Followers

Friday, August 15, 2014

யுவனின் மத மாற்றத்துக்கு ஏன் இத்தனை எதிர்ப்பு!

யுவனின் மத மாற்றத்துக்கு ஏன் இத்தனை எதிர்ப்பு!கடந்த மூன்று நாட்களாக தமிழ்ஹிந்து மற்றும் தினமலர் நாளிதழில் இந்த செய்தி முதல் பக்கத்தில் வந்தாலும் வந்தது அதற்கு வரும் பின்னூட்டங்களோ 200 ஐ தாண்டி இன்றும் தொடர்கிறது. அதில் யுவனை தரக்குறைவாக திட்டியும் பல உள் நோக்கங்கள் கற்பித்தும் பார்பனர்கள் இடும் பின்னூட்டங்கள் சொல்லி மாளாது. ஏன் பார்பனர்கள் இதில் இவ்வளவு அக்கறை எடுக்கிறார்கள் என்று என்றாவது யோசித்தோமா?

சீக்கியராகவோ, பவுத்தராகவோ, கிறித்தவராகவோ நீங்கள் மாறினால் அதனால் பார்பனர்களுக்கு எந்த சங்கடமும் இல்லை. ஏனெனில் மேலே சொன்ன மதங்களை எல்லாம் என்றோ இவர்கள் இந்து மதத்தின் பிரிவுகளாக மாற்றி விட்டனர். பரிசுத்த நாடாரிலிந்து அனைத்து சாதிகளையும் கிறித்துவத்துக்கு என்றோ கொண்டு வந்து விட்டனர்.

தங்களின் உயர் சாதி அந்தஸ்து கீழிறங்காமல் இருந்தால் இந்த எதிர்ப்பைக் காட்ட மாட்டார்கள். இஸ்லாத்தில் இந்த பந்தா பலிக்காது. இஸ்லாம் இங்கு அதிகரித்தால் கோவில்கள் பொலிவிழக்கும். காலப் போக்கில் மணி ஆட்ட நம்மையும் அனுமதிக்க மாட்டார்கள். பிராமணன் என்று கூறி தலையில் பிறந்தவனாக நம்மை இனி எவரும் மதிக்க மாட்டார்கள். உடல் உழைப்பு சார்ந்த வேலைகளை செய்ய வேண்டி வரும். உடல் உழைப்பு இல்லாமல் இத்தனை காலம் ஓட்டி விட்டோம். சொச்ச காலத்தையும் இதே போல் ஓட்ட வேண்டும் என்றால் இஸ்லாம் வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதாலேயே வானத்துக்கும் பூமிக்கும் யுவன் பிரச்னையை வைத்து தை தை என்று குதிக்கிறார்கள். காவல் துறையில் மேல் மட்டத்திலுள்ள பார்பனர்களை தூண்டி விட்டு அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை கைது பண்ணி மிரட்டி வைப்பதும் இதனால்தான்.

சில பின்னூட்டங்களைப் பாருங்கள்.

Suresh
எல்லாம் சொந்த சுய நல லாப காரண காரியங்களுக்கு மதம் மாற வேண்டியது மாறி விட்டு எதாவது புளுக வேண்டியது "எனக்கு இவர் வந்தார் அவர் வந்தார் அது தந்தார் இது தந்தார் " என . இந்த காரணங்களை ஒப்பு கொண்டு வரவேற்கும் ஒரு கும்பல் எப்போதும் உடனே ஒரு கும்மாளம் இடும்

kumaresan
இவரு சீக்கிரமே ஒரு அரபு பொண்ண கல்யாணம் பண்ணிப்பாரு. அதுக்கான முன்னோட்டம் தான் இதெல்லாம்..எந்த ஒரு விசயத்த பண்ணும் போது பிளான் பண்ணி பண்ணனும்....

Chinnappan
கதை நன்றாகத்தான் இருக்கிறது; ஆனால் நம்பும்படிதான் இல்லை!

