
சுதந்திர தினத்திற்கு முந்தைய தினம் வழக்கம்போல முஸ்லிம் இளைஞர்களை கடத்திச் செல்ல வந்த டெல்லி போலீஸின் சிறப்பு பிரிவைச் சார்ந்த குழுவினரை மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
டெல்லி ஜாமிஆ நகருக்கு அருகில் உள்ள ஸாக்கிர் நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது.
ஆகஸ்ட் 14-ஆம் தேதி 11.30 மணியளவில் 12 பேர் அடங்கிய ஸ்பெஷல் பிரிவு அதிகாரிகளை அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர் அமானுல்லா கானின் தலைமையில் அப்பகுதி மக்கள் பிடித்தனர்.
முன்னதாக ஸாக்கிர் நகரில் ஒரு வீட்டில் நுழைந்த ஸ்பெஷல் பிரிவு குழுவினர் இளைஞர் ஒருவரின் கையில் விலங்கிட்டிருந்தனர். யூனிஃபார்ம் அணியாமல் அவர்கள் இவ்வாறு செய்ததை கண்ட பொதுமக்கள் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து ஜாமிஆ நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இவர்கள் தங்களிடம் மிகவும் மோசமாக நடந்துகொண்டதாக அந்த வீட்டிலுள்ளோர் தெரிவித்தனர்.
இது வழக்கம்போல ‘சுதந்திரத்தினத்தை சீர்குலைக்க முயன்ற தீவிரவாதிகள் கைது’ என்ற கட்டுக்கதையை பரப்ப நடந்த சதி என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
இதுக்குறித்து அமானுல்லா கான் கூறியது: ‘சாதாரண உடையில் வந்த போலீசார், ஸாக்கிர் நகரில் 9,12 எண் தெருக்களில் உள்ள வீடுகளில் ரெய்டு நடத்துவதாக 11.30 மணியளவில் எனக்கு தகவல் கிடைத்தது. அவர்களின் கைகளில் ஏ.கே.47 துப்பாக்கிகளும், பிஸ்டல்களும் இருந்தன. உடனே நான் ஜாமிஆ நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்தேன். அத்தகையதொரு ரெய்டு குறித்து தங்களுக்கு தெரியாது என்று இன்ஸ்பெக்டர் பிரவீன் தெரிவித்தார்.
நான் சம்பவ இடத்திற்கு சென்றபோது ஸ்பெஷல் பிரிவினர் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்தவர்களிடம் மோசமாக நடந்துகொண்டனர். ஒருவரை விலங்கிட்டிருந்தனர்.
‘சுதந்திர தினத்தில் தாக்குதல் நடத்தவந்த இந்திய முஜாஹிதீன் தீவிரவாதிகளை ஜாமிஆ நகரில் இருந்து கைது செய்தோம்’என்று பரப்புரைச் செய்வதற்தானே இந்த சம்பவம்? அல்லது அவர்களை போலி என்கவுண்டரில் கொலைச் செய்ய திட்டமா? என்று நான் அவர்களிடம் வினவினேன்.
ஆனால், ‘நாங்கள் விசாரணை நடத்துவதற்கு மட்டுமே வந்தோம்’ என்று அவர்கள் பதிலளித்தனர். அப்போது நான், ‘விசாரணை நடத்துவதற்கு 13 போலீஸ்காரர்கள் ஆயுதத்துடன் ஏன் வந்தீர்கள்? சட்டப்படி விசாரணை நடத்தவரும் போலீஸ்காரர்கள் யூனிஃபார் அணிந்திருக்க வேண்டும். அதனை ஏன் கடைப்பிடிக்கவில்லை?’ என்று கேள்வி எழுப்பினேன். ஏன் இதுத்தொடர்பாக உள்ளூர் போலீசுக்கு தகவல் தரவில்லை? எஃப்.ஐ.ஆர் பதிவுச் செய்துள்ளீர்களா? என்றெல்லாம் கேள்வி எழுப்பினேன். அதற்கு அவர்கள் மழுப்பலாக பதிலளித்தனர்.
உடனே நாங்கள் ஜாமிஆ நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்தோம். அங்கிருந்து எஸ்.ஐயும், அஸிஸ்டெண்டும் வந்தனர். அதனைத் தொடர்ந்து எல்லோரையும் நாங்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றோம். ஸ்பெஷல் பிரிவு அதிகாரிகளை கைது செய்து அவர்கள் மீது வழக்குப் பதிவுச் செய்யவேண்டும். எல்லாச் சட்டங்களையும் மீறி டெல்லி போலீசின் ஸ்பெஷல் பிரிவு இங்கிருந்து இளைஞர்களை கடத்திச் செல்ல முயற்சிக்கிறது.’ இவ்வாறு அமானுல்லா கான் தெரிவித்தார்.
டெல்லி போலீசின் ஸ்பெஷல் பிரிவிற்கு தலைமை தாங்கியவர் இன்ஸ்பெக்டர் நவீன் குமார் ஆவார். இப்பகுதிக்கு அருகில் உள்ள பாட்லா ஹவுஸில் வைத்துதான் சில ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம் இளைஞர்கள் போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.newindia.tv/tn/india/142-incident/3482-jamia-residents-catch-armed-plain-clothed-raiding-sleuths-hand-over-to-police
3 comments:
சுப்ரீம் கோர்ட்டில் 'விடுதலை' கிடைத்த பின்பும்.... தொடரும் போலீஸ் தொல்லைகள் !
