
மைக்கேல் ப்ரௌன் உடல் இன்று அடக்கம்!
அமெரிக்காவில் இன்றும் நிறவெறி தலைவிரித்தாடுகிறது என்பதை இளைஞன் மைக்கேல் ப்ரவுனின் இறப்பு நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு நடந்த கொள்ளையிடல் சம்பவத்தில் அந்த பக்கம் சென்ற மைக்கேலை போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். நீதி விசாரணை கேட்டு அமெரிக்கா முழுவதும் மேலும் உலகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இன்று நடைபெறக் கூடிய பிரார்த்தனையில் 5000க்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒபாமா வெள்ளை மாளிகையிலிருந்து மூன்று உயர் அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளார். உடல் அடக்கத்திற்குப் பிறகு பெரும் கலவரம் நிகழுமோ என்று பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர். பள்ளி கல்லூரிகள் கடந்த 10 நாட்களாக பாதுகாப்பு காரணங்களுக்காக அடைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் திறக்கப்படலாம். மைக்கேலின் தந்தை 'வன்முறை இல்லாமல் அமைதியாக நமது இரங்கலை தெரிவிப்போம்' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகையே ஆளப்பிறந்தவர்கள் நாங்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்காவில் இன்றும் நிறவெறியை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை. வெட்கித் தலைகுனிய வேண்டும் இவர்கள்.
மிசூரி மாநிலத்தில் இளைஞனின் துப்பாக்கிச் சூட்டிற்காக எதிர்ப்பு தெரிவித்த ஆதரவாளர்களைக் கலைக்கும் போலீஸார்.. இந்த எதிர்ப்பு இன்றும் தொடர்கிறது. பலர் கைது செய்யப்பட்டுக் கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment