Followers

Friday, August 29, 2014

பாவம் இந்த அரசியல் பிள்ளையார்!பாவம் அந்த பிள்ளையார்!
------------------------------------------

மிகச் சரியாக நினைவில் இருக்கிறது. இதேப்போன்ற ஒரு விநாயகர் சதுர்த்தியின் மழை நாளில் தான் அந்த சம்பவம் நடந்தது.

பத்தாண்டுகள் இருக்கும். அப்போது `மும்பை தமிழ் டைம்ஸ்’ நாளிதழில் உதவி ஆசிரியராக பணியிலிருந்தேன். அன்றைய பணி முடிந்து நானும் அலுவலக சகாக்கள் இருவரும் தாதர் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தோம். நேரம் இரவு மணி பத்தரை இருக்கும். லைட்டாக மழை தூறிக் கொண்டிருந்து.

தாதர் ரயில் நிலையத்தில் எல்லா நாளும் கூட்டம் அள்ளும். அன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. சிலர் அழகான குட்டி பிள்ளையார் சிலைகளை தங்கள் பகுதிக்கு ரயில் கொண்டு செல்ல காத்திருந்தனர்.

சில நிமிடத்தில் சர்ச்கேட் டூ போரிவலி ரயில் வந்தது. சிலைகளை வைத்திருந்த குரூப் ஒன்று முண்டியடித்து ஏறியது. அவர்களுக்குப் பின்னாடியே என் சகாக்கள் இருவரும் ஏறிவிட்டிருந்தனர்.

நான் மட்டும் கூட்டம் உள்ளே போகட்டும். வாசல் ஓரம் நின்றுக் கொள்ளலாம் என்று வாசலை ஒட்டி இருந்த சிறு கைப்பிடியை பிடித்துக் கொண்டு ரயிலில் ஒரு காலும் பிளாட்ஃபார்மில் ஒரு காலும்வைத்தபடி நின்று கொண்டிருந்தேன்.

ரயில் கிளம்புவதற்கான `பூம்ம்ம்ம்ம்ம்..’ அலாரம் ஒலித்தது. மெதுவாக ரயில் நகர ப்ளாட்ஃபார்மிலிருந்த எனது காலை எடுத்து ரயில் வைக்க முயன்றபோதுதான் அந்த சம்பவம் நடந்தது.

மெலிந்த உடலும், பரட்டை தலையும், தாடியும், அழுக்கு உடையுமாக இருந்த 50 வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் ரயிலின் உள்ளிருந்த கூட்டத்தை பிளந்தபடி மிதித்து தூக்கிவீசப்பட்டார்.

ஒரு கணம் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் ஓடும் ரயிலில் இருந்து ஒருவர் மிதித்து வீசப்பட்டது நிஜம்.

விழுந்த நபர் கூட்டத்துக்கு நடுவே அப்படியே சுருண்டு கிடந்தார்.

யார் அந்த நபர்.. உள்ளே என்ன நடந்தது எதுவும் எனக்கு தெரியாது. ஆனால் யாரோ ஒருவரை ஓடும் ரயிலிருந்து மிதித்து தள்ளியிருக்கிறார்கள் என்பது மட்டும் புரிந்தது.

கோபத்துடன், "அரே க்யூம் அய்ஸா மார்க்கே ஃபேக்த்தேஹோ.. ஓ ஆத்மி மர்ஜாய்கா..” (ஏன் இப்படி அடிச்சு வீசுறீங்க.. அந்த ஆள் செத்துப்போவான்” ) என்று சத்தம் கொடுத்தேன்.

அவ்வளவுதான்.. அடுத்த நொடி,

`` ஆய்லா.. கோன் ஆய்ரே த்தோ.. “ (..த்தா.. யார்ல அது..)
என்று உள்ளிருந்து தடித்த குரல் ஒன்று வந்தது.

குரல் மிதித்து தள்ளியவனுடையதுதான். 40 வயது இருக்கும். மராட்டியர்களுக்கான பாரம்பரிய வெள்ளை உடையுடன் ஆள் வேறு பார்க்க கொஞ்சம் `பல்க்காக’ இருந்தான்.

கூடவே அவனுக்கு ஆதரவாக இருக்கையில் உட்கார்ந்திருந்த குஜராத்தி, மார்வாடிகள் வேறு குரல் எழுப்பினார்கள். அவர்கள் எப்போதுமே அப்படிதான்.. சண்டைபோட மாட்டார்கள்.. வெட்ட மாட்டார்கள்.. குத்தமாட்டார்கள். ஆனால் மத கலவரத்தை பின்னிலிருந்து நன்கு ஊதி பெருசாக்குவார்கள்.