அக்ஷார்தம் கோயில் தாக்குதல் வழக்கில், உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட அப்பாவிகளை, தற்போதும் போலீஸ் பின் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வருகிறது.
நீதிமன்றம், தங்களை அப்பாவிகள் என விடுவித்து விட்டாலும், இப்போதும் தங்களை போலீஸ் பின்தொடர்ந்து வேட்டையாடுவதால், பீதிவயத்துடனேயே வாழவேண்டியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அக்ஷார்தம் கோயில் தாக்குதல் வழக்கில், குஜராத் போலீஸ் பொய் வழக்கில் 6 முஸ்லிம்களை கைது செய்திருந்தது.
இவர்கள் குற்றமற்றவர்கள் என்பது நிரூபணமானதை தொடர்ந்து, கடந்த மே மாதம் உச்சநீதிமன்றம் இவர்களை விடுதலைச் செய்ய உத்தரவிட்டது.
ஆதம் அஜ்மீரி, முஃப்தி கய்யூம் மன்சூரி என்ற முஃப்தி பாபா, ஸலீம் ஷேக், சாந்த் கான், மவ்லானா அப்துல் மியா காதிரி, அல்தாஃப் மாலிக் ஆகியோர் இவ்வழக்கில் குற்றமற்றவர்கள் என விடுதலைச் செய்யப்பட்டனர்.
உச்சநீதிமன்றம், தனது கணவரை குற்றமற்றவர் என விடுதலைச் செய்த பிறகு, குஜராத் போலீஸ் தங்களிடம் கூடுதல் வன்மத்துடன் நடந்துகொள்வதாக 'அல்தாஃப் மாலிக்'கின் மனைவி கூறுகிறார்.
திருமணம் முடிந்த 3-வது நாள் அல்தாஃப் மாலிக் கைது செய்யப்பட்டார்.
இவர் சிறையில் இருந்தபோது முதல் குழந்தை பிறந்தது.
குழந்தையை பார்ப்பதற்கு அல்தாஃப் மாலிக் வீட்டிற்கு வந்தபோது ஏ.கே.47 துப்பாக்கிகளுடன் 50 போலீஸ்காரர்கள் உடன் வந்தனர்.
இவர்களில் 2 பேர் தனது படுக்கை அறைக்குள் நுழைந்த கொடுமையான சம்பவங்களையும் நினைவு கூறுகிறார், அல்தாஃப் மாலிகின் மனைவி.
10 ஆண்டுகள் கழித்து சிறையில் இருந்து குற்றமற்றவர் என்று விடுதலைச் செய்யப்பட்ட 'அப்துல் மியா'வையும் விசாரணை என்ற பெயரில், போலீஸ் அலைக்கழித்து வருகிறது.
அரங்கேற்றப்படும் குண்டு வெடிப்பு நாடகங்கள், போலி மோதல் கொலைகள் – ஒவ்வொன்றிலும் நிரபராதிகள் தண்டிக்கப்படுகிறார்கள்.
இந்த நிரபராதிகளின் வாழ்க்கையை அழித்த இந்து மதவெறியர்களும், பொய் வழக்கு போட்ட போலீசு அதிகாரிகளும், பொய் சாட்சியங்களின் அடிப்படையில் அவர்களைத் தண்டித்த நீதிபதிகளும் கூண்டிலேற்றப்படுவதில்லை.
மறந்து விடச் சொல்கிறார்கள்.
எத்தனை அநீதிகளைத்தான் மறக்க முடியும்?
1990-களின் துவக்கம் முதல் இன்றுவரை இந்தியா முழுவதும் இப்படி சிறை வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம்கள் பல்லாயிரம் பேர்.
அவர்களில் சிலர்தான் இத்தகைய தீர்ப்புகளில் விடுவிக்கப்படுகின்றனர்.
உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்காடி வெற்றி பெறுவதற்குள் அவர்கள் வாழ்க்கை அழிந்து விடுகிறது.
வழக்காட முடியாத ஏழை முஸ்லிம்ளின் வாழ்க்கை சிறையிலேயே கழிகிறது. அவர்களது குடும்பங்கள் சின்னாபின்னமாகின்றன.
அதே நேரத்தில் இத்தகைய அநீதிகளை இழைத்த கிரிமினல் கட்சி ஆட்சியில் அமர்த்தப்படுகிறது.
2002 படுகொலையின் நாயகனை முதல்வராகவும், பிரதமராகவும் ஆக்குமளவுக்கு பெரும்பான்மை சமூகத்தின் “ஞாபகமறதி” முற்றியிருக்கிறது.
20 ஆண்டுகளுக்கு பின் 78 வயதில் 'நிரபராதி' என்று விடுதலையான 'முஹம்மத் சுர்தி'
>>>மேலும் படிக்க<<<
.
ஒட்டு மொத்த உலகத்திற்கே சாபக்கேடுகள் இந்த இஸ்லாமிய சண்டாளர்கள். தரித்திர மூதேவிகள். இவர்கள் சென்ற எந்த இடம் விளங்கி இருக்கிறது முன்னேறி இருக்கிறது அமைதியாக இருந்திருக்கிறது. மனித இனத்திற்கே அவமான சின்னங்கள்
Post a Comment