Followers

Wednesday, August 13, 2014

குர்ஆனால் இறைவனை எப்படி அறிந்து கொள்ள முடியும்?

சாரங்கன்!

//நீங்கள் அதை அறிவீர்களா. அதே போல குரான் என்ற புத்தகத்தால் எப்படி கடவுளை அறிந்து கொள்ள முடியும். அறிந்தால் தானே தெளிவாக சொல்ல முடியும். குரானால் கடவுளை அறிய முடியும் என்றால் குரான் கடவுளை விட பெரியது என்றாகிவிடும். ஓகே வா.//

ரொம்பவும் குழம்பிட்டேள்.....

குர்ஆனை முகமது நபி தனது சுயத்தில் எழுதியிருந்தால் உங்கள் வாதத்தை ஒத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த குர்ஆனானது வானவர் கேப்ரயீல் மூலமாக முகமது நபிக்கு அருளப்பட்டது. அது ஒரு புத்தமாக கொடுக்கப்படவில்லை. ஒலி வடிவமாக 20 ஆண்டுகளுக்கு மேலாக சன்னம் சன்னமாக நபிக்கு அருளப்பட்டது. அருகில் இருந்த அவரது தோழர்கள் தோல்களிலும் மரப்பட்டைகளிலும் குறித்து வைத்துக் கொள்வார்கள். இன்று நமது வசதிக்காக அதனை புத்தக வடிவில் கொண்டு வந்துள்ளோம். எனவே குர்ஆனின் வசனங்கள் அனைத்தும் இறைவனின் வார்த்தைகளே!

//இப்படி தான் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்தை கூட ஆராய்ந்து, புரிந்துகொண்ட முன்னே வந்துள்ளது ஹிந்து மதம். ஹிந்துக்கள் என்றால் சும்மா தேங்காய் உடைக்கிற , தோப்புகரணம் பட்டை நாமம் போடுகிற கூட்டம் என்று லேசாக எடை போடாதீர்கள்.//

உங்களைப் படைத்த கடவுளைப் பற்றியே தெளிவடையவில்லையே! உங்களைக் கேட்டால் நீங்கள் ஒரு கடவுளையும் அவர் பரிணமித்த விதத்தையும் சொல்வீர்கள். க்ருஷ்ணகுமாரிடம் கேட்டால் அவர் கடவுளுக்கு மணிப்பிரவாளய மொழியில் ஒரு புது விளக்கம் தருவார். அரவிந்தன் அவர் ஒரு தனி விளக்கத்தை கடவுளுக்கு தருவார்.

ஆனால் உலகில் எந்த மொழி எந்த நாடாக இருந்தாலும் அந்த முஸ்லிமிடமும் கடவுளின் இலக்கணத்தைக் கேட்டால் அனைவரும் ஒரே மாதிரியான பதிலையே சொல்வர். ஏனெனில் உலகம் மழவதும் உள்ளது ஒரே குர்ஆன்தான். எனவே தான் இந்த ஒற்றுமை.

//கடவுளின் பூமியில் தேவை இன்றி ரத்த ஆற்றை ஓட விடுகிறீர்களே. கடவுள் வேதனை பட மாட்டாரா. அவரே தான் இப்படி செய்யச்சொன்னார் என்றால் அவர் ரத்தம் விரும்பிகிறார் என்று அர்த்தம்.//

கடவுள் எங்குமே ரத்த ஆறை ஓட் டச் சொல்லவில்லை. மனிதன் செய்யும் தவறுக்கு இறைவன் எப்படி பொறுப்பாக முடியும். இன்று கூட அமெரிக்காவில் பெரும் கலவரம். ஒரு கருப்பு இன இளைஞனை கொன்றதால் கலவரம் பல நகரங்களுக்கும் பரவியுள்ளது. இதற்கு கடவுள் எப்படி பொறுப்பாக முடியும்.

ஒரு உயிரைக் கொன்றால் முழு சமூகத்தையும் கொன்ற பாவம் உன்னை வந்து சேரும் என்று குர்ஆன் தெளிவாக அறிவிக்கிறதே!

2 comments:

ஆனந்த் சாகர் said...

சுவனப்பிரியன்,

//குர்ஆனை முகமது நபி தனது சுயத்தில் எழுதியிருந்தால் உங்கள் வாதத்தை ஒத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த குர்ஆனானது வானவர் கேப்ரயீல் மூலமாக முகமது நபிக்கு அருளப்பட்டது. அது ஒரு புத்தமாக கொடுக்கப்படவில்லை. ஒலி வடிவமாக 20 ஆண்டுகளுக்கு மேலாக சன்னம் சன்னமாக நபிக்கு அருளப்பட்டது. அருகில் இருந்த அவரது தோழர்கள் தோல்களிலும் மரப்பட்டைகளிலும் குறித்து வைத்துக் கொள்வார்கள். இன்று நமது வசதிக்காக அதனை புத்தக வடிவில் கொண்டு வந்துள்ளோம். எனவே குர்ஆனின் வசனங்கள் அனைத்தும் இறைவனின் வார்த்தைகளே!//

யூதர்கள், கிறிஸ்தவர்கள் அரேபியர்களிடமிருந்து தான் கேள்விப்பட்டதையும் தன் சொந்த கற்பனைகளையும் 23 வருடங்களாக ஜிப்ரீல் மூலம் வஹி வருகிறது என்று சொல்லி மூடர்களை ஏமாற்றி முஹம்மது தேவைக்கு ஏற்ப அல்லாஹ் சொல்கிறான் என்று கதைவிட்டுக்கொண்டு இருந்தார். அதற்கு குரான் என்று பெயரும் வைத்தார். குரான் அல்லாஹ்வின் வார்த்தைகள் அல்ல, அது வெறும் முஹம்மதின் பொய்கள் அடங்கிய புத்தகம். பெண்களும், செல்வங்களும் அதிகாரமும் அடைவதற்காக அவர் அப்படி செய்தார்.

