Followers

Tuesday, August 05, 2014

முஸ்லிம்களை 'பாய்' என்று அழைப்பதை நிறுத்துங்கள்!

திரு சன் கிரீன், பாண்டியன்!

//முதலில் ஹிந்துக்கள் முஸ்லிம் அன்பர்களை பாய் என்று அழைபதை நிறுத்தவேண்டும்.//

பல இந்துத்வாவாதிகளின் மனதில் உள்ள ஆற்றாமையை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். மனிதன் ஒரு மூலத்திலிருந்து பிறந்தவன் ஆனதால் உலக மக்கள் அனைவரும் சகோதரர்கள் என்று இஸ்லாம் கூறுகிறது. இதனை உணர்ந்ததாலோ என்னவோ பெரும்பான்மையான இந்து சகோதரர்கள் இஸ்லாமியர்களாகிய எங்களை 'பாய்' அதாவது சகோதரரே என்று அழைக்கின்றனர். முஸ்லிம்களும் பதிலுக்கு அதனையே தமிழ்ப்படுத்தி 'அண்ணன், தம்பி' என்று அவர்களை அன்போடு அழைக்கின்றனர். தமிழக கிராமங்களில் இதனை அதிகமாக பார்க்கலாம். எங்கள் ஊருக்கு வரும் காவல் துறையினர் எப்போதாவது என்னைப் பார்த்தால் 'என்னங்க.... பாய்? சௌக்கியமா? எப்போ ஊருக்கு வந்தீங்க..' என்று அன்போடு அழைப்பார். மற்ற இனத்தவரோடு 'டேய்... இங்க வாடா...' என்று அதிகாரத்தோடு அழைக்கும் அதே காவல்துறை அன்பர் எங்களிடம் அன்பாக நடக்கக் காரணம் நாங்களும் அதே அளவு அன்பை அந்த சகோதரர்களிடம் காண்பிப்பதால்தான்.

இதனை ஒரு இந்துத்வாவாதியான நீங்கள் எதிர்ப்பது எனக்கு ஆச்சரியமாக படவில்லை. ஏனெனில் அன்றைய அரபுலகமும் இதே மேட்டிமைத்தனத்தில்தான் திளைத்திருந்தது. நீங்கள் எப்படி சமஸ்கிரதம் தேவ பாஷை. மற்ற மொழிகள் நீச பாஷை' என்கிறீர்களோ அது போலவே அன்றைய அரபிகளும் 'எனது மொழியே உயர்ந்த மொழி. மற்றவர்கள் பேசும் மொழி ஊமை மொழி' என்று கூறினான். அதாவது ஊமைகள் 'பே..பே...' என்றுதான் சப்தமிடுவார்கள். நீங்கள் அழகிய மொழியில் பேசினாலும் அவன் பார்வையில் உங்கள் மொழி ஊமை மொழிதான். அதே போல் இன்று பார்பனர்கள் எவ்வாறு தங்களை உயர்சாதியினராக கருதுகின்றனரோ அதே போல் அன்றைய அரபுகளில் குறைஷி இனத்தைச் சார்ந்தவன் உயர் சாதியினராக மதிக்கப்பட்டான். நீக்ரோக்களையும் மற்ற இனத்தவரையும் இழி பிறவிகள் என்று ஒதுக்கினான். கிட்டத்தட்ட இன்றைய நம் நாட்டு நிலையை ஒத்திருந்தது அன்றைய அரபுலகம்.

இஸ்லாம் வந்தது: நிலைமை தலைகீழாக மாறியது. ஒரு நீக்ரோ இறை வழிபாட்டுக்கு தலைமையாக நியமிக்கப்பட்டாலும் அவரை பின்பற்றி நீங்கள் தொழ வேண்டும் என்று மார்க்க கட்டளையாகவே இட்டார் நபிகள் நாயகம். அதனால் இன்றும் கூட மார்க்கத்தை படித்து பட்டம் வாங்காத என்னைப் போன்றவர்களெல்லாம் சவுதி பள்ளிகளில் தொழுகைக்கு தலைவராக நிற்க முடிகிறது.