Lakshmanakumar
மதம் மாறினால் AR Rahman' i போல வரலாம் என்று நினைப்பு. மியூசிக்ஐ காபி அடிப்பதை போல. ரஹ்மான் இரவில் விழித்து மியூசிக் போடுவதை பார்த்து சில மியூசிக் டைரக்டர்கள் இரவில் மியூசிக் போட்டனர். Dont believe this.

PRABAKARA,
யுவன் பேட்டியில் தெரிவது அவருடைய பெற்றோர் அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்தது. ஆனால் அவர் என்றாவது கோவிலுக்கு போனாரா? இந்து மதம் பற்றி அவரு தெரியாதை காட்டுகிறது. இசை அறிவிற்கும் சுய வாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். கர்நாடக சங்கீதம் தெரிந்தவர்க்கு இந்து மதம் பற்றி தெரியாதது கேள்வி குறி தான்.

இதை விட ஆபாசமாகவும் கோபமாகவும் 250க்கு மேற்பட்ட பின்னூட்டங்கள். கண்ணியம் கருதி அதனை வெளியிடவில்லை.

இவ்வளவு கூப்பாடு போடும் இந்த பார்பனர்கள் தங்கள் மதத்தில் உள்ள தீண்டாமையை போக்க முயற்சிப்பதுதானே. ஸ்ரீரங்கம் கோவிலின் கர்ப்ப கிரஹத்தினுள் சென்று வழிபட இவர் தந்தை இளையராஜாவை அனுமதிக்கவில்லை. தலித் என்பதால் வெளியாக்கி விட்டனர். ஆகம விதிகள் என்று தனக்கு சமாதானம் கூறிக் கொண்டு இதனை சாதாரணமாக இளையராஜா எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த கால இளைஞரான யுவனை இந்த செயல் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்? உலகம் போற்றும் ஒரு இசைக் கலைஞனான தனது தந்தைக்கே இந்த இழிவு என்றால் தான் எம்மாத்திரம் என்ற கோபம் உள்ளுக்குள் வராதா?

நாளை யுவன் மெக்காவுக்கு வரட்டும். அவரை முதல் வரிகையில் நிற்க வைத்து நாங்கள் அழகு பார்போம். சமத்துவம் எங்கு கிடைக்கிறதோ அதனை நோக்கி ஓடுவதை தடுக்க நீங்கள் யார்? அல்லது அவருக்கு ஒரு மாற்று வழியைக் கூறுங்கள்.


"ஆகம விதிகளின் படி கோவில் வழிபாடுகள் சமசுகிருததில்தான் செய்யப்படவேண்டும். தமிழை உபயோகித்தால் கோவிலின் புனிதம் அகன்றுவிடும். அகன்ற புனிதத்தை மீண்டும் கோவிலில் ஏற்படுத்த சமசுகிருதத்தில் சுத்திகரிப்பு சடங்குகளை செய்யவேண்டும்!" (use of Tamil profaned the sancttity of the temples.. To restore the sanctity purification ceremonies need to be performed) .
- ஜி.பாலசுப்ரமனிய ஐயர்

உச்ச நீதி மனறத்தில் இது குறித்து வழக்கேற்பட்டு நிலுவையில் உள்ளது,.


சமஸ்கிரதத்தை தேவ மொழியாகவும், தமிழை நீச மொழியாகவும் அதுவும் தமிழகத்திலேயே கூறிக் கொண்டு அதற்கு ஆதரவாக தடையாணையையும் பெற்று வைத்துள்ள பார்பனர்கள் இதற்கு பதில் சொல்வார்களா? தாய் மொழியான தமிழை இந்த அளவு வெறுக்கும் ஒரு மதத்தில் தமிழனான யுவன் தொடர வேண்டும் என்று எதன் அடிப்படையில் எதிர்பார்க்கிறீர்கள்? பார்பனர்களாகிய உங்களோடு தனது வாழ்நாள் முழுக்க போராடிய பெரியார் முடிவில் சோர்வடைந்து 'இன இழிவு நீங்க இஸ்லாமே சிறந்த மருந்து' என்று கூறி விட்டு செல்லவில்லையா?

