Followers

Sunday, August 03, 2014

நெகிழ வைத்த நிகழ்வு - இந்து மத நன்மக்கள்

முகநூலில் ஒரு இந்து நண்பர் பதிந்த பதிவும், அந்த பதிவுக்கு வந்த பின்னூட்டங்களும்....

நான் எனது பள்ளிப்படிப்பை பழனி அருகில் உள்ள கீரனூர் எனும் அழகிய ஊரில் படித்தேன். கிட்டத்தட்ட பாதிக்கு மேல் என் பள்ளித்தோழர்கள் இசுலாமிய மார்க்கத்தை சேர்ந்தவர்கள். லுங்கி அணிந்தே பள்ளிக்கூடம் வருவதும் ஒரு சில சமயங்களில் அனுமதிக்கப்பட்டே இருக்கும். பிஸ்மில்லாஹிரஹ்மானிரஹீம் என்று பள்ளியில் என் நண்பன் பஜ்ஜுலூர் ரஹ்மான் மைக்கில் ஓதுவான். இன்னொரு நண்பன் இஸ்மாயில் பள்ளிக்கூட பாட்டுப்போட்டியில் முதலிடம் வாங்குவான் . . . இன்றும் அவனது நாகூர் ஹனீபா குரலில் பாடும் . . . "வாங்கோசை கேட்டபின்பும்... பள்ளி செல்ல மனம் வல்லையோ . . .. படைத்தவன் நினைவில்லையோ" பாடல் ஒலிக்கிறது ! அப்போதே இரண்டு பிரிவுகள் . . .. ஒன்று நாகூர் அனீபா பாட்டுக்கச்சேரி நடத்தும் திமுக சார்பு அணி . . . இன்னொன்று சேக்முகமது (என்று ஞாபகம்) அவர்களை அழைத்து கச்சேரிகள் நடத்தும் ஏடிஎம்கே. அன்றெல்லாம் பாய்மார்கள் எல்லாம் மாமன் மச்சான் உறவோடு பழகிய காலம் !

கோவையில் இனமோதல்களை பார்த்தபோது எனக்கு ஒன்றுமே விளங்கியதில்லை . . .. புரிபடவும் இல்லை. உள்ளூர் கலாச்சாரங்களை உலக கலாச்சாரங்கள் முழுங்கியபோதுதான் பிரச்சினைகள் ஏற்பட்டது என்று மட்டும் கொஞ்சம் புரிந்தது. ஆனாலும் லைலத்துல் கத்தர் அன்று காலை கூட உணவு உண்ணாமல் பல ஆண்டுகள் நோம்பு இருந்தேன். காந்திபுரம் வாட்ச் பாய் ஷனாவுல்லா உடன். உண்மையில் ரமலான் அவர்களுக்கு ஒரு இறையுணர்வுடன் கூடிய ஒரு புனித காலம் என்பது மட்டும் எனக்கும் அவர்களோடூ பழகியதில் புரிந்தது. அவரவர்கள் வழியில் பயணிக்காமல் அடுத்தவர்களின் வழியை குறைசொல்ல தொடங்கும்போதுதான் மார்க்கங்கள் மரணங்களில் முடிகின்றன. எனக்கு தக்கலையில் ஒரு முதியவர் ஒருவர் நண்பராக இருந்தார். அவர் சொல்வார் . . . நான் என் அளவுக்கு அல்லாவுக்கு எவ்வளவு நேர்மையாக இருக்கிறேன் என்பதை மட்டுமே பார்க்கிறேன் தம்பி. மற்றவர்களின் தீர்ப்பை அல்லாதான் முடிவு செய்வார் .. அதில் எனக்கு ஒரு பங்கும் இல்லை" என்று சொல்லுவார். அனைவருக்கும் ஷியா, சன்னி என்ற இரு பிரிவுகள் மட்டுமே தெரிந்திருக்கும்போது எனக்கு இன்னொரு பிரிவான இபாதி இசுலாம் பற்றியும் படித்து வந்திருக்கிறேன். இன்றும் அவ்வப்போது நபிகளின் போதனைகளை படிப்பதும் உண்டு. அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள் !

-ஓசை செல்லா

Alangiam pallivasalil dhinandhorum kalai 5.45 paadum vaangosai engalukku puthunarvu tharum ......

-Shanmuga Sundar

நான் சென்னை பாரிமுனைக்கு அருகே ஒரு கான்வென்ட் இல் lkg. -2nd STD படித்து போது, என் அம்மா வேறொரு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார் .அவர் வீடு திரும்பும் முன்னரே நாங்கள் வந்துவிடுவோம் ஆகையால் நானும் என் அக்கா வும் என் தோழி தமீம் பாத்திமா வீட்டில். தான் காத்துக்கொண்டிருப்போம்.... அப்போதே மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும... அவர்கள் வீட்டில் நான். சுவைத்துஏலக்காய் டீபோல் வாழ்க்கையில் வேறு எங்கும் சாப்பிட்டதில்லை..... என் குழந்தைப் பருவத்தின் பல பசுமையான நியாபகங்களின் களமாக திகழ்ந்தது அவர்களின் வீடு... .பகிர்ந்து உண்ண நான் கற்றுக் கொண்டது அங்கே தான்.... இசுலாம் நல்ல மதம் ...இசுலாமியர்கள் நல்லவர்கள் ....கெட்டவர்கள் இசுலாமியர்களே இல்லை ! இனிய ரமலான் நல்வாழ்த்துகள்

-Iswarya Raghupathy

இதுதான் தமிழகம்..... இந்த எண்ணங்கள் தான் தமிழர்களின் பெரும்பான்மையோருடையது. ஒரு சில ராம கோபாலன்களும், தெகோடியாக்களும், நரேந்திர மோடிக்களும் இந்த அமைதியை குலைத்து விட முடியாது. என்றும் எங்களது தமிழகம் அமைதிப் பூங்காவே என்று மார்தட்டி சொல்லுவோம்.

1 comment:

Unknown said...

//உள்ளூர் கலாச்சாரங்களை உலக கலாச்சாரங்கள் முழுங்கியபோதுதான் பிரச்சினைகள் ஏற்பட்டது என்று மட்டும் கொஞ்சம் புரிந்தது.//

உண்மைதானே, அரபு கலாச்சாரங்களை இங்கு கொண்டு வந்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஒரு கும்பல் அலைகிறது என்பது உங்களுக்கு புரிந்ததில் மகிழ்ச்சி

//இதுதான் தமிழகம்..... இந்த எண்ணங்கள் தான் தமிழர்களின் பெரும்பான்மையோருடையது. ஒரு சில ராம கோபாலன்களும், தெகோடியாக்களும், நரேந்திர மோடிக்களும் இந்த அமைதியை குலைத்து விட முடியாது.//

அடடா நீங்கள் எல்லாம் உத்தமர்கள். அது எப்படி உம்மால் கூசாமல் இப்படி எழுத முடிகிறது. முதலில் உனது கூட்டம் ஏமாற்றி மத மாற்றம் செய்வதை நிறுத்தி விட்டு அதன் பிறகு நீர் யோக்கிய வசனம் பேசினால் நன்றாக இருக்கும் . நாட்டின் அமைதி குலைவதன் முதல் காரணமே உனது கூட்டமும் மத மாற்றும் அரபு அடிமைகளும் தான்