கேள்வி எழுப்பியது நான் தான் என்பதை பார்த்துவிட்டான் அந்த தடியன்.. பதுங்கவும் முடியாது. எதிர்த்து நின்றால் அடுத்து ரயில் நிலையத்தில் மிதித்து தள்ளப்படப்போவது நானாகக்கூட இருக்கலாம். வேறு வழியில்லை.. இந்த இடத்தில் பம்ம வேண்டும் என்று என் ஏழாம் அறிவு எச்சரித்தது.

இந்த ரகளை நடந்து கொண்டிருக்கும்போது என்னுடன் வந்த சகாக்கள் இருவரும் கூட்டத்துக்கு நடுவில் குனிந்து தலையை மறைத்து எஸ்ஸாகியிருக்க கூடும்.

கொழுப்பெடுத்துப்போய் கேள்வி கேட்ட குற்றத்திற்காக நான் அடிவாங்கலாம். கூட வந்த பாவத்திற்காக அவர்கள் அடி வாங்க முடியாதில்லையா..

என்னை நோக்கி முன்னேறி நகர்ந்து வந்த அந்த நபரை நோக்கி,

`` பாய்.. அய்ஸா மார்க்கே ஃபேக்த்தேஹோ.. ஓ ஆத்மி மர்ஜாய்ஹாதோ க்யா கரேகா தும்..” என்றேன் குரலை தாழ்த்தியபடி..

(அண்ணே.. இப்படி மிதிச்சு தள்ளுறீங்களே.. அவன் செத்துப்போனா என்ன பண்ணுவீங்க..)

அந்த தடியன் அதற்கு பதில் சொல்லாமல் முறைத்தபடி, `

` தூ கோன் ஆய்ரே..” என்றான். ( நீ யார்ரா..)

அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கக்கூடும். ஒரு மதபோதை ஏறியவனின் கண்களை நீங்கள் நேருக்கு நேராக சந்தித்திருக்கிறீர்களா.. நான் பார்த்தேன்.. அவன் கண்களில் அத்தனை வெறி.

அந்த முரடன் மராட்டியன் என்பது தெரிந்ததால்,

`` மீ... பிரஸ்ச்சா மானூஷ்..” என்று மராட்டியில் பதிலளிக்க ஆரம்பித்தேன்.

பிரஸ் என்றதும் அவன் மூர்க்கம் லைட்டாக குறைந்தது. ஆனால் குரலின் கடுமையை குறைக்காமல், '' பிரஸ் மஞ்சே காய்பன் போல்னார் காய்.. குட்சா பிரஸ்?” ( பிரஸ்னா என்ன வேணும்னாலும் சொல்வியா .. எந்த பத்திரிகை?) என்று அடுத்த கேள்வியை கேட்டான்.

அப்போதுதான் என் `மீடியா புத்தி’ கூடுதலாக வேலை பார்க்க ஆரம்பித்தது. சும்மாவே வட இந்தியர்களுக்கு தமிழர்கள் மீது ஒரு எரிச்சல் இருக்கும். வாய்ப்பு கிடைத்தால் இழிவு படுத்துவார்கள்.

அதனால் தமிழ் டைம்ஸ் என்று தமிழ் பத்திரிகை பெயரை சொல்லாமல், எங்கள் குழுமத்திலிருந்து வெளிவரும் மராட்டி பத்திரிகையானா `மும்பை சவ்ஃப்பர்’ என்ற பெயரை குறிப்பிட்டேன்.

மராட்டியர்கள் அதிகம் படிக்கும் பத்திரிகை அது. அவனும் அதன் வாசகனாக இருந்திருக்க கூடும் என நினைக்கிறேன். கொஞ்சம் கூலாகிவிட்டான்.

`` அரே.. அப்லா சவ்ஃப்பர்ச்சா மானூஷ் ஆய்..
கசா.. அசா போல்தே துமீ..

தோ பாஹல் அப்லா கண்பத்திலா
டச் கேலே.. மாய்த்தே காய்..

தெஜா சாட்டி மீ மார்லே..” என்று சொல்லிவிட்டு இருக்கையை நோக்கி நகர்ந்து சென்றுவிட்டான்.

நடந்த விசயம் இதுதான்..

