
திருப்பூர், ஆக. 20_-திருப் பூரில் இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த வர்கள் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதில் இருதரப்பையும் சேர்ந்த அய்வர் காயம டைந்தனர். எட்டு பேரை காவல் துறையினர்கைது செய்தனர்.
திருப்பூர் கோல்டன் நகர் ஆர்.எஸ்.புரம், விநாயகர் கோயில்முன்பாக விஷ்வஇந்து பரிஷத் சார் பில் ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடியுள்ளனர். அதற்காக அங்குள்ள பிரதான சாலையில் வழியை மறைத்து குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகளை நடத்தினர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் இந்து முன்னணியைச்சேர்ந்த சிலர் குடிபோதையில் வந்துள்ளனர். அவர்கள் அந்த வழியாகச் செல்ல வேண்டும் என்று விஷ்வ இந்து பரிஷத்தினரிடம் கூறியுள்ளனர். விழா நடப்பதால்அந்த வழியாகப் போகக் கூடாது என்று அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதை யடுத்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பிலும் தலா அய்ம்பதுக்கும் மேற்பட்டோர் திரண்டு ஒருவரை ஒருவர் தாக்கத் தொடங்கினர். கற்களை எடுத்து வீசியும், உருட்டுக் கட்டைகளாலும் அவர்கள் தாக்கிக் கொண்டனர்.
இந்து முன்னணியினர் அங்கு வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணன் சிலையை கீழே போட்டு உடைத்தனர். இந்துஅமைப்பைச் சேர்ந்தவர்களே கடவுள் சிலையை பகிரங்கமாக உடைத்ததினால் பிரச்சினை இல்லாமல் போனது. ஒருக்கால் இரவு நேரத்திலோ, ரகசியமாகவோ இந்த சிலை உடைக்கப் பட்டிருந்தால் மாற்று மதத்தினர்தான் இந்த சிலையை உடைத்தார்கள் என்று வதந்தியைப் பரப்பி மதமோதலாக உருவாகி இருக்கக்கூடிய ஆபத்து நேர்ந்திருக்கும். இருதரப்பினரின் பயங்கர மோதலைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இருந்த பொது மக்கள் அச்சமுற்றனர். அப்பகுதியில் இருந்த கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உடனடியாக அடைக்கப்பட்டன. மக்கள் பயந்து போய் வீடுகளைப் பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்தனர். வடக்கு காவல்துறை ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் முப்பதுக்கும் மேற்பட்ட காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கலவரக் கும்பலைக் கலைத்தனர்.இதையடுத்து விஷ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (24), மணிவேல் (28), வீரபிரகாஷ் (26) ஆகியோரும், இந்து முன்னணியைச் சேர்ந்த ஆனந்த், கணேஷ் ஆகியோரும் காயமடைந்தனர். இந்த இருதரப்பு மோதல் தொடர்பாக திருப்பூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் வழக்குப்பதிவு செய்தார். இந்து முன்னணி தரப்பில் நகரத் துணைத் தலைவர் காமராஜ், 23ஆவது வார்டு ஒருங்கிணைப்பாளர் குணசேகரன், தீபக், மணிமாறன், விநாயக மூர்த்தி ஆகியோரையும், விஷ்வ இந்து பரிஷத் தரப்பில் ஈஸ்வரன், மணிவேல், மூக்கையன் ஆகியோரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மொத்தம் இருதரப்பையும் சேர்ந்த 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்துத்துவத்தை அடிப் படையாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்.சின் துணை அமைப்புகளாக இந்து முன்னணியும், விஷ்வ இந்து பரிஷத்தும் செயல்பட்டு வருகின்றன. இருந்தாலும்கூட, திருப்பூரில் நீண்டகாலமாகவே இரு அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு இடையே பகிரங்கமான பகை இருந்து வருகிறது. கோல்டன் நகரில் நடைபெற்றிருப்பது தனிப்பட்ட ஒரு நிகழ்வைப் போல் தெரிந்தாலும் உண்மையில் இரு அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு இடையே கனன்று கொண் டிருக்கும் பகை காரண மாகவே இந்தப் பயங்கர மோதல் அரங்கேறியிருக்கிறது. இரு அமைப்புகளும் ஒன்றிற்கொன்று குழிபறிக்கும் வேலைகளைச் செய்து வருவதாக அந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்களே கூறுகின்றனர்.
Read more: http://viduthalai.in/page-3/86195.html#ixzz3Axplw4T7
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவெங்கும் பாலாறும் தேனாறும் ஓடும் என்றார்களே! அது இதுதானோ!
No comments:
Post a Comment