்துக்கு மாறி விடுகிறேன்.//

மனிதன் அந்த சுவரையும் அந்த குள்ளர்களின் கூட்டத்தையும் கண்டு பிடித்து விட்டால் உடன் உலக முடிவு நாளும் வந்து விடும். எனவே அந்த நாள் வரும் வரை அந்த சுவர் மனிதனின் கண்களிலிருந்தது இறைவனால் மறைக்கப்பட்டே இருக்கும். குர்ஆன் கூறுவதையும் பாருங்கள்.

துல்கர்னைன் கூறினார்: இது என்னுடைய இறைவனின் கருணையாகும். என் இறைவன் வாக்களித்த நேரம் வந்து விட்டால், அவன் இதனைத் தூள்தூளாக்கி விடுவான். என்னுடைய இறைவனின் வாக்குறுதி உண்மையானதாகும்.
(18:83-98)
எதுவரையெனில், யஃஜூஜ் மஃஜூஜ் திறந்து விடப்பட்டு ஒவ்வொரு உயரமான இடங்களிலிருந்தும் அவர்கள் வெளியேறும் வரை.
(21:96)

அந்த மலை கண்டுபிடிக்கப்பட்டு உடைக்கப்பட்டால் பின்புறம் குள்ள மனிதர்கள் நம்மோடு சண்டையிட வருவர். அது உலக முடிவு நாள் சமீபமாக நடக்கும்.

மற்றபடி நீங்கள் இஸ்லாத்தை ஏற்றால் அது உங்களுக்கு நல்லது. இதனால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை.Anonymous said...

ஹி ஹி வேறு என்னதான் உங்களால் சொல்ல முடியும் ?

//அடடா.... இந்த இடத்தில் உள்ளது என்று குர்ஆன் சொல்வதாக நீங்கள் அல்லவா வசன எண் தர வேண்டும்.//

என்ன சுவனப்பிரியரே அவசரத்தில் என்ன எழுதுகிறோம் என்று கூடவா தெரியாது ? இறுதி நாளில் சுவர் வெளிப்படும் என்பதற்கு வசன்ம் இல்லை என்றேன். இருக்கிறதென்றால் வசன எண் கொடுக்க வேண்டியது யார் ?

//குர்ஆன் அப்படி ஒரு கட்டளையிடாததால் அதை தேட எந்த அவசியமும் இல்லை.//

குரானில் அறிவியலை தேட சொல்லிக் கூட எந்தக் கட்டளையும் இல்லை ஆனால் முஸ்லிம்கள் வரிக்கு வரி அறிவியலை தேடுகிறார்களே ? இல்லாத ஒன்றை தேடும்பொழுது, இருக்கிறது என்று சொல்லப் பட்ட ஒன்றை தேடி நிருபிப்பதில் என்ன தயக்கம் ? இல்லை என்று முதலிலேயே முடிவு செய்து தன்னம்பிக்கையை தளர விடாதீர்கள்.

//சில காடுகளில் மனிதர்கள் நுழையவே முடியாது.//

அந்த காடுகளை பட்டியலிடுங்கள் பார்ப்போம். நாம் பேசிக்கொண்டிருப்பது மலையுயர சுவரை. புதையல் அல்ல.

//அது உங்கள் எண்ணம். அது பற்றிய கவலை எங்களுக்கு இல்லை.//

வேறு பதிலை நான் எதிர் பார்க்கவுமில்லை.