அந்த பிச்சைக்காரர் இருக்கையில் படுத்து கொண்டு வந்திருக்கிறார். இவர்கள் உள்ளே நுழைந்த வேகத்தில் அவரை தட்டி எழுப்பியிருக்கிறார்கள். அப்போது பதறி எழுந்ததில் அந்த பிச்சைக்காரரின் கை தடியன் கையில் வைத்திருந்த பிள்ளையார் சிலை மீது பட்டுவிட்டது.

பிள்ளையார் சிலையை தொட்டுவிட்டான் என்ற ஒற்றை காரணத்திற்காகதான் அந்த பிச்சைக்காரர் மிதித்து வெளியே தள்ளப்பட்டிருக்கிறார்..

சிலையை ஒரு பிச்சைக்காரன் தொட்டுவிட்டான் என்ற அல்ப காரணத்திற்காக ஓடும் ரயிலில் இருந்து ஒருவரை மிதித்து தள்ள மனம் வர முடியுமா என்பதே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.. என்ன செய்வது என்று தெரியவில்லை.

ரயில் வேகமெடுக்க ஆரம்பித்திருந்தது.. அமைதியாக வாசல் ஓரம் நகர்ந்து வெளியே எட்டிப்பார்த்தேன்..

ரயிலிலிருந்து மிதித்து தள்ளப்பட்டு ப்ளாட்ஃபார்மில் பரிதாபமாக விழுந்து கிடைந்த பிள்ளையாரை சிலர் கைதூக்கி எழுப்பிவிட்டுக் கொண்டிருந்தார்கள்..

-கார்ட்டூனிஸ்ட் பாலா
29-8-14

-------------------------------------------------------

விநாயகர்

வங்கியின் முன்னால்
செல்வ விநாயகர்

நீதிமன்ற வளாகத்தில்
நீதி தரும் விநாயகர்

மருத்துவ மனையில்
வினை தீர்க்கும் விநாயகர்

வழியோரங்களில்
வழிவிடும் பிள்ளையார்

குளத்தங்கரையில்
அரச மரத்துப் பிள்ளையார்

அவரவர் இடத்தில்
அகலாமல் இருந்தனர்

நேற்று
ஆயுதப் படை சூழ
ஊர்வலமாக வந்து
கடலிலே கரைந்தார்
அரசியல் பிள்ளையார்!

கவிதை ஆக்கம்: சத்தியமா நானில்லை :-)

6 comments:

tamilan said...

.

சொடுக்கி படிக்கவும் ......

>>>
ஆபாச பிள்ளையார் ? இந்துமுன்னணி புகார். தி.க. சவால்.
<<<


.

UNMAIKAL said...

முஸ்லிம்கள் Vs வினாயகர் ஊர்வலங்கள் PART 1

வினை தீர்ப்பான் என்று இந்து நண்பர்களால் நம்பப் படுகின்ற வினாயகரின் பெயரால் - முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் நடைபெற்று வருகின்றன.

ஆலமர, வேப்பமர நிழலிலும் மற்றும் ஆத்தங்கரைகளிலும் வீற்றிருக்கும் 'புள்ளையாரை' முன்வைத்து முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுகின்றன.

முன்பெல்லாம் வினாயகர் சதுர்த்தியன்று வீடுகளில் மாட்டுச் சாணம் அல்லது களிமண்ணால் சிறிய வினாயகர் வடிவங்களைப் பிடித்து அவற்றைக் கிணறுகளிலோ குளங்களிலோ வீசி எறிவர். வினாயகர் சதுர்த்தி என்றாலே சிறுவர்களுக்குக் கொண்டாட்டம் கொழுக்கட்டை கிடைக்கும் என்பதுதான்.

1985ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்துத்துவ வெறிக்கும்பல் நடத்தும் வினாயகர் சதுர்த்தி என்றாலே கலவரமும் வன்முறையும்தான் நினைவுக்கு வந்து திண்டாட்டத்தை ஏற்படுத்துகிறது.

முஸ்லிம்களின் மீது வெறுப்பையும் காட்டுவதையே பிழைப்பாகக் கொண்ட மதவெறியர்களின் கையில் அப்பாவி வினாயகரும் 'துருப்பு சீட்டாக' சிக்கிக் கொண்டார்.