இனி பெரியார் பேசுவதை கேளுங்கள்......

“ஆதி திராவிடர்களை நான் ‘இஸ்லாம் கொள்கைகையத் தழுவுங்கள்’ என்று சொன்னதற்காக அநேகம் பேர் என் மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப் பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவு மில்லை. சொல்வதையும் கிரகிக்க சக்தியுமில்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே, தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம் என்றே நான் கருதி விட்டேன். ஏனெனில், ‘மோட்சம் அடைவதற்காக’ நான் ஆதி திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்ல வில்லை. அல்லது ‘ஆத்மார்த்தத்திற்கோ’ ‘கடவுளை அறிவதற்கோ’ நான் அப்படிச் சொல்லவில்லை. ஆதி திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்கு சட்டம் செய்வது, சத்தியாக்கிரஹம் செய்வது முதலியவை போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன். இனியும் சொல்லுகின்றேன்.

சட்டம் செய்வது கஷ்டம்; செய்தாலும் அமுலில் வருவதும் கஷ்டம். சத்தியாக்கிரஹம் செய்வதும் கஷ்டம். செய்தாலும் வெற்றிப் பெறுவதும் சந்தேகம். இவற்றால் துன்பமும், தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால், ஆதி திராவிடர்களுக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்? அதில் தோல்வியோ துன்பமோ ஏதாவது உண்டா? அல்லது அன்னியருக்கு ஏதாவது கஷ்டம் உண்டா? அவன் ஆஸ்தீகனாய் இருந்தால் என்ன? நாஸ்தீகனாய் இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன? பொய் இஸ்லாம் ஆனாலென்ன? யாருக்கும் எவ்வித கஷ்டமும் இல்லாமல், வேண்டுமானால் எந்தவித மன மாறுதல்கூட இல்லாமல் தன்னுடைய இழிவையும் கஷ்டத்தையும் விலக்கிக் கொள்ள ஆசையும் அவசரமும்பட்ட ஒரு மனிதன் தான் மாலை 5 மணிக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டதாய்ச் சொல்லி 5.30 மணிக்கு ‘தீண்டாதவன்’ என்கின்ற இழிவிலிருந்து மீண்டு தெருவில் நடக்க உரிமை பெற்று மனிதனாவதில் ஏன் மற்றவர்கள் ஆட்சேபிக்க வேண்டும்? என்பது எனக்கு விளங்கவில்லை.

கேவலம் வயிற்றுச் சோற்றுக்காக 100க்கு 90 மக்கள் என்னென்னமோ அவரவர்களாலேயே இழிவான குற்றமான காரியம் என்று சொல்லப்படுவதை எல்லாம் செய்கின்றார்கள். அப்படி இருக்க இதில் என்ன இழிவோ குற்றமோ இருக்கின்றது என்று கேட்கின்றோம். உலகில் மதங்கள் அடியோடு ஒழிக்கப்படும் போது இஸ்லாம் மதமும் ஒழியும். அதுபோது இந்த ஆதி திராவிடர்கள் ஏற்றுக் கொண்டதும் ஒழிந்து போகுமே தவிர அது மாத்திரம் நிலைத்து விடாது. அதற்காக அதிகக் கஷ்டமும் இல்லை. ஆகையால், எது எப்படி யானாலும் தீண்டாமை ஒழிய வேண்டுமென்றும் தீண்டாதார் எனப்படுபவர்கள் இஸ்லாம் கொள்கையைத் தழுவ வேண்டியது என்பது ஒரு வழியேயாகும்.

