எனது இரு சக்கர வாகனத்தையே இரண்டு ஆப்ரிக்கர்கள் இரவு பத்து மணி வாக்கில் என்னிடமிருந்து பறித்து சென்ற சம்பவம் போன வருடம் நடந்தது. நான் வேகமாக பத்தாவிலிருந்து எனது இருப்பிடம் நோக்கி வந்து கொண்டிருந்தேன். ஆள் அரவம் இல்லாத பகுதியில் என் பின்னால் மற்றொரு இரு சக்கர வாகனம். எனக்கு விபரம் புரியாமல் திரும்பி பார்த்தேன். இரண்டு ஆப்ரிக்கர்கள். என்னிடம் 'வண்டியை நிறுத்து' என்று சொல்ல பல தமிழ்படங்கள் பார்த்த ஞாபகம் வரவே வண்டியை மேலும் வேகப்படுத்தினேன். அவர்களும் என் பின்னாலேயே வந்தனர். என்னை அவர்கள் தள்ள நான் அவர்களிடமிருந்து தப்பிக்க வழி பார்க்க இந்த விளையாட்டு ஐந்து நிமிடம் நீடித்தது. முடிவில் பின்னால் அமர்ந்திருந்தவன் தனது காலால் எனது வண்டியை வேகமாக உதைத்தான். பிறகென்ன வண்டி சறுக்கியதால் நானும் கீழே விழுந்தேன். முழங்காலில் பயங்கரமான அடி. பேண்ட் பாதி கிழிந்து விட்டது. சுதாரித்துக் கொண்டு எழுந்தேன். விஜயகாந்த் போல் சண்டை போடலாமா என்று ஒரு நினைவு வந்தது :-). ஆனால் அவர்கள் கையில் கத்தியும், பெரிய சுத்திலும் இருந்தது. பணத்துக்காக எதையும் செய்ய துணிந்தவர்கள்.
'உனக்கு என்ன வேணும்?'
'இந்த இரு சக்கர வாகனம் வேணும்'
'இது ஹராம் இல்லையா'
'அதிகம் பேசாதே' என்று கத்தியை காட்டினான்.
வேறு வழியில்லாமல் வண்டியிலிருந்து எனது பொருள்களை எடுத்துக் கொண்டு வண்டியை அவர்களிடம் கொடுத்தேன். வேறு வழியில்லை. எனது பாஸிடம் விபரங்களை சொன்னேன். 'அவர்களிடம் சண்டையிடாமல் வண்டியை கொடுத்தது நல்லது. வண்டி போனால் வாங்கிக் கொள்ளலாம். உனக்கு எதாவது ஆகியிருந்தால்! இறைவன் காப்பாற்றிக் கொண்டான்' என்று தாயுள்ளத்தோடு பேசினார். அந்த வண்டியும் எங்கள் கம்பெனியினுடையது. 'இரு சக்கர வாகனத்தில் இனி செல்லாதே' என்று சொல்லி நான்கு சக்கர வாகனத்தையே தற்போது பாஸ் கொடுத்துள்ளார். ஒரு கெட்டதில் நல்லது. :-)
இதனை நான் இங்கு குறிப்பிட காரணம் ஆப்ரிக்கர்கள் அந்த அளவு மோசமானவர்கள் என்பதை சொல்வதற்கே!
இரண்டு நாட்களுக்கு முன்பு ரியாத்தில் உள்ள மன்ஃபுஹா என்ற இடத்தில் சோதனை நடத்தியது அரசு. அதிகாலை நான்கு மணிக்கு இந்த சோதனை தொடங்கியது. இந்த முறை மன்னரின் மகன் துர்கி பின் அப்துல் அஜீஸ் அவர்களே நேரிடையாக சோதனையில் ஈடுபட்டார். குறுகிய சந்துகளில் அவர் புகுந்து ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த பலரை பிடித்துக் காவலர் வசம் ஒப்படைத்தார்.

சிங்கம் ஒன்று புறப்பட்டதே.......

பூட்டிய வீடுகளை தட்டி அங்கு சோதனையிடுகிறார்.

ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த ஒரு ஆப்ரிக்கனை காவல் துறை பிடிக்கிறது.

பூட்டப்பட்ட வீடுகள் காவல்துறையினரால் உடைக்கப்படுகின்றன.

ஒரு வீட்டில் மூன்று ஆண்களும் மூன்று பெண்களும் கள்ளத்தனமாக எந்த ஆவணங்களுமின்றி தங்கியிருந்தனர். அவர்களையும் பிடித்தனர். (இந்தியர்களைப் போல் இருக்கிறது)

முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த பல பெண்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றப்பட்டனர்.

சோதனைகள் முழுவதும் முடிந்தவுடன் களைப்பு தீர தண்ணீர் அருந்துகிறார் இளவரசர் துர்கிபின் அப்துல் அஜீஸ்.
ஒரு ஆட்சித் தலைவரின் மகனுக்குரிய இலக்கணம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறார் அப்துல் அஜீஸ். இதனை இவருக்கு கற்றுக் கொடுத்தது இஸ்லாம் என்றால் மிகையாகாது. என்ன ஒரு எளிமை. என்ன ஒரு கம்பீரம். தனது நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக தூக்கத்தை தொலைத்து அதிகாலை நான்கு மணிக்கு காவல்துறையோடு வந்த இளவரசர் துர்கி பின் அப்துல் அஜிஸ் பாராட்டப்பட வேண்டியர். நம் நாட்டு அரசியல்வாதிகள் இவர்களிடம் பாடம் படிக்க வேண்டும்.
தகவல் உதவி:
அரப் நியூஸ்
22-08-2014
2 comments:
நன்றிகள்
சுவனபிரியர், உங்கள் நாட்டு மன்னர் மற்றும் அவரின் மகன் இருவருமே சிறப்பானவர்கள் தான், வாழ்த்துக்கள். என்ன செய்வது நாங்கள் மோசமான அரசியல்வாதிகளிடம் மாட்டிக்கொண்டிருக்கிறோம். மேலும் உங்கள் நாட்டின் மீதும் உங்கள் நாட்டு மன்னர் மன்னர் மகன் மீதும் நீங்கள் வைத்திருக்கும் மரியாதை வியக்க வைக்கிறது.
Post a Comment