முஸ்லிம்களுக்கு எதிரான பகையை வளர்ப்பதற்கான எந்த வாய்ப்பையும் தவற விடாத ஹிந்துத்வ சக்திகள், கோட்ஸே என்ற சித்பவன பிராமனனால் மஹாத்மா காந்தி, படுகொலை செய்யப்பட்டபோது அதைத் திரித்து, "ஒரு முஸ்லிம்தான் காந்தியை படுகொலை செய்தான்" என்று வதந்தி பரப்பினார்கள். அந்தப் பழக்கம் இன்றும் தொடர்ந்து தென்காசியில், தங்களது சொந்த இந்து முன்னணி அலுவலகத்தில் 'வெடிகுண்டு' வைத்துவிட்டுப் பழியை அப்பாவி முஸ்லிம்கள் தலையில் போட்டுக் கலவரம் செய்ய முயன்று - இறுதியில் போலீசில் 'வகையாக சிக்கி' மூக்கை உடைத்துக் கொண்டது.

'இஸ்லாமியர்கள் தங்களின் தெருவழியாக இந்துக் கடவுளர்களை தூக்கிச் செல்ல அனுமதிப்பதில்லை என்றும் "முஸ்லிம்களின் வசிப்பிடங்களின் வழியாக பன்றி போகலாம், கழுதை போகலாம், நாய் போகலாம் ஆனால் 'புள்ளையர் சிலை' போகக்கூடாதா?" என்று பொது மக்களை உசுப்பேத்தி விட்டு, வழக்கமாகச் செல்லும் வழியை விட்டுவிட்டு முஸ்லிம்கள் வசிப்பிடம் வழியாகத்தான் புள்ளையாரைத் தூக்கிச் செல்லவேண்டும் என்று மக்களைத் தூண்டி வருகிறார்கள். அந்தப் பொய்களை கேட்கிற எவருக்கும் இஸ்லாமியர்கள் வினாயகரை எதிர்க்கிறார்களே என்றே எண்ணத் தோன்றும்.

முஸ்லிம்களின் வசிப்பிடங்கள் வழியே பன்றிகள் போகும்போது, "பாபரின் வாரிசுகளே! பாகிஸ்தனுக்கு திரும்பி போங்கள்" என்று உறுமுவது கிடையாது. நாய்கள் போகும்போது, "துலுக்கனை வெட்டு; துலுக்கச்சியக் கட்டு" என்று குரைப்பது கிடையாது. கழுதைகள் போகும்போது, "பத்து பைசா முறுக்கு; பள்ளிவாசலை நொறுக்கு" என்று கனைப்பது கிடையாது.

ஆனால் 'பக்த கோடிகளாக' வேஷமிட்டு, 'சோம பானம்' 'சுரா பானம்' அருந்தி, சுய நினைவில்லாமல் கூலிக்கு மாரடிக்கிற 'கேடிகள்' போடுகிற இஸ்லாமிய எதிர்ப்பு கோஷங்கள்தாம் முஸ்லிம்களைத் தங்களது வசிப்பிடங்களின் வழியாக 'வினாயகர் ஊர்வலம்' செல்வதை எதிர்க்கத் தூண்டுகிறது.

இஸ்லாமியர்களின் எதிர்ப்பு வினாயகருக்கோ ஹிந்து சகோதரர்களுக்கோ எதிரானது அல்ல. 'வினாயகர் ஊர்வலம்' என்ற போர்வையில் கலவரம் விளைவித்து, ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையைச் சீர்குலைத்து, முஸ்லிம்களின் சொத்துகளை சூறையாடத் திட்டம் போடும் ஹிந்துத்வ மதவெறி கும்பலுக்கு மட்டும் எதிரானது என்பதை மாற்றுமதச் சகோதரர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.

ஆனால், இதையும் வழக்கம்போல் திசை திருப்பி பொதுமக்களிடம் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வை வளர்கிறார்கள்


Continued..........

UNMAIKAL said...

முஸ்லிம்கள் Vs வினாயகர் ஊர்வலங்கள் PART 2

வினாயகர் சிலைகளைக் கரைக்க ஊர்வலமாகச் செல்பவர்கள் எவரும் மந்திரங்கள் சொல்லுவதில்லை.

அதற்கு இரண்டு காரணங்கள், ஒன்று தூக்கி செல்கிறவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மந்திரமே தெரியாது; அதற்குக் காரணம் உயர்சாதிக்கு மட்டும் சொல்வதற்குச் சொந்தமான மந்திரத்தைப் பிறர் காதால் கேட்க கூடாது; நாவால் உச்சரிக்க கூடாது, மீறினால் ‘ஈயம் காய்ச்சி ஊற்றப்படும்’ என்ற 'மனுதர்மத்தின்' அன்பான மிரட்டல்தான்.