ஏன் கிறிஸ்து மதத்தைத் தழுவக் கூடாது? ஆரிய சமாஜத்தைத் தழுவக் கூடாது? என்று கேட்கலாம். கிறிஸ்துமதக் கொள்கைகள் புஸ்தகத்தில் எப்படியிருக்கின்றது என்பது பற்றி நான் சொல்ல வரவில்லை. பிரத்தியட்சத்தில் பறக் கிறிஸ்துவன், பார்ப்பாரக் கிறிஸ்துவன், வேளாளக் கிறிஸ்துவன், நாயுடு கிறிஸ்துவன், கைக்கோளக் கிறிஸ்துவன், நாடார் கிறிஸ்துவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் இருப்பதைப் பார்த்து வருகின்றேன்.

இஸ்லாம் மார்க்கத்தில் பாப்பார முஸ்லீம், பற முஸ்லீம், நாயுடு முஸ்லீம், நாடார் முஸ்லீம் என இருக்கின்றதா? என்று கேட்கிறேன். இங்குள்ள கிறிஸ்துவ சகோதரர்கள் கோவித்துக் கெள்ளக்கூடாது. வேண்டுமானால் வெட்கப் படுங்கள் என்று வணக்கமாக தெரிவித்துக் கொள்கிறேன். ஆரிய சமாஜம் என்பதும் ஒரு வேஷமே தான். அதுவும் பயன் அளிக்கவில்லை.
உதாரணமாக வைக்கம் சத்தியாக்கிரகத்தில் ஆரிய சமாஜத் தீயர்களையும், கிறிஸ்தவப் புலையர்களையும் தெருவில் நடக்கவிடவில்லை. இஸ்லாமானவன் தாராளமாய் விடப்பட்டான். பாலக்காட்டிலும் அப்படியே நடந்தது. ஒரு நாள் பாலக்காட்டில் ஒரு செர்மன் என்கிற இழிவு படுத்தப்பட்ட ஜாதியிலிருந்த தீண்டாதவன் ஒருவன் இஸ்லாமாகி தடுக்கப்பட்டத் தெரு வழியாகப் போனான். அப்போது அவனை ஜவுளிக் கடைப் பார்ப்பனரும் வெற்றிலைக் கடை நாயரும் தெருவுக்கு வந்த நின்று பார்த்தார்கள். உடனே அங்கு இங்கிருந்த ஒரு மாப்பிள்ளை (இஸ்லா மானவன்) “எந்தடா? பன்னிக் கூத்தச்சி மகனே! அவனைப் பார்க்கிறாய்” என்று கேட்டான். செர்மனாயிருந்த இஸ்லாமியன் சிரித்துக் கொண்டே போனான். பார்ப்பனனும் நாயரும் தலைகுனிந்து கொண்டார்கள். இது பிரத்தியட்சத்தில் நடந்த சம்பவம் - சந்தேகமில்லாமல் இனியும் நடக்கக் கூடிய சம்பவம்.

(சாத்தான்குளத்தில் 28.7.1931 அன்று தந்தை பெரியார் ஆற்றிய உரை. ‘குடி அரசு'

ஆம்.... இனியும் நடக்கக் கூடியது என்று அன்று பெரியார் சொன்னார். அது உண்மைதான் என்று இன்று யுவன் இஸ்லாத்தை ஏற்று அவரது வார்த்தையை மெய்ப்படுத்தியுள்ளார்.


10 comments:

viyasan said...

