
இந்திய தரப்பு ராணுவ அதிகாரி பதன் குமார் நமது நாட்டு ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானின் ஐஎஸஐ ஏஜண்ட் அனுஷ்கா அகர்வாலுக்கு விற்றுள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்கு பகரமாக பதன் குமாரின் அக்கவுண்டுக்கு 74000 வீதம் மூன்று முறை பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. போலீஸார் இந்த தகவல்களை கோர்டில் சமர்ப்பித்துள்ளனர். ஏவுகணை சம்பந்தமாகவும், ஆயுத தளவாடங்களின் ரகசிய கோப்புகளும் பல மாதங்களாக பரிமாறப்பட்டுள்ளன. ஃபேஸ்புக்கில் பல மணி நேரம் இருவரும் சாட்டிங்கில் பேசியுள்ளதும் தெரிய வந்துள்ளது.
தனது நாட்டு உளவுத் துறையிலேயே இந்துக்களை பொறுப்பான பதவியில் பாகிஸ்தான் அமர்த்தியுள்ளதை பார்க்கிறோம். இங்குள்ள ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்பதற்கும் இந்தியாவில் உள்ள இந்துக்களையே பாகிஸ்தான் நம்புகிறது. முஸ்லிம்கள் இந்தியாவுக்கு துரோகம் இழைக்க மாட்டார்கள் என்று பாகிஸ்தானும் நம்புகிறது. ஆனால் இங்குள்ள இந்துத்வாவாதிகள் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு விசுவாசமாக உள்ளனர் என்று தினமும் பொய்களை பரப்பி வருகின்றனர். பிடிபட்ட இந்த இரண்டு பேரும் இந்து மதத்தின் உயர் சாதியைச் சேர்ந்தவர்கள். தனது சொந்த நாடாக இருந்தாலும் பணத்துக்கு விலை போகுபவர்கள் யார் என்பது இப்போது நமக்கு ஆதாரத்தோடு தெரிகிறதல்லவா!
ஒரு உண்மை முஸ்லிம் தனது தாய் நாட்டை நேசிப்பான். தனது தாய் மொழியை நேசிப்பான். தனது நாட்டு மக்களை நேசிப்பான். முழு உலகையும் நேசிப்பான். ஒருகால் எந்த முஸ்லிமாவது தனது தாய் நாட்டுக்கு துரோகமிழைத்திருந்தால் அவனது பின்புலத்தைப் பாருங்கள். அவன் குர்ஆனின் கட்டளைகளை பின்பற்றாத பெயர் தாங்கி முஸ்லிமாகவே இருப்பான்.
இந்த செய்தி வழக்கமாக தினமலரிலோ அல்லது தினமணியிலோ வராது. அவாள் போடா விட்டால் என்ன? நாம போட்டு உண்மையை மக்களுக்கு விளக்கி விடுவோம்!
-----------------------------------------------------
2006-ம் ஆண்டு ராணுவ ரகசியங் கள் கசிவு வழக்கில் 3 முன்னாள் கடற்படை அதிகாரிகள், விமானப் படை கமாண்டர் ஒருவர் உள்பட 5 பேர் மீது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.
கடற்படை முன்னாள் அதிகாரி குல்புஷன் பிரஷார்,
கடற்படை முன்னாள் கமாண்டர் விஜேந்தர் ரானா,
பதவி நீக்கப்பட்ட கடற் படை கமாண்டர் வி.கே.ஜா,
விமானப்படை முன்னாள் கமாண்டர் சம்பா ஜீ எல். சர்வி,
ஆயுதத் தரகரும் தொழில பதிபருமான அபிஷேக் வர்மா
ஆகியோர் மீது குற்றச்சதி உட்பட இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
குற்றச்சாட்டை மறுப்பதாக வும், விசாரணையை எதிர்கொள் வதாகவும் குற்றம் சாட்டப்பட்ட வர்கள் தரப்பில் கூறியதை தொடர்ந்து நீதிமன்றம் குற்றச் சாட்டுகளை பதிவு செய்தது.
இவ்வழக்கில் வரும் செப்டம்பர் 8-ம் தேதி விசாரணை தொடங்கும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றங்களை பதிவு செய்ய கடந்த 31-ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.
2006 வழக்கின் விசாரணை 2014 செப்டெம்பரில் வருகிறது .
தீர்ப்பு வரட்டும் .
தமிழ்இந்து
No comments:
Post a Comment