அதே நேரம் நமது தமிழ் நாட்டில் வேதம் படித்த பல பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பார்பன குலத்தில் பிறக்காததால் இன்று வரை கோவில்களில் குருக்களாக நியமிக்கப்படாத கொடுமை தொடர்கிறது. இதற்கு தடையாணையையும் வாங்கியுள்ளீர்கள். அந்த அளவு மேல் சாதிப் பற்று உங்களை ஆட்டிப் படைக்கிறது.

இந்த சாதித் திமிரை தூரமாக்கி அன்போடு எங்களை 'பாய்' என்று அழைப்பது உங்களுக்கு எரிச்சலை உண்டு பண்ணுகிறது.

ஒரு முறை ஜூனியர் விகடனில் மதம் மாறிய தலித் இளைஞரை பேட்டி கண்டனர்.

'மதம் மாறியதால் உங்கள் இழிவு நீங்கி விட்டதாக நினைக்கிறீகளா?'

'என்னைவிட சிறுவர்களெல்லாம் முன்பு என்னை 'டேய்... சரவணா...' என்று தான் அழைப்பார்கள். ஆனால் இன்று நான் மதம் மாறியவுடன் அதே நண்பர்கள் 'ரஹ்மான் பாய்.... சவுக்கியமா' என்று கேட்கின்றனர். மற்ற இழிவுகள் நீங்குகிறதோ இல்லையோ... இந்த ஒரு இழிவு நீங்கினாலே என்னைப் பொருத்த வரை போதுமானது' என்றார் அந்த இளைஞன்.

ஆகவே 'பாய்' என்ற இந்த வார்த்தைக்கு அத்தனை சக்தி இருக்கிறது. நீங்கள் விரும்பா விட்டாலும் மத நல்லிணக்கத்தையும் உலக மனிதர்களையும் நேசிக்கும் பெரும்பான்மையான இந்துக்கள் எங்களை 'பாய்' என்றே அழைப்பர். அதை நாங்களும் விரும்புகிறோம். ஏனெனில் இந்த வார்த்தையின் பின்னால் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற திரு மூலரின் திரு மந்திர வரிகளும் மறைந்துள்ளது. ஒட்டு மொத்த தமிழகத்தில் இரண்டு சதவீதமே இருக்கும் உங்களைப் போன்ற இந்துத்வாவாதிகளை நாங்களும் பொருட்படுத்துவதே இல்லை.


1 comment:

ஆனந்த் சாகர் said...

//எங்கள் ஊருக்கு வரும் காவல் துறையினர் எப்போதாவது என்னைப் பார்த்தால் 'என்னங்க.... பாய்? சௌக்கியமா? எப்போ ஊருக்கு வந்தீங்க..' என்று அன்போடு அழைப்பார். மற்ற இனத்தவரோடு 'டேய்... இங்க வாடா...' என்று அதிகாரத்தோடு அழைக்கும் அதே காவல்துறை அன்பர் எங்களிடம் அன்பாக நடக்கக் காரணம் நாங்களும் அதே அளவு அன்பை அந்த சகோதரர்களிடம் காண்பிப்பதால்தான்.//

//'மதம் மாறியதால் உங்கள் இழிவு நீங்கி விட்டதாக நினைக்கிறீகளா?'

'என்னைவிட சிறுவர்களெல்லாம் முன்பு என்னை 'டேய்... சரவணா...' என்று தான் அழைப்பார்கள். ஆனால் இன்று நான் மதம் மாறியவுடன் அதே நண்பர்கள் 'ரஹ்மான் பாய்.... சவுக்கியமா' என்று கேட்கின்றனர். மற்ற இழிவுகள் நீங்குகிறதோ இல்லையோ... இந்த ஒரு இழிவு நீங்கினாலே என்னைப் பொருத்த வரை போதுமானது' என்றார் அந்த இளைஞன்.//

இது மதிப்பு அல்ல, பயம். முஸ்லிம்கள் எதற்கெத்தாலும் வன்முறையில் ஈடுபடுவார்கள், கத்தியை தூக்குவார்கள், குண்டு வைப்பார்கள், வன்முறை கலவரம் செய்வார்கள் என்பது உலகறிந்த உண்மை. அதனால் முஸ்லிம்களை பார்த்தால் மற்றவர்கள் ஒதுங்கி வழிவிட்டு செல்கின்றனர். இதை மதிப்பதாக நினைத்து விட்டீர்கள் போலும்.