//உங்களைப் படைத்த கடவுளைப் பற்றியே தெளிவடையவில்லையே! உங்களைக் கேட்டால் நீங்கள் ஒரு கடவுளையும் அவர் பரிணமித்த விதத்தையும் சொல்வீர்கள். க்ருஷ்ணகுமாரிடம் கேட்டால் அவர் கடவுளுக்கு மணிப்பிரவாளய மொழியில் ஒரு புது விளக்கம் தருவார். அரவிந்தன் அவர் ஒரு தனி விளக்கத்தை கடவுளுக்கு தருவார். //

கடவுளை புரிந்து கொள்வது என்பது ஒருவரின் தனிப்பட்ட அனுபவம். தாங்கள் புரிந்து கொண்டதை ஹிந்துக்கள் கூறுகின்றனர். அதுதான் சரியானது.

//ஆனால் உலகில் எந்த மொழி எந்த நாடாக இருந்தாலும் அந்த முஸ்லிமிடமும் கடவுளின் இலக்கணத்தைக் கேட்டால் அனைவரும் ஒரே மாதிரியான பதிலையே சொல்வர். ஏனெனில் உலகம் மழவதும் உள்ளது ஒரே குர்ஆன்தான். எனவே தான் இந்த ஒற்றுமை.//

எவனோ ஒரு காட்டுமிராண்டி அறிவில்லாமல் உளறியதை எக்காலத்துக்கும் பிடித்து தொங்கிக்கொண்டு இருப்பது ஹிந்துவின் வழிமுறை அல்ல.

//கடவுள் எங்குமே ரத்த ஆறை ஓட் டச் சொல்லவில்லை. //

உண்மைதான். ஆனால் அல்லாஹ் குர்ஆனில் ரத்த ஆறை ஓட விடும்படி முஸ்லிம்களுக்கு பல வசனங்களில் கட்டளை இடுகிறான். ரத்தத்தை பூமியில் சிந்தாமல் எவரையும் சிறை பிடிப்பது நபிக்கு ஆகுமானதல்ல என்று ஒரு குரான் வசனம் கூறுகிறது. முஹம்மது சொன்ன அல்லாஹ் இறைவன் அல்ல என்பது உண்மைதான்.

//ஒரு உயிரைக் கொன்றால் முழு சமூகத்தையும் கொன்ற பாவம் உன்னை வந்து சேரும் என்று குர்ஆன் தெளிவாக அறிவிக்கிறதே!//

இது யூதர்களின் வேத வசனம். அதை முஹம்மது அப்படியே காப்பி அடித்து குர்ஆனில் கூறினார். இதற்கு ஆதாரம் வேண்டுமானால் தருகிறேன். தனக்கு அதிகாரம் இல்லாதபோது தன்னை நல்லவனாக காட்டிக்கொள அவர் இப்படி கூறினார். இது அறிவுக்கு பொருந்தாத வசனம். ஒரு உயிரை கொல்வது எப்படி மனித இனத்தையே கொல்வதற்கு சமமாகும்?

Anonymous said...

எவ்வளவு வித்தியாசங்கள் இருந்தாலும் இந்துக்கள் கடவுள் பெயரில் அடித்துக் கொண்டு சாவதில்லை. அவரவர் ஆன்மீகத் தேவைக்கு தகுந்தார்போல் இறைவனை புரிந்துக் கொள்கிறார்கள். உருவம் அருவுருவம் அருவம் என்பது இந்துக்களின் சித்தாந்தம். உருவம் ஒருவனுக்கு திருப்தி அளித்தால் அதை பின் பற்றலாம், அருவம்தான் உண்மை என்று ஒருவர் நினைத்தால் அதைப் பின்பற்றலாம். கோபமான இறைவன், சொன்னதை அப்படியே செய்யாவிட்டால் நரகம் போன்ற காட்டுமிராண்டி நம்பிக்கைகள் ஆன்மீகம் அல்ல என்று இந்துக்கள் அன்றே ஒதுக்கி விட்டார்கள். அதுதான் ஆன்மீக வளர்ச்சி. அருவத்தை போதித்த விவேகானந்தர்தான் உருவ வழிபாட்டு விரும்பிகளுக்கு உருவ வழிபாடு எப்படி செய்யலாம் என்று போதித்தார். ஒரிறை கொள்கைகளை நிங்கள் சொல்லித்தான் நாங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. உருவமும் அருவமும் எப்படி ஒன்றினைகிறது என்று முஸ்லிம்களுக்குத்தான் புரிவதில்லை.