
எத்தனை வலிகளை எனக்குள் கொடுத்தாய்!
எத்தனை தாய்களின் கற்பை சூறையாடினாய்!
எத்தனை முஸ்லிம்களை சிறையில் அடைத்தாய்!
எத்தனை தலித்களை இன்றும் கொடுமைப்படுத்துகிறாய்!
எத்தனை பொய் வழக்குகளை எங்கள் மீது போட்டுள்ளாய்!
எத்தனை பேரை அநியாயமாக தூக்கிலேற்றியுள்ளாய்!
இத்தனையும் நீ எங்களுக்கு செய்த போதும்
உன் மீது உள்ள பாசம் மட்டும் இன்னும் மங்கவில்லையே!
என் தாய் நாடே! இன்றில்லா விட்டாலும் என்றாவது
எங்களை நீ புரிந்து கொண்டு அரவணைப்பாய் என்றெண்ணும்
மனதளவில் உன்னால் காயம்பட்ட உனது நாட்டவன்.
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment