
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் சிறீமாளிகை பாறை கருப்பசாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கொடைவிழாவை முன்னிட்டு அக்கோயில் பூசாரி சுவாமிமுருகன் மது அருந்தி அரிவாள் மீது நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறி வருகிறார்.
இதனால் பல்வேறு இடங்களிலி ருந்தும் பக்தர்கள் அவருக்கு மதுபானத்தை காணிக்கையாக வழங்குவது வழக்கமாகும். இந்தாண்டு கோயில் கொடைவிழா கடந்த 8 ஆம் தேதி தொடங்கி 16.8.2014 வரை நடந்தது. 16 ஆம் தேதி காலை பொங்கலிடுதல், 7 மணிக்கு கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து 10 மணியளவில் பூசாரி முருகன் வந்தபோது அங்கு போதுமான அளவிற்கு மதுபானம் இல் லாததால் கோபத்துடன் வெளியேறினார். அப்போது பக்தர்கள் அவரை வணங்கி 15.8.2014 அன்று டாஸ்மாக் கடை விடுமுறை என்பதால் சரக்குகள் வாங்க முடியவில்லை என்று கூறி மன்னிப்பு கேட்டு பூசாரியை அழைத்து வந்தனர்.
அதன்பின்பு வந்த மதுபானங்களை அப்படியே நீர் கலக்காமல் ராவாக குடித்த பூசாரி அரிவாள் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார். அப்போது பெண் பக்தர் ஒருவர் தனக்கு குழந்தை பாக்கியம் கேட்டார். உடனே சுவாமி முருகன் அடுத்தாண்டு நீ இங்கு குழந்தையுடன் வருவாய். அப்போது 30 மதுபாட்டில்களை வாங்கி வரவேண்டும் என்று கூறினார்.
மேலும் பலருக்கு அருள்வாக்கு கூறிய தோடு இந்த வருடம் போதுமான அளவுக்கு மழை பெய்யும், இதனால் விவசாயம் செழிக்கும் என்றார். அருள்வாக்கு நிகழ்ச்சி முடிந்தவுடன் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது.
-(தினகரன் 17.8.2014).
டாஸ்மாக்கில் சரக்கு விலையை உயர்த்தி இருக்கிறார்கள். 125 ரூ MGM குவார்டர் இனி 145ரூ. ஏற்கனவே 145 ஆக இருந்தது இப்போது 195 ஆம்.
சராசரியாக 20 சதம் விலை ஏற்றப்பட்டுள்ளது.
தயாரிப்புச் செலவைக் காட்டிலும் 400 மடங்கு விலை வைத்துள்ளதால் பூசாரி கேட்கும் சாராய பாட்டில்களை வாங்க பக்தர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே பக்தர்களின் இக்கட்டான இந்த நிலைமையை புரிந்து கொண்டு பூசாரி தனது காணிக்கைகளை குறைத்துக் கொள்ளுமாறு பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளார்களாம். :-)
No comments:
Post a Comment