Followers

Thursday, August 07, 2014

பண்டைய கால தமிழர்களின் உணவு முறை!

முஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் பலரைப் பார்த்துள்ளோம். ஆதி கால தமிழர்கள் அசைவப் பிரியர்களாகவே இருந்துள்ளனர். பின்னால் வந்த ஆரிய படையெடுப்பினால் தமிழர்களின் கலாசாரம் மறையத் தொடங்கி ஆரிய கலாசாரம் தமிழகமெங்கும் ஏன் இந்தியா முழுவதுமே பரவத் தொடங்கியது. நமது முன்னோர்கள் எந்த அளவு அசைவப் பிரியர்களாக இருந்துள்ளனர் என்பதனை சங்க கால தமிழர்களின் வரலாற்று நூல்களிலிருந்து சிலவற்றைப் பார்ப்போம்.குறிஞ்சி,பாலை,முல்லை,மருதம்,நெய்தல் என்ற ஐவகை நிலத்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.அந்த தமிழர்கள் உண்ட உணவைப்பார்ப்போம்.

குறிஞ்சி நிலத்தவர் உணவு:

சோழ நாட்டு குறிஞ்சி நில மக்கள் தேனையும்,கிழங்கையும் உண்டார்கள்.பிற நிலத்தாருக்கும் விற்று மீன்,நெய்யையும் நறவையும் வாங்கி வந்தார்கள்.-(பொருநாநூற்றுப்படை.213-214.)

திணைச் சோறும் நெய்யில் வெந்த இறைச்சியையும் உண்டனர்.(மலைபடுகடாம்-168-169)

குறிஞ்சி நிலத்தார் பெண் நாய் கடித்த உடும்பின் இறைச்சியையும் கடமான் இறைச்சியையும்,பன்றி இறைச்சியையும் உண்டனர். ( மலைபடுகடாம்-171-183)

மலை நாட்டை காவல் புரிந்த வீரர் இறைச்சியையும் கிழங்கையும் உண்டனர்.மலை மீது நடந்து சென்ற கூத்தர் தினைப்புனத்து காவலனால் கொல்லப்பட்ட காட்டுப்பன்றியின் மயிரைப்போக்கி மூங்கில் பற்றியெரியும் நெருப்பில் வதக்கி உண்டனர்.(243-249 ).

பாலை நிலத்தார் உணவு:

ஓய்மானாட்டுப் பாலை நில மக்களான வேட்டுவர்கள்,இனிய புளிங்கறி எனப்படும் சோற்றையும் ஆமாவின் சூற்றிறைச்சியையும் உண்டனர். (சிறு நாநூற்றுப் படை-175-177).தொண்டை நாட்டு பாலை நில மக்கள் புல்லரிசியை சேர்த்து நில உரலில் குத்திச் சமைத்த உணவை உப்புக்கண்டத்துடன் சேர்த்து உண்டனர். (பெ.ஆ.படை.95-100).மேட்டு நிலத்தில் விளைந்த ஈச்சங்கொட்டை போன்ற நெல்லரிசி சோற்றையும் உடும்பின் பொரியலையும் உண்டனர். (பெ.ஆ.படை.130-133).

முல்லை நிலத்தார் உணவு;

பொன்னை நறுக்கினார்ப் போன்ற நுண்ணிய ஒரே அளவுடைய அரிசியை வெள்ளாட்டு இறைச்சியுடன் கூட்டி ஆக்கிய சோற்றையும் (சங்ககால பிரியாணி) திணை மாவையும் உண்டனர். (440-445).

மருத நிலத்தார் உணவு;

மருத நில மக்கள் கரும்பும் அவலும் குறிஞ்சி நிலத்தார்க்கு கொடுத்து மான் கறியையும், கள்ளையும் பெற்றுக்கொண்டனர்.(பெ.ஆ.படை. ( 216-217).ஒய்மானாட்டு மருத நிலத்தார் வெண்சோற்றையும் நண்டும் பீர்க்கங்க்காயும் கலந்த கூட்டையும் உண்டனர். (சி.ஆ.படை.193-195).தொண்டை நாட்டு மருத நிலத்தார் நெல் சோற்றை பெட்டைக்கோழி பொரியலுடன் உண்டனர்.(பெ.ஆ.படை.254-256).

நெய்தல் நிலத்தார் உணவு;

நெய்தல் நிலத்தார் நுளைச்சி அரித்த கள்ளையும் உலர்ந்த குழல் மீனின் சூட்டிறைச் சியையும் உட்கொண்டனர்.(சி.ஆ.படை.(156-163).தொண்டைநாட்டுப் பட்டினத்தில்(மாமல்லபுரம்) நெல்லை இடித்து மாவாக்கி ஆண் பன்றிகளுக்கு கொடுத்து கொழுக்க வைத்து அதன் இறைச்சியை சமைத்து உண்டனர்.காவிரிபூம்பட்டினத்து மீனவர் கடல் இறா,வயல ஆமை இரண்டையும் பக்குவம் செய்து உண்டனர். (பட்டினப்பாலை.63-64).கள்ளுக்கடைகளில் மீன் இறைச்சியையும், விலங்கு இறைச்சியும் பொரிக்கப்பட்டு விற்கப்பட்டன. (பட்டினப்பாலை- (176-178).

இவ்வுணவுகள் தாம் அசல் தமிழர்கள் உண்ட அசைவ உணவு. இன்று சைவம் பேசும் தமிழர்கள் எங்கிருந்து வந்தார்கள்.?

1 comment:

ஆனந்த் சாகர் said...

@சுவனப்பிரியன்,

//பின்னால் வந்த ஆரிய படையெடுப்பினால் தமிழர்களின் கலாசாரம் மறையத் தொடங்கி ஆரிய கலாசாரம் தமிழகமெங்கும் ஏன் இந்தியா முழுவதுமே பரவத் தொடங்கியது.//

திராவிட இனம், ஆரிய இனம் என்று பேசுபவர்கள் பொய்யர்கள். திராவிட இனம், ஆரிய இனம் என்று எந்த மனித இனமும் இல்லை. இல்லாத ஒன்றை இருப்பதாகசொல்வது சுத்த பொய். இல்லாத திராவிட இனத்தை சொல்லி அரை நூற்றாண்டுக்கு மேலாக தமிழ்நாட்டில் அரசியல் செய்து பிழைப்பு நடத்துபவர்களை நாம் அறிவோம். அவர்கள் அம்பலப்பட்டு நிற்கிறார்கள். உங்களை போன்று இரட்டைவேடம் போடுபவர்கள், நயவஞ்சகர்கள் மட்டுமே போய்யின்மேல் கட்டப்பட்டுள்ள இந்த ஆரிய-திராவிட இனவாதத்தை பேசிக்கொண்டு திரிகிறார்கள். பெரும்பான்மையான இந்தியர்கள் இந்த பொய்யை கண்டுகொள்வதே இல்லை.

7ஆம் நூற்றாண்டு காட்டுமிராண்டி மனிதன் சொன்ன அரபு கலாசாரத்தை ஏற்று அதற்கு அடிமையாகி அதை வெட்கமின்றி பரப்பும் நீங்கள் ஆரிய-திராவிட இனம் என்றெல்லாம் கதைப்பது வேடிக்கையானது. உங்களுக்கு இந்திய கலாசாரத்தை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை.

ஆரிய படையெடுப்பு என்று கூறுபவர்கள் அது எந்த வருடம், எங்கு, யாருடைய தலைமையில் நடந்தது என்று கூறுவார்களா?