
நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு அமைப்புக்கு சவுதி மன்னர் அப்துல்லா நூறு மில்லியன் டாலரை அன்பளிப்பாக அளித்துள்ளார். உலகெங்கிலும் நடக்கும் தீவிரவாத தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வர இந்த பொருளாதாரம் பயன்படுத்தப்படும். இதற்கான காசோலையை ஐநா பொதுச் செயலாளர் பான்கீ மூன் அமெரிக்காவுக்கான சவுதி தூதர் ஆதில் அஹமத் பின் ஜூபைரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
சென்ற மாதம் ஜெத்தா வந்திருந்தபோது பான்கீ மூன் மன்னர் அப்துல்லாவை சந்தித்து தீவிரவாதத்துக்கு எதிராக அவர் எடுக்கும் முயற்சிகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். அதன் தொடர்ச்சியாக இந்த நூறு மில்லியன் டாலர் அன்பளிப்பாக நேற்று நியூயார்கில் அளிக்கப்பட்டது.
தகவல் உதவி
சவுதி கெஜட்
13-08-2014
மகிழ்ச்சியான செய்தி. ஆரம்பமெல்லாம் நல்லா இருக்குதுங்கண்ணா.... ஆனால் இந்த பான் கீ மூன் பாலஸ்தீனத்தை சல்லடையாக இஸ்ரேல் துளைத்த போது ஒரு கண்டன அறிக்கை கூட தெரிவிக்காமல் ஒளிந்து கொண்டவருங்கண்ணா... இவர் கையில் இவ்வளவு பெரிய தொகையை கொடுத்தால் இதனை வைத்தே இஸ்லாத்துக்கு எதிராகவும் பயன்படுத்த முடியுங்கண்ணா..... எனவே பணம் கொடுத்ததோடு அல்லாமல் அது எவ்வாறு யாருக்கு செலவழிக்கப்படுகிறது என்பதையும் கண்காணிங்கண்ணா....
1 comment:
ஒரு பக்கம் பயங்கரவாதத்தை போதிக்கும் இஸ்லாம் மதத்தை பின்பற்றிக்கொண்டு, தன் நாட்டில் தீவிரமாக நடைமுறைபடுத்திகொண்டு அதை மற்ற நாடுகளில் வளர்க்க பல ஆயிரம் கோடி டாலர்களை முஸ்லிம் அற கட்டளைகளுக்கு கொடுத்துக்கொண்டே மறு பக்கம் இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க ஒரு சிறு தொகையை அளித்து நாங்களும் பயங்கரவாதத்திற்கு எதிரானவர்கள் என்று உலகை நம்ப வைக்க இப்படி சவுதி அரசு நாடகம் ஆடுகிறது.
Post a Comment