ஹிந்து தர்மப்படி 'சூத்திரன்' 'மிலேச்சன்' என்ற முத்திரைகளோடு கோவிலுக்குள் நுழைய அருகதையற்றவர்களின் கைகளிள் முஸ்லிம்களை எதிர்ப்பதற்காக 'சிலையை'த் திணிக்கிறது ஹிந்துத்வா.
வேதங்களால், தீண்டத்தகாதவர்களாக வரையறை செய்யப்படவர்களுக்குத் தற்காலிகமாக 'ஹிந்து' என்று முத்திரை குத்தி, முஸ்லிம்களுக்கெதிராகக் களமிறக்குகிறது ஹிந்துத்வா.

ஒவ்வொரு வருடமும் வினாயகர் ஊர்வலத்தின் போது பதட்டம்-கலவரம் ஏற்பட இத்தகைய கோஷங்கள்தான் காரணம் என்று - 'ஸ்காட்லாந்து' போலிசுக்கு இணையாகக் கருதப்படும் தமிழகக் காவல் துறைக்குத் தெரியாதா?

வினாயகர் சிலை கரைக்கப்படுவதால் நீர் நிலைகளில் தேக்கங்களில், ஆறு குளங்களில் ஏற்படும் மாசுகளைப் பற்றி கவலைப்படும் மத்திய-மாநில அரசுகள் - ஊர்வலம் மூலம் ஏற்படும் மதக்கலவரம் பற்றி கவலைப்படாது ஏன்?

நீர் வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்காக - கரைக்கப்படும் சிலைகள் செய்யப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களைப் பற்றிய விதிமுறைகளில் காட்டப்படும் அக்கறையில் சிறிதுகூட ஊர்வலத்தால் பாதிக்கப்படும் சிறுபான்மையினர் நலனில் காட்டப்படாதது ஏன்?

சட்டமும் காவல் துறையும் என்ன செய்துகொண்டிருக்கின்றன?

இழவுத் துறையாகிப் போன உளவுத்துறை போல் செயலிழந்து விட்டதா?

அமைதியாக நடக்க வெண்டிய ஊர்வலத்தை - பதட்டம் நிறைந்ததாக மாற்றும் கயவர்கள் யார் என்று காவல் துறைக்குத் தெரியாதா?

டிசம்பர் ஆறை முன்னிட்டு முன்னெச்சரிகை நடவடிக்கை என்ற பெயரில் முஸ்லிம்களைக் கைது செய்வதில் காட்டும் அக்கறையில் சிறிது கூட 'ஹிந்துத்வ' வினாயகர் ஊர்வல ஏற்பாட்டாளர்கள் மீது காட்டாதது ஏன்?

பிரச்சினைக்குத் தற்காலிக தீர்வுகள் வேண்டி 'பதட்டம்' நிறைந்த ஊர்களில் அனைத்து மதக்கூட்டம் போட்டும் ஹிந்துத்வ வன்முறையாளர்களின் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதனால் ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்களை நெறிபடுத்த சில வரைமுறைகளை அரசும்-காவல் துறையும் எதிர்காலத்தில் செய்யவேண்டும்.

ஆக்கம்: பிறைநதிபுரத்தான்

UNMAIKAL said...

மசூதிக்கு முன்னால் நடக்கவோ, பாடவோ மேளம் அடிக்கவோ, ஊர்வலம் நடத்தவோ இந்துக்களுக்கு உரிமை கிடையாதென்றால் இந்நாடு இந்துஸ்தானா, இல்லை, பாகிஸ்தானா என்று இந்து மத வெறியர்கள் அடிக்கடி உரிமைக்குரல் எழுப்புவது வழக்கம்.

மசூதிகளின் தொழுகைக் காலத்தோடு பிரச்சினை இல்லாமல் நல்லிணக்கத்தோடு இயங்கி வந்த மக்களிடையே – இல்லாத ஒரு பிரச்சினையை ஏற்படுத்தி, முசுலீம் எதிர்ப்புக் கலவரம் நடத்துவதே அவர்கள் நோக்கம். அதைப் பல இடங்களில் ஆண்டுதோறும் செய்தும் வருகிறார்கள்.

முதலில் மசூதிகள் பிரபலமான, பரபரப்பான தெருக்களிலும், சந்தைகளிலும், வணிக முக்கியத்துவம் மிகுந்த இடங்களில் இருப்பது உண்மைதான்.