யுவனின் மதமாற்றத்தை விட அவரை விமர்சனம் செய்வதால் தான் அவருக்கு கூடுதல் விளம்பரம் கிடைக்கிறது போல் தெரிகிறது. ஆனால் இசையை, ஆடல் பாடல்களை வெறுக்கும் உங்களைப் போன்ற வஹாபிகள் யுவனின் மதமாற்றத்தைக் கொண்டாடுவதைத் தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பாகிஸ்தானில் மழையில் பாட்டுப் பாடி ஆடியதற்காக இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். பார்க்கப் போனால் உங்களுக்கு மதக் கொள்கை என்பதை விட எத்தனை கோழி பிடித்தோம் என்று கணக்குக் காட்டுவதில் தான் கூடிய அக்கறையுண்டு போல் தெரிகிறது.:-)

முகம்மது நபிகள் கூட Duff (Tambourine) தவிர்ந்த ஏனைய இசைக்கருவிகளை இசைப்பது ஹராம் என்று கூறியிருப்பதாகக் கூறுகிறார் Dr. Zakir Naik. எனக்கு யுவன் அல்ல யார் வேண்டுமானாலும் மதம் மாறுவதில் எந்த முறைப்பாடும் கிடையாது. இருந்தாலும் நான் கூட "யுவன் சங்கர் இனிமேல் தப்பு (Duff) மட்டும் தான் வாசிப்பாரா?" என்ற பதிவையிட்டதன் காரணம், உங்களைப் போன்ற வஹாபிகள் அவரை ஏற்றுக் கொள்வீர்களா, என்ற சந்தேகத்தில் தான். :-)

http://viyaasan.blogspot.ca/2014/02/duff.html

சுவனப் பிரியன் said...

புஆஸ் எனும் போரின் போது அன்சாரிகள் ஒருவரை ஒருவர் நோக்கிப் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமிகள் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர். (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் இறைத் தூதரின் இல்லத்திலேயே சைத்தானின் இசைக் கருவிகளா? என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவ்விருவரையும் விட்டு விடுங்கள்). அபூபக்ரே ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 1619 மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

குரானில் இசை ஹராம் என்ற ரீதியில் எந்த இடத்திலும் வரவில்லை. வட்டி,புறம்,திருட்டு, விபசாரம், பொய், சிலை வணக்கம், கொலை என்று தடுக்கப்பட்டவைகளை பட்டியலிடும் இறைவன் அங்கு இசையை தடுக்கப்பட்டதாக கூறவில்லை. நபிகள் நாயகம் மேற்கண்ட ஹதீஸில் இதன் காரணத்திலாயே அபுபக்கர் (ரலி) அவர்களை தடுத்ததாக அறிகிறோம். சில ஹதீதுகள் இசையை கடுமையாக தடுத்து வந்துள்ளன. இவ்வாறு இரு வேறுபட்ட கருத்துக்கள் நபி மொழிகளாக வரும் போது நாம் நேரிடையாக குர்ஆனைப் பார்க்க வேண்டும். குர்ஆனில் நேரிடையான தடை இல்லை எனும் போது அந்த செயலை செயல்படுத்திக் கொள்ளலாம் என்பது பல அறிஞர்களின் கருத்து.

ஆனால் இசை என்பது நம்மை அடிமையாக்கி விடாமல் இருக்க வேண்டும். இசையில் நம்மை பறி கொடுத்து விடுவோம் என்று அஞ்சினால் அந்த இசையிலிருந்து நாம் தூரமாக இருந்து கொள்வதே நலம். இறைவனே உண்மையை அறிந்தவன்.

ஆனந்த் சாகர் said...

//குரானில் இசை ஹராம் என்ற ரீதியில் எந்த இடத்திலும் வரவில்லை. வட்டி,புறம்,திருட்டு, விபசாரம், பொய், சிலை வணக்கம், கொலை என்று தடுக்கப்பட்டவைகளை பட்டியலிடும் இறைவன் அங்கு இசையை தடுக்கப்பட்டதாக கூறவில்லை. நபிகள் நாயகம் மேற்கண்ட ஹதீஸில் இதன் காரணத்திலாயே அபுபக்கர் (ரலி) அவர்களை தடுத்ததாக அறிகிறோம். சில ஹதீதுகள் இசையை கடுமையாக தடுத்து வந்துள்ளன. இவ்வாறு இரு வேறுபட்ட கருத்துக்கள் நபி மொழிகளாக வரும் போது நாம் நேரிடையாக குர்ஆனைப் பார்க்க வேண்டும். குர்ஆனில் நேரிடையான தடை இல்லை எனும் போது அந்த செயலை செயல்படுத்திக் கொள்ளலாம் என்பது பல அறிஞர்களின் கருத்து.//