//துல்கர்னைன் கூறினார்: இது என்னுடைய இறைவனின் கருணையாகும். என் இறைவன் வாக்களித்த நேரம் வந்து விட்டால், அவன் இதனைத் தூள்தூளாக்கி விடுவான். என்னுடைய இறைவனின் வாக்குறுதி உண்மையானதாகும்.
(18:83-98)
எதுவரையெனில், யஃஜூஜ் மஃஜூஜ் திறந்து விடப்பட்டு ஒவ்வொரு உயரமான இடங்களிலிருந்தும் அவர்கள் வெளியேறும் வரை.
(21:96)//

இந்த வசனங்கள் மறைக்கப்பட்டது என்று சொல்கிறது என்று எப்படிக் கூறுகிறீர்கள் ? இது சிறுபிள்ளைத்தனமாக இல்லையா ? நீங்கள் பேசிக்கொண்டிருப்பது எதை சொன்னாலும் தலையாட்ட தயாராக இருக்கும் முஸ்லிம் கூட்டத்திடம் இல்லை என்று நினைவுறுத்த விரும்புகிறேன்.

//மற்றபடி நீங்கள் இஸ்லாத்தை ஏற்றால் அது உங்களுக்கு நல்லது//

நல்லதா, சரியா, உண்மையா என்று முடிவு செய்யத்தான் கேள்வியே கேட்டேன். உங்களிடம் சரியான பதில் இல்லாதபோது எப்படி சரியானது என்று ஏற்றுக் கொள்ள முடியும். ஒரு விசயத்தை உண்மை என்று சொல்பவர்கள் அதை நிரூபிக்க வேண்டும். அதற்கான வாய்ப்பைத்தான் உங்களுக்கு தருகிறேன்.
ஒருவன் ஒரு விசயத்தை மிக சிறந்தது என்று சொன்னால் அதை கேட்பவர்கள் அதற்கான ஆதாரத்தை கேட்கத்தான் செய்வார்கள். ஆதாரம் எல்லாம் கேட்க கூடாது ஆனால் சிறந்தது என்று ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொன்னால் எப்படி இருக்கும் ?

//இதனால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை.//

கண்டிப்பாக இருக்கிறது. குரான் இறைவேதம் என்று கொக்கரித்துவிட்டு அதில் சொல்லப் பட்ட ஒன்றை கேட்டால் சாக்கு போக்கு சொல்லி நழுவப் பார்ப்பது அதன் உண்மைத்தன்மையை விளக்கிவிடும். இவ்வளவு அப்பட்டமாக இருக்கிற உண்மையை தெரிந்து கொண்டும் , ஒரு மலையையே "மறைக்க பார்ப்பது" நீண்ட காலத்துக்கு தாங்காது. சுமேரிய, எகிப்து நம்பிக்கைகளுக்கு ஏற்பட்ட கதிதான் இதற்கும் ஏற்படும். உண்மையென்பது மத நம்பிக்கைகளைகிட உறுதியானது சக்தி வாய்ந்தது. எவ்வளவு மறைக்க முயற்சித்தாலும், அது வெளி வந்தே தீரும்.

ஆனந்த் சாகர் said...

//பரிணாமவியலை ஆதரிக்கும் ஒரு ஆராய்ச்சியாளரின் புலம்பல்:

"ஹையோ..ஹையோ.... நானா இது!....பரிணாமவியலை ஆழ்ந்து படிக்க ஆரம்பிச்சதிலிருந்து என் நிழல் கூட குரங்கு மாதிரியே தெரியுதே! கடவுளே என்னை காப்பாத்து.."//

இஸ்லாத்தை ஆதரிக்கும் ஒரு முஸ்லிமின் புலம்பல் :

"ஹையோ..ஹையோ.... நானா இது!....இஸ்லாத்தை ஆழ்ந்து படிக்க ஆரம்பிச்சதிலிருந்து நானும் பயங்கரவாதியாக மாறிக்கொண்டு வருகிறேனே! கடவுளே என்னை காப்பாத்து.."//

ஆனந்த் சாகர் said...

சுவனப்பிரியன்,

//முதல் மனிதரை மண்ணாலும் தண்ணீராலும் படைத்து அதன் பின்னர் கருவுற்ற சினை முட்டையிலுந்து பல்கிக் பெருகச் செய்ததாக பல வசனங்கள் கூறுகிறது.//

பெண்ணின் சினைமுட்டை என்று கூறுகிற ஒரே ஒரு வார்த்தையை குர்ஆனில் இருந்து எடுத்து காட்டவும். கருவுற்ற சினைமுட்டை என்று குரான் சொல்வதாக திரும்ப திரும்ப பொய் சொல்லி பிராடு செய்யும் ஈனப்பிறவியே, உமக்கு வெட்கமே இல்லையா?

