
(அன்றே வடிவமைக்கப்பட்டு வெள்ளையர்களை விரண்டோடச் செய்த திப்புவின் பீரங்கி)
"திப்பு சுல்தான் 3000 பிராமணர்களை இசுலாத்தில் இணைய பலாத்காரம் செய்தபோது அவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொண்டனர்." என்ற வரிகளை அன்று ராஜஸ்தான் மத்திய பிரதேசம் உத்திரபிரதேசம் ஒரிசா பீஹார்,மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களில் உயர்நிலை கல்வி பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு நூலை படித்து அதிர்ந்தார் பி.என் பாண்டே.
ஒரிசா மாநிலத்தின் முன்னாள் கவர்னரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ,வரலாற்று ஆய்வாளருமான பி.என் பாண்டே அவர்கள் 1928 இல் அலகாபாத்தில் மாவீரன் மைசூர் வேங்கை திப்பு சுல்தான் பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்த போது ஆங்கிலோ -பெங்காலி கல்லூரியின் மாணவர் மன்றத்தின் வரலாற்று கழகத்தை தொடக்கி வைக்க அழைக்கபட்டிருந்தார் .அந்நிகழ்வில் உரையாற்ற ஆயத்தம் செய்தபோதுதான் மேற்கண்ட வரிகளை ,வரலாற்று புரட்டை கண்டு அதிர்ந்திருக்கிறார்.
கல்கத்தா பல்கலைகழகத்தின் சம்ஸ்கிருததுறை தலைவர் டாக்டர் .ஹரிபிரசாத் சாஸ்திரி பிராமணர் எழுதிய நூல் அது என்பதை அறிந்த பாண்டே எந்த ஆதாரத்தை கொண்டு இந்த தகவலை எழுதுனீர்கள் என விளக்கம் கேட்டு சாஸ்திரிக்கு கடிதம் எழுதுகிறார். பல கடிதங்களுக்கு பிறகு டாக்டர் .ஹரிபிரசாத் சாஸ்திரியின் பதில் கடிதத்தில் "மைசூர் கெசட்டில் இருந்து இதற்கான ஆதாரம் எடுக்கப்பட்டது " என தெரிவிக்கிறார். உடனே மைசூர் பல்கலைகழகத்தின் துணைவேந்தர் சர்.பிஜெந்திர நாத்சீல் அவர்களுக்கு " டாக்டர் .ஹரிபிரசாத் சாஸ்திரி அவர்கள் மைசூர் கெசட்டில் எடுத்ததாக கூறப்படும் செய்தி உண்மைதானா என உறுதிபடுத்த கோரி கடிதம் அனுப்புகிறார்.
துணைவேந்தர் அக்கடிதத்தை மைசூர் கெசட்டின் புதுபதிப்பினை தயார் செய்து கொண்டிருந்த பேராசிரியர் ஸ்ரீஹன்டையா அவர்களுக்கு அனுப்பி பதில் தர கோருகிறார். அவர் மைசூர் கெசட்டினை ஆராய்ந்து இதுமாதிரியான சம்பவம் எதுவும் மைசூர் கெசட்டில் இடம்பெறவில்லை என பதிலளிக்கிறார். அதுமட்டுமின்றி திப்புசுல்தானின் பிரதம மந்திரி புரணாயா என்பவர் பிராமணர் என்பதையும், சேனைதலைவர் கிருஷ்ணராவ் என்பதையும் தெரிவித்ததோடு, திப்பு சுல்தான் 156 இந்து கோவில்களுக்கு வருடாந்திர செலவுகளுக்கு மான்யம் வழங்கிய பட்டியலையும், சிருங்கேரி மடத்தின் ஜகத்குரு சங்கராச்சாரிக்கும் திப்புவுக்கும் இருந்த நேச உறவினை வெளிபடுத்தும் ஆதாரங்களாக சிருங்கேரி மடத்திற்கு திப்பு எழுதிய 30 கடிந்தங்களின் புகைப்பட நகல்களை பி.என். பாண்டே அவர்களுக்கு அனுப்புகிறார்.
பேராசிரியர் ஸ்ரீஹண்டையாவிடமிருந்து பெற்ற ஆதாரங்களை கொண்டு அன்று பாடதிட்டதிற்கான நூல்களை தேர்வு செய்யும் கல்கத்தா பல்கலைகழகத்தின் துணைவேந்தருக்கு "பொய்யும் புனைந்துரையுமாக அமைந்துள்ள டாக்டர் .ஹரிபிரசாத் சாஸ்திரியின் நூலை பாடதிட்டதிலிருந்து நீக்கவேண்டும். அந்நூலை தடை செய்யவேண்டும்" என எழுதுகிறார்.
அப்பல்கலைகழகத்தின் துணைவேந்தர் அஷ்டோஸ் முகர்ஜி உடனே நடவடிக்கை எடுத்து விஷம் விதைத்த அந்நூலை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கி தடை செய்தார்.
இப்போது சொல்லுங்கள் மனிதநேயமும் மத நல்லிணக்கமும் பேணிய மைசூர் வேங்கை திப்புவின் வரலாற்றை திரித்த காவி கயவர்கள் செய்தது நியாயமா... துரோகமா ? தர்மமா ..அநீதியா ?.
- B.N.Pande, 'Distortion of Medival Indian History' , Islam and Indian Culture page no 37 -39.

திப்பு, ஹைதர் அலி இந்த இருவரின் அடக்கத்தலத்துக்கு குழந்தைகள் மனைவியோடு சில ஆண்டுகளுக்கு முன்பு சென்றிருந்தேன். உள்ளே நுழைந்தவுடன் என்னையறியாமல் எனது உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. அந்த வீர மகனை நினைத்து என்னையறியாமல் எனது கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது.
2 comments:
.
CILCK TO READ.
1. >>>மாவீரன் திப்பு சுல்தான்-இந்து முஸ்லிம் ஒற்றுமையின் பன்முக ஆளுமை - உலகின் முதல் ராக்கெட்டை ஏவிய விடுதலைப் போரின் விடிவெள்ளி- .<<<
2. >>>தெருவில் நிற்கும் மாவீரன் திப்புவின் வாரிசுகள். <<<
.
ஆரிய படையெடுப்பு என்று கூறுபவர்கள் அது எந்த வருடம், எங்கு, யாருடைய தலைமையில் நடந்தது என்று கூறுவார்களா?
Post a Comment