காரணம், அவ்வட்டாரத்தில் கணிசமான முசுலீம்கள் வாழ்வதும், அதிலும் வணிகர்களாக இருப்பதும், தமது வேலை நேரத்தில் குறிப்பாக வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வந்து போக வசதியாக இருக்கவும்தான் அப்படி கட்டப்படுகின்றன. வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.

அதேசமயம் மசூதிகள் முன்பு மாணவர்கள், தொழிலாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் ஊர்வலமாய்ப் போகிறார்கள்.

ஏன், கோவில் திருவிழாக்கள் கூட இடையூறின்றிச் செல்லுகின்றன.

மசூதி அருகே பொதுக் கூட்டங்கள் நடப்பதும், பாங்கு ஓதும் நேரம் ஓரிரு நிமிடம் அமைதி காப்பதும் தமிழகத்தில் இயல்பான காட்சிகள்தான். இதனாலெல்லாம் எங்கும் கலவரம் ஏற்பட்டதில்லை.

1980-களில் தோன்றிய இந்து முன்னணி, மசூதி முன்பு விநாயகர் ஊர்வலத்தை வம்படியாக நடத்திய போதுதான் இக்கலவரங்கள் ஆரம்பித்தன.

சரியாகத் தொழுகை நேரத்தில் ஊர்வலம் நடத்துவது, ”துலுக்கனை வெட்டு, துலுக்கச்சியைக் கட்டு, அல்லாவுக்குக் குல்லா போட்டு அரேபியாவுக்கு அடிச்சுத் துரத்து, இந்த நாடு இந்து நாடு இல்லேங்கிற துலுக்கன் யாரு” போன்ற ‘இனிய இசை மொழிகளை’க் கூவுவது இவற்றினால்தான் தகராறுகள் ஆரம்பித்துக் கலவரங்களாய் முடிகின்றன.

பம்பாய், ஹைதராபாத், சென்னை மூன்று நகரங்களிலும் ஆர்.எஸ்.எஸ். வானரங்கள் நடத்தும் விநாயகர் ஊர்வலங்கள் மசூதி வழியாகச் சென்று முசுலீம் மக்களைத் தாக்குவதற்கான அவலங்களாய் மாறிவிட்டன.

தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் இந்த நோய் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது.

எனவே மசூதி முன்பு ஊர்வலம் நடத்தும் இந்து மதவெறி அமைப்புக்களை முழுமையாகத் தடை செய்யும் போதுதான் இந்த அராஜகங்களுக்கு முடிவு கட்ட முடியும்.

பெரும்பான்மை இந்துக்களின் ஏகபோகப் பிரதிநிதிகள் என உரிமை கொண்டாடும் சிறு கும்பலான பார்ப்பன – இந்து மதவெறி அமைப்புக்களைத் தனிமைப்படுத்தி முறியடிப்பது உழைக்கும் மக்களின் கடமையாகும்.

மசூதியை வைத்து உரிமைக்குரல் எழுப்பும் இவர்கள்தான் அக்கிரகாரம், ஊர், தேரோட்டம் போன்றவற்றில் இன்றுவரை தாழ்த்தப்பட்ட மக்கள் பங்கேற்க அனுமதி மறுக்கிறார்கள்.

கேவலம், தாழ்த்தப்பட்ட மக்களுடன் இணைந்து தேரை இழுக்க முடியாது என் கண்டதேவியில் சில ஆண்டுகளாய் நிறுத்தப்பட்டிருக்கும் மரத்தேர் இந்த மரமண்டைகளின் யோக்கியதைக்குச் சமீபத்திய சான்று. - வினவு

SOURCE: http://www.vinavu.com/2012/07/07/conversion-18/

Anonymous said...