ஆனந்த் சாகர் said...

சுவனப்பிரியன்,

//மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற் கண்ட 58 தனிமங்களின் கலவையே மனிதன் என்கிறது அறிவியல் . ஆக்சிஜனும், ஹைட்ரஜனும் கலந்த கலவையே தண்ணீர் என்பதும் நமக்குத் தெரியும். எனவே பூமியில் கிடைக்கும் அனைத்து தனிமங்களின் கூட்டுக் கலவையே மனிதன் என்பது அறிவியலும் நிரூபித்துள்ளது. //

இதை பரிணாமக்கொள்கை மறுக்கவில்லையே! இன்னும் சொல்லப்போனால் பரிணாமக்கொள்கையை அறிவியல் உறுதிப்படுத்துகிறது. வானத்திலிருந்து குதித்து தோன்றியவன் மனிதன் என்றா பரிணாமக்கொள்கை கூறுகிறது? மாறாக, குரான்தான் ஆதாம் என்ற மனிதன் சொர்க்கத்தில் படைக்கப்பட்டு பிறகு பூமிக்கு இறக்கபட்டான் என்று அளந்து விடுகிறது.

ஆனந்த் சாகர் said...

சுவனப்பிரியன்,

//பூனை-சிறுத்தை, நாய்-நரி, குரங்கு-மனிதன் இவை எல்லாம் ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாறினால் அந்த இடைப்பட்ட உயிரினங்களின் படிம ஆதாரங்கள் உலகில் எங்காவது ஒரு இடத்தில் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் இது வரையில் இடைப்பட்ட உயிரினங்களின் படிம ஆதாரங்கள் எங்குமே சமர்ப்பிக்கப்படவில்லை. இது டார்வினின் கற்பனை.//

குரங்கிலிருந்து மனிதன் பரிணமிக்கவில்லை. ஒரு பொதுவான மூதாதையரிலிருந்து குரங்கி இனமும் மனித இனமும் பரிணமித்தன என்றுதான் பரிணாமக்கொள்கை கூறுகிறது. அந்த பொது மூதாதையருக்கும் இன்றை மனிதனுக்கும் இடைப்பட்ட மனித இனங்களின் படிமங்கள் கிடைத்திருக்கின்றன. நியாந்தர்தால் மனிதர்களும் இன்றைய மனித இனத்தை சேர்ந்தவர்களும் ஒரே காலகட்டத்தில் சேர்ந்தே வாழ்திருக்கின்றனர்.

ஆனந்த் சாகர் said...

சுவனப்பிரியன்,

//கண்டிப்பாக...... குரங்கிலிருந்து மனிதன் பரிணாமம் அடைந்ததையும், மானிலிருந்து ஒட்டகம் பரிணாமம் அடைந்ததையும் ஆய்வு செய்து நிரூபிக்கப்பட்டு விட்டால் தீர்ந்தது பிரச்னை. நான் உங்கள் வழிக்கு வந்து விடுகிறேன். இல்லை என்றால் இஸ்லாமியர்களான எங்கள் வழிக்கு வந்து விட வேண்டும். //

குரங்கிலிருந்து மனிதனும் மானிலிருந்து ஒட்டகமும் பரிணாமம் அடைந்தது என்று யார் சொன்னது? எவரும் சொல்லாத ஒன்றை சொன்னதாக இட்டுகட்டி அதை நிரூபித்தால் உங்கள் வழிக்கு வந்துவிடுகிறேன் என்று சவால் விடும் உங்கள் தைரியத்தை முஸ்லிம்கள் நிச்சயமாக மெச்சுவார்கள். நீர் சரியான கோமாளியப்பா!