தேவைக்கு ஏற்ப ஹதீதை ஏற்றுக்கொள்வது, நிராகரிப்பது என்பது இரட்டை வேடம், சந்தர்ப்பவாதம். இந்த மோசடி வித்தையை உங்கள் அண்ணன் பி.ஜெ. உங்கள் பிரிவு கூட்டத்திற்காக கண்டுபிடித்து உங்கள அடிமை கூட்டத்தை நன்கு ஏமாற்றி வருகிறார். ஒன்று ஹதீத்களை முற்றிலும் நிராகரித்துவிட்டு அஹ்லே குரான்(ரஷாத் கலிபா கூட்டம்) கூட்டத்தில் போய்
சேர்ந்து கொள்ளுங்கள் அல்லது எல்லா ஹதீஸ்களும் மார்க்கம் என்ற சுன்னத் ஜமாத்தில் ஐக்கியமாகுங்கள். பாம்புக்கு தலையும் தவளைக்கு வாலும் காட்டுகிற ஈனத்தனமான மோசடி பிழைப்பு ஏன் உங்கள் மானங்கெட்ட கூட்டத்திற்கு?

//ஆனால் இசை என்பது நம்மை அடிமையாக்கி விடாமல் இருக்க வேண்டும். இசையில் நம்மை பறி கொடுத்து விடுவோம் என்று அஞ்சினால் அந்த இசையிலிருந்து நாம் தூரமாக இருந்து கொள்வதே நலம். இறைவனே உண்மையை அறிந்தவன்.//

இசை அடிமையாக்கி விடுமா? ஏன் கோமாளி, இசையை கேட்கவில்லை என்றால் கை நடுங்குகிறது, கேட்டால் தன்னிலை தவரவைக்கிற மயக்கம் வருகிறது என்று எவனாவது சொல்கிறானா? கொஞ்சமும் மூளையற்ற நீரெல்லாம் ஊருக்கு உபதேசம் செய்ய பதிவு எழுத வந்துவிட்டீர்!

ஆனந்த் சாகர் said...

ஆன்ம உலகில் மிக அருமையான, ரம்மியமான இசை இசைக்கபடுகிறது. இசை கடவுளுக்கு(ஆன்மாவுக்கு) விருப்பமான ஒன்று. மெல்லிய ரம்யமான இசையை கேட்டுக்கொண்டே தியானம் புரிவது அருமையான அனுபவம். அப்படி செய்யும்போது தியானத்தில் சீக்கிரம் எண்ணமற்ற நிலைக்கு செல்ல முடியும். இசை என்பது தெய்வீக அம்சம். இதை முஹம்மது அல்லாஹ்வின் பெயரை சொல்லி தடுத்தது அவர் ஒரு தீய சக்தியாக இருந்தார் என்பதற்கு, தெய்வீக சக்தியுடன் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதற்கு ஒரு மறுக்கமுடியாத அத்தாட்சியாக இருக்கிறது.

சுவனப் பிரியன் said...

//ஒன்று ஹதீத்களை முற்றிலும் நிராகரித்துவிட்டு அஹ்லே குரான்(ரஷாத் கலிபா கூட்டம்) கூட்டத்தில் போய்
சேர்ந்து கொள்ளுங்கள் அல்லது எல்லா ஹதீஸ்களும் மார்க்கம் என்ற சுன்னத் ஜமாத்தில் ஐக்கியமாகுங்கள்.//

மிகச் சில இடங்களில் மட்டுமே கருத்தை புரிந்து கௌள்வதில் குழப்பம் ஏற்படும். அதற்கு குர்ஆனின் பக்கம் சென்றால் சரியான தீர்வு கிடைத்து விடும்.