நம்மை சூத்திரனாக – தாழ்ந்த ஜாதி மகனாகப் பிறப்பித்து இன்னொருவனை மேல் ஜாதிக்காரனாக, பிராமணனாகப் பிறப்பித்து, ஒருவன் சதா காலமும் உழைத்துப் போட்டு ஒன்றுமில்லாமல் வாடவும், தற்குறியாய் இருக்கவும், இன்னொருவன் பாடுபடாமல், உழைக்காமல், மேல் ஜாதிகாரனாக இருக்கவுமான அமைப்புக்குக் காரணமாக இருக்கிற இன்றைய கடவுள்கள் என்பவைகளை ஒழிக்க வேண்டும்; உடைத்துத்தள்ள வேண்டும்!ஒவ்வொரு கடவுளாக உடைக்கும் பணியை திராவிடக்கழகம் விரைவிலே ஆரம்பிக்கப் போகிறது. அதற்காக விரைவில் ஒரு நாள் போடப் போகிறேன். சென்னை சென்றவுடன் நாள் குறித்து 'விடுதலை'யில் எழுதுவேன். திராவிடக் கழக தோழர்களே! – தயாராய் இருங்கள்!கடவுள் என்று சொல்லப்படுகிற இந்த பொம்மைகளை ரோட்டிலே போட்டு உடைப்பதற்கு, விரைவில் நாள் தரப் போகிறேன். இப்போதே மண்ணுடையாரிடம் சொல்லி வைத்து அட்வான்சாக 'கடவுள்' என்று சொல்லப்படுகிற உருவத்தைப் போல மண்ணிலே செய்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்; அல்லது கடைகளிலே விற்கிறதே – வர்ண பொம்மைகள் அதையாவது வாங்கி ரெடியாக வைத்துக் கொள்ளுங்கள். நான் தேதி கொடுத்தவுடன் பொம்மைகளை எடுத்துக் கொண்டு கூட்டம் சேர்த்துக் கொண்டு ஏதாவது ஒரு இடத்திலே நடுரோட்டிலே, முச்சந்தியிலே பலர் கூடுகிற இடத்திலே கொண்டு போய்ப் போட்டு, "இன்ன காரணத்துக்கு ஆக பொம்மையை உடைக்கிறேன்; என்னை கீழ் ஜாதியாகப் பிறப்பித்ததற்கு ஆக உடைக்கிறேன்; என்னை சூத்திரன் - வேசி மகன் என்று கற்பித்ததற்காக உடைக்கிறேன்" என்பதாகச் சொல்லிக் கொண்டு உடைக்க வேண்டும்!உடைப்பதற்கு முதல் 'கடவுளாக' எல்லோரும் எதுவும் செய்வதற்கு முதலாக பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பார்களே, அந்தப் பிள்ளையாரையே தேர்ந்தெடுக்கிறேன்! தோழர்களே! தயாராய் இருங்கள்! பொம்மைகளை இப்போதிருந்தே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். விரைவில் நாள் கொடுப்பேன்.விக்ரகங்களை உடைக்கிறேன் என்றவுடன், (குழவிக் கற்களை) கோயிலுக்குள் போய் புகுந்து உடைப்போம் என்று யாரும் கருதவேண்டாம். இந்தப்படி கோயிலுக்குள்ளே புகுந்து கலாட்டா செய்வோம் என்று யாரும் அஞ்ச வேண்டியதில்லை.கோயிலுக்குள் ஒருவரும் போக மாட்டோம்; குயவரிடத்தில் மண் கொண்டு இன்றைய கோயிலில் இருக்கிற சாமியைப் போல செய்துதரச் சொல்லி, அல்லது கடைகளிலே விற்கிறதே வர்ணம் அடித்த பொம்மைகள் அதை வாங்கிக் கொண்டு வந்து, ஒரு தேதியில் இப்படி இதை உடைக்கப் போகிறோம் என்பதாக எல்லோருக்கும் தெரிவித்து விட்டு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு நடுரோட்டிலே போட்டு உடைப்போமே தவிர, கோயிலில் புகுந்து விக்ரத்தை பெயர்த்துக் கொண்டு வரும் வேலையையோ, அல்லது அவைகளுக்குச் சேதம் ஏற்படுகிற மாதிரியோ யாரும் நடந்துக் கொள்ளமாட்டார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இதுபற்றின பூராவிவரங்களையும் சென்னை சென்றவுடன் தெரிவித்து உடைப்பதற்கு தேதியும் கொடுக்கிறேன்.இந்தப் புத்தாண்டு திட்டமாக சில காரியங்கள் செய்ய வேண்டுமென்று, "விடுதலை"யில் கொஞ்ச நாளைக்கு முன் எழுதியிருந்தேன். அதன் அடிப்படையிலேயே இந்தக் காரியம் துவங்கப்படுகிறது.பல தோழர்கள் எனக்குப் பல ஊர்களிலிருந்தும் கடிதம் எழுதியிருக்கிறார்கள். அதாவது திராவிட கழகத்தார் கோவிக்குக்குள் புகுந்து கோயில் விக்கிரகங்களை சித்திரை துவக்க நாளில் உடைக்கப் போகிறார்கள் என்று கருதி பலத்த போலீசு பாதுகாப்பு வைத்திருப்பதாகவும், இந்தப்படி உடைக்கப்போகிறார்களா? என்று போலீசார், கழக நிர்வாகிகளைக் கூப்பிட்டுக் கேட்டதாகவும், இன்னும் சி.அய்.டி.கள் தொடருவதாகவும் எழுதியிருக்கிறார்கள். அதனால் தான் சொல்லுகிறேன், நாங்கள் கோயிலுக்குள்ளே புகுந்து அந்தக் கோவில் விக்ரகங்களை உடைப்போம் என்று யாரும் பயப்படத் தேவையில்லை என்று.மேலும், இந்த நாட்டில் வழிவழியாய் இருந்து வரும் சமுதாய அமைப்பை விளக்கியும், இப்படிபட்ட அமைப்பின் காரணமாக ஒரு ஜாதி வேதனைப்படவும், இன்னொரு ஜாதி சுகப்படவுமான தன்மை இருந்து வருகிறது என்பதைத் தெளிவுபடுத்தி, வேத சாஸ்திரங்கள் என்பவைகளின் பித்தலாட்டத்தை விளக்கியும், இந்தக் கடவுள்கள் என்பவைகளின் யோக்கியதையை விளக்கியும், நடத்தையின் ஆபாசங்களை எடுத்துக் காட்டியும், இன்றைய சமுதாய அமைப்பு மாறினால் தான் இந்த நாட்டில் இருக்கிற கஷ்டங்களுக்குப் பரிகாரம் காண முடியுமே தவிர, பொருளாதார உரிமை, ஜனநாயகம் என்று பேசிக் கொண்டிருப்பதால் எந்தவித பலனும் ஏற்பட்டு விடாது!