ஆனால் உங்கள் பக்கம் கடவுள் யார்? என்பதிலேயே பெரும் பிரச்னை. ராமனா, கிருஷ்ணனா, வெங்கடாஜலபதியா, ஐயப்பனா? யார் உண்மையான கடவுள் என்ற பஞ்சாயத்தை தீர்த்து வைத்து விட்டு பிறகு எங்களுக்கு அறிவுரை கூற வரலாம் :-)

சுவனப் பிரியன் said...

வட்ட மதி இரவிதனைப் பூசிப் போரும்
மண்ணை இலிங்கமாக வைத்துப் பூசிப்போரும்
சுட்ட உருமரச் சிலைகள் பூசிப் போரும்
துய்ய செப்பு கல்லுருவைப் பூசிப்போரும்
திட்டமுடன் எட்டெழுத்துப் பொருளென்போரும்
சிறந்த எழுத்தஞ்சுமே பொருளென்போரும்
விட்ட இடம் தன்னை அறியார் இவரெல்லரும்
விட்ணு வென்றும் சிவனென்றும் விளம்புவாரே
- சங்கராச்சாரி உடலறி விளக்கம்

Anonymous said...

மதம் மாற்றும் நோக்கில் உங்களுக்கு தோதுபடும் சில சித்தர் பாடல்களை படிப்பதைத் தவிர்த்து இந்து மதத்தின் கடவுள் கொள்கை உண்மையிலேயே என்ன சொல்கிறது என்று என்றாவது நேரமையாக அனுகியதுன்டா ? இறைவன், ஆண்டவன் , கடவுள் என்ற பெயரில் ஒரு கோவிலும் பார்த்ததுண்டா ? எல்லா ஞானிகளும் இறை தத்துவத்தை அறிய ஆரம்பித்ததும் கோவில் தேவை இல்லை என்றே சொல்லி இருக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் இது போன்ற உருவ வழிபாடு தவறில்லை என்றே சொல்லி இருக்கிறார்கள். எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை. இறை தத்துவம் , ஆன்மீகம் என்றால் என்னவென்றே தெரியாத முகமது உங்களுக்கு ஒரு காட்டுமிராண்டி இறைவனைப் போதித்திருக்கிறார். அத்னால்தான் அவருடைய நரகமும் சொர்கமும் மிகவும் தூலமாக அற்பத் தனமாக இருக்கிறது. ஆன்மீக ஆராய்ச்சியில் பன்னெடுங்காலமாக பங்கெடுத்த ஞானிகளையும் முகமதையும் ஒப்பிடுவதே மிக மிக தவறு. எங்களால் ஞானிகளின், சித்தர்களின் முழு வாழ்க்கையையும் சொல்லி அவர்கள் எவ்வளவு மேன்மையானவர்கள் என்று சொல்ல முடியும். உங்களால் முகமதின் முழு வாழ்க்கையையும் புதியவர்களிடம் சொல்ல முடியுமா ? அப்படி சொல்ல முடியும் என்றால், அவர் செய்த கொலைகளையும் , பெண்களை அடிமைகளாக்கி கற்பழித்ததையும் முதலில் சொல்லுங்க்கள். எப்படி வேண்டுமானாலும் திருப்பி போட்டு சொல்லுங்களேன். கொலை செய்ய கூடியவனையும், கற்பழிப்பவனையும் இந்துக்கள் என்றுமே மேன்மையானவர்கள் பட்டியலில் சேர்க்க மாட்டார்கள். முதலாவதாக பின்னூட்டங்களை வெளியிட தைரியம் இருக்கிறதா உங்களிடம் ? பதில் சொல்ல முடியாத கேள்விகளை கேட்டதும் உடனே பின்னூட்டத்தை அழித்து விடுகிறீர்கள். உங்களுடைய நேர்மையின்மை உங்களுடைய மதம் எவ்வளவு போலியானது என்பதற்கு அத்தாச்சி.

viyasan said...

//குர்ஆனில் நேரிடையான தடை இல்லை எனும் போது அந்த செயலை செயல்படுத்திக் கொள்ளலாம் என்பது பல அறிஞர்களின் கருத்து.//

அப்படியானால் இந்த விடயத்தில் Dr. Zakir Naik இன் கருத்து தவறானது. அவருக்கு இசை என்ற இந்த விடயத்தில் குர்ஆன் என்ன கூறுகிறது என்பதில் விளக்கம் குறைவு என்கிறீர்களா?

"These hadith do indicate that musical instrument per se is haram except for the duff and the Tambourine the prophet did permit it sometimes."
-Dr. Zakir Naik-

viyasan said...

//உங்கள் பக்கம் கடவுள் யார்? என்பதிலேயே பெரும் பிரச்னை. ராமனா, கிருஷ்ணனா, வெங்கடாஜலபதியா, ஐயப்பனா? யார் உண்மையான கடவுள் என்ற பஞ்சாயத்தை தீர்த்து வைத்து விட்டு பிறகு எங்களுக்கு அறிவுரை கூற வரலாம் :-)///

நீங்கள் இந்துமதத்தைப் பற்றி சரியாகத் தெரிந்து கொள்ளாததால் தான் இந்தக் குழப்பம் எல்லாம். உங்களைப் போன்றவர்கள், அதாவது தமிழர்களில் சிலரும் எதிர்காலத்தில் வெளிநாட்டு, வேற்றுமதங்களைத் தழுவிய பின்னர், தமது முன்னோர்களின் நம்பிக்கைகளைக் கேலிசெய்வார்கள் என்பதைத் தீர்க்கதரிசனமாக அறிந்து கொண்ட எமது (உங்களதும், எங்களதும்) முன்னோர்கள் “யாதொரு தெய்வம் கண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார்தாம் வருவர்” என்று சொல்லி வைத்து விட்டுப் போனார்கள். :-)

சுவனப் பிரியன் said...

//அப்படியானால் இந்த விடயத்தில் Dr. Zakir Naik இன் கருத்து தவறானது. அவருக்கு இசை என்ற இந்த விடயத்தில் குர்ஆன் என்ன கூறுகிறது என்பதில் விளக்கம் குறைவு என்கிறீர்களா?//

அரபுலகில் யூசுப் கர்ளாவி என்ற அறிஞர் தமிழகத்தின் பிஜேயை போன்றவர். அவர் ஆபாசமில்லாத இரட்டை அர்த்த வசனமில்லாத இசையை அங்கீகரிக்கிறார். சவுதியிலும் சில அறிஞர்கள் இசையை சில கட்டுப்பாடுகளோடு அனுமதிக்கின்றனர்.

//நீங்கள் இந்துமதத்தைப் பற்றி சரியாகத் தெரிந்து கொள்ளாததால் தான் இந்தக் குழப்பம் எல்லாம். உங்களைப் போன்றவர்கள், அதாவது தமிழர்களில் சிலரும் எதிர்காலத்தில் வெளிநாட்டு, வேற்றுமதங்களைத் தழுவிய பின்னர், தமது முன்னோர்களின் நம்பிக்கைகளைக் கேலிசெய்வார்கள் என்பதைத் தீர்க்கதரிசனமாக அறிந்து கொண்ட எமது (உங்களதும், எங்களதும்) முன்னோர்கள் “யாதொரு தெய்வம் கண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார்தாம் வருவர்” என்று சொல்லி வைத்து விட்டுப் போனார்கள். :-)//

நமது முன்னோர்களான சித்தர்கள் சிலை வழிபாட்டை எந்த அளவு நிந்திக்கின்றனர் என்பதை இந்த பதிவில் பார்த்துக் கொள்ளுங்கள்.

http://suvanappiriyan.blogspot.com/2014/08/blog-post_39.html