- (28.04.1953- அன்று வடக்கு மாங்குடியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. 04.05.1953- 'விடுதலை' இதழில் வெளியானது)

Sugumar C Sugumar said...

இஸ்லாமியர்கள் தங்களின் தெருவழியாக இந்துக் கடவுளர்களை தூக்கிச் செல்ல அனுமதிப்பதில்லை என்றும்
எனது பதில்

முஸ்லீம்கள் சற்று பெரும்பான்மையாக உள்ள இடங்களில் இந்து கோவில் சம்பந்தமான சம்பரங்கள் பால்குடம் போன்ற முற்றிலும் ஆன்மீக ஊா்வலங்கள் வர அனுமதி கிடையாது.இந்த அடிமை நிலையை நீக்கிடவே இந்து முன்னணி விநாயகா் சதுா்த்தியை நடத்துகின்றது. பல இடங்களளில் பிரச்சனை ஒயவேயில்லை. பல இடங்களில் முஸ்லீம்கள் ஊா்வலங்களை வரவேற்று சாதித்து விட்டாா்கள். முஸ்லீம்கள் அரேபிய பிறாமணா்கள் போல் செயல்பட்டு வருவது உண்மை."முஸ்லிம்களின் வசிப்பிடங்களின் வழியாக பன்றி போகலாம், கழுதை போகலாம், நாய் போகலாம் ஆனால் 'புள்ளையர் சிலை' போகக்கூடாதா?" என்று பொது மக்களை உசுப்பேத்தி விட்டு, முஸ்லிம்களின் வசிப்பிடங்கள் வழியே பன்றிகள் போகும்போது, "பாபரின் வாரிசுகளே! பாகிஸ்தனுக்கு திரும்பி போங்கள்" என்று உறுமுவது கிடையாது. நாய்கள் போகும்போது, "துலுக்கனை வெட்டு; துலுக்கச்சியக் கட்டு" என்று குரைப்பது கிடையாது. கழுதைகள் போகும்போது, "பத்து பைசா முறுக்கு; பள்ளிவாசலை நொறுக்கு" என்று கனைப்பது கிடையாது.

இந்த குற்றச்சாட்டு தவறானது.விதிவிலக்குகள் விதியாகாது.

முஸ்லீம்கள் இந்துக்களை இன்றும் கொஞ்சம் கூட பண்பாடு விவேகம் இன்றி ஆவணத்துடன் காபீா் என்று குறிப்பிடுவது மிகவும் அசிங்கமானது.அரேபிய இலக்கியங்களை நான் நிறையவே படித்து விட்டேன்.காபீா் என்ற சொல் கண்ணியமானது.மாியாதையானது அல்ல. இறைவனினஎதிாி நபியின் எதிாி என்று மிகக் கடுமையான மனிதத்தன்மையற்ற செயல்களுக்கு உட்படுத்தலாம் காபீா்களும் சொறி நாய்களும் ஒன்று.